Singer Roshini

‘போட்டுத் தாக்கு முதல் மாங்கல்யம் வரை’ – சிங்கர் ரோஷினி பாடிய பாடல்களா இதெல்லாம்?

பாடகி ரோஷினி-யோட ஜர்னி தெரியுமா?! தமிழ் சினிமாவில் எந்தத் துறையாக இருந்தாலும், அந்த துறை சார்ந்த கலைஞர்கள் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை உழைச்சுகிட்டே இருப்பாங்க. அவங்க விரும்பும் கலை மீதான ஆர்வமும் இதுக்கு ஒரு காரணம். முக்கியமா இசைத் துறையில் இருக்கும் கலைஞர்களுக்கு ஹிட் அடிச்சா தான் பாப்புலர் ஆவோம்கிற எண்ணம் இருக்கு.

ரோஷினி
ரோஷினி

இன்னைக்கு நம்ப பார்க்கப்போற ஒரு பாடகி அவங்க முதல் பாட்டிலையே ஹிட் கொடுத்தாலும் அதன் பிறகு பெருசா ஒரு பாப்புலரிட்டி கிடைக்லைன்னு ரியாலிட்டி ஷோ-க்கு போய் அவங்க திறமையை மக்கள் கண் முன்னாடி வெளிப்படுத்துனாங்க. அவங்க தான் ‘போட்டு தாக்கு ரோஷினி’. சித்ரா அம்மா இவங்க பாட்டை கேட்டுட்டு என்ன சொன்னாங்க? இப்போ இவங்க ஒரு டைட்டில் வின் பண்ணி இருக்காங்க அது என்ன? விஜய் டிவியில் இவங்க செஞ்ச சம்பவம் இதெல்லாம் பத்தி தான் வீடியோல பார்க்கப்போறோம்.

ரோஷினி அவங்களோட 6 வயசுல இருந்தே ஸ்டேஜ் ஷோஸ்ல பாடிட்டு இருந்தாங்க. இசை மீதான ஆர்வம் ரோஷினிக்கு இருந்ததால தொடர்ந்து பல இசை நிகழ்ச்சிகள், இசை போட்டிகளில் பாடிட்டு இருந்த அப்போ இவங்க குரலை கேட்டு வாய்ஸ் டெஸ்ட் -க்காக கூப்பிட்டு இருக்காங்க. ரோஷினியும் போய் ட்ராக்ஸ் பாடிட்டு வீட்டுக்கு வந்துடாங்களாம். இப்படி இவங்க பாடுன பாட்டு தான் குத்து படத்தில் ஸ்ரீ காந்த் தேவா இசையில் வந்த ‘போட்டு தாக்கு’ பாடல். இந்த பாட்டு வெளியாகும் வரை STR தான் கூட பாடி இருக்காரு, ரம்யா கிருஷ்ணன் டான்ஸ் ஆடி இருக்காங்கன்னு எதுவும் ரோஷினிக்கு தெரியாதாம். ஆனா அந்த பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. இந்த பாட்டு பாடும்போது ரோஷினி 11th தான் படிச்சுட்டு இருந்தாங்கலாம்.

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் தேவா கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் தமிழ் பாடல்களை பாடிட்டு இருந்தப்போ ரோஷினிக்கு கிடைச்ச ஜாக்பாட் தான் ‘நம்ம காட்டுல’ பாட்டு, பட்டியல் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா கூட சேர்ந்து பாடும் அந்த லக்கி சான்ஸ் ரோஷினிக்கு அமைந்துள்ளது. திரும்ப யுவன் இசையில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ‘தங்கா தங்கா’ பாட்டை Base வாய்ஸ்-ல போட்டு பொளந்துகட்டி பாடி இருப்பாங்க.

ரோஷினி பாடியத்தில் மறக்க முடியாத இன்னொரு பாட்டு தாமிரபரணி படத்தில் வரும் ‘கருப்பான கையால என்ன புடிச்சா’ பாட்டு தான், இந்த பட்டெல்லாம் கேக்கும்போது ரோஷினி பாடிய பாட்டா இதெல்லாம்-ன்னு நினைக்க தோணும், அந்த அளவுக்கு வாய்ஸ்ல விளையாடி இருப்பாங்க. இன்னொரு பக்கம் டிவி ஷோஸ், வெளியே நடக்கும் இசை கச்சேரிகள்-ன்னு பல பின்னணி பாடகர்களோட மேடையில் பாடி அசத்தி இருக்காங்க.

ரோஷினிக்கு இதுல முக்கியமா மறக்க முடியாத ஒரு நிகழ்வு, இவங்க மறந்த பாடகர் எஸ்.பி.பி கூட ஸ்டேஜ்ல பாடிட்டு இருந்தப்போ, இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானும் கூடவே ஸ்டேஜ்ல நின்னு அதை ரசிச்சிருப்பாரு. அது ஒரு Historic மொமெண்ட்-ன்னு ரோஷினியும் சொல்லி இருக்காங்க. வேற ஒரு இசை கச்சேரியில் பாடிட்டு கீழே இறங்கும் போது சிங்கர் சித்ரா அம்மா அவங்களே ரோஷினியை கூப்பிட்டு இந்த பாட்டு உன்னோட ஸ்டைலில் பாடினது பொருத்தமா இருந்துச்சு. ரொம்ப நல்லா பாடுறீங்க-ன்னு சொன்னாங்களாம்.

எது இல்லாம ரோஷினி பட்டிக்காடா பட்டினமாங்குற டிவி ஷோஸ்-ல பல சவால் நிறைந்த பாடல்களை அசால்ட்டா பாடி தெறிக்க விடுவாங்க. அதே போல தல அஜித்-க்கும் ரோஷினி ஆழ்வார் படத்துல ‘மயிலே மயிலே’-ங்குற பாட்டு பாடி இருக்காங்க.

Also Read – கீரவாணி… சாரி, மரகதமணிக்கும் தமிழ் சினிமாவுக்குமான கனெக்‌ஷன்ஸ்!

ரோஷினி பாடிட்டே இருந்த அப்போ ஒரு சின்ன பிரேக் எடுத்து ஒரு 6 வருஷம் அவங்க கணவர் ஜாக் கூட அமெரிக்காவில் இருந்தாங்க. அதன் பிறகு சென்னை வந்த ரோஷினி இப்படியே இருந்த வேலைக்கு ஆகாது, ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணி ஆல்ரெடி சிங்கரா இருந்தாலும் ஓகே, நமக்கு இன்னும் ரீச் வேணும்னு முடிவு எடுத்து, சூப்பர் சிங்கர் சீனியர் 7-ல கலந்துகிட்டு இசை ரசிகர்களை ஆச்சரியப்படுத்துனாங்க. ஏன்னா அவங்க அந்த ஷோஸ்ல பாடிய பல பாடல்களுக்கு நடுவர்கள் எழுந்து நின்னு பாராட்டி இருக்காங்க. இவங்க அப்படி பண்ண சம்பவம் தான் ‘ ஒன்னாம் படியேடுத்து’ -னு வரும் அம்மன் பாடலை மூச்சு விடாம பாடுனது நடுவர்களையே மூச்சடைக்க வெச்சுடுச்சு. சூப்பர் சிங்கர்ல ரோஷினி பண்ண ஒரு தரமான சம்பவம்-ன்னு இதை சொல்லலாம். இதை தொடர்ந்து விஜய் -டிவியில் வரும் Mr.&Mrs. சின்னத்திரை ஷோல அவங்க கணவர் ஜாக் கூட சேர்ந்து பல கலாட்டாக்கள் பண்ணாங்க.

சினிமாவில் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு லாங் பிரேக்-க்கு பிறகு, ஈஸ்வரன் படத்தில் வரும் மாங்கல்யம் பாட்டு, ஏனிமி படத்தில் டும் டும் பாட்டு, ஜி. வி பிரகாஷ் இசையில் யானை படத்துல வர சண்டாலியே பாட்டு-ன்னு தொடர்ந்து ஹிட் பாடல்களைப் பாடி கொடுத்தாங்க.

இப்போ ரோஷினி ஒரு டைட்டில் வின் பண்ணி இருக்காங்க, அது என்ன ஷோ-ன்னு பார்த்த ஒரு பக்கம் கணவரோட விஜய் டிவி ஷோ இன்னொரு பக்கம் அவங்க பொண்ணு ரியா கூட பண்ண ஜீ தமிழ் டிவியில் வரும் சூப்பர் மாம் ஷோ தான். அம்மாவும் பொண்ணும் பண்ண அட்ராசிட்டிக்கு அவங்களுக்கு கிடைச்ச மாஸ் டைட்டில் தான் ‘சூப்பர் மாம்’.

இவங்க ரிசெண்ட்டா பண்ண இன்னொரு சம்பவம் சமீபத்தில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் Soul of Varisu பாடலை மேடையில் லைவாக பாடி எல்லாரையும் கலங்கடிசுட்டாங்க. தளபதி விஜய்-யும் அதை மெய் மறந்து கேட்டு இருப்பாரு. இந்த படலோட ஒரிஜினல் ட்ராக்ல ரோஷினி அடிஷனல் வாய்ஸ்ல தான் பாடி இருக்காங்க. கூடிய சீக்கிரம் தளபதி படத்தில் சோலோ சாங் பாடனும்னு ரோஷினி-க்கு ஆசையாம்.

சின்ன மேடைகளில் பாடா ஸ்டார்ட் பண்ணி இன்னைக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா மேடையில் பாடும் வரை ரோஷினியின் இந்த இசைப் பயணத்தில் அவங்க பாடிய நாட்டுப்புற பாடல்களும் குறிப்பிடத்தக்கது. ரோஷினியின் இந்த காந்தக் குரல் இன்னும் பல மேடைகளில் ஒலிக்கும், அதே போல சீக்கிரம் தளபதி படத்தில் பாடும் வாய்ப்பும் கிடைக்க ரோஷினிக்கு வாழ்த்துக்கள். ரோஷினி பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடல் எது-ன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top