H Vinoth

ஹெச்.வினோத் பின்பற்றும் 5 விஷயங்களும், ஒரு தியரியும்..!

சமகால தமிழ் சினிமாவில் ஸ்டார் இயக்குநர்கள் பட்டியலில் இருப்பவர் ஹெச்.வினோத். அஜித் போன்ற ஸ்டார்களின் படங்களை இயக்குவதால் ‘ஸ்டார்’ இயக்குநர் என்று அழைக்கவில்லை. தரமான படைப்புகளை வெற்றிப் படங்களாக உருமாற்றும் உத்தியில் கைதேர்ந்தவர் என்பதால்தான் இவர் இந்தப் பட்டியலில் இருக்கிறார். ஹெச்.வினோத் என்ற இயக்குநர் உருவான கதை மட்டுமின்றி, ‘சதுரங்கவேட்டை’யில் தொடங்கி ‘துணிவு’ வரையிலான அவரது திரைப் பயணத்துடன், அவரது படைப்புகளின் இடம்பெறக் கூடியஐந்து முக்கியமான விஷயங்கள் பற்றியும் பேசப்போகிறோம். குறிப்பாக, அவர் தனது படங்களில் பின்பற்றும் ஒரு ‘தியரி’ பற்றியும். அந்தத் தியரி ‘துணிவு’ படத்துலயும் இருப்பது பற்றியும் பார்ப்போம்.

ஹெச்.வினோத்

வேலூரின் சின்னப்பள்ளிக்குப்பம் கிராமம்தான் ஹெ.வினோத்தின் சொந்த ஊர். சென்னையில் டிப்ளமோ படித்துவிட்டு எலெக்ட்ரிக்கல்ஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். மெக்கானிக்கலான வேலை மீது ஈடுபாடு இல்லை. சினிமா ஆசை வந்தது. இயக்குநர் பார்த்திபனின்’பச்சக் குதிர’ படத்தில் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமல் மீண்டும் எலெக்ட்ரிக்கல் வேலைக்கே போனார். சென்னை – கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளபம்ப்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார். அதுதான் அவரது வாழ்க்கையில் பேரனுபவத்தைத் தந்தது. விதவிதமான மனிதர்கள், பயணிகள், தொழிலாளர்கள் என நிறைய மனிதர்களைச் சந்திச்சேன். நிறைய மனிதர்களின் மனங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் உள்வாங்க ஆரம்பித்தார். சிறுகதைகள் எழுதினார். இயக்குநர் – எழுத்தாளர் ராஜுமுருகன் போன்றோர் நட்பு மூலம் கதை சொல்லும் உத்திகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பினார். இயக்குநர் விஜய் மில்டனின் படத்தில் பணியாற்றினார். சினிமா படைக்கும் கலையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட பின் சினிமா இயக்குநராக அறிமுகமானர்.

ஹெச்.வினோத்
ஹெச்.வினோத்

முதல் படம் ‘சதுரங்கவேட்டை’.

மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்எல்எம், ஈமு கோழி-ன்னு தமிழ்நாட்டுல சந்தித்த அத்தனைப் பண மோசடிகளின் பின்புலத்தையும் பட்டாசாக சொன்ன படம்தான் ‘சதுரங்கவேட்டை’. இந்தப் படம் ரிலீஸான பிறகு, பல மோசடி நிறுவனங்கள், நபர்கள் மீது வழக்குகள் பதிவானது. ‘சதுரங்கவேட்டை’ பாணியில்னு க்ரைம் ரிப்போர்ட்டர்கள் செய்திகளைத் தட்டிவிட ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் உச்சமாக, நீதிபதிகள் கூட மோசடி வழக்கின் தீர்ப்பில், ‘சதுரங்க வேட்டை’ படத்தை மேற்கோள் காட்டினார்கள்.

மீம்ஸ் உள்ளவரை இந்தப் படத்தின் வசனங்கள் மீம்ஸ் மெட்டீரியலாக பயன்படுத்தப்படும் என்பது மிகையில்லைன்னு சொல்ற அளவுக்கு, இந்தப் படத்துல வாழ்வியல் பஞ்ச்கள் எக்கச்சக்கம்.

‘ஒரு பொய் சொன்னா, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும்…. அப்பத்தான் அது பொய்னு தெரியாது’

‘பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ன்றதுதான் இந்தப் படத்தோட நாயகன் நட்டி மூலம் ஹெச்.வினோத் முன்வைக்கும் லாஜிக் கேள்வி.

குறிப்பாக, ‘ஒருத்தன ஏமாத்தணும்னா, மொதல்ல அவன் பேராசையைத் தூண்டிவிடணும்’ என்ற ஒரே வசனம் மட்டும் போதும். இதுக்குள்ள பல சமூக அரசியல்கள் டீ-கோடு பண்ண முடியும்.

இந்தப் படம் ரிலீஸான அதே தேதியில மாஸ் ஹீரோவா ஏற்கெனவே எஸ்டாபிளிஷ் ஆன தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ வெளிவந்து செம்ம ஹிட் ஆனது. அதேநேரத்துல, அறிமுக இயக்குநர் படம் இது. திரைத்துறையினருக்கு மட்டுமே ஒளிப்பதிவாளரா அதிகம் பரிச்சயமானவரான நட்ராஜ் ஹீரோவா அறிமுகமான படம். இப்படியான பேக்ரவுண்டை வெச்சுட்டு ‘கன்ட்டென்ட்’ வேல்யூவை மட்டுமே வெச்சு ஜெயிச்சப் படம்தான் ‘சதுரங்கவேட்டை’.

அடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

‘சதுரங்கவேட்டை’ தந்த முகவரி மூலம் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதில் இம்ப்ரஸ் ஆகி இந்த வாய்ப்பு கிடைத்ததோ அதை செய்யமாட்டேன் என்றார் உறுதியாக. ஆம், ‘சதுரங்கவேட்டை’யின் தெறிப்பு வசனங்கள்தான் இந்த வாய்ப்புக்கு வித்திட்டது. ஆனால், இந்தப் படத்தை டயலாக் மூலம் அல்லாமல் காட்சிகள் மூலமே நகர்த்துவது என்பதில் உறுதியாக இருந்தார் வினோத். நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்பதற்காக அவசர அவசரமாக கதையை தயார் செய்து ஷூட்டிங்குக்கு ரெடியாகாமல், மிக நிதானமாக ஹோம் ஒர்க் செய்யத் தொடங்கினார்.

இதுவும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான். ஒருகாலத்தில் நாட்டையே திக்குமுக்காடவைத்த கொள்ளைக் கூட்டம், அதன் பின்புலம், அவர்களைத் துரத்திப் பிடிக்கும் தமிழ்நாடு போலீஸ் என அதிரடி ஆக்‌ஷன் சேசிங் விருந்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் படைத்தார். இதற்காக, பல ஆய்வுகளும், வாசிப்புகளும், பயணங்களும் என அவர் கொட்டிய உழைப்பு வியக்கத்தக்கது.

‘பவாரியா ஆபரேஷன்’பத்தின முழு டீட்டெய்லயும் திரட்டி, அதை ஆழமா உள்வாங்கி, உண்மையும் கற்பனையும் கலந்துகட்டின விறுவிறு போலீஸ் படமாக கொடுத்தார் வினோத்.

போலீஸை ரொமான்டிசைஸ் பண்ணி காட்டுவது, கொள்ளையர்கள் சமூகப் பின்னணியை காட்டின விதம்னு சில பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் படம் செம்ம ஹிட். காப் – ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா இருந்ததோட, ஒவ்வொரு சீனும் தெறிக்கவிட்டதோட, பக்கா டீட்டெய்லிங் பார்த்துட்டு ரசிகர்கள் வாய்ப்பிளந்தனர்.

இதோட எஃபக்ட்தான். தூக்குடா வினோத்தைன்னு அப்படியே அள்ளிக்கொண்டுச் சென்றார் அஜித்.

சரி, ஏதோ தியரி கியரின்னு சொன்னீங்களேன்னு நீங்க கேக்கலாம். ஒரு தோ கிலோ மீட்டர்… விரைவில் அதை சொல்றேன்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை

இப்போ, நேர்கொண்ட பார்வை.

அஜித்திடம் போய் நின்று அசலாக ஒரு படம் தரலாம்னு நினைத்த வினோத்துக்கு அது ஷாக் தகவல்தான். ‘ஒரிஜினல் நிதானமாகப் பண்ணிக்கலாம். இப்போதைக்கு அவசரமா ஒரு ரீமேக் பண்ணனும். பிங்க்.’ என்று தன் பழைய கமிட்மென்ட்டை நிறைவேற்றை வினோத்திடம் கேட்டார். முதலில் தயங்கிய வினோத், கொஞ்சம் டைம் கேட்டு யோசிச்சு, தன்னம்பிக்கை கூடினப்புறம் ‘ஓகே’ சொன்னார்.

யெஸ்… உருவானது நோ மீன்ஸ் நோ.

ஒரு படத்தை ரீமேக் பண்றது எப்படி?-ன்னு சில ரெஃபரன்ஸ் கேட்டா, கண்ணை மூடிட்டு லிஸ்ட் பண்ணும்போது தானா வந்து நிற்கும் ‘நேர்கொண்ட பார்வை’.

ஸ்டார் வேல்யூ இல்லாத ஒரு படத்தை ஈஸியா ரீமேக் பண்ணிட முடியும். ஆனா, க்ளாஸ் ஆக மாறி அமிதாப் பச்சன் பண்ணின ‘பிங்க்’ல படத்தை மாஸ் ஹீரோவான அஜித்துக்கு பொருத்துவது ரொம்பவே ரிஸ்கான விஷயம். கல்லா கட்ட முடியாம லாஸ் ஆகுறது ஒருபக்கம்னா, ஒரு நல்ல படத்தை மொக்கைப் பண்ணிட்டீங்களேன்ற நெகட்டிவ் ரிவ்யூஸை ஃபேஸ் பண்ண வேண்டியது மறுபக்கம்னு ரெண்டு பக்கமும் கத்தி தொங்குது.

இதை ரொம்ப அசால்டா டீல் பண்ணினார் வினோத். ‘பிங்க்’ல இருந்த இன்டன்சிட்டியையும் குறைக்காமல், அதே நேரத்துல ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்ட்டிமென்ட் எல்லாம் சரிவிகிதத்துல கலந்து ‘தல’ ரசிகர்களுக்கான படமுமாகவும் மாற்றி ‘நேர்கொண்ட பார்வை’யில் ஸ்கோர் செய்தார் வினோத்.

அடுத்து… ‘வலிமை’.

அதிகம் அப்டேட் கேட்கப்பட்டதாலோ என்னவோ, தல ரசிகர்களே டயர்டாகுற அளவுக்கு படத்தோட ரிசல்ட் இருந்துச்சு.

சமநிலை தவறாமல் இருக்கப் போராடும் போலீஸ் அதிகாரியின் போராட்டம்தான் ‘வலிமை’ படத்தோட ஒன்லைன். ஆனால், வினோத்தோட சமநிலை சில பல காரணங்களால் இந்தப் படத்தில் தவறியதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். படம் க்ளாஸாகவும் அமையல… மாஸாகவும் ஆகலை. ஆக்‌ஷன், சென்டிமென்ட்ஸ் எல்லாமே ஓவர் டோஸ் ஆனதால ‘வலிமை’ ஒரு பாடமாகவே அமைந்தது வினோத்துக்கு.

அந்தப் பாடத்தை புரிஞ்சிகிட்டு, பக்காவான பேக்கேஜோட ‘துணிவு’ மூலமா வர்றாருன்றதை அந்தப் படத்தோட ட்ரெய்லரே இப்போ நமக்கு காட்டி இருக்கு.

சோ, இப்போ நாம மேட்டருக்கு வருவோம். ஹெச்.வினோத்தின் ஃபிலிம் மேக்கிங் எப்படிப்பட்டது?

ஃபர்ஸ்ட் – உண்மைச் சம்பவங்கள்:

தான் சொல்லும் கதைகள் எல்லாமே ரசிகர்களுக்கு நெருக்கமானதா இருக்கணும்ன்றதுக்காக, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தும், சில உண்மையான ரெஃபரன்ஸை எடுத்தும்தான் திரைக்கதையை உருவாக்கி வருகிறார் ஹெச்.வினோத். ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ சரி… வலிமை? – அப்படீன்னு நீங்க கேட்கலாம். இந்தப் படம் உருவாக சப்போர்ட்டிவா இருந்ததே ஒரு உண்மைக் கதைதான். இந்தப் படத்தில் பைக் முக்கியப் பங்கு வகிப்பதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு ரேஸரை காவலராக பணித்தது குறித்த தகவலைத் தேடியிருக்கார். அவரோட கதையை அறிய விரும்பியிருக்கார். ஆனால், அவரை கண்டடைய முடியலை. ஆனாலும், அதை பேஸ் பண்ணியே வேற மாதிரி கதையை டெவலப் பண்ணியிருக்கார்.

செகண்ட் – பக்கா ரிசர்ச்:

உண்மைச் சம்பவங்களை எடுத்து புனைவா மாற்றிக் கொடுத்தாலும், உண்மைத் தன்மையை ஒரு படைப்பா மாத்துறதுக்கு ரிசர்ச் ஒர்க் தேவை. அந்த ரிசர்ச் ஒர்க்குக்காக மட்டும் அதிக நேரத்தை வினோத் செலவு பண்ணுவார். ‘சதுரங்கவேட்டை’ல வர்ற குற்றங்கள் பின்னணியை தேடிப் பிடிச்சது, ‘தீரன் அதிராம் ஒன்று’ ஆபரேஷனை முழுசா கரைச்சி குடிச்சது, ‘வலிமை’க்காக பைக் ரேஸிங், போதைப்பொருள் குறித்தெல்லாம் தேடி அலைஞ்சி தெரிஞ்சிகிட்டதுன்னு, அவரோட பலமே இந்த ரிசர்ச் ஒர்க்தான். ‘நேர்கொண்ட பார்வை’ ரீமேக் என்பதால் இந்த அனாலிசிஸுக்கு உள்ள கொண்டு வரலை.

சென்டிமென்ட்ஸ்:

‘சதுரங்கவேட்டை’ படம் முழுக்கவே மோசடிமயமா இருந்தாலும், கடைசில அன்புதான் நிரந்தரம்னு அழுத்தம்னு சொல்லியிருப்பார் வினோத். அதோட, அந்தப் படத்துல வில்லன்கள் தரப்புல இருந்து வர்ற ஒருத்தர், அன்பால ஒரு தங்கைக்கு அண்ணனா மாறுற டிரான்ஸிஷன்… சான்சே இல்லை. என்னதான் பரபரன்னு சேஸிங்ல ஒடுனாலும், குடும்ப அமைப்பு பத்தின விஷயங்களும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல நிறைஞ்சு இருக்கும். ம்ம்ம்… ‘வலிமை’ல சென்டிமென்ட்டுக்கு பஞ்சமா என்ன?

எங்கேஜ்மெண்ட்:

வினோத்தோட ஸ்கிரிப்ட் பொறுத்தவரைக்கும் ஒரு சீன் கூட போரடிக்காத அளவுக்கு எங்கேஜிங்கா கொண்டு போக ட்ரை பண்ணுவார். வலிமையைத் தவிர மற்ற படங்கள் இதற்கு சான்று.

நோ டெம்ப்ளட்:

வினோத்தோட ஃபிலிம் மேக்கிங்ல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். அவருக்கு டெம்ப்ளேட்குள்ள முடங்குறது பிடிக்காது. அதை உடைக்கணும்னு ரொம்பவே ட்ரை பண்ணுவார். அதனாலதான் சதுரங்கவேட்டை சாயல் துளியும் தீரன்ல இருக்காது. தீரன் சாயல் துளியும் வலிமைல இருக்காது. வலிமை சாயல் எதுவும் துணிவுல இல்லைன்றதை ட்ரெய்லர்லயே பார்த்தோம். ஆனா, ருத்ரா – பீஸ்ட் – மணி ஹெய்ஸ்ட் சாயல்லாம் கண்ணுக்குத் தெரியறது வேற டிபார்ட்மென்ட். வினோத்தோட முந்தைய படங்களின் சாயல் இதுல தெரியலைன்றதுதான் மேட்டர்.

சரி, லாஸ்டா தியரிக்கு. அது என்ன தியரி?

வினோத்தோட கன்டென்ட் எல்லாத்துலயும் தத்துவார்த்தமா ஒரு விஷயம் மட்டும் அப்படியே ஊடுறுவிக் கிடக்கும். அதை ‘Thirst for money’-ன்ற விஷயமாவே நாம பார்க்க முடியும். அவரோட படங்கள்ல ஒண்ணு ப்ரோட்டகனிஸ்ட் பணத்து மேல தாகம் கொண்டு அதை அடையறதுக்கு எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போறாங்க, இல்லாட்டி அவரோட ஆன்ட்டக்னிஸ்ட் அப்படி செய்றாங்க. இதைத்தான் சதுரங்கவேட்டைல ஹீரோ மூலமும், தீரன்ல அந்தக் கொள்ளையர்கள் மூலமும், வலிமைல வில்லன்கள், சொந்தங்கள் மூலமும் பார்த்தோம்.

தனக்கோ அல்லது தான் பார்த்த நெருக்கமானவர்களுக்கோ பணம் சார்ந்த விஷயங்கள் செய்தவையோ அல்லது நம்ம சொசைட்டி பணம் பணம்னு அதை நோக்கி மட்டும் ஓடுறதுனால ஏற்பட்ட தாக்கத்தாலோ ஹெச்.வினோத் ரொம்பவே டிஸ்டர்ப் ஆகி, பர்ப்பஸாவோ அல்லது அனிச்சையாவே இந்தப் பண மேட்டரை மட்டும் விடாம பிடிச்சுட்டு வர்றார்.

துணிவுல சொல்லவே வேணாம்…

படம் முழுக்கவே பணம்தான் மேட்டர்!

ரைட்டு, ஹெச்.வினோத் படைப்புகளில் நீங்க தேடி கண்டடைஞ்ச விஷயங்கள்ல எங்களுக்கு கமென்ட்ஸ் மூலமா சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top