4000 பாட்டு பாடியிருக்கிற திப்புவை unsung singer -னு சொல்லலாமா..!?

4000 பாட்டு பாடியிருக்கிற திப்புவை அன்சங்க் ஹீரோனு சொன்ன கோவம் வரத்தானே செய்யும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நான்கு மொழிகளில் 4000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். குறிப்பா தமிழில் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஷ் ஜெயராஜ், ஜீவி பிரகாஷ், தேவி ஸ்ரீ பிரசாத்னு இவர் பாடாத இசையமைப்பாளர்களும் கிடையாது; ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ்னு இவர் பாடாத ஹீரோக்களும் கிடையாது என்கிற அளவிற்கு பல சம்பவங்களை பண்ணியிருக்கார். அவரைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம். 

திப்பு எத்தனையோ ஹீரோக்களுக்கு பாடியிருந்தாலும் அஜித், விஜய்க்கு பாடும் போது அது வேற ஃபீலில் இருக்கும். எப்படின்னா, அந்தப் பாட்டை அஜித், விஜய்யே பாடுற மாதிரி இருக்கும். இவர் தமிழில் பாடிய முதல் பாடலான சிட்டிசன் படத்தின் மேற்கே உதித்த சூரியனே பாடலில் இருந்தே இவருக்கும் அஜித்திற்குமான நெருக்கம் தொடங்கிவிட்டது. சிட்டிசன் படத்தின் இந்தப் பாடலை சங்கர் மகாதேவனும் பாடியிருக்கிறார்; திப்புவும் பாடியிருக்கிறார். இரண்டையும் கேட்ட அஜித் திப்புவோட வெர்ஷனை படத்தில் வைக்க சொன்னாராம். அந்தப் பாடலுக்குப் பிறகு ரெட் படத்தின் தாய் மடியே; வில்லன் படத்தின் ஹலோ ஹலோ என் காதலா; அட்டகாசம் படத்தின் உனக்கென்ன உனக்கென்ன, தல போல வருமா; திருப்பதி படத்தின் புது வீடு கட்டலாமா; மங்காத்தா படத்தின் மச்சி ஓப்பன் த பாட்டில் வரைக்கும் அஜித்துக்கு திப்பு பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட்.

Tippu
Tippu

அப்படியே விஜய்க்கு வந்தால், விஜய்யின் பல ஓப்பனிங் பாடல்களையும் விஜய் கரியரின் பல முக்கியமான பாடல்களையும் திப்பு பாடியிருக்கிறார். தமிழன் படத்தின் ஹாட்டு பார்ட்டி, யூத் படத்தின் ஓல்டு மாடல், புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி, திருமலை படத்தின் தாம் தக்க தீம் தக்க; திம்சு கட்ட, கில்லி படத்தின் சூரத்தேங்கா, மதுர படத்தின் எலந்தப்பழம், திருப்பாச்சி படத்தின் நீ எந்த ஊரு, சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா, ஆதி படத்துல இப்போ இல்லாட்டி எப்போ, வில்லி படத்துல வாடா மாப்ள, காவலன் படத்துல விண்ணைக்காப்பான் ஒருவன், துப்பாக்கி படத்துல குட்டிப்புலி கூட்டம், புலி படத்தோட மனிதா மனிதானு பல பாடல்கள் பாடியிருக்கார். திப்புவோட குரல் எனக்கு நல்லாவே பொருத்தமா இருக்குனு விஜய்யே சொல்லியிருக்கார்னு இவர் விஜய்க்கு எவ்வளவு முக்கியமான சிங்கர்னு நீங்களே பார்த்துக்கோங்க.

சாமுராய் படத்தோட மூங்கில் காடுகளே பாடல்தான் விக்ரமோட காலர் ட்யூனா பல வருடங்களுக்கு இருந்திருக்கு. அதை மாத்த வெச்சது இருமுகன் படத்தோட கண்ணை விட்டு பாடல்தான். ரெண்டுமே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் திப்பு பாடிய பாடல்கள்தான். அதுமட்டுமில்லாமல் விக்ரமோட தில் படத்துல ஓ நண்பனே, தூள் படத்துல இந்தாடி கப்பங்கிழங்கேனு பல ஹிட் பாடல்களும் பாடியிருக்கார். அதே மாதிரி சூர்யாவுக்கு காக்க காக்க படத்துல என்னை கொஞ்சம் மாற்றி, ஆறு படத்துல பாக்காத என்ன பாக்காதனு சில எவர்க்ரீன் ஹிட் பாடல்களும் பாடியிருக்கார். அன்பே சிவம் படத்துல ஏலே மச்சி மச்சி பாட்டோட கமல் வெர்ஷன்தான் படத்துல இருக்கும். அந்தப் பாட்டுக்கு திப்பு வெர்ஷனும் இருக்கு. அது ஏன் படத்துல வரலைங்கிறதுக்கு ஒரு சூப்பர் காரணம் இருக்கு. படத்துல கமலுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதுக்கு அப்பறம் பாடுற மாதிரி வரப்பாடல்தான் இது. ஆனால், திப்பு இந்தப் பாட்டை பயங்கர ஹைபிச்சில் பாடியிருக்கிறார். இதை கேட்ட கமல், படத்துல என்னால ஒழுக்கா பேசவே முடியாது. பாட்டுல மட்டும் நான் ஹைபிச்சுல பாடுன நல்லா இருக்குமானு வித்யாசாகர்கிட்ட சொல்லிட்டு, அவரே இந்தப் பாடலை அந்தக் கேரக்டராகவே பாடிட்டார். அதுனாலதான் கமல் வெர்ஷன் படத்துல வந்துச்சு. 

இந்தப் பாடல்கள் மட்டுமில்லாமல் திப்புவோட பெஸ்ட் கலெக்‌ஷன்ஸ்னா, மின்னலே படத்தோட வெண்மதி வெண்மதியே; ஓ மாமா மாமா, லேசா லேசா படத்துல முதல் முதலாய், இயற்கை படத்தோட காதல் வந்தால், கோவில் படத்தோட சிலு சிலு, சந்திரமுகி படத்தோட ரா ரா, வேட்டையாடு விளையாடு படத்தோட கற்க கற்க, ஜெயம் படத்தோட திருவிழானு வந்தா, சார்லி சாப்ளின் படத்தோட பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா, அனேகன் படத்துல ஆத்தாடி ஆத்தாடினு திப்புவோட ப்ளேலிஸ்ட்க்கு ஒர்த் ஜாஸ்தி.

Tippu - Harini
Tippu – Harini

திப்புனு சொன்னா ஹரிணியையும் ஹரிணினு சொன்னா திப்புவைத்தான் சேர்ந்தே யோசிக்கிற அளவுக்கு இவங்க ரெண்டு பேரும் நம்ம மனசுல பதிஞ்ச ஒரு சிங்கிங் கப்பிலாகவும் ரியல் ஜோடியாகவும் இருக்காங்க. திப்பு சினிமாவில் பாடல்கள் பாடுறதுக்கு முன்னாடியே ஹரிணி தமிழ் சினிமாவில் ஹிட்டான ஒரு பாடகியா இருந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த தேவாவின் கான்செட்டில் வாலி படத்தோட ஏப்ரல் மாதத்தில் பாட்டோட லிரிக்ஸை கத்துக்கிறதுக்காகத்தான் முதன் முதலில் இவங்க ரெண்டு பேரும் பேசியிருக்காங்க. அப்போதுல இருந்து பழகி 22 வயசுலேயே கல்யாணமும் பண்ணிட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பஞ்சதந்திரம் படத்துல என்னோடு காதல் என்று, பூ படத்துல மாமன் எங்க இருக்கான், வேங்கை படத்துல ஒரே ஒருனு திரையில் பல பாடல்களும் பாடியிருக்காங்க; ஒரு சக்ஸஸ்ஃபுல் ஜோடியாகவும் இருக்காங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top