சும்மா என்னத்துக்கு கத்திட்டு இருக்கீங்க… பிக்பாஸ் தலைவலி தனலட்சுமி ரோஸ்ட்!

பிக்பாஸ் வீட்டுல இருக்குற தனலட்சுமி மாதிரி வாழ்ந்துறக்கூடாதுன்றதுதான் இப்போதைக்கு பலர் மனசுலயும் இருக்குற எண்ணம். எதுக்கெடுத்தாலும் பொய், போலித்தனம், தேவையில்லாமல் கத்துறது, வீம்புக்குனே நிக்கிறது, பெரிய ஆள்னு தலைகனத்தோட சுத்துறது, அடுத்தவங்கள ஹர்ட் பண்றதுனு ஒவ்வொரு நாளையும் கழிச்சிட்டு இருக்காங்க. ராபர்ட் மாஸ்டர் போற போக்குல “நீ தலைவி இல்லை. தலைவலி”னு கமெண்ட் அடிச்சிட்டு போய்டுவாரு. என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுங்க பிக்பாஸ்னு ஆயிரத்து எட்டாவது தடவையா சொன்னாங்க. இந்த வீடியோல தனலட்சுமி ரோஸ்ட்தான் பார்க்கப்போறோம்.

Dhanalakshmi
Dhanalakshmi

தலைவர் பதவி எல்லா இடத்துலயுமே பிரச்னையாதான் இருக்கு. இந்த வாரம் தலைவர் பதவிக்கு நந்தினி, அதாங்க, மைனா தேர்வானாங்க. அதுக்கு முன்னாடியே நான்தான் தலைவர்னு முடிவு பண்ண தனலட்சுமி, அவரை அந்த டீம்ல இருந்து மாத்தணும், இவரை இந்த டீம்க்கு கொண்டு வரணும்னு அப்ரசண்டிகளோட சேர்ந்து பொறுப்பு பிரிச்சிட்டு இருந்தாங்க. ஒருத்தரைப் பார்த்தாலே எப்படி அடிக்கணும்னு தோணும்?னு டவுட் இருக்குல. தனலட்சுமி பண்ற சேட்டையெல்லாம் பாருங்க. அப்படிதான் தோணும். விஜய் ஃபேன்ஸ், திரிஷா ஃபேன்ஸ்க்குலாம் ஃபேவரைட்டான பெயர், தனலட்சுமி. அந்தப் பெயரை வைச்சுட்டு இவங்க பண்ற சேட்டைகள்தான் உச்சக்கட்ட கடுப்பை கிளப்புறதா பேசிக்கிறாங்க. தலைவர் போட்டிக்கு ஃபுட் பால் கோல் மாதிரி போட்டி ஒண்ணு வைச்சாங்க. அதுல மைனா ஜெயிச்சிடுவாங்க. பிக்பாஸ் மைனாவை தலைவியா அறிவிச்சிடுவாரு. தலைவி கனவு கண்டுட்டு இருந்த தனலட்சுமியோட கனவு அமால் டுமாலா  நொறுங்கிரும். உடனே, ஓடிப்போய் ரூம்ல உட்கார்ந்து பெர்ஃபாமென்ஸ ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. என்னை வெளிய அனுப்பிடுங்க. இந்தப் போட்டி நேர்மையா நடக்கலை. அப்படி, இப்படினு என்னலாமோ சொல்ல ஆரம்பிச்சாங்க. ரச்சிதா சமாதானம் பண்ண போவாங்க. கையெடுத்து கும்பிட்டு “யாரையும் தலைவியா ஏத்துக்க முடியாது. தயவு செய்து நீங்க பேசாதீங்க. வெளிய போங்க. பேசாதீங்க. போங்க”னு கத்துவாங்க. அதை பார்க்கும்போது, “தயவு செய்து நீங்க கத்தாதீங்க. வெளிய வந்தா ஒரு பயலும் மதிக்கப்போறதில்லை. பிக்பாஸ் அவங்கள வெளிய அனுப்பிடுங்க”னுதான் சொல்லத்தோணும்.

Dhanalakshmi
Dhanalakshmi

தனலட்சுமி முதல்ல இருந்தே, எல்லாத்தையும் ஹர்ட் பண்ணிட்டு வம்புக்கு இழுத்துட்டுதான் இருக்காங்க. ஃபஸ்ட் எல்லாருமே செம காண்டானது, ஜி.பி.முத்து விஷயத்துலதான். ஆயிஷாவும் தனலட்சுமியுல் ஆரம்பத்துல செம க்ளோஸா சுத்திட்டு இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் ஜி.பி.முத்து மேல செம காண்டு இருந்துட்டே இருந்துருக்கும்போல. வாய்ப்பு கிடைக்கும்போதுலாம் அவரை அட்டாக் பண்ணிட்டே இருந்தாங்க. மத்த டீம்க்குலாம் இவர் போய் வேலை பார்க்குறாரு, எதுவுமே அவருக்கு புரியலைன்றதுலாம் ஆயிஷாவோட குற்றச்சாட்டு. தன லட்சுமியும் இதே காண்டுலயும் அவருக்கு இருக்குற ஃபேன் பேஸ் பார்த்து கடுப்புலயும் இருந்துருக்கலாம். இதனால அவரைப் பார்த்து, “நல்லா நடிக்கிறீங்க”னு தனலட்சுமி போற போக்குல சொல்லிடுவாங்க. இதைக் கேட்டு முத்து கலங்கிப்போய் அழ ஆரம்பிச்சிருவாரு. என்னைக்குமே தலைவருக்கு நடிக்கலாம் தெரியாது. உண்மையாதான் எல்லா இடத்துலயும் இருப்பாருனு அவர் ஃபேன்ஸ்லாம் சேர்ந்து தனலட்சுமியை போட்டு பொளக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் ஜி.பி.முத்து வெளிய வந்துட்டாரு. தனலட்சுமி பார்க்குற எல்லாரையும் கடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு தெரிஞ்சு பிக்பாஸ் வீட்டுல அசீம்க்கு அடுத்து எல்லாரையும் வெறுப்பேத்துற ஆள்னா அது தனலட்சுமிதான். விக்ரமன், பொம்மை டாஸ்க்ல தனலட்சுமிக்கு சப்போர்ட்டா நிண்ணு பேசுனாரு. ஆனால், அதை மதிக்கக்கூட இல்லை. விக்ரமன் தனலட்சுமி தப்பை சுட்டிக்காட்டுனா அவரையும் போய் கடிச்சு வைக்கிறாங்க. அவரும் அதை பெருசா எடுத்துக்காமல் கடந்து போய்டுறாரு. எப்படி தனலட்சுமிகூடலாம் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களோ!

Dhanalakshmi
Dhanalakshmi

`யம்மா தனலட்சுமி உன்னை தெரியாம போட்டிக்கு கூப்பிட்டுட்டு வந்துட்டோம். தயவு செய்து நீயே வெளிய போய்டு’னு பிக்பாஸ் தனலட்சுமியை பார்த்து சொன்னாலும், ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்லை. ஏன்னா, எல்லார்கூடவும் சண்டை போட்டுட்டு வந்து பிக்பாஸ் எனக்கு அம்மாகிட்ட போகணும். என்னை வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுங்கனு சொல்லுவாங்க. அப்புறம் எல்லாரும் தூங்குன பிறகு தனியா வந்து, “ஏன்தான் நான் வெளிய போகணும்னு சொல்றனோ. என்னை மன்னிச்சிருங்க பிக்பாஸ். கால்ல விழுந்து மன்னிப்பை கேக்குறேன். இனிமேல் நான் அப்படி சொல்லவே மாட்டேன்”னு சொல்லுவாங்க. கமல் நிறைய இடத்துல தன லட்சுமை செஞ்சு விட்ருவாரு. ஒருபோட்டில வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுனு தனம் பேசும்போதே, கமல் ஸ்டாப் பண்ணி, வெற்றி நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு உங்களிடம் இருந்து பறித்து கொடுக்கப்படுகிறதுனு சொல்லுவாரு. அதை அப்படியே கட் பண்ணி தக் லைஃபா போட ஆரம்பிச்சாங்க. அப்புறம், கேமரா முன்னால வந்து நின்னு “பிக்பாஸ் என்னைய இப்போ வெளிய அனுப்பி விடுங்க”னு சொல்லுவாங்க. எத்தனை தடவை? தூக்கத்துல எழுப்பி கேட்டால்கூட, என்னை வெளிய அனுப்பி விடுங்கனுதான் சொல்லுவாங்க. அப்புறம் தெளிஞ்ச பிறகு மன்னிச்சிருங்க பிக்பாஸ்னு சொல்லுவாங்க. இப்போ, புரியுதா யார் நடிக்கிறதுனு. எங்க தலைவர் சொன்ன சொல்ல இருந்து பின்வாங்க மாட்டாரு. ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை மாத்தி மாத்தி பேசுறதுலாம் எங்க தலைவருக்கு தெரியாது. திரும்ப வந்து, சண்டை போட்டுட்டு, பிக்பாஸ் என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்கனுதான் சொல்லப்போறாங்க.

Dhanalakshmi
Dhanalakshmi

கமல் வரும்போதுலாம் தனலட்சுமியை வைச்சு செய்துவிட்ருவாரு. அப்படி ஒருதடவை திட்டுனதும், பாத்ரூம் குள்ளபோய் வெளிய கத்தி அழுவாங்க. பொதுவா நாம அடிவாங்குனா, வெளிய காமிக்காம கத்தாமல் உள்ள வைச்சு அழுதுட்டு வருவோம். ஆனால், அழுது அதுல ஒரு கன்டன்ட் கிரியேட் பண்ணி, சிம்பதியை உண்டு பண்ண நினைக்கிறதையெல்லாம் என்னனு சொல்ல? என்னத்தையாவது உளறிகிட்டு இருனு சொல்ற மாதிரி, என்னத்தையாவது பண்ணிகிட்டே இருக்கணும். இல்லைனா, நைட்டு தூக்கம் வராது. ஆக்சுவலா, அசீம் பண்றதுலாம் கரெக்டா சொல்லி விமர்சிக்கலாம். தப்பு பண்றதுலயாவது ஒரு ஐடியல் இருக்கு. ஆனால், தனலட்சுமி பண்றது பூராவும் தேவையில்லாததுதான். ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிட்டு பேசி தனத்தை விமர்சிச்சிட்டே இருக்கலாம். கமல், பிக்பாஸ் யாரயாவது பாராட்டுனாங்கனா அதை தாங்கிக்க முடியாது. மூஞ்சுல அப்படியொரு காண்டு தனலட்சுமிக்கு தெரியும். பேரு மட்டும் கங்காதரன், காவரிதரன்னு வைச்சுட்டு, ஒண்ணும் தரமாட்றனு கமல் சொல்லுவாரு. அதை மாதிரிதான், பேரு தனலட்சுமினு வைச்சுட்டு லட்சுமி கடாட்சமான எந்த விஷயமும் பண்றது இல்லை. அதுமட்டுமில்ல தனம் உள்ள சொல்ற கதைகள் எல்லாமே பொய்னும் அவங்க நண்பர்கள் வெளிய சொல்லிட்டு சுத்துறாங்க. பிக்பாஸ் பார்வையாளர்களை எந்த அளவுக்கு முட்டாள்னு நினைச்சா இவங்கலாம் இப்படி விளையாடுவாங்க? ஒருத்தர், “இதுவரை வீட்டில் சொகுசா இருந்திங்களே அதுக்கு காசு எண்ணி வெச்சுட்டு அப்புறம் வெளியே போங்கடா அயோக்கியா ராஸ்கல்ஸ்ன்னு அசீம், அமுதவாணன், தனலட்சுமி இவங்களை துரத்தி விடணும். ஆவுன்னா வெளியே போறேன் போறேன்னு சொல்றாங்க”னு காண்டாகி போஸ்ட் போட்ருந்தாரு. முதல்ல தனலட்சுமியை வெளிய விடுங்க பிக்பாஸ். போட்டு பொளக்க போறாங்க.

Also Read – காதல் மன்மதன்.. மிக்சர் மன்னன்.. பிக்பாஸ் கதிரவன் பண்றது சரியா?

ஒரு போலியான வாழ்க்கையை எப்படிலாம் நடத்துறாங்கன்றதுதான் தனலட்சுமியை பார்க்கும்போதுலாம் எழுற கேள்வியா இருக்கு. தனக்கும் உண்மையாக இல்லாமல், தன்னை சார்ந்தவங்களுக்கும் உண்மையாக இல்லாமல், சமூகத்துக்கும் உண்மையாக இல்லாமல் என்ன பண்ணப்போறாங்க? தனலட்சுமி நடவடிக்கைகளை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுதுனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top