கோடைகாலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய அல்லது பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டிய Spices என்னென்ன?
Spices
உணவுப் பழக்க வழக்கம் என்பது நம் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பகுதிகளுக்கே ஏற்ற உணவு முறைகள் பிரபலம். அதேநேரம், Spices எனப்படும் சுவைகூட்டும் பொருட்களை ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்துவார்கள். இது அந்தந்தப் பகுதி உணவு வகைகளின் சுவைகளில் முக்கியமான பங்காற்றும்.
நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், உணவுமுறை சார்ந்து செரிமானக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படக் கூடும். இந்த சூழலில், கோடைகாலத்தில் Spices-களைப் பொறுத்தவரை எவற்றையெல்லாம் தவிர்க்கலாம் அல்லது பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாமா?
மிளகாய்
நம் உணவு வகைகளின் கார சுவையைக் கூட்டவும் நிறத்துக்காகவும் மிளகாய்ப் பொடியைச் சேர்ப்பதுண்டு. ஆனால், அதிகமாக மிளகாய்ப்பொடியைச் சேர்ப்பது உடல் நலனுக்குத் தீங்கையே விளைவிக்கும். கோடைகாலங்களில் இப்படி அதிகமான மிளகாய்ப்பொடியைச் சேர்ப்பதால், அது நமது உடலின் வெப்பநிலையை அதிகரித்துவிடுமாம். அதனால், அதிகமாக வியர்ப்பது, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால், கோடைகாலங்களில் மிளகாய்ப்பொடியின் பயன்பாட்டை கூடுமானவரை குறைத்துக் கொள்வது நல்லது.
இஞ்சி
உணவில் சுவையைக் கூட்ட மட்டுமல்ல, எத்தனையோ பேர் தேநீரில் கூட இஞ்சியை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளால் அதன் பயன்பாடும் அதிகமாக இருக்கும். ஆனால், இஞ்சியை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது உடல் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையை ஏற்படுத்தும். குறிப்பாக, சர்க்கரை வியாதி, Bleeding போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் கோடைகாலத்தில் இஞ்சியின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நலம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பூண்டு
உடல் எடையைக் குறைக்கும் பண்பு, பசியின்மையைப் போக்குவது உள்ளிட்டவைகளால் பண்டைய காலம் தொட்டே நமது உணவில் பூண்டின் பயன்பாடு அதிகம் என்றே சொல்லலாம். குளிர்காலங்களின் பூண்டு பல்வேறு பயன்களை அளித்தாலும், வெயில்காலங்களில் அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதே நலம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் வெப்பநிலையை அதிகரிப்பதோடு, செரிமான அமிலங்கள் தொடர்பான பிரச்னை, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை கோடைகாலத்தில் ஏற்படுத்தும்.
மிளகு
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட மிளகு, உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்க வல்லது. ஆனால், கோடைகாலத்தில் மிளகு பயன்பாடு அளவோடு இருக்க வேண்டும். கோடைகாலத்தில் மிளகை அதிகமாகப் பயன்படுத்தும்பட்சத்தில் Hot Flashes எனப்படும் ஒருவகை நெஞ்செரிச்சல் பிரச்னை அதிகமாக வர வாய்ப்புண்டு.
கோடைகாலத்தில் குளுமையாக்கும் Spices
புதினா, கொத்தமல்லி, சீரகம், லவங்கப்பட்டை போன்ற Spices உடலைக் குளுமையாக்கும் வல்லமை படைத்தவை. கோடைகாலத்தில் இவற்றை எடுத்துக் கொள்ளும்போது, உடல் சூடு தணிவதோடு, நெஞ்செரிச்சலும் குறையும். மேலும், வயிறு உப்புசம் பிடிப்பதையும் இவை தடுக்கும்.
Also Read –