காமெடி கிளாசிக் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்… 4 ட்ரீட்மென்ட்கள்!

தமிழ்ல வந்த ஃபீல் குட் படங்கள்ல வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு எப்பவுமே ஸ்பெஷல் இடம் உண்டு. இன்னைக்கும் அந்தப் படத்துல வந்த ஒவ்வொரு டயலாக்கையும் ஒவ்வொரு சீனையும் பார்த்து ரசிச்சு ரசிச்சு சிரிக்கலாம். அதுக்கு கமல்ஹாசன், கிரேஸிமோகன், பிரகாஷ் ராஜ், பிரபு, சினேகா, கருணாஸ் டைரக்டர் சரண், மியூசிக் டைரக்டர் பரத்வாஜ் இப்படி எல்லாருமே முக்கியமான காரணம். பல மொழிகள்ல இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்ருக்கு. ஆனால், தமிழ்லதான் பெஸ்ட்டா பண்ணியிருக்காங்கனு நமக்கு தோணும். இந்தப் படம் புடிக்காதுனு யாரும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு அந்தப் படத்துக்கு கொடுத்த முக்கியமான 4 ட்ரீட்மென்ட்தான் காரணம். அந்த ட்ரீட்மென்ட் என்னனுதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

கிரேஸியின் கிளாசிக் டயலாக்ஸ்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் கிரேஸி மோகன்தான். தமிழ்ல கமலை வைச்சு இந்த படத்தைப் பண்ணும்போது நிறைய காமெடி இருக்கணும்னு சரண் பிளான் பண்ணியிருக்காரு. அப்போ கமல் சரண்கிட்ட, “கிரேஸி மோகன்கிட்ட டயலாக் வாங்கலாம். ஆனால், ஷூட்டிங் அன்னைக்கு காலைலதான் டயலாக் நமக்கு வரும். அவர்கிட்ட அதுக்கு ரொம்ப போராட வேண்டியது இருக்கும்”னு சொல்லியிருக்காரு. ஏன்னா, அன்னைக்கு கிரேஸி மோகன் ரொம்ப பிஸியான ஆள். டிராமா, அது இதுனு ஓடிக்கிட்டே இருப்பாராம். அவரை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமான சமயம். சூழல் இப்படி இருக்கும்போது கமல் சரணுக்கு செம ஐடியா ஒண்ணு கொடுத்துருக்காரு. என்னனா, “படத்துல ஒரு கேரக்டர்ல அவரை புடிச்சுப் போட்ருங்க. அப்போ செட்ல நம்மகூடவே அவர் இருப்பாரு”னு சொல்லியிருக்காரு. சரணும், கிரேஸி மோகன்கிட்ட போய்ட்டு நீங்க இந்த டாக்டர் கேரக்டர் பண்ணனும்னு சொல்லியிருக்காரு. முதல்ல, “இல்லை, எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குனு”னு சமாளிச்சிருக்காரு. அப்புறம் ஒரு வழியா அந்த கேரக்டர் பண்ண அக்சப்ட் பண்ணிருக்காரு. கிரேஸி மோகன் இந்தப் படத்துக்குள்ள வந்தது இப்படிதான்.

Vasool Raja
Vasool Raja

பொதுவா வார்த்தை ஜாலங்கள்ல கிரேஸி கில்லாடினு நமக்கு தெரியும். அதோட உச்சக்கட்டமா நிறைய படங்களை சொல்லலாம். அதுல வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படமும் ஒண்ணு. “நான் அட்ரெஸ் கேட்டா குதூகலமாய்டுவாங்க, மார்கபந்து முதல் சந்து, என்னடா அவார்டா கொடுக்குறாங்க?, ஃபஸ்ட் பேஷண்டே பேதி பேபி, ராஜா காலிங் ராஜு, சோ, மாமனாரைக் காலிங் மாமு, அன்பே வெங்கடாச்சலம்” இப்டினு எக்கச்சக்கமா சிரிக்க வைக்கிற டயலாக்ஸ் இருக்கும். எல்லாத்தையும் எழுதுனதும் கிரேஸிதான். காமெடில தான் மனுஷன் இப்படி வார்த்தைகளைப் போட்டு கலக்கியிருப்பாருனு பார்த்தா, சென்டிமென்ட் டயலாக்ஸ் எழுதுறதுலயும் அவரை அடிச்சுக்க ஆள் இல்லைனு இந்தப் படத்தைப் பார்த்தா தெரியும். கடவுள் பத்தின டயலாக்கா இருக்கட்டும், “அது எப்படி உடம்பை விட்டுட்டு உயிரை மட்டும் உருவி எடுத்தட்ட”னு சொல்ற டயலாக்கா இருக்கட்டும், “கல்லு மாதிரி நின்ன மனுஷன் கண்ணீர் விட்டுட்டாரு”னு சொல்ற டயலாக்கா இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருகும். ஒரு படம் ஃபுல்லா டபுள் மீனிங் இல்லாமல் சிரிக்கவும் வைச்சு, அழவும் வைச்சு, காதலிக்கவும் வைக்கிற வசனங்கள் எழுத கிரேஸி மோகனால மட்டும்தான் முடியும்.

ஆஸம் ஆக்டர்ஸ்

எல்லா குட்டி குட்டி கேரக்டரும் ரொம்பவே முக்கியமானதாதான் இந்தப் படத்துல இருக்கும். ஃபஸ்ட் கமல்தான். அந்த மனுஷன் ஆக்டிங் பத்திலாம் சொல்லணுமா? எல்லா எமோஷன்ஸ்லயும் நடிச்சு அதை நம்மளயும் ஃபீல் பண்ண வைச்சிருவாரு. கிளைமேக்ஸ்லலாம் நமக்கே கண்ணீர் வந்துரும். எல்லாப் படத்துலயும் காலேஜ் ஃபஸ்ட் டேல கையை தூக்குவாங்கு. ஆண்டவர் மட்டும் காலை தூக்குவாறு. அங்கயே குசும்ப ஆரம்பிச்சிருவாரு. கமலுக்கு அப்புறம் இந்தப் படத்துல நம்ம கவனத்தை ஈர்க்குறது பிரகாஷ் ராஜ்தான். அவரே ஃபோன் பண்ணி அந்த கேரக்டர் நான் பண்ணட்டுமானு கேட்டாராம். உடனே, சரணும் கமலும் அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க. மேனரிஸத்துலயே மிரட்டியிருப்பாரு. டென்ஷன் ஆகும்போது பண்றது, மாமுன்னு பண்றது, எப்பவும் பதற்றத்துல இருக்குற மாதிரியே இருக்குறதுனு எல்லாமே யூனிக்கா இருக்கும். அப்புறம் நாகேஷ். முதல்ல அந்த கேரக்டருக்கு பாலசந்தர் சாரைதான் கமல் கேட்ருக்காரு. ஆனால், “அவனை டைரக்ட பண்ணிருவேன். அவன் முன்னாடி என்னால நடிக்கலாம் முடியாது”னு சரண்கிட்ட சொல்லிட்டாராம். அதுக்கப்புறம் கிரிஷ் கர்னாட் கிட்ட கேட்ருக்காங்க. அதுவும் முடியாமல் போய்ருக்கு. கடைசில நாகேஷ் நடிச்சா எப்படி இருக்கும்னு கமல் ஐடியா கொடுக்க அவரே உள்ள வந்துட்டாரு.

Vasool Raja
Vasool Raja

பிரபுவோட கேரக்டரும் இந்தப் படத்துல நல்லாருக்கும். பிரகாஷ் ராஜ் மாதிரிதான் பிரபும் “இந்த கேரக்டர் நான் பண்ணட்டுமா?”னு கேட்டு நடிக்க வந்துருக்காரு. கமலுக்கு காமெடிலயும் சரி எமோஷன்லயும் சரி ரைட் ஹேண்டா இருந்து படத்தை ஒருபக்கம் தாங்கி புடிச்சிருப்பாரு. இவங்கக்கூட வந்த கருணாஸ்லாம் அல்டிமேட். “ஹைட்டுனாலே எனக்கு பயம். அமிதாப் பச்சன பார்த்தாலே பயப்படுவேன்”னு சொல்றது, 7-ம் நம்பர் ரூம் கணக்கு எல்லாத்துலயும் பின்னியிருப்பாரு. காமெடி மாதிரியே காதல் காட்சிகளும் கியூட்டா இருக்கும். பாப்புன்ற பெயரே கியூட் தான? ஃபஸ்ட் கமலுக்கு ஜோடியா நடிக்க இருந்தது ஜோதிகா. அப்புறம் சினேகா நடிக்க வந்தாங்க. கடைசில கண்ணுல தண்ணியோட அப்பாக்கிட்ட பேசுற டயலாக்லாம் பார்த்து செம சினேகானு சொல்ல வைக்கும். படத்துல எமோஷன் ஆரம்பிக்கிறதே ஜெய சூர்யா வந்தபிறகுதான். சின்ன கேரக்டர்தான். ஆனால், பக்காவா பண்ணியிருப்பாரு.

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆனந்த் கேரக்டர். அதாங்க, கோமாலயே இருப்பார்ல. அந்த கேரக்டர்ல நடிக்க வைக்க நிறைய பேரை ஆடிஷன் பண்னியிருக்காங்க. யாருமே செட் ஆகலையாம். கடைசில இந்தில நடிச்ச அவரையே கூட்டிட்டு வந்து நடிக்க வைச்சிட்டாங்களாம். இன்னைக்கும் அந்த கேரக்டர் எல்லார் மனசுலயும் இருக்கும். அடுத்து ஹாஸ்பிடல்ல கிளீனரா வரக்கூடிய தாத்தா, எப்பப்பாரு திட்டிட்டே இருப்பாரு. அவர்கூட அந்த கேரக்டரை செமயா பண்ணியிருப்பாரு. இப்படி குட்டி குட்டி கேரக்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து அந்த கேரக்டராவே வாழ்ந்து அந்தப் படத்தை கிளாசிக்கா மாத்திட்டாங்க. ரொம்பவே கம்மியான நாள்கள்ல இந்தப் படத்தை எடுத்து முடிச்சாங்க. அப்படி இருக்கும்போது இப்படி கேரக்டர்ஸ் தேடி வந்து அமையுறதும், எதார்த்தமா பெஸ்ட்டா அமையுறதும் வேறலெவல்ல!

இண்ட்ரஸ்டிங் வைத்தியங்கள்

ஆக்சுவலா இந்தப் படம் நிறைய வைத்தியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்திச்சு. முதல்ல கட்டிப்புடி வைத்தியம். இன்னைக்கு நிறைய பேருக்கு இந்த வைத்தியம் தேவைப்படுதுனு சொல்லலாம். கட்டிப்புடிக்கிறதுல இவ்வளவு விஷயம் இருக்கானு சொல்லி தந்த படம். அதுக்காக தெரியாத யாரையாவது கட்டிப்புடிச்சு அடி வாங்கிடாதீங்க. பதற்றத்தோட இருக்குற உங்களை நேசிக்கிறவரைக் கட்டிப்பிடிங்க. அது அவங்களுக்கு அவ்வளவு ஆறுதலைக் கொடுக்கும். சிரிப்பு வைத்தியம்னு ஒண்ணை சொன்னாங்க. நிறைய பேர் இன்னைக்கு இதை ஃபாலோ பண்றாங்க. சிரிப்பு கிளப்புனுலாம் இருக்கு. கேரம்போர்டு வைத்தியம். அதாவது அவங்களுக்கு புடிச்ச விஷயங்களை லிங்க் பண்ணி அவங்களை சரி பண்றது. கோமாலயே இருக்குறவர்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பேசுறது, வெளிய கூட்டிட்டு போறது இப்படி குட்டி குட்டியா நிறைய வைத்தியங்கள் படம் முழுக்க இருக்கும். எல்லாமே பெஸ்ட்டான வைத்தியங்கள்தான்.

Vasool Raja
Vasool Raja

மேஜிக்கல் மியூசிக்

பரத்வாஜ் இந்தப் படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ். பொதுவா காமெடிக்கு மியூசிக் போடுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதை வேறலெவல்ல பண்ணியிருப்பாரு. சின்ன சின்ன இடத்துல வர்ற மியூசிக்கும் அவ்வளவு ஃபீல்குட்டா இருக்கும். குறிப்பா பாடல்கள் எல்லாமே மாஸ். தீம்லயே சகலகலா டாக்டர் டாக்டர்னு பிச்சு உதறியிருப்பாரு. கலக்கப்போவது யாரு, பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு, ஆழ்வார் பேட்ட ஆண்டவா, காடு திறந்து கிடக்கின்றதுனு எல்லாமே ஃபயர்தான். இந்த ஆல்பத்துலயே எனக்குப் புடிச்சப் பாட்டு, சீனாதானா பாட்டுதான். டான்ஸ், வரிகள் எல்லாமே அல்டிமேட்டா இருக்கும். நிறைய பேருக்கு இந்தப் பாட்டு இன்னைக்கும் ஃபேவரைட்தான். ஆனால், இந்தப் பாட்டை கட் பண்ண சென்சார்ல சொல்லிட்டாங்களாம். அப்புறம் 50% சீன்ஸ் வைச்சு ஓகே சொல்லிதான் ரிலீஸ் பண்னாங்களாம்.

இந்தில முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்துக்கு பார்ட் 2 வந்துச்சு. ஆனால், அது நம்ம ஆடியன்ஸ்க்கு செட் ஆகாதுனு சரண் அதை எடுக்காமலேயே விட்டுட்டாராம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top