சலார்

ரஜினியின் தளபதிதான், பிரபாஸின் சலாரா? சலார் கதை இதுதான்!

சலார் படத்த்துக்கும் தளபதி படத்துக்கும் சம்பந்தம் இருக்கு. அதோட கதை இதுதான்.. இயக்குநர் பிரசாந்த் நீலோட முதல் படமான உக்ரம் படத்தோட ரீமேக்தான் சலாரனு தகவல் ஒண்ணு ஓடிட்டிருக்கு. இப்போ 2 டிரெய்லர்கள் ரிலீஸாகியிருக்கு. இதையும் உக்ரத்தையும் அனலைஸ் பண்ணி பார்த்தப்போ சில ஒற்றுமைகள் கிடைச்சது. சலாரோட கதை இதுவா இருக்கலாம்னு சொல்ல முடியும். ஆனா, டிப்ரண்ட்டான சில பெர்ஸ்பெக்டீவ்ஸூம் கிடைச்சது.

சலார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கக் காரணம், அதற்கு முன்னாடி அந்த இயக்குநரோட கே.ஜி.எஃப் படங்கள்தான். சலார் அறிவிச்சப்போவே உச்சக்கட்டத்துல பிசினஸ் ஆகிப்போச்சு. இப்போ டைரக்டா வீடியோவுக்குள்ள போகலாம்.

முதல்ல உக்ரம் கதையை பார்ப்போம். 2014-ம் வருஷம் வெளியான படம். முகோர் கிராமம் முழுக்க கேங்ஸ்டர்ளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசாங்கம்கூட அங்கு நடவடிக்கை எடுக்க முடியாத பலம் மிக்க கிராமம். அங்கே தன் நண்பனுக்கு கிடைக்க வேண்டிய கேங்ஸ்டர் அந்தஸ்து கிடைக்காமல் மற்ற சில சின்ன கேங்ஸ்டர்களுக்கு கிடைக்கிறது. அவர்களிடமிருந்து அந்த முகோரை மீட்டு தன் நண்பனுக்கு கொடுக்கிறார், அதன் பின் என்னவானது என்பதுதான் கதை. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒன்மேன் ஆர்மியாக வலம் வந்தார் அந்தப் படத்தோட நாயகன் ஶ்ரீமுரளி.

சலார் படத்தோட கதையா பார்த்தோம்னா, கான்சார் அப்படிங்குற நகரத்துல பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ராஜ மன்னார் தன் மகன் வரதராஜ மன்னாரை கேங்ஸ்டர்களின் தலைவனாக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு கீழ் உள்ள குட்டி கேங்ஸ்டர்கள் எல்லாம் சேர்ந்து மகனுக்கு அதைக் கிடைக்க விடாம அவங்களே அடைய நினைக்கிறாங்க. நிலை கைமீறிப்போகுறப்போ, அவரோட நண்பர் தேவா வந்து கை கொடுக்கிறார். அவர் நண்பனுக்காக கான்சாரை காப்பாத்திக் கொடுத்தாராங்குறதுதான் கதையா இருக்கும்னு கெஸ் பண்ண முடியுது.

உக்ரமுக்கும் சலாருக்கும் உள்ள ஒற்றுமைன்னு பார்த்தா, களம் ஒன்னுதான். அரசாங்கத்தால நுழைய முடியாத இடமா அது இருக்கும். ஹீரோ மெக்கானிக்தான். சலார்ல கான்சார் நகரம்னானா, உக்ரம்ல முகோர் கிராமம். ரெண்டு இடங்கள்லேயும் அதிகாரத்துக்கு நண்பனை கொண்டுபோக உதவுற ஹீரோ, நண்பனுக்காக ஒண்ணுன்னா இறங்கி அடிப்பார். உக்ரம்லேயும் உனக்கு என்ன வேணும்னு கேளு தர்றேன்னு சொல்வார் ஹீரோ, சலார்லேயும் உனக்கு ஒன்னுன்னா நான் வருவேனு சொல்றார். உக்ரம் படத்துல நண்பர்கள் மோதிக்கிற சூழல் ரெண்டு இடங்கள்ல வரும். ஆனா சண்டை போட மாட்டாங்க. சலார் ரெண்டு பாகங்கள்ங்குறதால நண்பன் உள்ள வந்த பின்னால ரெண்டு நண்பர்களுக்கும் மோதல் வரலாம்.

உக்ரத்துல இருந்து சலார் டிப்ரெண்ட்!

ரெண்டு நண்பர்கள் மட்டுமே ஒற்றுமை. சலார்ல என்.ஆர்.ஐயாக வர்ற நாயகிக்காகவே போராடுவர், ஹீரோ. சலார்ல ஸ்ருதிஹாசன் பத்திரிக்கையாளரா வர்றார். கான்சருக்காக காத்திருக்கிற குருநில மன்னர்கள் போர்ஷன் உக்ரம்ல இல்ல. டீச்சர் கேரக்டர், பெண் கேங்ஸ்டர்னு நிறைய கதாபாத்திரங்கள் சலார்ல புதுசா இருக்கு. 1000 வருஷத்துக்கு முன்னால இருந்து எப்படி உருவாச்சுங்குற டீட்டெய்ல் சலார்ல புதுசா இருக்கு. உக்ரம்ல வேற டைப்ல இருக்கும்.

பிரசாந்த் நீல் தன்னோட படங்களுக்காக சில டெம்ப்ளேட்டுகளை வைச்சிருக்கார். கதைக்களமா பார்த்தோம்னா அது ஒன்மேன் ஆர்மி கதைக்களம். எவ்ளோ படைகள் வந்தாலும் ஒரே ஆளாக மோதுவார் ஹீரோ. ஆக்‌ஷன் உச்சக்கட்டத்துல இருக்கும். பல பேர் ஒரு அதிகாரத்துக்கு போட்டி போடுவார்கள். ஒரு பெண் கேரக்டர் துன்பப்படுவார். அதைக் கண்ட ஹீரோ கொதித்து எழுவார். நல்ல ப்ரெண்ட்ஷிப் பாண்டிங் உள்ள ஒருத்தார் ஹீரோ கூட இருப்பார். ரொமான்ஸூம் அங்கங்க கொஞ்சம் தூவுவார். ஆக்‌ஷனுக்காக டீட்டெய்லான திட்டங்களை வகுக்கும் காட்சிகள் இருக்கும். இப்படி டெம்ப்ளேட்டுகளை வைத்து படங்களை இய்க்கிட்டு வர்றார், பிரசாந்த் நீல். இந்த படத்துக்கான கதையை உக்ரம் முடித்த பின்னர், 6 மணிநேர படமாக எடுக்கும் அளவுக்கு கதையை எழுதி முடிச்சுட்டார். ஆனா இயக்க முடியாம போச்சு, அப்புறம் கேஜிஎஃப்ப இயக்க வாய்ப்பு வந்து ஃப்ரூவ் பண்ணிட்டு, சலார் கதையை இயக்கியிருக்கார்.

உக்ரத்தை பார்த்தாலும் ஏன் சலாரை பார்க்க வேண்டும்?

உக்ரம் படத்தின் ரீமேக்காகவே இருந்தாலும், அது மேக்கிங் வைஸ் சின்ன பட்ஜெட்ல எடுக்கப்பட்டதால பெரிய பிரம்மாண்டம் இருக்காது. ஹீரோவைத் தவிர பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இல்லை. ஆனால் இப்போ விஷயம் அப்படியில்லை. சலாருக்கு பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் ப்ளாக்குகள் பெரிய அளவுல சலார்ல இருக்கு. டிரெய்லர்தான் அதுக்கான சாட்சி. உக்ரமில் வாய்ஸ் ஓவர்ல நிறைய கதைகள் சொல்லப்படும். ஆனால் அதை சலாரில் காட்சிகளாக பார்க்குறப்போ ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். உக்ரம்ல ஹீரோவுக்கும் ப்ரெண்டுக்கும் சண்டைக்காட்சிகள் இருக்காது. சலார்ல அதை எதிர்பார்க்கலாம். பிரசாந்த் நீலோட ஹீரோயின் போர்ஷன்கள் கொஞ்சம் க்ரிஞ்சாவும், வீக்காவும் இருக்கும். இதுவும் சலார்ல மாறலாம். இதுபோக கே.ஜி.எஃப் எடுத்த மொத்த டீமும் அப்படியே களமிறங்கியிருக்கு. அதனாலேயும் இந்தப்படம் நல்லா இருக்கும்னு நம்பலாம். பிரபாஸ் ஏற்கனவே முன்னணியில இருக்கிறதால பிரசாந்த் நீல்-பிரபாஸ் கூட்டணி 1000 கோடியை எளிதா தாண்டும்னே நம்பலாம். ஆனா இதையெல்லாம் விட முந்தைய பட ரீமேக்கை எடுக்கும் அளவுக்கு பிரசாந்த் நீல் போக மாட்டார்னும் நம்பலாம்.

Also Read – ‘சசி, பரணி ரோலின் முதல் சாய்ஸ் இவர்கள்தான்’  – நாடோடிகளின் சுவரஸ்ய கதை இது!

சலார்ல பிரபாஸ் டூயல் ரோல் பண்றார். இதுல ஈஸ்வரி ராவ், கருடன் புகழ் ராமச்சந்திர ராஜூனு பலபேர் உள்ள இருக்காங்க. ஒருவேளை கே.ஜி.எஃப்போட மூன்றாம் பாகத்துல ரெண்டு யுனிவர்ஸூம் சேர்ற மாதிரி காட்டுவார்னும் ஒரு தகவல் உலவுது. அது உண்மையானு பொருத்திருந்துதான் பார்க்கணும். ஆனா நிச்சயமா சலார் ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்டா இருக்கும்னு நம்பலாம்.

சுருக்கமா சொல்லணும்னா தளபதி படத்துல நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தை தங்களோட கண்ட்ரோல்ல கொண்டுவந்த பின்னால தேவாவோட தம்பியை சூர்யா கொலை செய்ஞ்சா அதுதான் உக்ரம்.

சலார் பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top