தற்கொலை முயற்சி டு KPY Title Winner- அமுதவாணனின் கதை!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, ‘அது இது எது’ நிகழ்ச்சியின் சிரிச்சாபோச்சு ரவுண்டில் ஹிட் ஆன காமெடியன்கள் எல்லாம் காமெடி கிங்கா வலம் வர்ற காலக்கட்டம் இது. அதுல ரோபோ சங்கர், ராமர், மைம் கோபி உட்பட முழுசா சினிமாவுக்குள்ளேயே போயிட்டாங்க. விஜய் டிவிக்கு அப்பப்போ கெஸ்ட்டா மட்டுமே வருவாங்க. ஆனா சினிமா எல்லாத்தையும் சிவகார்த்திகேயனாவே டீல் பண்ணாதுல்லயா?,.. அப்படி அந்தக் குழுவுல ஒரு நவரச காமெடியனா அமுதவாணன் இருந்தார். திடீர்னு காமெடிகளை கொடுத்து லைம்லைட்ல இருந்தவர், கொஞ்ச காலமா ஆள் காணாமல் போனார். எங்க தொலைச்சோமோ அங்க தேடுறதுதானே புத்திசாலித்தனம். அப்படி மறுபடியும் கே.பி.ஒய் சாம்பியன் 3-க்கு அவர் திரும்பி வந்தார். இந்த முறை பழைய நண்பர் பழனிபட்டாளத்துடன்.. இந்த போட்டி மூலமா அமுதவாணன் தனது மொத்த திறமைகளை வெளிப்படுத்தி டைட்டில் வின்னரா வலம் வந்துகிட்டிருக்கார். ஆனா, அவர் கடந்துவந்தபாதை கொஞ்சம் கரடுமுரடானது. அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

அமுதவாணன்
அமுதவாணன்

அமுதவாணனோட அப்பா சவுதி அரேபியாவுல வேலைல இருந்தார். வீட்டில் மொத்தம் 6 பேர். ஒரு கட்டத்துக்கு அப்புறமா சவுதியில இருந்து அவரோட அப்பா ஊருக்கு வர வேண்டிய கட்டாயம். அப்பா ஊருக்கு வந்ததுக்கு அப்புறமா, குடும்பத்துல பெரிசா வருமானம் இல்லாததால பெரிசா கவலைப்படுறாங்க. இந்த நேரத்துலதான் கலக்கப்போவது யாரு சீசன் 3-க்கு விஜய் டிவில ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு  அமுதவாணன் கிளம்பி வந்தார். ஆனா, ஆடிஷன் முடிச்சு ஷோ ஸ்டார்ட் ஆகிடுச்சு. அதனால மறுபடியும் ஊருக்கு கிளம்ப இருந்தவரை அந்த ஷோவோட இயக்குநர் “பரவாயில்ல, நீ பண்றது நல்லா இருக்கு. வா”னு சொல்லிக் கூப்பிட்டு சான்ஸ் கொடுக்க, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 3ல அமுதவாணன் போட்டியாளரா களமிறங்கினார். ஆனால், அந்த சீசனோட ஆடிஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் அமுதவாணன் வந்தார். முதல் ரெண்டு எபிசோட்ல பெர்பார்ம் பண்ணினார் அமுதவாணன். அதுக்கப்புறம் நடந்த ஆக்சிடெண்ட்டால அந்த நிகழ்ச்சியில கலந்துக்க முடியாம ஒதுங்கிட்டார், அமுதவாணன்.

அமுதவாணன்
அமுதவாணன்

 அந்த வெறியில அடுத்து நடந்த ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ்ல அமுதவாணனும், ராமரும் சேர்ந்து டைட்டில் அடிச்சாங்க. டான்ஸில் இருந்து மிமிக்ரி, ஸ்கிரிப்ட்னு நல்லாவே டெவலப் ஆகியிருந்தார், அமுதவாணன். சாம்பியன்ஸ் முடிஞ்சதுக்குப் பிறகு ’அது இது எது’ ஆரம்பிச்சது. ’சிரிச்சா போச்சு’ல தனியா வந்தே வடிவேல் பாலாஜி ஸ்கோர் பண்ணிட்டு இருந்த டைம்ல அமுதவாணன், பழனி பட்டாளம், ஜெயசந்திரன், திவாகர், சிங்கப்பூர் தீபன் இவங்க ஒரு டீமா என்ட்ரி ஆனாங்க. இதுதான் ’அது இது எது’ ஷோவை வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போச்சுனும் சொல்லலாம். அதுல பல எபிசோடு வைரலும் ஆச்சு.

இப்போ உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். பாடலுக்காக தேசிய விருது வாங்கின விஜய் சேதுபதி படத்துல அமுதவாணன் ஒரு முக்கியமான ரோல்ல நடிக்க வேண்டியது?, ஆனா ஒரு கால்ஷீட் தவறால பண்ண முடியலை. அது என்ன ரோல்னு யோசிச்சு வைங்க. அதுக்கான பதிலை வீடியோ கடைசியில சொல்றேன்.

அமுதவாணன் ஸ்பெஷல்!

சில வாய்ஸ் மட்டுமே பேசினாலும் அதை கரெக்ட்டா பேசுவார் அமுதவாணன். சில பேர் நான் 100 வாய்ஸ் பேசுவேன்; 150 வாய்ஸ் பேசுவேன்னு சொல்லுவாங்க. ஆனா அமுதவாணன் கொஞ்ச வாய்ஸ் பேசினாலும் பக்காவா பேசுவார். பேசுறதோட நிற்காமல் கெட்டப்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சார். அவர் போட்ட அமைதிப்படை கெட்டப்பும், அந்த கவுண்டர்களும் இன்னைக்கு பார்த்தாலும் சிரிப்பு வர வைக்கும். மிமிக்ரிக்கு கெட்டப்பும் முக்கியம், அதுல பர்பெக்‌ஷன் ரொம்ப முக்கியம்ங்குறது அமுதவாணனோட பாலிசி. அதுதான் எல்லா காமெடியன்கள்ல இருந்தும் அமுதவாணனை தனியா பிரிச்சு காட்டியது.

அமுதவாணன்
அமுதவாணன்

தாரைதப்பட்டை மூலம் சினிமா என்ட்ரி!

இயல்பாவே டான்ஸ் நல்லா வந்ததால, ’ஜோடி நம்பர் ஒன்’ல கலந்துக்கிட்டார். அங்கப்போய் டான்ஸ் கூடவே சேர்த்து காமெடியும் செஞ்சு என்டர்டெயின் பண்ணினார். அந்த ஷோலையும் டைட்டில் வின் பன்ணி, தான் ஒரு நல்ல டான்ஸர்னு நிரூபிச்சார். அதனால இயக்குநர் பாலாவோட ’தாரை தப்பட்டை’ படத்துல நடிக்குற வாய்ப்பு வந்தது. முதல் படமே பாலா சார், இளையராஜா சார், சசிகுமார், வரலட்சுமினு ஒரு பெரிய படமா கிடைச்சதுனால அமுதவாணன் செம ஹேப்பி. தாரைதப்பட்டையில டான்சரா, நடிகரா நவரசங்களையும் வெளிப்படுத்தியிருப்பார்.

தற்கொலை எண்ணம் டூ KPY Title Winner!

ஆனா, இடையில கால்ஷீட் மேனேஜ் பண்ண முடியாம சினிமா, டி விக்கள்ல இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கினார். இந்த காலத்துல பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் எதுவும் இல்லைனாலும் போக வேண்டிய இடத்துக்கு போக முடியலியேங்குற வருத்தம் இருந்துகிட்டே இருந்தது. அதனால பல வருஷமா தற்கொலை செஞ்சுக்க நினைச்சவர், ஒரு நாள் போகட்டும், ஒரு வாரம் போகட்டும், ஒரு மாசம் பார்ப்போம்னு தன்னைத்தானே தேத்திக்கிட்டு நாலைஞ்சு வருஷத்தை கடத்தினார். சரியா சொல்லணும்னா ஒரு வருஷத்துக்கு முன்னால ஒரு சேனல்ல இண்டர்வ்யூ கொடுத்தவர், கம்பேக் கொடுப்பேன், அப்படி கொடுக்க முடியலைனா தற்கொலைதான் பண்ணிக்கணும்னு ஒரு பேட்டி கொடுத்தார். சரியா ஒரு வருஷத்துக்கு பின்னால கே.பி.ஒய் சாம்பியன்ஸ் சீசன் 3 ஆரம்பிச்சது. இந்த முறை பழைய நண்பர் பழனி பட்டாளத்தோட சேர்ந்து களமிறங்கினார். ஒவ்வொரு போட்டிக்கும் முழுமையான மெனெக்கெடல் கொடுத்தார் அமுதவாணன். பைனல்ஸ்ல அவர் போட்ட லெஜெண்ட் கெட்டப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பினார். இதுல இருந்தே தெரிஞ்சிருக்கும் காமெடியோட சேர்ந்து அவரோட கெட்டப் மெனெக்கெடல். ஒரு வருஷத்துக்கு முன்னால சொன்ன மாதிரியே இப்போ முடிஞ்ச சீசன் டைட்டிலை வின் பண்ணி கம்பேக் கொடுத்திருக்கிறார், அமுதவாணன்.

அமுதவாணன்
அமுதவாணன்

விஜய் சேதுபதி கூட இவர் தர்மதுரை படத்துல நடிக்க கமிட் ஆனார். ஆனால், அந்த தேதியில கனடாவுல நடந்த ஈவண்ட்ல கலந்துக்க போனதால தர்மதுரைல நடிக்க முடியலை. அப்படி அவர் நடிக்க இருந்த ரோல், கஞ்சா கருப்பு ரோல். இதுபோக கத்திசண்டை சூரியோட ரோல்னு ஏகப்பட்ட கதாபாத்திரங்களுக்கு கமிட் ஆகி பண்ண முடியாம போயிருக்கு. அப்படி தொடர்ந்து படங்கள் பண்ணியிருந்தா, தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல காமெடியன் கிடைச்சிருப்பார்.

இவர் நடிப்புல எனக்கு பிடிச்சது லெஜெண்ட் கெட்டப்தான். உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.  

1 thought on “தற்கொலை முயற்சி டு KPY Title Winner- அமுதவாணனின் கதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top