சரத்கு,மார்

தமிழ் சினிமாவின் முதல் ராக்கி பாய்… சரத் குமார்-க்கு இப்போ என்னாச்சு?!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்… தமிழ் சினிமாவுல துணை கதாபாத்திரங்கள், வில்லன் குணச்சித்திரம், ஹீரோனு பல படிநிலைகளைக் கடந்து 30 வருஷத்துக்கும் மேலா தமிழ் சினிமாவுல வலம் வந்துக்கிட்டிருக்கார். இன்னைக்கு எல்லோரும் ஈஸியா ரம்மி ஸ்டார்னு கலாய்க்கிற மனுஷன் ஒரு காலத்துல எப்படி இருந்தார்னு தெரியுமானு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இன்னைக்கும் தமிழ் சினிமா வசூல் படங்கள் லிஸ்ட்டை எடுத்துப்பார்த்தா சரத்குமார் யார்னு தெரிஞ்சுக்கலாம். அதுபோக சினிமாவுல அவர் மட்டுமே செஞ்ச சில சம்பவங்களும் இருக்கு. அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.

சரத்குமார்

தயாரிப்பாளர்!

முதல்ல தினசரி பத்திரிக்கையில நிருபரா பயணத்தை ஆரம்பிச்சவர், அதுக்குப் பின்னால ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தைத் தயாரிச்சு, அதுல போலீஸ் அதிகாரியாவும் நடிச்சார். இதுதான் சரத்குமாரை தமிழில் அறிமுகப்படுத்திய முதல்படம். அதுக்கப்புறம் சட்டத்தின் மறுபக்கம்னு படத்துல நடிக்கிறார். தயாரிச்ச படம் நஷ்டத்தை கொடுத்தது. இந்தநேரத்துலதான் விஜயகாந்த் கூப்பிட்டு புலன் விசாரணை படத்துல வில்லனா நடிக்க வைக்கிறார். அதுவரைக்கும் தமிழ்சினிமாவுல வந்த வில்லன்களைவிட வித்தியாசமான வில்லனா உருவெடுத்தார். பின்னால சேலம் விஷ்ணு’, ‘மெளனம் சம்மதம்’, ‘புதுப் பாடகன்’, ‘வேலை கிடைச்சிடுச்சு’, ‘புரியாத புதிர்’னு பல படங்கள்ல குணச்சித்திர வேடத்துல நடிச்சார்.

கம்பீரமான ஹீரோ!

‘சேரன் பாண்டியன்’ படம் மூலம் முக்கியமான நடிகரா உருமாறினார். தமிழ் சினிமாவுல நாயகனா ஜொலிக்கிறதுக்கு அடித்தளம் அமைச்சுக் கொடுத்த படம் சேரன் பாண்டியன்தான். கிராமம் வரைக்கும் போய் சேர்ந்தார். படத்தில் கம்பீரமான உருவம், ஹீரோவுக்கான மெட்டீரியல் என எல்லோரையும் நம்ப வைச்சது. அடுத்ததாக கிடைத்த சூரியன் படம் மூலமா முக்கியமான ஹீரோ லிஸ்ட்ல இடம்பிடிச்சார். அடுத்ததா நம்ம அண்ணாச்சியில் மூணு கெட்டப்ல கலக்கினார். இங்கதான் மறுபடியும் அவருக்கு கிடைக்குது நாட்டாமை படம். தமிழ் சினிமாவோட கம்பீரமான ஹீரோ அடையாளத்தை இன்னைக்கு வரைக்கும் இந்த படம்தான் தக்க வைச்சிருக்குன்னே சொல்லலாம். பாக்ஸ் ஆபீஸை அடித்து துவைச்சது. அதுக்குப் பின்னால கரியர் கொஞ்சம் பீக்ல இருந்த நேரம் மறுபடியும் சூரியவம்சம்னு ஒரு அரக்கத்தனமான படம் ரிலீஸ் ஆச்சு. நாட்டாமை வச்சிருந்த ரெக்கார்டுகளை 3 வாரத்துல தூக்கி சாப்பிட்டு புது ரெக்கார்டு படைச்சது. மக்கள் டிராக்டர் கட்டி வந்து பார்த்து அவங்களோட ஆதரவை கொடுத்தாங்க. நாட்டாமை மாதிரியே இதுலயும் டபுள் ஆக்ட். அப்பா-மகனா வெளுத்து வாங்கியிருந்தார். அதுவும் சரத்குமார் மைக்ல பேசுற போட்டோவும், க்ளைமேக்ஸ்ல ராதிகா பேசுற டயலாக்கும் இன்னைக்கு வரைக்கும் மீம்டெம்ப்ளேட்டா சுத்துற அளவுக்கு அந்தபடம் பேமஸ். அடுத்ததா மூவேந்தர், நட்புக்காக, பாட்டாளி, மாயி, தென்காசி பட்டணம், அரசு, ஐயானு வரிசைப்படுத்திக்கிட்டே போலாம். இது எல்லமே பாக்ஸ் ஆபீஸ்ல பட்டைய கிளப்பின படங்கள். தன்னோட 100-வது படத்தை தானே இயக்கினார். அடுத்தடுத்து குணச்சித்திர நடிப்பு பக்கம் போனார் சரத். குணச்சித்திர நடிப்புலயே வெளுத்து வாங்கினது, திருநங்கையா நடிச்ச காஞ்சனா படம்தான். அதுக்கு முன்னும் சரி, அவருக்கு பின்னும் சரி. இந்த தைரியமான முடிவை யாரும் எடுத்ததா தெரியலை. இப்போ பொன்னியின் செல்வன்ல பெரிய பழுவேட்டரையரா கம்பீரமா நிற்கிறார்.

சரத்குமார்

பலம்!

சரத்குமாரோட பலம் பி அண்ட் சிதான். இன்னைக்கும் அவர் நல்ல கதையை தேர்வு பண்ணி வேட்டியை கட்டி நடிச்சார்னா, அதை ரசிக்கவும் இன்னும் ஒரு கூட்டம் இருக்கு. உறவுகள், பாசம், நட்பு, நேசம் போன்ற சென்டிமெண்ட் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் அதுக்கு முக்கியமான காரணம். இன்னைக்கும் சூரிய வம்சம் க்ளைமாக்ஸ்ல அடிபட்டு அப்பாவியா நிற்கிற சரத்குமாராகட்டும், ஐயாவுல பிரகாஷ்ராஜ்கிட்ட பேசுற எமோஷனல் காட்சிகளாகட்டும் சரத்குமார் சென்டிமெண்டில் கலங்க வைப்பார். மறுபக்கம் ஆக்‌ஷன்ல மெய்மறந்து கைதட்டவும் செய்வார்.  தமிழ் சினிமா வரலாற்றுல இன்னைக்கு எடுத்துப்பார்த்தாலும் அதிக வசூல் பண்ண டாப் 10 படங்கள்ல டாப் டென்ல 4 படங்கள் இவரோடதா இருக்கும்.  கல்லூரி காலத்துலயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வாங்கினதுல இருந்து இப்போ வரைக்கும் அதை அப்படியே மெயிண்டைன் பண்ணிட்டு வர்றார். இந்த கம்பீரமான தோற்றம் மிகப்பெரிய பலம். ரொமான்ஸ், ஆக்‌ஷன்னு ஆல் ஏரியாப்வுலயும் கில்லி. இன்னைக்கும் கம்பீரமான போலீஸ் அதிகாரிக்கு முதல் தேர்வே சரத்குமார்தான். நடுத்தர வயசு, வயசான கதாபாத்திரங்களில் நடிக்கவும் சரத்குமார் என்னக்குமே தயங்கினது இல்ல. நாட்டாமை படத்துல நடுத்தர வயசு, ஐயாவுல வயசான கெட்டப்னு கேரெக்டருக்கு மெனெக்கெடுவார் சரத்குமார். அந்த கெட்டப் என்ன டிமாண்டட் பண்ணுதோ அது படத்துல அப்படியே இருக்கும். அதிகமான டபுள் ஆக்‌ஷன் கெட்டப் ஹீரோ அவார்ட் கொடுத்தா அதை சரத்குமாருக்கு கொடுக்கலாம். இன்னைக்கும் அவர் 10 மொழிகளுக்கு மேல பேசுவார். இதனால மற்ற மொழிப் படங்கள்லயும் அதிகமா நடிச்சிருக்கார். தமிழ் சினிமா ஹீரோக்கள்ல மற்ற மொழிப்படங்கள் அதிகமா நடிச்ச முதல் ஹீரோ இவர்தான். அதேபோல தன்கம்பீரத்தால் பெரிய பெண் ரசிகைகள் கூட்டத்தையும் வைத்திருந்தார். அதேபோல அந்தக்காலக்கட்டத்தில் அதிகமான நடிகைகள் ரசிகைகளாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர். அதற்கு இவர் டூயட் பாடல்களே சாட்சி.
சரத்குமார்

பலமான கூட்டணி!

தமிழ் சினிமாவுல பெஸ்ட் சக்சஸ் காம்போவுல கே.எஸ் ரவிக்குமார்-சரத்குமார் காம்போ முக்கியமானது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கின பத்துக்கும் மேலான படங்கள்ல சரத்குமார்தான் ஹீரோ. அந்தப்படங்கள்ல சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காகனு மூணு படமும் மத்த மொழியிலயும் ரீமேக் ஆகி அங்கயும் ஹிட்டானது. ‘சூரியன்’ சரத்குமாரை நாயகனாக மாத்திச்சுன்னா ‘நாட்டாமை’ நட்சத்திரமாக்கிச்சு. ‘நட்புக்காக’ அந்த நட்சத்திர அந்தஸ்துக்கு பல மடங்கு பலம் சேர்த்தது. சரத்குமாரோட வளர்ச்சியில முக்கியமான பங்கு கே.எஸ் ரவிக்குமாருக்கு இருக்கு.

Also Read – பார்த்தாலே எரிச்சல் வர்ற கேரக்டர்.. விடுதலையில் மிரட்டிய சேத்தன் ஜர்னி!

அரசியல்வாதி!

1996-ம் வருஷத்துல இருந்து தீவிரமா இயங்கிட்டு இருக்கார். முதல்ல திமுகவுக்கு போனவர், 1998-ம் வருஷம் போட்டியிட்டு தோற்றார். பின்னர் 2001ல திமுக சார்புல எம்பியாக்கப்பட்டார். அதுக்குப் பின்னால 2007-ல சமத்துவமக்கள் கட்சியை ஆரம்பிச்சார். 2011-ல அதிமுக கூட கூட்டணி வச்சு தென்காசி தொகுதி எம்.எல்.ஏவானார். 2016-ம் வருஷம் திருச்செந்தூர் தொகுதியில போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல்வாதியாக மாறிய பின்னர்தான் நடிகரா இருந்த சரத்குமார் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனசுல இருந்து மறைய ஆரம்பித்தார்னே சொல்லலாம். இதை பின்னாடி நாட்கள்ல ஸ்டேஜ்ல சரத்குமாரே பேசியிருக்கார். ஆனா நாட்டாமை பீக்ல இருந்த நேரம் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியான நடிகராவே இருந்தார். ஆனா பின்னாட்கள்ல அரசியல்ல கவனம் போனதால, அந்த போட்டியில இருந்து விலகிட்டார். இல்லைனா இன்னைக்கும் தமிழ்சினிமாவுல சரத்குமார் முக்கியமான ஹீரோவா இருந்திருப்பார். இவ்வளவு கம்பீரமான நட்சத்திர ஹீரோ இனி தமிழ் சினிமாவுக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நடிகர் சங்கத்து இடத்தை மீட்டதுல கேப்டனுக்கு எவ்ளோ பங்கு இருக்கோ, அதே அளவு சரத்குமாருக்கும் இருக்கு. அப்போ சரத்குமார்தான் நடிகர் சங்க செயலாளர். அதற்கப்புறம் தலைவர் பதவிக்கும் சரத் வந்தார். ஆனால், அதுக்குப் பின்னால அதுல ஏற்பட்ட பிரச்னைகளால கொஞ்சகாலம் நடிகர் சங்கத்துல இருந்தே விலகிட்டார். சரத்குமாரை நீங்க என்ன வேணா கலாய்ச்சுக்கலாம்.. ஆனா இவர்தான் 90’ஸ் தலைமுறை பார்த்து கொண்டாடிய முதல் ராக்கி பாய்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top