சாரே, கொல மாஸ்… வேற லெவல் சவால் சீன்கள்!

ஏய்… ஏய்… ஏய்… இப்படி கத்தி கத்தி தொடையைத் தட்டி சவால் விடுற சீன்ஸ்லாம் தமிழ் சினிமால நிறைய வந்துருக்கு. ஆனால், சவால் காட்சிகள்னு சொன்னதும் டக்னு நம்ம மைண்டுக்கு வர்றது சில காட்சிகள்தான். அதையெல்லாம் பார்த்துட்டு நம்மளோட நிஜ வாழ்க்கைலயும் சவால் விடும்போது அதே மேனரிஸம், டயலாக் எல்லாம் யூஸ் பண்ணுவோம். சரி, தமிழ் சினிமாவில் இன்னைக்கு வரைக்கும் வந்ததுல பெஸ்ட் சவால் காட்சிகள் எதெல்லாம்னு பார்த்துருவோமா?!

அண்ணாமலை

ரஜினியோட பெரும்பாலான படங்கள்ல சவால் சீன்ஸ் கண்டிப்பா இருக்கும். ஆனால், எல்லாத்துக்கும் விதை போட்டது அண்ணாமலைனே சொல்லலாம். அந்தப் படத்துக்கு மட்டுமில்ல. வேற படங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன். “இது வெறும் வீடு இல்லை அண்ணாமலை. அவர் கட்டுன கோயில் இங்க இருக்குற ஒவ்வொரு கல்லுலயும் தூண்லயும் அவர் இன்னும் வாழ்ந்துட்டுதான் இருக்காரு”னு வீட்டுக்கு செம எமோஷனலான கனெக்ட்டா மனோரமா கொடுத்துருவாங்க. அப்படிப்பட்ட வீட்டை ரஜினியை கட்டிப்போட்டு ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சு சின்னாபின்னம் ஆக்கிடுவாரு, அசோக்.

உடனே ரஜினி அவர் வீட்டுக்குப்போய், “அசோக் இதுவரைக்கும் நீ இந்த அண்ணாமலையை நண்பனாதான் பார்த்துருக்க. இனிமேல் விரோதியா பார்க்கப்போற. இந்த நாள் உன்னுடைய கேலண்டர்ல குறிச்சு வைச்சுக்கோ. இன்னில இருந்தே உன்னுடைய அழிவு காலம் ஆரம்பமாயிடுச்சு. எனக்கு உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடுச்சு….”னு நீளமா வசனம் பேசி தொடையைத் தட்டி மீசையை லைட்டா தூக்கிவிட்டு “எம்பேரு அண்ணாமலை இல்லைடா”னு சொல்லுவாருல செம கூஸ்பம்ப்ஸா இருக்கும். இப்படி ஒரு சீனை அடிச்சுக்க இன்னொரு சீன் இதுவரை வரலை. விஜய்கூட அவங்க அப்பாக்கிட்ட இந்த சீனை நடிச்சுக் காமிச்சுதான் சினிமா இண்டஸ்ட்ரீக்குள்ள வந்தாருனு சொல்லுவாரு.

வேட்டையாடு விளையாடு

மாஸ் எலிமண்ட்ஸ், கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் இதுக்குள்ளலாம் கமல் எப்பவும் சிக்க மாட்டாரு. ஆனால், அவர் பண்ண மாஸ் சீன்ஸ்லாம் பயங்கரமா இருக்கும். விக்ரமையும் சேர்த்து சொல்றேன். அவருக்கு தரமான ஃபேன்பாய் சம்பவம் பண்ணவர்ல கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருத்தரு. அவர் எடுத்த வேட்டையாடு விளையாடு படத்துல ‘ஒண்ணுல்ல மணி… கண்ணு வேணும்னு கேட்டியாமே. என் கண்ணை பொட்டையாக்கு”னு கத்தியை எடுத்து ரௌடி கையில கொடுப்பாரு. செம கெத்தா இருக்கும். கண்ணை அப்படியே கையால விரிச்சு காமிச்சு “எட்றா” அப்டினு சவால் விடுவாரு. வேறலெவல்ல இருக்கும். கமல்ஹாசனோட பெஸ்ட் மாஸ் சீன்கள்ல இந்த சீனுக்கு எப்பவும் ஃபஸ்ட் பிளேஸ்தான்.

மாஸ்டர்

விஜய் எவ்வளவோ சீன்ல சவால் விட்ருப்பாரு. மாஸ் பண்ணியிருப்பாரு. ஆனால், வில்லன் யாருனு பார்க்காமல் அவர் கழுத்துலயே வெறும் பேனாவை வைச்சு கிளாஸா, மாஸா சவால்விட்டது “மாஸ்டர்” படத்துலதான். “இனி பசங்கள வைச்சு எவன் என்ன பண்ணனும்னு நினைச்சாலும் என்னை கொன்னுட்டுதான் பண்ணனும். ஆனால், அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு. நான் சாகுறதுக்கு முன்னாடி மினிமம் ஒரு பத்து பேரையாவது குத்திட்டுதான் சாவேன்”னு கெத்தா சொல்லுவாரு. செம சீன்ல அப்படினு தோணும்.

விஸ்வாசம்

அஜித் சவால் விடுறதையே பொழப்பா வைச்சு காதல் மன்னன் படம் பண்ணியிருப்பாரு. ஆனால், அது அவ்வளவு மாஸா இருக்காது. செம மாஸா இருக்குறது விஸ்வாசம் படத்துல. மழைல ஃபைட் சீன் ஒண்ணு வரும். அது முடிஞ்சதும் வில்லன்கிட்ட ஃபோன்ல அஜித் சவால் விடுவாரு. “பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம்…”னு ஃபுல் ஹிஸ்டரியை சொல்லி… “ஒத்தைக்கு ஒத்தை வாடா”னு அஜித் பேசுவாரு. அந்த பி.ஜி.எம் அஜித் வாய்ஸ் எல்லாம் சேர்த்து பார்க்கும்போது அஜித் ஃபேன்ஸ்லாம் சில்லறைய சிதற விடுவாங்க.

சாமி

சாமி படத்துல விக்ரம்க்கு கல்யாணம் நடக்குறப்போ, இன்னொரு பக்கம் மார்க்கெட்ல ரௌடிகள்லாம் மக்களை போட்டு அடிஅடினு அடிப்பாங்க. கல்யாண மேடைல இருந்து நேரா அண்ணாச்சி வீட்டுக்கு விக்ரம் போவாரு. அப்போ எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்னு அண்ணாச்சி பயங்கரமா டயலாக் பேசுவாரு. அதுக்கு விக்ரம், “இனிமேல் என் திமிரோட அளவை நான் காமிக்கிறேன். பெருமாள் பிச்சைன்ற பேர வெறும் பிச்சையாக்கி திருவோட ஏந்த வைக்கல. என் பேரு ஆறுச்சாமி இல்லைடா”னு தொடையை தட்டு சவால் விட்டுட்டு போவாரு. அந்த விக்ரம் திரும்பவும் வந்தா நல்லாருக்கும்.

ஆடுகளம்

பேட்டைக்காரன் சார்பா தனுஷ் சேவலை ஆடுகளத்துல இறக்குறதை பேட்டைக்காரன் வந்து தடுப்பாரு. அப்போ, எதிராளிங்க எல்லாரும் தனுஷை வீம்புக்குனே வம்புக்கு இழுப்பாங்க. உங்க சேவலை இறக்குனா தோத்துரும்னு பயப்படுறீங்களானு எதிர்க்க இருக்குறவங்க கேப்பாங்க. உடனே, தனுஷ் “யார் சேவல் தோக்குதுனு பறக்கவிட்டு பார்த்துருவோமா?”னு சவால் விடுவாரு, பேட்டைக்காரனையெல்லாம் எதிர்த்துட்டு பறக்க விடுவாரு. தனுஷ்கிட்ட எதிர்த்து நின்ன சேவல்காரங்க தோத்துருவாங்க. சேவலை வைச்சு மாஸ் சீனை வெற்றிமாறன் கிரியேட் பண்ணிருப்பாரு பாருங்க. நேஷனல் அவார்டுனா சும்மாவா?!

சார்பட்டா பரம்பரை

ரீசண்டா ரொம்ப ட்ரெண்டா இருக்குற டெம்ப்ளேட் இதுதான். ரங்கன் வாத்தியாரை எல்லாரும் ஓட்டிட்டு இருக்கும்போது. ஆர்யா, நான் விளையாடுறேன்னு சொல்லுவாரு. அடுத்து ஆர்யா பேசுற டயலாக் வேற லெவல்ல இருக்கும். “என்னாங்கடா… ஆளாளுக்கு என் வாத்தியாரை பல்லு புடிச்சு பார்க்குறீங்களா? ஏய் வேம்புலி, உன்னை அடிச்சு நான் தூக்குறன்டா” அப்டினு சவால் விடுவாரு. செம மாஸா இருக்கும்.

எனக்கு டக்னு தோணுன மாஸான சவால் சீன்களையெல்லாம் லிஸ்ட்ல சொல்லிட்டேன். உங்களுக்குப் பிடிச்ச வேற சவால் விடுற மாஸ் சீன்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா… கவுண்டமணியின் நேம் போர்டு மேஜிக்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top