தமிழ் சீரியலின் பெஸ்ட் மாமியார் மருமகள் யார் தெரியுமா?

மாமியாருக்கு சிகப்பு புடவை வாங்கி கொடுத்து மாடு துரத்தி மார்க்கெட் முழுக்க ஓடனும் நினைக்கிற மருமகள், கோவிலுக்கு கூட்டிட்டு போய் குளத்துல கால் நெனைக்கும் போது தள்ளி விடணும்னு நினைக்குற மாமியார்னு விசில் படத்தில் வரும் அந்த சம்பவத்தை நம்ப மறந்து இருக்க மாட்டோம். மாமியார் மருமகள் சண்டை கொலை பண்ற அளவுக்கு கூட கூட்டிட்டு போய் விடும்னு பல தமிழ் சினிமாக்களிலும் சீரியகளிலும் பார்த்து இருப்போம். ஆனா இப்போ கொஞ்சம் ட்ரெண்ட் மாறி இருக்கு. சில சீரியல்களில் சண்டை இருந்தாலும், சீரியல்களில் ரொம்ப ஸ்வீட்டா இருக்காங்க. இப்படி காலம் காலமா தொன்று தொட்டு நடந்துட்டு வர மாமியார் – மருமகள் போட்டியில் யாரு பெஸ்ட்-னு பார்க்கப்போறோம்.

சீரியல்களின் கதை எப்படி இருந்தாலும், என்ன மாதிரி சீரியலாக இருந்தாலும், கதைக்கு ஒரு மாமியார் மருமகள் இல்லாம இருக்க மாட்டாங்க. ஆனா இப்போ இருக்க மாமியார்கள் அவ்ளோ மோசம் இல்லை, ஒரு சிலர் அப்படியே மருமகளுக்கு முழு சப்போர்ட் கொடுக்குறாங்க. இங்க ஒரு மாமியார் பையன் லவ் மேரேஜ் பண்ணாலும் பரவா இல்லை, நான் மருமகள் பக்கம் தான் நிக்குறாங்க. யார் அந்த மாமியார்? எதுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றாங்க? யாரு இதுல பெஸ்ட்-னு வீடியோல பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – சௌந்தர்யா & கண்ணம்மா, பையன் கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணதும் ஆரம்பத்துல இவங்களுக்கு புடிக்காது, இருந்தாலும் கொஞ்சம் நாள் சண்டையெல்லாம் போட்டாங்க. பிறகு மருமாகளோட நல்ல மனசை புரிச்சுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே கண்ணம்மா போன அப்போ தெரு தெருவா தேடி உயிர் போற நிலைமைக்கு போய்ட்டு வந்து இருக்காங்க சௌந்தர்யா. ஆரம்பத்துல சொன்ன மாதிரி இவங்க அவ்ளோ வில்லத்தனமான மாமியார்லாம் இல்லை. இப்போ கண்ணாமாவை நல்லா தான் கவனிச்சுக்குறாங்க. அதே போல சௌந்தர்யாக்கு பையன் பாரதி மேலையும் அவ்ளோ பாசம் இருக்கு.

அன்பே வா
அன்பே வா

அன்பே வா – பார்வதி & பூமிகா – கதைப்படி பூமிகா கொஞ்சம் ஏழை பொண்ணு அப்படிங்குறதால அவங்க பையன் வருண், பூமிகாவை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க. ஆனா வருணுக்கு பூமிகாவை புடிச்சு போகவே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிடுவாரு. இருந்தும் அவங்க மாமியார் பார்வதி பூமிகா-வை புடிச்சு கொஞ்சம் நாள் டார்சர் பண்ணுவாங்க. வருண் கூட சேர்ந்து வாழக்கூடாது. குழந்தை எதுவும் பெத்துக்க கூடாது அப்படின்னு சத்தியம் வாங்கிடுவாங்க. அதன் பிறகு பூமிகா வருணுக்கு செஞ்ச நல்லது எல்லாம் தெரிஞ்ச பிறகு மனிச்சு ஏத்துபாங்க. இப்போ மருமகள் ஒரு கொலை கேஸ்ல மாட்டி இருக்காங்க. அவங்கள வெளிய கொண்டு வர குடும்பமே போராடிட்டு இருக்கு.

ரோஜா
ரோஜா

ரோஜா – கல்பனா & ரோஜா, முதல்ல ஒரு மாமியார் பத்தி சொன்னேன்ல அது இவங்க தான். பையன் கல்யாணமே பண்ணிக்க மாட்டான் போல, எப்படி கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணலாம்னு இவங்க ஒரு பக்கம் யோசிச்சுட்டு இருந்த அப்போ, நம்ப ஆக்க்ஷன் ஹீரோ அர்ஜுன் அவரு ஒரு டீல் போட்டு ரோஜாவை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாரு. வீட்ல இருக்க அன்னபூரணி அம்மாக்கு மட்டும் இது புடிக்காம இருக்கும்.

Also Read – சின்ன சின்ன வண்ணக்குயில்.. சூப்பர் சிங்கர் பிரியங்காவின் இசை ஜர்னி!

அவங்க மாமியாருக்காக கொஞ்சம் நாள் ரோஜாவை பிடிக்காத மாதிரி இருப்பாங்க. ரோஜாவோட அந்த மென்மையான மனம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க மாமியார் கல்பனாவை மயக்கிடும். வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ண என்ன…நல்ல பொண்ணு தான் கல்யாணம் பண்ணி இருக்கானு முழு சப்போர்ட்-டும் ரோஜாவுக்குதான்னு அவங்க பக்கம் இருப்பாங்க. சன் டிவி-யின் ஸ்வீட்டான மாமியாரும் இவங்க தான்.

திருமகள்
திருமகள்

திருமகள் – ஐஸ்வர்யா & அஞ்சலி, குழந்தை பிறந்த அப்போ நடந்த ஒரு ட்விஸ்டுல ஐஸ்வர்யா ஓட குழந்தை மாறிடும். அது மட்டும் இல்லாம இவங்க வேற ஜமீன் குடும்பம். ஆனா ஐஸ்வர்யா வளர்த்த பையன் ஜமீன் வாரிசான அஞ்சலியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. ஆரம்பத்துல அஞ்சலி மேல காண்டுல இருந்த ஐஸ்வர்யா இவங்கள பிரிக்க ட்ரை பண்ணுவாங்க. ஆனா அது கடைசி வரை முடியாம போகும். ஒரு நாள் உண்மை தெரிஞ்சு ஜமீன் வாரிசை தேடுவாங்க. அஞ்சலி- க்கு அவங்க தான் ஜமீன் வாரிசு -னு தெரிஞ்சும் சொல்லாம இருப்பாங்க. இப்போ வரை உண்மை தெரியாம தான் இருக்கு. இதுக்கு இடையில் சொத்தை சுருட்டிட்டு போக இன்னொரு பக்கம் போலியான ஜமீன் வாரிசு-னு ஒரு கேரக்டர் வீட்டுக்குள்ள வரும். இப்போதைக்கு யாரு அந்த வாரிசு அப்படின்னு கண்டு புடிச்சுட்டு இருக்காங்க. ஐஸ்வர்யாவும் அஞ்சலியும் ஆரம்பத்துல கொஞ்சம் சண்டையில் இருந்தாலும், இப்போ சுமூகாம தான் இருக்காங்க.

ஈரமான ரோஜாவே
ஈரமான ரோஜாவே

கடைசியா யாருன்னு பார்த்த ஈரமான ரோஜாவே பார்வதி & காவ்யா, வீட்டுக்குள்ள வரும்போதே பையனை மாத்தி கல்யாணம் பண்ணி வெச்சா வெறுப்புல தான் உள்ளே வர்றாங்க காவ்யா, இவங்க ரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போற மாமியார் மருமகள் தான். சொல்லப் போன சீரியலுக்கு வெளியவும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி பாசமா தான் இருக்காங்க.

இப்போ நான் சொன்ன சீரியல்கள் இல்லாம, வானத்தை போல, அபியும் நானும், தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியல்களிலும் மாமியார் மருமகள் காம்போ அருமையா இருக்கும்ன்னு, சில சீரியல் லவ்வர்ஸ் சொல்றாங்க. எல்லாம் சாரி இதுல யாரு பெஸ்ட் அப்படி-ன்னு பார்த்த ரோஜா சீரியல் கல்பனா & ரோஜாவை சொல்லலாம். பெஸ்ட் மாமியார் மருமகள் டைட்டில் -க்கு ரொம்ப பொருத்தமான 2 பேர் இவங்க தான். சீரியல் தொடக்கத்துல இருந்தே 0% வன்மம் இல்லாம இருக்க மாமியார் -மருமகள் இவங்க தான். நிறுத்து நிறுத்து அதெல்லாம் இல்லை இவங்க தான் பெஸ்ட்-னு நீங்க யாரை நினைக்கிறிங்களோ அவங்க காம்போ-வை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top