வங்கிகள் இணைப்பு

வாடிக்கையாளர்களே உஷார் – அக்டோபர் 1 முதல் காலாவதியாகும் 3 வங்கிகளின் காசோலைகள்!

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், அக்டோபர் 1-ம் தேதி முதல் அலகாபாத் வங்கி, ஒரியண்டல் பேங்க் ஆஃப் கமர்ஸ் (OBC), யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா (UNI) ஆகிய வங்கிகளின் காசோலைகள் செல்லுபடியாகாது.

இணைப்பு நடவடிக்கை

யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா

மத்திய அரசின் இணைப்பு நடவடிக்கையால் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும், ஒரியண்டல் பேங்க் ஆஃப் கமர்ஸ் மற்றும் யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய மூன்று வங்கிகளிலும் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் காசோலையைப் புதிய வங்கியிடம் விண்ணப்பித்துப் பெற வேண்டியது அவசியம். அதேபோல், உங்கள் பழைய வங்கியின் IFSC, MICR எண்கள் போன்றவற்றையும் புதிய வங்கிக் கிளையை அணுகி அப்டேட் செய்து கொள்ளுங்கள். பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க இது உதவும்.

வங்கிகள் கோரிக்கை

வங்கிகள் இணைப்பு
வங்கிகள் இணைப்பு

இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் தகவல் தெரிவித்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஒரியண்டல் பேங்க் ஆஃப் கமர்ஸ், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள், அருகிலிருக்கும் தங்களது வங்கிக் கிளைகளை அணுகி கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. `e-OBC, UNI வங்கி வாடிக்கையாளர்களே உங்களது பழைய காசோலைகள் அக்டோபர் 1, 2021 முதல் செல்லுபடியாகாது. அருகிலிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையை அணுகி அல்லது வங்கியின் ஏடிஎம் சென்டர் மூலம் புதிய காசோலை, IFSC, MICR எண்களையும் அப்டேட் செய்துகொள்ளுங்கள்’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதேபோல், அலகாபாத் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30, 2021-க்குப் பிறகு செல்லுபடியாகாது என்று அறிவித்திருக்கும் இந்தியன் வங்கி, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் காசோலைகள் உள்ளிட்டவைகளை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த மூன்று வங்கிகளிலும் உங்களுக்குக் கணக்கு இருந்தால், அதை உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள் மக்களே!

Also Read – Black Alkaline Water தெரியுமா… கறுப்பு நிறமான இந்தக் குடிநீரில் என்ன பலன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top