பணம் - சேமிப்பு

ரொம்ப செலவழிக்கிறீங்களா?.. சிம்பிளான இந்த 11 டிப்ஸை டிரைப் பண்ணுங்க!

`சம்பாதிக்கிற பணம் எல்லாம் எப்படிதான் செலவாகுதோ?’ – இப்படி ஒவ்வொரு மாதமும் புலம்புறவங்க அதிகம். இதையே நினைச்சு தலைய ரொம்ப பிச்சிப்போம். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்து மக்கள். சேமிப்பு என்பது மிகப்பெரிய கனவு போல தோன்றும். ஆனால், சிம்பிளான வழிகளைப் பின்பற்றினாலே பணத்தை எளிதாக சேமிக்கத் தொடங்கலாம். பணத்தை சேமிப்பதற்கான சிம்பிளான படிப்படியான வழிகள் இதோ…

Savings
 • நீங்கள் சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் உங்களது செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க திட்டமிட முடியும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒருமுறையோ உங்களது செலவுகளை மதிப்பீடு செய்வது நல்லது.
 • பணம் இறுக்கமாக இருக்கும் சூழ்நிலைகளில் பெரிய தொலைக்காட்சி ஒன்று தேவையா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத செலவுகளை முதலில் செய்த பின்னர், நமக்கு தேவையான பிற தேவைகளை திட்டமிட்டு செய்துகொள்ள வேண்டும். இதனால், பண நெருக்கடிகளை எளிதில் தவிர்க்கலான். கூடுதலாக பணத்தையும் சேமிக்க முடியும்.
 • கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது எதிர்காலத்தில் மாத செலவுகளை இன்னும் அதிகரிக்கும்.
 • உங்களது இன்சூரன்ஸ் பாலிசிகளை மதிப்பீடு செய்து பாருங்கள். அவை உண்மையிலே தேவைதானா? அல்லது தேவையில்லாத செலவா? என்பதை ஆராய்ந்து அந்த திட்டங்களில் தொடர்ந்து பணத்தை செலுத்துங்கள்.
 • பரிசு வாங்குதல், விடுமுறை நாள்களை செலவிடுதல் போன்றவற்றில் அதிகமான பணத்தை செலவிடுவதை தவிர்க்கவும். பணத்தை செலவழிக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம். ஆனால், பின்னாளில் உங்களுக்கு பணம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நிச்சயம் கிடைக்காது.
 • உங்களது வீட்டில் மொபைல் போன் மற்றும் லேண்ட்லைன் இரண்டும் இருந்தால் லேண்ட்லைன் சேவையை தவிர்க்கலாம். இதனால், உங்களது பணத்தை நிச்சயம் சேமிக்க முடியும்.
 • உங்களது வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் ஃபேன், லைட் போன்றவற்றை ஆன் செய்வதை தவிர்க்கவும். இவற்றுக்கு மாறாக சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி எரியும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால், மின் கட்டணத்தை அதிகளவில் மிச்சப்படுத்தலாம்.
 • டீ, காஃபி மற்றும் உணவு ஆகியவற்றை முடிந்தவரை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுங்கள். இதனால், கனிசமான தொகையை நீங்கள் சேமிக்க முடியும்.
 • உங்களது வாகனங்களை வீட்டிலேயே சுத்தம் செய்யலாம். உங்களது காரை கார் கழுவும் இடத்தில் கொடுத்து கழுவும்போது அதற்கென அதிகமாக செலவுகள் ஏற்படும்.
 • சமையலுக்கு தேவையான மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கவும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மொத்தமாக பொருள்களை வாங்கும்போது குறிப்பிட்ட அளவு பணத்தையும் உங்களது எனர்ஜியையும் சேமிக்க முடியும்.
 • ஜிம்மில் சேருவதற்கு முன்பு தினசரி சரியாக நம்மால் செல்ல முடியுமா என்பதை யோசித்து அதற்கான பணத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், பலரும் ஜிம் சரியாக செல்வது இல்லை. மாறாக ரன்னிங், சைக்கிளிங், வாக்கிங் போன்ற அடிப்படையான பல உடற்பயிற்சிகளை நான் மேற்கொள்ள முடியும்.

Also Read : ஏஞ்சலினா ஜோலி பற்றிய 13 சுவாரஸ்ய தகவல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top