த்ரிஷா தமிழ் சினிமால அறிமுகமாகி 20 வருஷம் ஆச்சு. என்னங்க ஃபர்ஸ்ட் படத்துல பார்த்ததைவிட இப்போ இவ்வளவு அழகா இருக்கீங்கனுதான் ஒவ்வொரு படம் வெளிய வரும்போதும் அவங்களப் பார்த்து கேட்கணும் போல இருக்கும். இந்த 20 வருஷத்துல த்ரிஷா கேரக்டர்கள் பார்த்தா பெருசா சேஞ்ச் ஓவர் கேரக்டர்ஸ் அவங்க கொடுக்கலை, மொத்தமா தமிழ் சினிமாவை திருப்பிப் போடுற படங்கள் பண்ணல. இருந்தாலும், அவங்க படங்கள்ல எதாவது சர்ப்ரைஸ் ஒண்ணு அவங்க கேரக்டர் மூலமா கொடுத்துருவாங்க. அப்படி அவங்க கொடுத்த 13 சர்ப்ரைஸ் கேரக்டர்களை பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
மௌனம் பேசியதே – சந்தியா கேரக்டர் படத்துல இன்ட்ரோ ஆகும்போதே, ஏய் இந்தப் பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு நினைப்போம். அப்போதான், ஜோடி படத்துல சிம்ரன்கூட ஃப்ரெண்டா வருவாங்கல அந்த பொண்ணுடானு தோணும். தனியா பேசணுமா, பேசலாமேனு த்ரிஷா சொல்லும்போது அப்படியொரு லவ் அவங்கமேல வரும். அந்தப் படத்துல த்ரிஷா சூர்யாவை ஏமாத்திடுவாங்க. ஃபர்ஸ்ட் படத்துலயே அவங்க ஃபேன்ஸ்க்கு கொடுத்த சர்ப்ரைஸ் அதுதான். போச்சா!
சாமி – முதல் படத்துல பெரிய கேரக்டர் இல்லை. இன்னும் ரெண்டு படம். அப்படியே காணாமல் போய்டும். அப்டினு நினைக்கும்போது, மாடர்னா இல்லாம. சேலைலாம் கட்டி அப்படி வந்து நின்னாங்க, சாமி படத்துல. இந்தப் படத்துல லவ் பண்றது, கல்யாணம் பண்ண பிறகு மனைவியா வர்றதுனு எல்லா சீன்ஸ்லயும் அல்டிமேட் பண்ணியிருப்பாங்க. ஆரம்பத்துலயே மனைவி ரோல்லாம் பெருசா ஹீரோயின்ஸ் அவ்வளவு விரும்பமாட்டாங்க. ஆனால், த்ரிஷா பண்ணது செம சர்ப்ரைஸா இருந்துச்சு. புடிச்சிருக்கு!
லேசா லேசா – சாமில வேறலெவல் பெர்ஃபாமென்ஸ் கொடுத்தாலும், நிறைய பேர் திரிஷாவுக்கு ஃபேன்ஸா மாறுனது இந்தப் படத்துலதான். பாடகர் கார்த்திக் அந்தப் படத்துல திரிஷா ஃபேனாவே மாறிதான் அவள் உலக அழகியே பாட்டைப் பாடியிருப்பாரு. மாதவன் – திரிஷா லவ் ஸ்டோரி செம சர்ப்ரைஸா இருக்கும். அதுவும் தூணுக்கு பின்னால போய் நின்னு மறைஞ்சு லுக் ஒண்ணு விடுவாங்க. காலி. ஆனால், அதெல்லாம் விட கிளைமாக்ஸ்தான் அல்டிமேட். லவ் யூ!
கில்லி – படமே திரிஷாவை மையமா வைச்சுதான். அப்புறம் வேறென்ன சொல்ல. இதுலயும் எமோஷனலா போட்டு நம்மள தாக்கி தள்ளியிருப்பாங்க. திரிஷா அழும்போதுலாம் முத்துப்பாண்டிய போட்டு பொளக்கணும்னு நமக்கும் தோணும். அந்தக் குறையை விஜய் நிறைவேத்திடுவாரு. திரிஷா பொம்மை மாதிரி அவ்வளவு அழகா இருப்பாங்க. இதுலயும் சர்பிரைஸ் கிளைமாக்ஸ்தான். லேசா லேசால டிரையின், கில்லில ஃபிளைட் அவ்ளோதான். அப்படிபோடு!
ஆயுத எழுத்து – ஒரு படம் மார்டன், ஒரு படம் கிராமத்து பொண்ணு மாதிரி. இந்த ஸ்டைல்லதான் நடிச்சிட்டு இருந்துருக்காங்க. கில்லிக்கு அப்படியே ஆப்போசிட்டா, வேறலெவல் சிட்டி கேர்ளா கலக்கியிருப்பாங்க. அதுவும் அந்த யாக்கைத் திரி பாட்டுலாம் இன்னைக்கும் வைப்தான. இங்கயும் சிவகாசி மாப்பிள்ளைக்காக சித்தார்த்தை விட்டுட்டு போய்டுவாங்க. ஆனால், திரும்ப வந்து சர்ப்ரைஸ் கொடுப்பாங்க. நமக்கு அந்த கதை அவ்வளவுதான்னு நினைக்கும்போது, சர்ப்ரைஸா இருக்கும். யெஸ்!
உனக்கும் எனக்கும் – கிராமத்துப் பொண்ணா திரும்ப வந்து கலக்கு கலக்குனு கலக்கியிருப்பாங்க. சுட்டித் தனம் ஒண்ணு இருக்கும்ல, அதை அப்படியே நடிப்புல முழுசா காமிச்சது இந்தப் படத்துலதான். எல்லாருமே இந்த மாதிரி கேரக்டருக்கு ஜெனிலியாவைதான் சொல்லுவாங்க. ஆனால், திரிஷா எந்த கேரக்டர்னாலும் அதை பெஸ்டா பண்ணுவேன்னு இந்தப் படம் மூலமா சொல்லிட்டாங்க. கிளியே, கிளியே!
அபியும் நானும் – சிம்ரன், ஜோதிகாலாம் பீட் பண்ணி பெரிய ஹீரோக்கள்கூடலாம் நடிச்சி தமிழ் சினிமால முன்னணி ஹீரோயினாய்ட்டாங்க. இனிமேல் என்ன முழுக்கவே பெரிய ஹீரோக்கள்கூடதான் படம்னு எல்லாரும் நினைக்கும்போது, அப்பாவோட லிட்டில் பிரின்சஸா வந்து சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. திரிஷா கரியர்ல டாப் 5 பெஸ்ட் படங்கள் எடுத்தா அதுல அபியும் நானும் படத்துக்கு எப்பவுமே ஸ்பெஷல் இடம் உண்டு. சின்ன எமோஷன்ல தொடங்கி ஒரே ஒரு ஊருல பாட்டு வரைக்கும் எல்லாமே கியூட்!
விண்ணைத்தாண்டி வருவாயா – இந்தப் படத்துல திரிஷாவுக்கு பதிலா இன்னொரு கேரக்டரை யாராலயும் யோசிச்சுக்கூட பார்க்க முடியாது. அப்படியொரு பெர்ஃபாமென்ஸ் பண்ணியிருப்பாங்க. வேணுமா? இல்லை வேணாமா?னு முடிவு எடுக்க முடியாமல் திணறுறது, ஓடிப்போலாம்னு சொல்றது, நமக்கு செட் ஆகாதுனு சொல்றது, கிளைமாக்ஸ்ல கல்யாணம் பண்ணிக்க சொல்றதுனு ஃப்ரேம்க்கு ஃப்ரேம் நம்மள சர்ப்ரைஸ் பண்ணிட்டேதான் இருப்பாங்க. என்னோட ஃபேவரைட், யாரும் உன் கண் வழியா என்னை பார்க்கல போல இருக்குன்றதுதான். கவிதையே தன்னை எழுதிக்கொள்ளும் மொமண்ட்!
மங்காத்தா – மௌனம் பேசியதேல தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா வரைக்கும் நிறைய பேரை காதல் பண்ணி ஏமாத்துன திரிஷாவுக்கு தல கொடுத்த தக் லைஃப்தான் சமீப காலமா சோஷியல் மீடியால டிரெண்டிங்ல போச்சு. ஆக்சுவலா ஹீரோயின்னா இப்படிதான் இருக்கணும், அப்படி இருக்கக்கூடாது, சரக்கு அடிக்கக்கூடாதுனுலாம் எக்கச்சக்கமான ரூல்ஸ் தமிழ் சினிமால இருக்கும். அப்போதான் அவங்கள ரசிகர்களுக்கு புடிக்கும்னும் சொல்லப்படாத விதிகள் இருந்துச்சு. அதெல்லாம் இந்தப் படத்துல கேஷுவலா தூக்கிப் போட்டு நம்ம மனசை கொள்ளையடிச்சிருப்பாங்க. ஆனால், திரிஷாவை ஏமாத்த எப்படிதான் மனசு வந்துச்சோ.
Also Read – வெள்ளித் திரை டூ சின்னத் திரைக்கு வந்து கலக்கிய நட்சத்திரங்கள்!
கொடி – இதுவரைக்கும் ஹீரோயினாதான பார்த்துருக்கீங்க, வில்லியா பார்த்ததில்லையேனு திரிஷா சம்பவம் பண்ண படம், கொடிதான். ஆரம்பத்துல இருந்து உருகி உருகி காதலிச்ச காதலனயே, பதவிக்காக போட்டுத்தள்ளுன கொடூரமான வில்லியா நடிச்சு பிரிச்சிருப்பாங்க. செம சர்ப்ரைஸ் இதெல்லாம்.
96 – படத்துல கெட் டு கெதர்ல பாதில வந்து எல்லாருக்கும் எப்படி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுப்பாங்களோ, அதே ஃபீல்தான் படம் பார்த்துட்டு இருந்தவங்களுக்கும். விண்ணைத்தாண்டி வருவாயால அவங்கள கடைசியா லவ் பண்ணது, அப்புறம் இப்போதான் லவ் பண்றேன்னு எல்லாரையும் லவ் பண்ண் வைச்ச கேரக்டர். அதுவும் பாட்டுலாம் பாடும்போது விஜய் சேதுபதி அப்படியே தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிடலாம்னு ஆக்ஷன் பண்ணி காமிப்பார்ல அப்படி இருந்துச்சு. திரிஷா இல்லை நயன்தாரானுலாம் போக முடியாதுங்க. திரிஷா கிடைக்கும் வரை போராடுவோம்னு நினைக்க வைச்ச படம்.
பேட்ட – த்ரிஷா கரியர்ல கமல்ல இருந்து விஜய் சேதுபதி வரை எல்லார்கூடவும் நடிச்சிட்டாங்க. தலைவர்கூட மட்டும் நடிக்கலையேனு திரிஷா ஃபேன்ஸ்க்கு சின்ன வருத்தம் இருந்துச்சு. அது இனிமேல் எங்கப்போட்டு நடக்கப்போகுதுனுதான் எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க. அப்போ, வந்த அனௌன்ஸ்மெண்டே திரிஷா ஃபேன்ஸ்க்கு சர்பிரைஸ்தான். தலைவிடா!
பொன்னியின் செல்வன் – ஏங்க, குந்தவையா திரிஷா நடிக்கிறாங்கங்க. எட்றா வெடிய, போட்ரா ரோட்லனு அவங்க ஃபேன்ஸ்லாம் கிளம்புன மொமண்ட் இன்னும் நியாபகம் இருக்கு. அதுவும் ஐஸ்வர்யாவும் திரிஷாவும் பார்த்துக்குற அந்த சில நொடிகள்லாம் தியேட்டர் அலறிச்சு. அக நக அக நக யே.. மியூசிக்லாம் குந்தவையை மறந்து திரிஷாவை மனசுல வைச்சு ரஹ்மான் போட்ருப்பாருனு நினைக்கிறேன். இளவரசியா திரிஷா வந்த ஃப்ரேம் எல்லாமே சர்ப்ரைஸ்தான்.
த்ரிஷா கேரக்டர்கள்-னு நாம எடுத்துக்கிட்டா எல்லாம் ஏற்கனவே சொன்ன மாதிரி அவ்வளவு பெரிய கேரக்டர் எல்லாம் கிடையாது. ஆனால், அந்த கேரக்டர்ல அவங்கள பார்த்த பிறகு அந்த கேரக்டர்ல நம்மளால வேற யாரையும் பொருத்தி பார்க்க முடியாது. அப்படியான கேரக்டராதான் இருக்கும். அதுதான் திரிஷாவோட மேஜிக், சர்பிரைஸ் இப்படி என்ன வேணும்னாலும் சொல்லலாம். த்ரிஷா கேரக்டர்கள் பல இருந்தாலும் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!