ஹீரோயின்

அதிகரிக்கும் ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்… காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக ஒரு கலாசாரம் அதிகமாகப் பரவி வருகிறது. அது ஹீரோயினை மையப்படுத்திய படங்கள். விஜயசாந்தி காலகட்டத்துக்குப் பிறகு, நவீன காலத்தில் நயன்தாரா, ஜோதிகாவுக்குதான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் நிரம்பிய கதைகள் எழுதப்பட்டுவந்தன. ஆனால், சமீபகாலமாக இவர்கள் அல்லாமல் கீர்த்தி சுரேஷ் தொடங்கி யாஷிகா ஆனந்த் வரைக்கும் பல ஹீரோயின்கள், இதுமாதிரியான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலும் பெரிதும் முக்கியத்துவம் தரப்பட்டுவருகிறது. இதன் பின்னால் இருக்கும் வியாபார உத்திகள் என்னவெனப் பார்க்கலாம்..?

நயன்தாரா
நயன்தாரா

ஹீரோயின்

பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதைக் காட்டிலும் ஹீரோயின்களை வைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் எடுப்பதில் வியாபாரரீதியாக நிறைய பலன்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது சம்பளம். பெரிய ஹீரோக்களுக்கு பெரிய சம்பளத்தைக் கொடுத்தாக வேண்டும். மேலும், அவர்களது கால்ஷீட்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அதுவரை பெரும்தொகையை வட்டியாகக் கட்டி, மேற்கொண்டு பெரும்தொகை செலவிட்டு படம் எடுத்தாலும் அதன் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் வருமா என்பதில் எந்தவித உத்தரவாதமும் இல்லை.

ஜோதிகா
ஜோதிகா

வியாபாரம்

அதுவே, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்றால் ஹீரோயின்களின் சம்பளம் மிகக்குறைவு, அதற்கேற்ப படத்தின் பட்ஜெட்டும் குறைகிறது. குறுகிய காலத்தில் படமாக்கப்பட்டு நல்ல லாபத்துடன் தியேட்டர்களில் ரிலீஸ் செய்துவிடமுடிகிறது. இதுமாதிரியான படங்களுக்கு தியேட்டர்களைவிட ஓடிடி நிறுவனங்களில் அதிக வரவேற்பும் கிடைக்கிறது. அதனாலேயே பல தயாரிப்பாளர்கள் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரிக்க பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர். சமீபத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் நயன்தாராவை வைத்து ஒரு படம் தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படஜெட் 9 கோடி என சொல்லப்படுகிறது. அதாவது இந்தப் படத்திற்காக நயன்தாராவின் சம்பளம் 4.5 கோடி எனவும் மீதம் 4.5 கோடியில் படத்தை எடுத்து முடித்திருக்கிறதாகவும் கோலிவுட் டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் சுமார் 9 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாம். இத்தனைக்கும் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கூட இன்னும் வெளியாகவில்லை. 

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இவ்வாறு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு எடுக்கப்படும் படங்களில் நிறைய வியாபார பலன்கள் இருப்பதால் சில ஹீரோயின்கள் தங்களது சொந்தத்  தயாரிப்பிலேயே நடித்து வெளியிடவும் இறங்கியிருக்கின்றனர். சமீபத்தில்கூட அமலா பால் தயாரித்து லீட் ரோலில் நடிக்கும் `கேடவர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

Also Read – `ரம்பா’ ஆர்மியா நீங்க… உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்! #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top