ஆடிட்டராகணும்னு நினைச்சவர் இப்போ பாடகர்; ரியாலிட்டி ஷோவில் இருந்து சினிமாவுக்கு வந்த ஆள்; சோலோ பாடல்களில் சோபித்தவர் இப்போ இசையமைப்பாளர்… இப்படி சிங்கர் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடந்த 3 தரமான சம்பவங்களைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
ரியாலிட்டி ஷோ ஹீரோ
சன் டிவியில் 1993 – 2006 வரைக்கும் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோதான் சப்தஸ்வரங்கள். இந்த நிகழ்ச்சியில்தான் சிங்கர் கார்த்திக் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றார். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வரை சிங்கிங்கை ஒரு பிடித்த விஷயமாக மட்டுமே நினைத்திருந்த கார்த்தி, இதன் பிறகு ப்ரொஃபஷனலாக மாற்றினார். அதுவரைக்கும் தான் ஒரு ஆடிட்டர் ஆவேன் என்று யோசித்திருக்கிறார். இந்தப் போட்டியின் மூலம் கார்த்திக்கிற்கு கிடைத்ததுதான், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்டார் படத்தில் அடி நேந்துக்கிட்டேன் பாடலைப் பாடும் வாய்ப்பு.
எவர்க்ரீன் காம்போஸ் ஆஃப் கார்த்திக்
ஒரு பாடகர் என்றால் அவருக்கு சில காம்போக்கள் செட்டாக வேண்டும். குறிப்பாக இந்த இசையமைப்பாளரின் இசையில் பாடும் போது, இந்த பாடகியோடு சேர்ந்து பாடும் போது, இந்த ஹீரோவுக்காக பாடும் போது என சில காம்போக்கள் பேசப்படும். அப்படி கார்த்திக்கிற்கு ஹிட்டாகக்கூடிய காம்போஸைப் பற்றிப் பார்க்கலாம். கார்த்திக்கைப் பொறுத்தவரை இளையராஜா முதல் தமன் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார். ஆனால், குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜோடு கார்த்திக் சேரும் போதுதான் அந்தப் பாடலில் வேறு ஒரு மேஜிக் கிரியேட் ஆகும். இது ஹாரிஸின் முதல் படமான மின்னலே படத்தில் பூப்போல் பூப்போல் பாடலில் ஆரம்பித்து இன்னும் வெளிவராத துருவ நட்சத்திரம் படத்தின் ஒரு மனம் பாடல் வரை கிட்டத்தட்ட 30 படங்களாக இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அடுத்ததாக கோ-சிங்கர். இதுவரைக்கும் கார்த்திக் பாடிய பாடல்களில் அதிகம் ஹிட்டானது அவர் சோலோவாக பாடிய பாடல்கள்தான். ஜோடி பாடல்களைவிட சோலோ பாடல்களே கார்த்திக்கின் பலம் என்று சொல்லலாம். இருந்தாலும் இரு பாடகிகளோடு அதிகமாக ஜோடி பாடல்கள் பாடியிருக்கிறார். ஸ்வேதா மோகன், ஸ்ரேயா கோஷல். ஸ்வேதாவோடு பாடிய பாடல்களில் பிரிவோம் சந்திப்போம் படத்தின் கண்டேன் கண்டேன், 180 படத்தின் நீ கோரினால் மற்றும் ஸ்ரேயாவோடு பாடிய பாடல்களில் அழகர்சாமியின் குதிரை படத்தின் பூவக்கேளு, மாற்றான் படத்தின் நானி கோனி போன்ற பாடல்கள் இன்றுவரைக்கும் பலரின் ப்ளேலிஸ்டில் இருக்கின்றன.
இந்த நடிகருக்கு கார்த்திக் பாடினால் அது வேற லெவலில் இருக்கும் என்றால், அது சூர்யாதான். மெளனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், பேரழகன் படத்தில் அம்புலி மாமா, கஜினி படத்தில் ஒரு மாலை, வாரணம் ஆயிரம் படத்தில் அவ என்ன என்ன தேடிவந்த அஞ்சல, அயன் படத்தில் விழிமுடி யோசித்தால், ஆதவன் படத்தில் ஹசிலி ஃபிசிலி, ஏழாம் அறிவு படத்தில் முன் அந்தி, மாற்றான் நானி கோனி, நவரசாவில் அனைத்து பாடல்கள் என சூர்யாவின் ஆஸ்தான பாடகராக இருக்கிறார் கார்த்திக்.
இசையமைப்பாளர்
இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அரவான் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான கார்த்திக், ஜெய் நடித்த தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், பாவக்கதைகள் ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கிய வான்மகள், குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கிய எதிர்பாரா முத்தம், நவரசா ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கிய கிட்டார் கம்பி மேலே நின்று என தொடர்ந்து இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டே இருக்கிறார்.
கார்த்திக் பாடிய எந்த பாடல் உங்களுடைய ஆல்டைம் ஃபேவரைட் என்பதை கமெண்ட் பண்ணுங்க.