‘குறைவான விலையில், தரமான இடம்’ – G Square Titan-ன் அதிரடி ஆஃபர்!

இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுத்தமான காற்று மற்றும் போதிய வசதிகளுடன் வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்.  சென்னையின் மத்திய பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் போய், வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளில் வீடு வாங்க பலரும் விரும்புகின்றனர்.
மக்களுடைய இந்த மனமாற்றத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனை விற்பனையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு வாங்கியவுடன் வீடு கட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியான பூந்தமல்லி, தாம்பரத்தை தாண்டியுள்ள பகுதிகள், திருவள்ளூர் மாவட்ட எல்லை, ஈசிஆர், அம்பத்தூர் பகுதிகள் மக்களின் விருப்பமான தேர்வு இடமாக இருக்கின்றன.  அந்த வரிசையில் மக்கள் விரும்பும் இடமாக மாறியுள்ளது பூந்தமல்லி புறநகர் பகுதி.  சென்னையின் எந்த பகுதிக்கும் விரைவாக வர முடியும் என்பதாலும் சுத்தமான இரைச்சலற்ற பகுதி என்பதாலும் வீட்டுமனை விற்பனை ஜரூராக நடந்து வருகின்றன. குறிப்பாக ஜி ஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் ‘G Square Titan – உலகதரத்தில் வீட்டுமனைகள்’ என்ற கான்செப்டுடன் பூந்தமல்லியில் உருவாக்கியுள்ளதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

G Square Titan
G Square Titan

பூந்தமல்லி ஏன் சரியான தேர்வு?

சென்னையில் வீடு வாங்க நினைப்போரின் எதிர்பார்ப்புகளில் சில விஷயங்கள் முதலிடத்தில் இருக்கும். தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வசதி, 24 மணி நேர தண்ணீர் வசதி, அருகில் மருத்துவமனை மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் சினிமா தியேட்டர் என பல தேவைகளை மக்கள் எதிர்பார்ப்பார்கள் மேலே சொன்ன எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இடம்தான் பூந்தமல்லி. இதை மனதில் வைத்தே பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் இங்கு நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்தவாறு இருக்கிறது. குறிப்பாக பூந்தமல்லியை பொருத்தவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 35 நிமிட தூரத்திலும், போரூரில் இருந்து 30 நிமிடத் தொலைவிலும் உள்ளதால் பயணம் செய்வதில் சிக்கல் இருப்பதில்லை. அதே போல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு, அருகிலேயே சென்னை பப்ளிக் பள்ளி, ஸ்பார்ட்டன் இன்ட்டர்நேஷனல் பள்ளி, செயின்ட் ஜான்ஸ் இன்ட்டர்நேஷனல் பள்ளி, சைதன்யா உள்ளிட்ட பல புகழ்பெற்ற பள்ளிகள் இருக்கின்றன.  அதேபோல ஸ்ரீ சாஸ்தா பொறியியல் கல்லூரி, ராஜலட்சுமி, பனிமலர் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளும் அருகிலேயே உள்ளன. பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங்கிற்கு ஈவிபி, கேஎஃப்சி, மெக்டொனால்டு, குயின்ஸ்லாந்து, ரிலையன்ஸ் மார்ட், ஹோட்டல் சங்கீதா, சரவணா சூப்பர் ஸ்டோர் ஆகியவை வரிசைகட்டி நிற்கின்றன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளதால், அதிவேக இண்டெர்நெட் பலரின் முக்கிய தேவை ஆக உள்ளது. இப்பகுதியில் அனைத்து விதமான நிறுவனங்களின் பைபர் கேபிள் வழி இணைய வசதியும் கிடைக்கிறது. 

Chennai-1
Chennai

G Square Titan-னில் என்ன ஸ்பெஷல்?

புகழ்பெற்ற G Square நிறுவனத்தின் G Square Titan ப்ராஜெக்ட் பூந்தமல்லி பகுதியில் கால்பதித்திருக்கிறது. பூந்தமல்லி கே.எப்.சியிலிருந்து5 நிமிட பயணதூரத்தில் உலகத் தரத்தில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் குயின்ஸ்லாந்து தீம்பார்க் எதிரில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியிலிருந்து 15 நிமிட பயணதூரத்திலும் வீட்டுமனை அமைந்துள்ளது. மொத்தமாக 6.89 ஏக்கரில் விசாலமாக 96 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. 900 சதுர அடிமுதல் 2,400 சதுர அடிவரை மனைகள் பிரிக்கப்பட்டு, ரூபாய் 36 லட்சம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களை ஒப்பிடும்போது, பூந்தமல்லியில் மிக குறைவான விலைதான். உலகத் தரம் வாய்ந்த வசதிகள், 24×7 சிசிடிவி கண்காணிப்பு, 5 வருட இலவச பராமரிப்பு, சரியான சட்ட ஆவணங்கள், வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள், அகலமான உள் சாலைகள் என பலவிதமான வசதிகளுடன் பிரிக்கப்பட்டுள்ளன. மனை வாங்கிய உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம். மனை வாங்கியவுடன் குறைந்த செலவில் வீடுகட்ட ஆலோசனையும் தருகிறார்கள். உடனடியாக இடத்தை புக் செய்து வீட்டைக் கட்டுங்கள். 

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்கிறோம்.

[ninja_form id=20]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top