ரீ-ரிலீஸ் படங்கள்

திரை தீப்பிடிக்கும்..ஸ்கிரீன்லாம் கிழியும் – இந்தப் படங்களை ரீ-ரிலீஸ் பண்ணா!

உண்மையான ஃபேன் பாய் சம்பவம்னா என்னனு தெரியுமா? வேட்டையாடு விளையாடு பாரு.. சட்டையை கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்னு சொன்ன லோகேஷ் கனகராஜே இதை அக்சப்ட் பண்ணிட்டாரு. அந்தப் படத்தோட rரீ-ரிலீஸ் சும்மா பட்டாஸா தியேட்டர்ல இருந்துச்சு. ரீ-ரிலீஸ் பண்ணி வெற்றி விழா கொண்டாடுன கொலை மாஸ்லாம்.. கொலை மாஸ்தான்.

கமலுக்கு வேட்டையாடு விளையாடு மாதிரி, ரஜினியோட அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுங்க. விஜய், அஜித், சூர்யால இருந்து சிவகார்த்திகேயன் வரைக்கும் அதிக ஃபேன் பேஸ் உள்ள நடிகர்களின் இந்த படங்களையும் ரிலீஸ் பண்ணுங்கனு சோஷியல் மீடியால அவங்கவங்க ஃபேன்ஸ் அவங்கவங்க ஃபேவரைட் சொல்றாங்க.

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரைக்கும் என்ன படம்லாம் ரி ரிலீஸ் பண்ணலாம். கமலுக்கே வேட்டையாடு விளையாடு தவிர வேற என்ன படம் ரிலீஸ் பண்ணலாம்?

தளபதி

ரஜினிக்கு எல்லாரும் மாஸ் படம்னா பாட்ஷா, அண்ணாமலையெல்லாம் சொல்லுவாங்க. ஆனால், கிளாஸான படம்னா தளபதிதான். காவாலா வரைக்கும் தளபதி படத்தோட ரஜினிக்கு கனெக்‌ஷன் இருக்கு. அதுமட்டுல்ல தளபதில ஏகப்பட்ட இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களும் இருக்கு. அதெல்லாம் முன்னாடி அந்தப் படம் எதுனால ஸ்பெஷல்னு பார்ப்போம். ரஜினி கமர்ஷியலா பெருசா வந்து நின்னாலும், அவரோட நடிப்பை குறிப்பிட்டு பேசி பாராட்ட ரொம்ப நாள் நல்லதா ஒரு படம் இல்லாமலயே இருந்துச்சு. சரியா அந்த நேரத்துல அவரோட மாஸ்லா இல்லாமல் கதைக்கான நாயகனா மாறி மணி ரத்னமோட தளபதியா நின்னு சூர்யா சும்மா பின்னியிருப்பாரு. பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்ல அதை குறிப்பிட்டே பேசியிருப்பாரு. நமக்கு ஸ்டாக் ரியாக்‌ஷன்ஸ் மட்டும்தான் இருக்கு. அதெல்லாம் கொடுத்தா மணி ரத்னம் வாங்க மாட்றாரு. வேற வேற அப்டின்றாரு. எனக்கு என்ன பண்ணனும் தெரியல. அதுனால, கமல்கிட்ட ஐடியா வாங்கி பண்ணேன்னு சொல்லுவாரு. அதுனாலயே இந்தப் படம் கிளாசிக்கா மாறிச்சு. அரவிந்த் சாமியோட முதல் படம், சந்தோஷ் ஷிவனோட ஐகானிக் சூரியன் ஷாட், இளையராஜா – மணி ரத்னம் கடைசி படம், நட்புனா என்ன தெரியுமா டயலாக், காட்டுக்குயிலு பாட்டு எல்லாமே அட்டகாசம். மகாபாரதம் கர்ணனுக்கு ட்ரிபியூட் மாதிரி படம் இருக்கணும்னு மணி ரத்னம் சந்தோஷ் கிட்ட சொன்னதும், அப்போ, சூரியனை வைச்சுதான் ஷுட் பண்ணனும்னு பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க. காவாலா பாட்டு வந்தப்போகூட, உங்கள எங்க இருந்து எடுத்தாங்க, காவாலயானு சின்ன குழந்தை கேக்குறது சோஷியல் மீடியால செம டிரெண்டிங்கா போய்ட்டு இருந்துச்சு. சோ, ரஜினிக்கு தளபதிதான் பெர்ஃபெக்ட்.

கில்லி

அர்ஜுனரு வில்லுன்ற ஒரு பாட்டுக்காகவே மொத்த படத்தையும் ரீ ரிலீஸ் பண்ணலாம். சாஃப்ட்டா போய்ட்டு இருந்த விஜய் கரியரை மாஸா கொஞ்சம் டர்ன் பண்ணிவிட்டது திருமலைதான். அந்த மாஸை தக்க வைக்க விஜய்க்கு கிடைச்ச முக்கியமான படம், கில்லி. கில்லி கதை உருவானது, விஜய் நடிப்பு, தரணி டைரக்டரா அந்த படத்துக்குள்ள வந்தது, தெலுங்குல சொதப்புன விஷயங்களை மாத்துனது, வித்யாசாகர் சண்டை போட்டு புது பாட்டு தருவேன்னு அடம் புடிச்சதுனு ஏகப்பட்ட விஷயங்களை தரணி வீடியோல பேசியிருக்கோம். மறக்காமல் அதை போய் பாருங்க. ஏகப்பட்ட சர்ப்பிரைஸ் இருக்கும். ஒரு பக்காவான கமர்ஷியல் படம், ஒரு இடத்துல கூட கொஞ்சமும் போர் அடிக்காமல் எப்படி இருக்கணும்ன்றதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் கில்லிதான். தம்மாதுண்டு பிளேடு மேல வைச்ச நம்பிக்கையை உன்மேல வை, முத்துப்பாண்டியவே வெட்டிட்டான்.. யார்ரா இவன், ஆஞ்ச்.. பூஞ்ச்னு தீமோட வேலு கபடி பாடி கோட்டுக்குள்ள போறது, ஆல் ஏரியாலயும் ஐய்யா கில்லி சீன், பூரி காமெடி, பூஜை காமெடி, எல்லாத்துக்கும் மேல முத்துப்பாண்டி வில்லத்தனம்னு ஒவ்வொரு சீனும் சும்மா தெறியா, மெர்சலா, பிகிலா பறக்கும்.

Also Read – ரியல் ரஜினி.. ரீல் ரஜினி.. யார் நல்லவர்?

பில்லா

எல்லாருக்கும் தெரிஞ்ச கதை. அதோட ரீமேக்ல எப்படி செட் ஆவாருனு கேள்வி கேட்ட எல்லாருக்கும் பக்காவா பதில் சொன்ன படம் பில்லாதான். பியூர் வில்லனா வந்து கலக்கியிருப்பாரு. சரித்திரத்தை ஒருதடவை பாருங்க நாம வாழணும்னா யார வேணும்னாலும் எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம்னு நைசா பேசி கிளாஸா தப்பிச்சு மாஸா நிப்பாப்புல. இன்னைக்கு இருக்குற மாஸ் இருக்குல அது தீனால அஜித்துக்கு அப்ப ஸ்டார்ட் ஆகியிருந்தாலும், இடைல ரொம்ப லோ ஆச்சு. அதை தூக்கி நிப்பாட்டுன படம் பில்லாதான். கிட்ட தட்ட ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு. கார் ரேஸ், துப்பாக்கினு அவ்வளவு ஆக்‌ஷன்ஸ். அப்படியே கட் பண்ணா, இன்னொரு அஜித். ரெண்டு அஜித்துக்கும் அவ்வளவு டிஃபரென்ஸ காமிச்சிருப்பாரு. அதுக்கப்புறம் ஆரம்பம்ல விஷ்ணு வர்தன் சேர்தாங்க. அதுவும் ஹிட்டு. இன்னைக்கு வரைக்கும் அந்தக் கூட்டணி திரும்பவும் சேரணும்னு சிவா வீரம் எடுத்த காலத்துல இருந்து வேண்டுராங்க. நடக்கதான் மாட்டேங்குது. ஒண்ணு கவனிச்சீங்களா.. பில்லால வில்லன் பேரு ஜெகதீஷ். விஜய்யோட துப்பாக்கில அவர் பெயர் ஜெகதீஷ். நம்ம கோ இன்சிடண்ட்ல?

அயன்

ஒரு படத்துல ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு சீனும் மீம் மெட்டீரியலா இன்னைக்கும் சோஷியல் மீடியால கலக்குதுனா அயன் படத்துக்குதான். அப்படியொரு படம். மத்தவங்களுக்குலாம் படங்கள் சொல்லும்போது அதுக்கு முன்னாடி சில படங்கள் நல்லா போகலைனு சொல்லுவோம். ஆனால், அயன் வரும் போதுலாம் சூர்யா செம ஃபார்ம்ல இருந்தாரு. கஜினி, வேல், வாரணம் ஆயிரம்னு வரிசையா ஹிட்டுகளை பல கொடுத்து அவ்வளவு ஃபார்ம்ல இருந்தாரு. அயன்ல நிறைய விஷயங்கள் உண்மையான சம்பவங்களை பேஸ் பண்ணி எடுத்துருக்காங்க. ரொம்ப ஜாலியான சூர்யாவாதான் படம் முழுக்க நடிப்பாரு. ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக் அயன் படத்துக்கு பெரிய பிளஸ். ஹாரிஸ் மாம்ஸ் வைப்ஸ்னு போட்டா, அயனுக்கு அந்த லிஸ்ட்ல ஒரு ஸ்பெஷல் இடம் கொடுக்கலாம். காதல், கொக்கைன், பிரில்லியன்ஸ், அரசுனு ஏகப்பட்ட விஷயங்கள் படத்துல செம பேக்கேஜா இருக்கும். அந்த காரணங்களுக்காகவே அயன் படத்தை ரீ-ரிலீஸ் பண்ணலாம்.

சாமி

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பெர்ஃபாமென்ஸைவிட மாஸா தங்களை யாரு முன்னிறுத்துறாங்களோ அவங்கதான் சஸ்டெயின் ஆகி ரஜினியாகவும் விஜய்யாகவும் சிவகார்த்திகேயனாகவும் இன்னைக்கு நம்ம முன்னால நிக்கிறாங்க. சேது, காசினு பெர்ஃபாமென்ஸா விக்ரம் பயங்கரமான படங்கள் கொடுத்தாலும் அவர் மாஸ் ஹீரோவா நிக்க முக்கிய காரணமா அமைஞ்சது ஜெமினியும் சாமியும். ஹரி கமர்ஷியல் கிங். அவரோட விக்ரம் சேர்ந்த அந்த டைம்ல மேஜிக்கா வந்த படம் சாமினே சொல்லலாம். அந்தப் படம் வந்த புதுசுல தான். சி.டி, டி.வி.டிலாம் வந்துச்சு, அதெல்லாம் தேயுற அளவுக்கு போட்டுப் பார்த்தவங்களாம் இருக்காங்க. விக்ரமின் பெஸ்ட் இண்ட்ரோ சீன்ல சாமிக்கு ஸ்பெஷல் இடம்தான். குடிகாரனா வந்து போலீஸா மாறும் அந்த ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காகவே தியேட்டர்ல ரீ-ரிலீஸ் பண்ணலாம். அவ்வளவு தரமான சம்பவம். ஆனால், அந்த பெயரை கெடுக்குற மாதிரி சாமி ஸ்கொயர்னு போய்டாதீங்க. மக்கள் பாவம்.

பொல்லாதவன்

தனுஷுக்கு எவ்வளவோ படங்கள் இருக்கு. ஆனால், பொல்லாதவன் கிளாசிக்னே சொல்லலாம். வெற்றி மாறன் ஒருதடவை நீங்க சின்ன பசங்களா இருந்தா பொல்லாதவன் புடிக்கும், கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தா ஆடுகளம் புடிக்கும், இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தா விசாரணை புடிக்கும்னு சொல்லுவாரு. பரவால்ல, நம்ம பொடிப்பசங்களாகவே இருப்போம்னு பொல்லாதவன் பார்க்கும்போது தோணும். அந்தப் படம் வந்த புதுசுல பல்சர் பைக், அந்த பைக் பி.ஜி.எம் எல்லாமே அவ்வளவு டிரெண்ட் ஆச்சு. இன்னைக்கு அந்த மாதிரிலா வைக்கக்கூடாதுல ரூல்ஸ்லாம் கொண்டு வந்துட்டாங்க. இல்லைனா, இன்னைக்கும் பொல்லாதவன் பி.ஜி.எம் எல்லா பைக்லயும் கேட்கும். ஃபேமிலி டிராமாவை இதைவிட பக்காவா சொல்ல முடியாது. கிளைமேக்ஸ்ல சட்டை இல்லாமல் சண்டை போட்டு நடக்க முடியாமல் போய் பைக் எடுத்துட்டு பி.ஜி.எமோட போர அந்த ஒரு சீனுக்காகவே படத்தை எத்தனை தடவை வேணும்னாலும் தியேட்டர்ல ரீ-ரிலீஸ் பண்ணலாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சிவகார்த்திகேயனே நினைச்சாலும் இந்த மாதிரி இன்னொரு படம் இனி பண்ண முடியாதுனா அது இந்தப் படம்தான். சிவா கரியரை அப்படியே சேஞ்ச் பண்ணி.. குடும்பங்கள் கொண்டாடும் சிவாவ இன்னைக்கு இப்படி வளர்ந்து நிக்கிறதுக்கு அடித்தளம் போட்டதும் இந்தப் படம்தான். சூரியோட காமெடி சிவாவோட காம்பினேஷன்ல சும்மா அப்படி இருக்கும். இடைல வர்ற லவ், கிளைமேக்ஸ் ட்விஸ்ட், குட்டி குட்டியா சிவா பண்ற மிமிக்ரி எல்லாமே அவ்வளவு அட்டகாஸம். கண்டிப்பா ரீ-ரிலீஸ் பண்ணா ஜாலியா இருக்கும்.

சூது கவ்வும்

தாஸ் மாதிரியான கேரக்டர்ஸ்லாம் தமிழ் சினிமாவுக்கு இனிமேல் கிடைக்குமானு கேட்டா தெரியாதுன்றது மட்டுமே பதில். அவ்வளவு யூனிக்கான கேரக்டர். ஒருத்தங்களை கடத்துறதுக்கு தேவையான 5 ரூல்ஸை போர்ட்ல எழுதும்போதே, ச்சே.. எவ்வளவு நல்ல, நேர்மையான, மனித நேயமுள்ள கடத்தல்காரனா இருக்கான்ல அப்டினு தோண வைக்கும். இடைல சும்மா கண்ணாடு போட்டு கதவை திறந்து வர்றதுலாம் மாஸா இருக்கும். அதை இன்னொரு நடிகருக்கு பொருத்திக்கூட பார்க்க முடியலை. ஒவ்வொரு சீனையும் அவ்வளவு எஞ்சாய் பண்ணாங்க. இன்னொரு தடவை போட்டா, அப்பவும் எஞ்சாய் பண்ணுவோம்

கமலுக்கு 20 படங்கள் ரீ-ரிலீஸ் பண்ணலாம்..

எனக்கு தெரிஞ்சு பத்து வருஷம் கழிச்சு கொண்டாடப்படும் நிறைய படங்களை கொடுத்தவரு, ஆண்டவருதான். வேட்டையாடு விளையாடு அப்பவே ஹிட்டு. அதேமாதிரி அன்பே சிவம்ல தொடங்கி உத்தம வில்லன் வரை குறைஞ்சது 20 படங்களையாவது கமலுக்கு ரி ரிலீஸ் பண்ணலாம். எல்லாமே அவ்வளவு வொர்த்தா இருக்கும்.

இந்தப் படத்தை ரி ரிலீஸ் பண்ணா செமயா இருக்கும்னு நீங்க நினைக்கிற படத்தை கமெண்ட்ல சொல்லுங்க.  

17 thoughts on “திரை தீப்பிடிக்கும்..ஸ்கிரீன்லாம் கிழியும் – இந்தப் படங்களை ரீ-ரிலீஸ் பண்ணா!”

  1. You really make it seem really easy along with your presentation but I in finding this topic to
    be really one thing which I believe I might never understand.
    It seems too complex and very wide for me. I’m taking a
    look forward for your subsequent post, I will try to get the hang of it!
    Escape room

  2. This is very fascinating, You’re a very professional blogger.
    I’ve joined your rss feed and sit up for searching for more of your excellent post.
    Additionally, I’ve shared your web site in my social networks

  3. Aw, this was an incredibly good post. Spending some time and actual effort to generate a top notch article… but what can I say… I put things off a whole lot and don’t manage to get nearly anything done.

  4. Howdy, I think your website could be having web browser compatibility problems. Whenever I take a look at your blog in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it has some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Aside from that, fantastic site!

  5. I truly love your blog.. Great colors & theme. Did you make this site yourself? Please reply back as I’m trying to create my own site and would love to find out where you got this from or exactly what the theme is named. Many thanks.

  6. I’m amazed, I have to admit. Seldom do I encounter a blog that’s both equally educative and entertaining, and let me tell you, you’ve hit the nail on the head. The problem is an issue that too few men and women are speaking intelligently about. I’m very happy I found this in my search for something concerning this.

  7. Hi, I believe your blog might be having web browser compatibility problems. When I look at your site in Safari, it looks fine however when opening in I.E., it’s got some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Other than that, great website.

  8. I wanted to thank you for this great read!! I absolutely enjoyed every little bit of it. I’ve got you book-marked to check out new things you post…

  9. An outstanding share! I’ve just forwarded this onto a friend who has been doing a little homework on this. And he actually ordered me lunch due to the fact that I found it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending some time to discuss this topic here on your web site.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top