Thunivu Ajith

துணிவுல மிஸ்ஸே ஆகல.. பேங்க் கொள்ளை படங்களில் இடம்பிடிக்கும் 8 விஷயங்கள்!

‘துணிவு’ ஏற்படுத்திய தாக்கத்தால் ஹாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பேங்க் கொள்ளை படங்கள் குறித்த அகழாய்வுகளில் ஈடுபட தூண்டப்பட்டிருக்கிறோம். அப்படி, நம் குழு அகழாய்வில் ஈடுபட்டபோது, இந்த ஜானர் படங்களில் தவறாமல் 8 விஷயங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டுகொள்ள முடிந்தது. இதை வரிசைப்படுத்தினால், ‘இதானே… நமக்குத் தெரியாதா என்ன?” என்று உங்களுக்குத் தோணலாம். ஆனால், அந்தச் சின்ன சின்ன விஷயங்களுக்குள் ‘அட… ஆமால்ல…’-ன்னு சொல்ல வைக்கிற மேட்டர்களும் உண்டு. இதோடு, தமிழில் வங்கிக் கொள்ளையை மிக நேர்த்தியாக பதிவு செய்த இரண்டு படங்கள் பத்தியும் கடைசியில் பார்க்கப் போகிறோம். அதை மிஸ் பண்ணிடாதீங்க.

துணிவு பேங்க் கொள்ளை சீன்
துணிவு

பேங்க் கொள்ளை

மாஸ்க்

பேங்க் ராபரி மூவிஸ்னாலா நம்ம கண்ணு முன்னாடி நிக்கிற முதல் விஷயம்… மாஸ்க். மாஸ்க் அணியாத வங்கிக் கொள்ளையர்களே இல்லைன்னு சொல்லலாம். ‘துணிவு’ல கூட அஜித் மாஸ்கோடதான் என்ட்ரி கொடுக்குறாரு. அப்புறம், பஞ்ச் பேசுறப்ப ரியாக்‌ஷன் வெளியே தெரியணுமேன்னு அதைக் கழட்டி பேசுறதை கவனிச்சிருக்கலாம். அது மேட்டர் இல்லை. ஒவ்வொரு பேங்க் ராப்பரி மூவிலயும் ஒவ்வொரு விதமான மாஸ்க் இருக்கும். சிம்பிளான மாஸ்க் ஆகவும் இருக்கும்… பல நேரங்களில் வித்தியாசமான முகமூடிகளாகவும் இருக்கும்.

‘மணி ஹெயிஸ்ட்’ல எல்லாரும் டாலி மாஸ்க் போட்டிருப்பாங்க. சிஸ்டத்துக்கு எதிரான புரட்சிதான் அதோட குறியீடு. இப்படி, நிறைய வங்கிக் கொள்ளை படங்களில் மாஸ்குக்குப் பின்னால ஏதோ ஒரு தீம் நிச்சயம் இருக்கும். அதே மாதிரி, மணி ஹெஸ்ட்ல எல்லாருமே சிவப்பு நிற உடை போட்டிருப்பாங்க. இதேமாதிரி சினிமாவிலும் யூனிஃபார்ம் உண்டுன்றது கூடுதல் விஷயம்.

மாஸ்குக்கு மீண்டும் வருவோம் ‘The Town’-ன்ற வங்கிக் கொள்ளை படத்தில் Nun வேஷத்துல நன் மாதிரியான மாஸ்க் போட்டிருப்பாங்க. ‘Point Break’ படத்துல முன்னாள் அமெரிக்க அதிபர்களின் முகங்களையே மாஸ்கா போட்டிருப்பாங்க. இப்படி மாஸ்குக்குப் பின்னாடியும் பல குறியீட்டு மேட்டர்களை கவனிக்கலாம். ஆமா, ‘துணிவு’ல அஜித் கருப்பு கலர் மாஸ்க் போட்டிருந்தாருல்ல… அதோட குறியீடு என்னென்னு நீங்களே கெஸ் பண்ணி கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

துப்பாக்கி – துப்பாக்கிச் சூடு

மாஸ்க் எப்படி அத்தியாவசியமோ, வங்கியில் கொள்ளை அடிக்கப் போகும்போது கொள்ளையர்கள் நம்மை யாரும் நெருங்கிடாமல் சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்ட்டெயின் பண்றதுக்கும், மிரட்டுறதுக்கும் ‘கன்’ யூஸ் பண்றது கட்டாயம். இங்கே கன் ஒரு அத்தியாவசிய ப்ராப்பர்ட்டி.  எல்லா வங்கிக் கொள்ளை படங்கள்லயும் விதவிதமாக கன்-களை கண்டுக்க முடியும். கத்தியோ, சுத்தியோ வேற எந்த ஆயுதமும் வெச்சு பேங்க்ல மக்களையும் போலீஸையும் மிரட்ட முடியாது. அது வேலைக்கு ஆகாது. கன்-னுதான் அங்கே வேலைக்கு ஆகும். ஆக, எந்த ஊரு பேங்க் ராபரி படமா இருந்தாலும் கன்னும், கன் ஷூட்டும் நிச்சயம் இருக்கும்.

குறிப்பாக, எல்லா வங்கிக் கொள்ளை படங்களிலும் இருக்கும் காட்சி: கொள்ளை அடிக்க பேங்குக்குக்கு நுழைஞ்ச உடனே ஒரு தோட்டாவை வேஸ்ட் பண்ணி மேல் நோக்கியோ அல்லது டியூப்லைட்லயோ சுட்டுட்டு… ‘யாரும் அசையாதீங்க’ன்ற டயலாக் வரும். வங்கிக் கொள்ளையர்கள் எப்ப கன்னை யூஸ் பண்ணுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாதுன்றதுதான் வங்கிக் கொள்ளை படங்களில் முக்கியமான த்ரில் எலிமென்ட்.

வங்கி ஊழியர்களின் வேலை

வங்கிக் கொள்ளை படங்களில் கொள்ளையர்களின் நோக்கமே பணத்தை அள்ளிட்டு போறதுதான். ஆனா, பணத்தை அள்ளி மூட்டை கட்டுற வேலையை மட்டும் அவங்க செய்யவே மாட்டாங்க. துப்பாக்கி முனைல வங்கி மேனேஜர், வங்கி ஊழியர்களை வெச்சுதான் லாக்கர்ல இருந்து பணத்தை வெளியே எடுத்து மூட்டைக் கட்ட வைப்பாங்க.  வங்கி கொள்ளைல பாதி வேலையை வங்கி ஊழியர்கள்தான் பண்ணுவாங்க. ஐ மீன் வங்கிக் கொள்ளையர்கள் அவங்களைதான் தங்கள் கொள்ளைக்கு வேலை வாங்க வெச்சுப்பாங்க. இதுதான் பெரும்பாலான வங்கிக்கொள்ளை படங்கள்லயும் நடக்கும். அதே மாதிரி, வங்கி ஊழியர்கள்ல சிலர் ஹீரோயிசம் காட்ட முன்வந்து உதை வாங்குறதும், அல்லது எல்லாரையும் மெரட்டி அமைதியா வெச்சுக்கிறதுக்காக யாராவது ஒருத்தர் சாம்பிளுக்கு சுட்டு பதம் பாக்குறதுக்கு ஆளாக்கப்படுவதும் வங்கி ஊழியராதான் இருக்கும்.

துணிவு
துணிவு

கொள்ளை கும்பல்

தனி ஒருவர் வங்கியில் நுழைந்து கொள்ளை அடிக்கிற மாதிரியான படங்கள் ரேரஸ்ட் ரேர் தான். வங்கிக் கொள்ளை படங்கள் என்று வந்துவிட்டாலே ஒரு டீமாதான் மிஷன்ல இறங்குவாங்க. அதுக்கு தலைமை தாங்குறது முக்கியமான ஒருத்தராவோ அல்லது ரெண்டு பேராவோ இருப்பாங்க. இந்த டீம்ல குறைந்த பட்சம் ரெண்டு, மூணு பேரு… அதிகபட்சம் ஏழு, எட்டு பேரு இருப்பாங்க. அப்பதான் வங்கில இருக்குற ஊழியர்கள், பொதுமக்கள், வெளியே இருந்து அட்டாக் பண்ற போலீஸை சமாளிக்க முடியும். இந்த கும்பல பொறுத்தவரைக்கும் முக்கியமான கேரக்டர்களுக்குப் பின்னாடி ஒரு கதை நிச்சயம் இருக்கும். அதேபோல ஒட்டுமொத்தமா வங்கிக் கொள்ளைக்கான காரணம் இருக்கும்.

அதேமாதிரி, வங்கிக் கொள்ளை கூட்டத்துல நிச்சயம் ஏதோ ஒரு சில இடத்துல ஒருத்தருக்கு ஒருத்தருக்குள்ள கருத்து வேறுபாடுகள், மோதல்கள் வரும். அதனால ப்ளான்ல சில பின்னடைவுகள் இருக்கும். அப்புறம் எல்லாமே ஓகே ஆகிடும். அந்த கேங்ல லேடி இருந்தா, ரொமான்ஸ் நிச்சயம்!

ரத்த காவு நிச்சயம்

வங்கிக் கொள்ளையர்களோட நோக்கம் பணத்தை அள்ளிட்டு போறதுதான். யாரையும் கொல்றது இல்லைன்னாலும், ப்ளான் கொஞ்சம் சொதப்பும்போது, எதிர்பாராத விதமாக ராபரி பண்ண வந்தவங்களால ரத்த காவு ஏற்படுறது உண்டு. ஒருவேளை அப்படி எதுவும் நடக்கலைன்னா, அவங்களோட மோதுற போலீஸ் சைட்லயோ அல்லது போலீஸால ராபர்ஸ் சைட்லயும் ஏதோ ஒரு விதத்துல ரத்தம் தெறிச்சே ஆகணும். அதுதான் திரைக்கதையில் வந்தே ஆக வேண்டிய ரூல்ஸ்.

பிணைக்கைதிகள்

மேலே இருக்குற விஷயங்கள் மாதிரியே பிணைக்கைதிகள் – ஹோஸ்டேஜ் இல்லாத வங்கிக் கொள்ளை படங்களே இருக்க முடியாது. இந்த ஜானர் திரைக்கதைல வித்தியாசம் காட்டுறதுக்கும், சுவாரஸ்யத்தை கூட்டுறதுக்கும் ஹோஸ்டேஜ் ரொம்பவே யூஸ் பண்ணப்படுவாங்க. ஆர்வக்கோளாறுகளால் ஏற்படும் சீன்கள் தொடங்கி சென்டிமென்ட்ஸ் வரைக்கும் ஹோஸ்டேஜஸை வெச்சுதான் திரைக்கதைல ஒப்பேத்துவாங்க.

துணிவு பேங்க் கொள்ளை படம்
துணிவு

பேங்க் கொள்ளையர்கள் – போலீஸ் பேச்சுவார்த்தை

அதேமாதிரி, திரைக்கதையை இழுத்துட்டுப் போறதுக்கும், திருப்பங்களைக் கொடுக்குறதுக்கும் கொள்ளையர்கள் – போலீஸ் இடையே பேச்சுவார்த்தைகள் நிச்சயம் இடம்பெறும். இந்தப் பேச்சுவார்த்தையில பல டீல்கள் பேசப்படும். இதுல கொள்ளையர்களின் காமனான இறுதி கோரிக்கை என்னன்னா, அவங்க தப்பிச்சுப் போறதுக்கு ஹெலிகாப்டரோ வேற ஏதாவது வாகனமோ போலீஸே அரேஞ்ச் பண்ணனும்.

தத்துவங்கள்

வங்கிக் கொள்ளை படங்கள்லயே ஹைலைட்டான விஷயம் என்னன்னா, டயலாக்தான். மக்களை மிரட்டுறதுல இருந்து போலீஸ் பேச்சுவார்த்தை வரைக்கும் எல்லா இடங்கள்லயும் டயலாக்ஸ் ஷாட் அண்ட் ஸ்வீட்டா இருக்கும். அதே நேரத்துல, தேடிப் பார்த்தா எக்கச்சக்க வாழ்க்கைத் தத்துவங்கள் டயலாக்ல வந்துட்டே இருக்கும். அது சமூகம், பொருளாதாரம், அரசியல் சார்ந்து நிறைய நிறைய இருக்கும்.

இந்த எட்டு விஷயங்களும் ஏறக்குறைய எல்லா வங்கிக் கொள்ளை படங்களிலும் நாம கவனிக்கலாம். இந்த ஜானரைப் பொறுத்தவரைக்கும், பெரும்பாலும் வங்கிக் கொள்ளையர்கள்தான் ப்ரொட்டாகனிஸ்டா இருப்பாங்க. ஒரு சில படங்கள்ல மட்டும் வங்கிக் கொள்ளையர்கள் வில்லன்களாகவும், அந்தக் கொள்ளையை முறியடிக்கிற போலீஸா ஹீரோவும் இருப்பாங்க. ஆனால், சம்பவம்ன்றது பேங்க்ல கொள்ளை அடிக்குறது ஒண்ணுதான். அதுக்கான பேக்ரவுண்ட் காரணமும், கொள்ளை அரங்கேறும் உத்திகளும் தான் வெவ்வேறா இருக்கும். அதுதான் ஒவ்வொரு படங்களுக்கும் தனித்துவமா அமையும்.

Also Read – சினிமா போதைக்குப் பதில் அந்த போதை பழகுங்கள் – ஹெச்.வினோத் தத்துவங்கள்!

ரைட்டு… இப்போ தமிழ்ல ரெண்டு படம் சொன்னேனே, அதுக்கு வருகிறேன்.

முதல் படம், நம் எல்லாருக்குமே ரொம்ப தெரிஞ்ச பாக்யராஜின் ‘ருத்ரா’. கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் வங்கிக் கொள்ளை காட்சிகளை அமைச்சு, முழு நீள பேங்க் ராபரி படம் பார்த்த ஃபீலை ஒன்மேன் ஆர்மியா கொடுத்திருப்பார் பாக்யராஜ். Batman – Dark Knight joker-ருக்கே இன்ஸ்பிரேஷனா ஜோக்கர் வேஷத்துல பேங்க்ல நுழைஞ்சு சில பல அட்ராசிட்டி பண்ற பாக்யராஜ், ‘துணிவு’ ட்ரெய்லர் பாத்தப்ப கூட நினைவுக்கு வந்தார்னா, அதோட தாக்கத்தை வேற எப்படி சொல்றது?!

ரெண்டாவது படம் ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’. இந்தப் படத்துல ஒரு தடவை எம்.எஸ்.பாஸ்கர் தனியா போய் கெத்தா ஒரு பேங்க் ராபரி பண்ணிட்டு வெளியே வந்து பணத்தை அள்ளி வீசி மாஸ் காட்டுவார். அது அப்படியே சிலிர்க்க வைக்கிற மொமண்டா இருக்கும். இன்னொரு சீன்ல டீமா போய் கொள்ளை அடிச்சாலும் ஒரு சொதப்பல் நடக்கும். ரணகளம் ஆகிடும். இந்த ரெண்டு சீனுமே  ‘8 தோட்டாக்கள்’ படத்துல செம்ம ஹைலைட்.

இந்த பேக்ரவுண்டலதான் ஃபுல் அண்ட் ஃபுல் முழுநீள வங்கிக் கொள்ளை படமாக ‘துணிவு’ இருக்கப்போவுது. இது எந்த அளவுக்கு தனித்துவமா நமக்கு திருப்தி தரப் போவுதுன்றதை விரைவில் பார்ப்போம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top