Film Promotions

வானத்துல இருந்துலாம் குதிக்கிறீங்க… தமிழ் சினிமாவின் வித்தியாசமான புரமோஷன்கள்!

வித்தியாசமான தமிழ் சினிமா புரமோஷன்கள் | எல்லா படங்களுக்கும் புரொமோஷன்றது ரொம்ப முக்கியமான விஷயம். நல்ல படங்கள் தன்னைத்தானே புரொமோட் செய்துகொள்ளும்னு வசனங்கள் பல சொன்னாலும், எண்ட் ஆஃப் தி டே புரொமோஷனுக்குதான் வந்து நிக்கணும். அந்த வகையில், தமிழ் சினிமால வந்த படங்கள்ல யூனிக்கான புரொமோஷன்கள் என்னலாம் பண்ணிருக்காங்கனுதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

தசாவதாரம்
தசாவதாரம்

வித்தியாசமான புரமோஷன்கள்

தசாவதாரம் – ஃபஸ்ட் லுக்ல தொடங்கி ட்ரெயிலர் வரைக்கும் எல்லாமே புரொமோஷன்தான். அதுவும் ஆடியோ லாஞ்ச்லாம் இப்போ வேறலெவல்ல புரொமோஷனா பார்க்குறாங்க. ஆனால், எத்தனை ஆடியோ லாஞ்ச் வந்தாலும் தசாவதாரம் ஆடியோ லாஞ்சை அடிச்சுக்க முடியாதுனு அப்பப்போ தோணும். ஏன்னா, அன்னைக்கு முதல்வரா இருந்த கருணாநிதில தொடங்கு அகில உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் வரை பல சூப்பர் ஸ்டார்கள் அந்த விழால கலந்துகிட்டாங்க. அந்தப் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்ஸா ஆடியோ லாஞ்ச்  இருந்துச்சு. அதை யோசிச்சு, அத்தனை பேரையும் ஒரே மேடைல வர வைச்சதுலாம் செம மாஸான விஷயம்.

விக்ரம்
விக்ரம்

விக்ரம் – விக்ரம் – 1 படத்துக்கே புரொமோஷன்லாம் செம மாஸா இருந்துச்சுனு சொல்லலாம். வொர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியிட்டு, அந்தப் படத்தை பத்தி எழுதி புரொமோட் பண்ணாங்க. ஆனால், அதெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி சமீபத்துல வெளிவந்த விக்ரம் படத்துல புரொமோஷன் பண்ணியிருந்தாரு. ட்ரெயின்ல விக்ரம் படத்தோட ஸ்டிக்கர் ஒட்டி புரொமோஷன் பண்ணியிருந்தாரு. இன்னைக்கு வாரிசு இதே ஸ்டைல்ல புரொமோஷன் பண்றாங்க. இந்த புரொமோஷன் தொடர்பா கமல் தன்னோட ட்விட்டர்ல, “ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது” இப்படி மஜாவா ட்வீட் போட்ருந்தாரு.

கபாலி – விக்ரம் புரொமோஷன் சமயத்துல ரஜினி ஃபேன்ஸ்லாம் கபாலி விமானத்தைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்தாங்க. ஏர் ஏசியா விமானத்துல கபாலி போஸ்டர்ஸ் ஒட்டி தாணு பிரம்மாண்டமா விளம்பரம்லாம் பண்ணாரு. மொத்த திரையுலகமும் ஆச்சரியமா பார்த்த புரொமோஷன்னா அதுதான். அதேமாதிரி அந்தப் படத்தோட முதல் காட்சியைப் பார்க்க பெங்களூர்ல இருந்து வர்றவங்களுக்கு சிறப்பு விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லில இருந்து கொச்சி வரைக்கும் இந்த விமானம் புரொமோஷனுக்காக பறந்துச்சு. சாதாரண பயணிகள் விமானம்தான். ஒரே ஒருத்தர் இந்த மொத்த டிசைனையும் பண்ணாரான். ஆசியாவில் இந்த மாதிரி விளம்பரம் பண்றது இதுதான் முதல் தடவை.

கபாலி
கபாலி

துணிவு – அஜித் படத்துக்குலாம் விளம்பரம் தேவையில்லை. அஜித்தான் அவர் படத்துக்கு பிராண்ட், விளம்பரம் எல்லாமேனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போ வேறலெவல்ல இறங்கி, பறந்துலாம் புரொமோஷன் பண்றாங்க. துபாய்ல ஸ்கை டைவிங்க் பண்ற டீம் ஒண்ணு, துணிவு படத்தோட பேனரை வைச்சு டைவ் பண்ணாங்க. எல்லாரும் கீழதான் புரொமோஷன் பண்றாங்க. ஆனால், அஜித் வேறலெவல், அதுனால மேலயே பண்றாங்கனு சொன்னாலும், இன்னொரு பக்கம் சுரேஷ் சந்திராவை களம் எட்டுல போட்டு பொளந்துட்டு இருக்காங்க. மலேசியாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் துணிவு பெயர்ல கால்பந்து போட்டியை நடத்துறாங்க. அந்த போட்டில கொடுக்குற தண்ணீர் பாட்டில்ல இருந்து மெடல் வரைக்கும் துணிவு பெயர்தான் இருக்கு. இப்படியும் அவங்க புரொமோஷன் பண்றாங்க.

Also Read – துணிவுல மிஸ்ஸே ஆகல.. பேங்க் கொள்ளை படங்களில் இடம்பிடிக்கும் 8 விஷயங்கள்!

எனக்குள் ஒருவன் – சித்தார்த் நடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்குற படம்தான் இது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் சந்தோஷ் நாராயணன் மியூசிக்தான். ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு தரமா இருக்கும். பூ அவிழும் பொழுதில் இந்தப் படம்தான். விவேக் எழுதுன முதல் பாட்டும் இதுலதான். இந்தப் படத்துல பிரபலமாகவே, பிறந்த ஆளடானு பாட்டு வரும். இந்தப் பாட்டோட புரொமோஷனுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்தியேன்னு எல்லார் ஆரம்பகால புகைப்படம், ஸ்டார் ஆனப்பிறகு உள்ள புகைப்படத்தை கம்பேர் பண்ணி போஸ்ட் போட்டு புரொமோஷன் பண்ணாங்க. செம ஐடியாவா இருந்துச்சு.

மெர்சல்
மெர்சல்

மெர்சல் – விஜய் படத்துக்கு மிகப்பெரிய புரொமோஷன் அவர் ஆடியோ லாஞ்ச்தான். அதை எப்பவுமே சிறப்பா பண்ணிடுவாரு. ஆனால், திருப்பாச்சி வந்த டைம்ல பிஸ்கட்கூட ஸ்டிக்கர்ஸ்லாம் கொடுத்தாங்க. மெர்சல் படம் ரிலீஸ் ஆனப்போ, ட்விட்டர்ல எமோஜி கொடுத்தாங்க. தமிழ் படங்கள்ல முதல்ல எமோஜி பெற்றது, மெர்சல்தான். அதுக்கப்புறம், காலா, என்.ஜி.கே, பிகில், தர்பார், சூரரைப் போற்று, மாஸ்டர் படங்களுக்குலாம் எமோஜி கொடுத்தாங்க. மெர்சல் ரிலீஸ் ஆன டைம்ல இந்திய அளவில் டிரெண்டிங்க்ல இருந்துச்சு. அதுமட்டுமில்ல, இந்தப் படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய புரொமோஷனா அமைஞ்சது, பா.ஜ.கதான். ஜோசப் விஜய்னு சொன்னதுல இருந்து ஜி.எஸ்.டி பஞ்சாயத்து வரைக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இந்தப் படத்தை புரொமோட் பண்ணி விட்டுச்சுனே சொல்லலாம்.

பொன்னியின் செல்வன் – லைகா புரொடக்‌ஷன்னாலே ஏகப்பட்ட ரூபாய் செலவு பண்ணி புரொமோஷன் பண்ணுவாங்க. அதெல்லாம் தாண்டி சோஷியல் மீடியால செமயா டிரெண்ட் ஆனது, நடிகர்கள் தங்களோட பெயரை அந்த கேரக்டரா மாத்தி ட்விட்டர்ல வைச்சதுதான். திரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி எல்லாரும் அந்த கேரக்டராவே சோஷியல் மீடியால வாழ்ந்தாங்க. அந்த படத்துல பேசுன மாதிரியே ட்வீட் போட்டு பேசிகிட்டாங்க. பார்க்கவே இன்ட்ரஸ்டிங்காவும் செம ஜாலியாவும் இருந்துச்சு.

வி1
வி1

வி1 – இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர்ல இந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. மெட்ராஸ் படத்துல நடிச்ச பாவெல் நவகீதன்தான் இந்தப் படத்தோட டைரக்டர். படம் நல்லாவே இருக்கும். இந்தப் படத்துக்கு வித்தியாசமான விளம்பரம் ஒண்ணு கொடுத்துருந்தாங்க. அது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்துச்சு. போஸ்டர் ஒண்ணு வெளியிட்டாங்க. அதுல குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வார்த்தை ஒளிஞ்சிருக்கு, கண்டுபிடிச்சு அனுப்புனா தங்க சங்கிலி அனுப்புவோம்னு சொன்னாங்க. நிறைய பேர் கண்டுபிடிச்சாங்க. அதே மாதிரி ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் சமீபத்துல வந்துச்சு. அந்தப் படத்துல வர்ற சந்தாணம் மாதிரி டிரெஸ்லாம் பண்ணிட்டு ஒருத்தர் கோயம்புத்தூர், சென்னைல இருக்குற மால், ரோடுலலாம் சுத்திட்டு இருந்தாரு. அதுவும் சோஷியல் மீடியால வைரல் ஆச்சு.

உலக அளவில் எந்த சினிமாவா இருந்தாலும் புரொமோஷன்றது ரொம்ப முக்கியமான விஷயம். அந்த படத்தோட புரொடியூஸர், டைரக்டர், நடிகர் கிரியேட்டிவிட்டிலாம் வைச்சு வித்தியாசமா முயற்சிகள் எடுப்பாங்க. அப்ப்டி சில யூனிக்கான விளம்பரங்களைதான் இங்க லிஸ்ட் போட்ருக்கேன். இதுல நான் மிஸ் பண்ண படங்களின் வித்தியாசமான புரொமோஷன்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top