ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியினர் 5,000 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்… என்ன நடந்தது?

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கு, ராகுல் காந்தியின் அக்கவுண்ட் உள்பட 5,000 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. அதில், `காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டர் இந்தியா முடக்கியிருக்கிறது. மோடிஜி நீங்கள் எவ்வளவு பயந்தவர்?. உண்மை, அஹிம்சை, நாட்டு மக்களின் துணையோடு நாட்டின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராடும். வென்ற வரலாறு கொண்ட நாங்கள் மீண்டும் வெல்லுவோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 வயது சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி சமீபத்தில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சிறுமியின் பெற்றோரோடு ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். வன்கொடுமைக்கு ஆளான குழந்தையோ அல்லது பெற்றோரின் அடையாளத்தையோ பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று போக்சோ சட்டம் சொல்கிறது. இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்தே, காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி உள்ளிட்ட 5,000 பேரில் ட்விட்டர் கணக்குகள் லாக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ட்விட்டர் விதிமுறைப்படி, லாக் செய்யப்பட்ட கணக்கில் இருந்து ட்வீட் செய்யவோ, லைக், ஷேர் என எங்கேஜ் எதுவும் செய்ய முடியாது. அதேநேரம், தங்களது ஃபாலோயர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்ப மட்டுமே முடியும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர், இதேபோன்ற ட்வீட்களை பா.ஜ.க எம்.பி அஞ்சுபாலா, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பிலும் பதிவிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

`மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அவர்கள் சொல்கிறபடி ட்விட்டர் நடப்பது இதன்மூலம் தெளிவாகிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட இதேபோன்ற ட்வீட்டை ட்விட்டர் இந்தியா நீக்கவில்லை’ என்று காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவு தலைவர் ரோஹன் குப்தா தெரிவித்திருக்கிறார்.

Also Read – சென்னை 1.87 அடி; தூத்துக்குடி 1.9 அடி கடலில் மூழ்கும் அபாயம்… என்ன காரணம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top