வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூ
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்வரை ஒரு படத்தின் அப்டேட்டுக்காக சம்பந்தப்பட்ட ரசிகர்கள் காத்திருந்தது ‘வலிமை’ படத்துக்காகத்தான். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்த ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது என்னென்ன கருத்துக்கள் தோன்றுகிறது எனப் பார்க்கலாமா?
பாசிட்டிவ் கமெண்ட்ஸ்
* ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தும் பைக்குகளும் மட்டுமே இடம்பெற்றிருப்பதன் மூலம், இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ரேஸ் மூவியாகவோ அல்லது ரோட் மூவியாகவோ இருக்குமென உறுதிசெய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக அஜித் ஒரு சீனில் பைக்கில் தோன்றினாலே அவரது ரசிகர்களுக்கு செம்ம எனர்ஜி கொடுக்கும் நிலையில், முழு படமும் பைக்கில் என்றால் கேட்கவா வேண்டும்..? எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்கிறது
* குவைண்டின் டொரண்டினோ படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு வித்தியாசமான ஆயுதமொன்று முக்கியமான காட்சியில் இடம்பெறும். அவ்வாறு ஹெச்.வினோத்தும் அஜித்துக்கு ஒரு வித்தியாசமான ஆயுதத்தைக் கொடுத்துவருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு இரும்பு ராடை கொடுத்து மிரட்டியவர், இந்தமுறை அஜித்துக்கு ஒரு இரும்பு குண்டு இணைக்கப்பட்ட சங்கிலியை கொடுத்திருக்கிறார். அதை கையில் எடுத்துக்கொண்டு அஜித் நடந்துவரும் போஸ்டர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
* விசில் சத்ததை அடிப்படையாகக் கொண்டு யுவன் அமைத்திருக்கும் பிஜிஎம் கிளாஸாகவும் அதேசமயம் மாஸ் ஏற்றவும் தவறவில்லை
* ஒரு சாரம் கட்டிய இடத்தில் ஏராளமான ரவுடிகள் அந்தரத்தில் இருந்து இறங்கிக்கொண்டிருக்க, முன்னே சிலர் ஓடி வந்துக்கொண்டிருக்க அஜித் அவர்களை எதிர்நோக்கி பேக் ஷாட்டில் கையில் ஆயுதத்துடன் நிற்கும் ஸ்டில் படத்தில் ஒரு செம்ம ஆக்சன் சீக்வன்ஸ் இருப்பதை உறுதி செய்வதுடன் ஸ்டில்லாகவே அந்த ஸ்டில் செம்ம மாஸாக இருக்கிறது.
* அஜித்தின் மாஸ் எல்லாம் ஒருபுறம் என்றாலும் அஜித்தை அழகாக காட்டும் ஸ்டில்களும் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலம் ‘வலிமை’ படத்தில் செம்ம பாலீஷான அஜித்தைப் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
நெகட்டிவ் கமெண்ட்ஸ்
* எந்தவொரு கான்செப்டும் இல்லாமல் வெறுமனே அஜித்தின் ஃபோட்டோக்கள் மட்டுமே அடுத்தடுத்து மோஷன் போஸ்டரில் வருவது பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷன் ஃபீலை தருவதுடன் அதிகாரப்பூர்வ ரிலீஸோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது
* ‘வலிமை’ என்ற எழுத்தின் ஃபாண்ட் இன்னும்கூட ஸ்டைலாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் இதற்குமுன்பு வெளியான நிறைய ஃபேன்மேட் போஸ்டர்களில் இதைவிட சிறப்பான ஃபாண்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* அஜித் என்றால் பைக்தான் ஸ்பெஷல். ஓகே.! அதற்காக எல்லா ஸ்டில்களிமே பைக், ஹெல்மெட், கூலிங்கிளாஸுடன் என்றால் எப்படி.. படத்தில் வேறு எதுவும் இல்லையா என்றும் எஞ்சின் ஆயில் விளம்பரம் போன்றும் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.
* மோஷன் போஸ்டரில் முதல் ஃபிரேமாக இடம்பெற்றிருக்கும் ஹெல்மெட் அணிந்த ஒரு உருவம், ஸ்டாக் ஃபோட்டோக்களில் இருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. என்னதான் படக்குழு ரைட்ஸ் வாங்கிப் பயன்படுத்தியிருந்தாலும் படத்துக்கு வெளியில் இருந்து ரெஃபரன்ஸ் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
* என்னதான் எல்லா ஸ்டில்களிலும் அஜித் கிளாஸாகவும் மாஸாகவும் தோன்றினாலும் அனைத்து ஸ்டில்களுமே இதற்கு முன்பு வந்த அவரது ‘விவேகம்’, ‘ஆரம்பம்’ படங்களின் தோற்றத்தையே ஞாபகப்படுத்துவதும் மைனஸாகத்தான் தெரிகிறது.
Also Read : கொஞ்சம் கவிதை… கொஞ்சம் பாடல் வரிகள்.. சில சம்பவங்கள் – நா.முத்துக்குமார் மேஷ்அப்!