thunivu varisu

ஆட்ட நாயகனா.. அயோக்கியப் பயலா.. யாரு வின்னர்?

வின்னர் யாரு? – வாரிசு Vs துணிவு

* ச்ச.. ச்ச.. இருக்காது, அந்த டயலாக் மட்டும் இருகக்கூடாதுனு நினைச்சேன். ஆனால், கரெக்டா எல்லா இடமும் நம்ம இடம்தான்னு வம்சி வைச்சுட்டாப்புல.

* ச்ச.. ச்ச.. துணிவுல அந்த டயலாக் கண்டிப்பா இருக்கணும்னு நினைச்சேன். ஆனால், கரெக்டா அந்த டயலாக் மட்டும் இல்லை. அதாங்க மணி.. மணி.. மணி.

* பேங்குள்ள வந்து பீரும் பிராண்டியுமா கேப்பாங்கனு ஒருத்தரும், காதலை கம்மு போட்டி ஒட்டிக்கலாம்னு இன்னொருத்தரும் முத்தண்ணா மாதிரி கடிக்கிறாங்க.

* அம்மா சாப்பிடலைனு ஃப்ளாஷ்பேக் வைச்சு, அஜித் கொள்ளையடிக்க போவாருனு பார்த்தா, குடும்பம்னா குறை இருக்கும்தான்னு விஜய் வந்து நிக்கிறாரு.

* கிரிமினல்ஸ் நம்மக்கிட்ட அடிவாங்கி.. கனி சார், கனி சார்னு சொல்லி திரும்பல, அதுக்குள்ள அடி மேல, அடி மேல, அடி மேலனு செல்லம் வந்து நிக்குது.

* ஹலோ வம்சி, Don’t Act Like A Hero-னு அவரு சொல்லிருக்கு. ட்ரெய்லர ரீ கட் பண்ணி நான் தான் ஆட்ட நாயகன்னு நம்ம நம்பர் 1 சார பேசிட்டு போக சொல்லு!

* பீஸ்ட்ட காப்பி பண்ணிருக்காரு, நம்ம நண்பர்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால், நம்ம வம்சி வாரிசுல அலாவைகுண்டபுரத்தை படமெடுத்துருக்காப்புல.  

* மாப்ள செட்டை கலைக்காதனு வினோத், நெல்சன்ட்ட சொன்ன மாதிரி.. வம்சி, மாப்ள அவங்க பீஸ்ட் எடுக்குறாங்களாம்.  KGF எடுக்கப்போறோம். செட்டை கலைக்காதனு, நீல்கிட்ட சொல்லிருக்காரு.

* ஜிப்ரான் அங்க இருந்து காப்பி பண்ணிருக்காரு, அனிருத் இங்க இருந்து காப்பி பண்ணிருக்காரு. ஆனால், தமன் தலைவால இருந்து சுட்ருக்காப்புல!

* துணிவுல புல்லரிக்க வைச்ச டயலாக்னா, அயோக்கிய பய மேல கைய வைக்கிறதுதான். வாரிசுல அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கணும்ன்றது, செம.

சரி, என்னடா சொல்ல வர்ற ஒண்ணும் புரியலைடானு சொல்றீங்களா!

Thunivu - Varisu
Thunivu – Varisu

ஆரம்பத்துல இருந்தே வாரிசு படம் மேல விஜய் ரசிகர்களுக்கும், துணிவு படம் மேல அஜித் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புலாம் இல்லை. அதுவொரு பைரவா, இதுவொரு வலிமைன்ற ரேஞ்ச்லதான் ரெண்டு படத்தையும் டீல் பண்ணிட்டு இருக்காங்க. இருந்தாலும், நம்ம தலைவனை விட்டுக்கொடுக்கக்கூடாதுனு குரவளை வலிக்க கத்திட்டு, அடிச்சுட்டு, உருண்டு, பிரண்டுட்டு இருக்காங்க. அஜித் ரசிகர்கள் சுதா கொங்கராகூட படம் பண்ணுங்க, விஷ்ணு வர்தன்கூட படம் பண்ணுங்க தலனு ஒருபக்கம் தலைல அடிச்சு பொலம்புனா, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் லோகேஷ் படத்தோட அப்டேட் கொடுங்கடானு தலைவன் மன்சூர் அலிகான் துண்டு போட்டு பேசுன மாதிரி டயர்டாகி கத்திட்டு இருக்காங்க. இப்படி இருக்கும்போது ரெண்டு படமும் ஒண்ணா வருதுனு சொன்னாங்க. படம் முக்கியமில்லை, யாரு மாஸ்னு அடிச்சுக் காட்டு, காட்டுனு காட்டுவோம்னு பின்னாடி சட்டை கிழிஞ்சாலும், முன்னாடி, அடிச்ச அடில தெறிச்சுட்டானுங்கள்ல மாப்ளனு ட்ரெயின் மோதுன ஃபீல்ல ஓடிக்கிட்டு இருக்காங்க. ஒருவழியா ரெண்டு படத்தோட ட்ரெய்லரும் வெளியாகி, ரசிகர்கள் பயங்கரமா செலிபிரேட் பண்ணிட்டு இருக்காங்க.

வினோத் சேட்டா, கே.ஜி.எஃப் ராக்கி பாய், மோகன சுந்தரம், தங்கதுரை, பாவ்னி இவங்களையெல்லாம் வைச்சுட்டு என்னங்க பேங்க் கொள்ளை படம் எடுக்குறீங்கனு அவரை கொஞ்சம் நாள் போட்டு பொளந்தாங்க. இப்படித்தான், வித்தியாசமான காஸ்ட்லாம் போட்டு எடுக்குறேன்னு நெல்சன் அண்ணனுக்கு சம்பவம் பண்ணான். இப்போ, உன்னோட டேர்ன் பண்ணு, பண்ணு. நாங்க தலை மறைவாவே வாழ்றோம்னு வாழ்க்கை வெறுத்து பேசிட்டு இருந்தாங்க. அதுலயும் அப்டேட் கொடுக்குறேன்னு ப்ரேம் அஸ் ப்ரேம்னு போஸ்டர் வெளியிட்டப்ப, ஏன்டா இது எனக்கு தெரியாதா, இதுதான் அப்டேட்டானு, அப்டேட்டுக்கு வைச்சு செய்ய ஆரம்பிச்சாங்க. ஆனால், எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரியும், அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்குற விதமாகவும் ட்ரெய்லர் அமைஞ்சுதுனே சொல்லலாம். வெக்கமா இல்லையானு கேக்கும்போது, முகமூடியைக் கழட்டி, இஞ்சார்ரானு சொல்லாதப்பவே, படம் நல்லாருக்கும்னு சின்ன நம்பிக்கை எல்லார் மனசுலயும் வந்துச்சு. ஹீரோ வேலையை நான் பார்த்துக்குறேன்னு டயலாக் பேசுறது, கூலா உள்ள டான்ஸ் ஆடுறது, சேர்ல சாஞ்சு உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்றது, நக்கலா சிரிக்கிறதுனு அஜித் ஒருபக்கம் ஸ்வாக் பண்ண, மஞ்சு வாரியர் இன்னொரு பக்கம் கன் எடுத்து ஆளை சுட, இன்னொரு பக்கம் ஹெலிகாப்டரை சுடனு தெறிக்க விட்டாங்க. என்ன வினோத் ஆட்டத்துல வின்னர் ஆயிடுவாரு போலயேனு நினைக்க வைச்சுட்டாரு. அப்படியே கட் பண்ணா வாரிசு ட்ரெய்லர்.

Thunivu - Varisu
Thunivu – Varisu

வாரிசு மேலலாம் சுத்தமா விஜய் ஃபேன்ஸ்க்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா, தலைவன் வம்சி அதுக்குலாம் முன்னாடி பண்ண சம்பவங்கள் அப்படி. ஒண்ணுகூட உருப்படியா இருக்காது. இருந்தாலும் விஜய் மேல அவர் ரசிகர்களுக்கு சின்ன நம்பிக்கை. பீஸ்ட்ல விட்ட மாதிரி விட மாட்டாருனு. ஆனால், ட்ரெய்லர் நம்பிக்கையை பெருசா காப்பாத்தலைனுதான் சொல்லனும். டான்ஸ் வேணுமா, டான்ஸ் இருக்கீ, பாட்டு வேணுமா, பாட்டு இருக்கீ, பாடி லாங்குவேஜ் வேணுமா, அது இருக்கீனு தில் ராஜூ தில்லா கூவுன மாதிரி, எல்லாமே இருக்கு. ஆனால், பழசா இருக்கு. போரா இருக்கு. யாராவது ட்ரெய்லர் பார்த்து போர் அடிக்குதுனு சொல்லுவாங்களா, நான் சொல்லுவேன்னு ஆல்ரெடி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. டிபிக்கல் மகேஷ் பாபு படம். சீட்டுல ஹீட்டுனு ஒரு பக்கம் பிரகாஷ் ராஜ், இன்னொரு பக்கம் வேடனுக்கு கண்ணுல மண்ணுனு சரத்குமார், அப்புறம் விஜய் அரசியல் டயலாக் வைக்கணுமேனு பவர் சீட்ல இல்லை, அதுல வந்து உட்கார்ரவன்ட்ட இருக்கும்னு வைச்சு ரிப்பீட் வேல்யூ இல்லாமல் பண்றாங்களோனு தோணிச்சு. இதுக்கிடைல அம்மா செண்டிமெண்ட் வேற. என்ன பண்ணி வைச்சிருக்கீங்களோ, பொங்கலுக்கு விட்றாதீங்கடானு விஜய் ஃபேன்ஸ் கொஞ்சம் பின்வாங்கி பயந்துதான் இருக்காங்க. தமிழ், தெலுங்குனு ஒரு சீரியலையும் விடாமல் வைச்சு மென்ஷன் பண்ணி ஓட்டிட்டு இருக்காங்க. வினோத், அஜித் ஃபேன்ஸ் நம்பிக்கையை காப்பாத்துன மாதிரி, வம்சியும் அஜித் ஃபேன்ஸ் நம்பிக்கையைதான் காப்பாத்திருக்காரு.

ஆட்டநாயகன் நான்னு ஒருத்தரும், அயோக்கிய பய நான்னு இன்னொருத்தரும் சொன்னாலும், உண்மையில வின்னர் யாரு, அவங்களுக்குள்ள ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்குறது எப்பவுமே கதைதான். வெறும் ட்ரெய்லர வைச்சு நம்பி பல படங்கள்ல ஏமாந்துட்டோம். பீஸ்ட் டிரெய்லர் வந்தப்போலாம் அப்படி கொண்டாடுனாங்க. ஆனால், படம்? அதேதான் வலிமைக்கும். அதுனால, துணிவு, வாரிசு ரெண்டு படத்தையுமே படம் வந்தபிறகு பார்த்து யாரு ஜெயிச்சானு நீங்களே சொல்லுங்க. ஆனால், இப்போதைக்கு ட்ரெய்லர்ல ஜெயிச்சது துணிவுதான்.

நீ சொல்றதையெல்லாம் நாங்க ஏத்துக்கமாட்டோம்னு நீங்க நினைச்சா, வின்னர் யாரு… எந்த டிரெய்லர் உங்களுக்கு புடிச்சு இருந்தது, ஏன் புடிச்சு இருந்ததுனு கமெண்ட்ல மறக்காமல் சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top