ரோலெக்ஸ்

படம் முடிஞ்சுது.. ஆனால், முடியல- மாஸ் போஸ்ட் கிளைமாக்ஸ் சீன்ஸ்!

கிளைமாக்ஸ்னு சொன்னாலே படம் முடியுறதுதான நியாபகம் வரும். ஆனால், கிளைமாக்ஸ் முடிஞ்சும் படம் முடியலைனு சொன்னா.. இன்ட்ரஸ்டிங்கா இருக்குல. அப்படி மாஸான பல சீன்கள் இருக்கு.

விக்ரம் – ரோலக்ஸ் எண்ட்ரி

விக்ரம் - போஸ்ட் கிளைமாக்ஸ்

இண்டஸ்ட்ரி ஹிட்டு கொடுத்து விக்ரம் இன்னைக்கு வரைக்கும் உக்ரமா இருக்கு. படம் முழுசா முடிஞ்சதும், என்னடா சூர்யாலாம் இருக்காங்கனு சொன்னீங்க.. கடைசி வரைக்கும் வரவே இல்லைனு ஆச்சரியமா நிறைய பேர் தியேட்டர்ல உட்கார்ந்து இருக்கும்போது லோகி யூனிவர்ஸ் பி.ஜி.எம்மோட பல கறுப்பு கலர் கார்கள் லோகேஷ் கலர் பேட்டர்ன்ல, அவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல எண்ட்ரி ஆகும். சூர்யா வந்துட்டாருடானு பலரும் எக்ஸைட்மெண்ட் ஆக.. என்ன பண்ணப்போறாருனு இப்போ எதிர்பார்ப்பு. காதுல கடுக்கன், கழுத்துல தேள் டாட்டூ, கண்ணாடினு பயங்கர பில்டப்போட உடம்பு முழுக்க ரத்தத்தோட எண்ட்ரி ஆவாரு பாருங்க. மொவனே சூர்யாக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் இண்ட்ரோனு தோண வைச்சிட்டாரு. இந்த லிஸ்ட்ல ஃபஸ்ட் ராங்க் கொடுக்கணும்னா விக்ரமோட ரோலக்ஸ் போஸ்ட் கிளைமாக்ஸுக்குதான்.

ஜிகர்தண்டா – அசால்ட் கார்த்தி

ஜிகர்தண்டா - போஸ்ட் கிளைமாக்ஸ்

முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் நம்மள பதட்டத்துலயே வைச்சிட்டு இருந்த படங்கள்ல மதுரை மண் வாசனை வீசிய ஜிகர்தண்டாவும் ஒண்ணு. இன்டர்வெல் சீன்ஸ்லயெல்லாம் பார்த்துட்டு இருக்குற நமக்கே அல்லு இல்லை. கார்த்திக் நிலமையெல்லாம் யோசிச்சுப் பார்த்து, அசால்ட் சேது பண்ணப் போறதை நினைச்சு பார்த்தாலே கொலை கொடூரமா இருக்கும். ஆனால், புடிச்சு வைச்சு ஜிப்ரிஷ்ல பேசிட்டு விட்ருவாப்புல. கட் பண்ணா தலைவன், வெற்றிமாறன் படத்துல நடிச்சிட்டு இருப்பாப்புல. மணி ரத்னம் நம்பர் கேப்பாப்புல. அந்த படத்தோட மொத்த வெயிட்டையும் போஸ்ட் கிளைமாக்ஸ்-ல அழகா மாத்தி சீரியஸான சேதுவை சாதுவாவும், பயந்து நடிங்கிட்டு இருந்த கார்த்தியை அசால்ட் கார்த்தியாவும் மாத்தி பங்கம் பண்ணியிருப்பாங்க.

பரியேறும் பெருமாள் – டீ ஷார்ட்

பரியேறும் பெருமாள் போஸ்ட் கிளைமாக்ஸ்

மாரி செல்வராஜ் டீ கிளாஸ் வைச்சு என்ன குறியீடு சொல்ல வந்துருக்காருனு பாரதி ராஜால தொடங்கி சாதாரண ராசாக்கள் வரை பலரும் இன்னைக்கும் ஸ்பீச் கொடுக்குறாங்க. ரைட்டப்கள் எழுதுறாங்க. பரியனை கொல்ல முடியாமல் போய், அந்த தாத்தா செத்து போய்டுவாரு. படம் அதோட முடியும்னு பார்த்தா, ஏய் இந்தாம்மா ஏய்னு நம்ம ஆதிகுணசேகரன் சண்டை போட்டவங்களைக் கூப்பிட்டு கைகொடுத்து சமாதானம் பண்ணி வைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சிலயும் எனக்கு ஜோவைப் பத்தி பேசுறதுதான் செமயான விஷயமா இருக்கும். என்னைவிட உங்க பொண்ணுக்கு உங்களைதான் ரொம்ப புடிக்கும், எனக்கு கிடைச்ச மாதிரி அப்பா, வேற யாருக்கும் கிடைக்க மாட்டாங்கனு சொல்லிட்டே இருப்பாங்கனு சொல்லும் போது அவங்கப்பா பண்ண தப்புகளைவிட பரியன் அவங்க ரிலேஷன்ஷிப்பை எவ்வளவு அழகா புரிஞ்சு வைச்சுருப்பான்னுதான் தோணும். அதுவும் அந்த டீ கிளாஸ் ஷாட்லாம் எதார்த்தமா மாரி செல்வராஜ் வைச்சிருந்தாலும், அது கிளப்புன விஷயம் ரொம்ப ஆரோக்கியமாதான் இருந்துச்சு.

போர் தொழில்

போர்த் தொழில் போஸ்ட் கிளைமாக்ஸ்

த்ரில்லர் படம் எப்படி இருக்கணும்ன்றதுக்கு இன்னைக்கு கண்ணு முன்னால இருக்குற சாட்சியா போர் தொழிலை பார்க்கலாம். போர்தொழிலர் படம் வேர்ட் ஆஃப் மவுத் மூலமாகவே அவ்வளவு ரெஸ்பான்ஸை அடைஞ்சுது. படத்துல வில்லனையெல்லாம் போட்டுத்தள்ளிட்டு இருக்கும்போது டாக்டர்ஸ், இவருக்குலாம் மருத்துவம் பார்க்குறதுக்கு 4 எருமை மாடை மேய்ச்சிட்டு போகலாம்னு சொல்லிட்டு வருவாங்க. எதிர் வீட்டுல ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருப்பாங்க. பையன் வெளிய இருப்பான். கார்த்திக் நேத்தாவோட வரிகள்ல அந்த டைம்ல வர்ற பாட்டுல செமயா இருக்கும். பையனை அம்மா வந்து கட்டிப் புடிச்சு அழும்போது, சரத்குமார் லைட்டா கண் கலங்குவாரு. அப்போ, அசோக்கிட்ட என்ன சொன்னனு கேப்பாங்க. உங்க வேலையை ஒழுங்கா பார்த்தா, எங்க வேலை கொஞ்சம் குறையும்னு சொன்னேன்னு சொல்லுவாங்க. அதுவரைக்கும் கனமாவே போய்ட்ருந்த படம் கொஞ்சம் ஃபீல்குட்டா போஸ்ட் கிளைமாக்ஸ் சீன்ல மாறும்.

Also Read – வெங்கட் பிரபு – தளபதி காம்போ.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

அருவி படத்தோட போஸ்டர்தான் அது. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டு எங்க இருக்காங்கனே தெரியாமல் இருப்பாங்க, ஹீரோயின். அப்போ, சோஷியல் மீடியால வீடியோ ஒண்ணு வைரல் ஆகும். எனக்கு குடும்பம், குழந்தைங்கனு வாழணும்னு ஆசையா ரொம்ப இருக்குனு பேசியிருப்பாங்க. அதோட படம் முடிஞ்சுதுனு நினைப்போம். ஆனால், அங்கதான் ட்விஸ்ட்டு, டி.வி சேனல்ல வேலை பார்த்த பையன் எல்லாரையும் கூட்டிட்டு அந்தப் பொண்ணு இருந்த வீட்டுக்கே போவாங்க. செமயான மொமண்டா இருக்கும். ஃபீல் குட்டான படமா தொடங்கி, ரொம்ப மனசை பாதிக்க வைச்சு, கிளைமாக்ஸ்ல அழ வைச்சு, திரும்பவும் ஃபீல்குட்டா ஃபீல் பண்ண வைச்ச சீன்னா அது அருவி படத்தோட போஸ்ட் கிளைமாக்ஸ்-தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top