5 மாஸ் மொமென்ட்ஸ் ஆஃப் விக்ரம்!

மகான் படத்தில் தன் மகனோடு சேர்ந்து சம்பவம் செய்ததற்குப் பிறகு, இப்போ கோப்ரா மூலம் தனது அடுத்த சம்பவத்திற்கு ரெடியாகிட்டார் சீயான் விக்ரம். விக்ரமின் முதல் ஹிட் படமான சேதுவுக்கு முன்பே, கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் சின்னதும் பெருசுமான பல கேரக்டரில் நடித்துவிட்டார் விக்ரம். ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் விக்ரமிற்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தப் பயணத்தில் விக்ரமின் கரியரில் நடந்த 5 மாஸ் மொமென்ட்ஸைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

டப்பிங் ஆர்டிஸ்ட்:

1990 ல் விக்ரம் நடிக்க வந்ததற்குப் பிறகு கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்ததோடு, சினிமாவில் தனக்கு என்னென்ன வேலைகள் கிடைக்கிறதோ அதையும் தொடர்ந்து செய்தார். அப்படி அவர் செய்த ஒரு முக்கியமான வேலைதான் டப்பிங் ஆர்டிஸ்ட். 1993 ல் அஜித் அறிமுகமான அமராவதி படத்தில்தான் முதன் முதலாக அஜித்திற்கு டப்பிங் பேசினார் விக்ரம். அதன் பிறகு புதியமுகம் படத்தில் வினித்திற்கு, காதலன் படத்தில் பிரபு தேவாவுக்கு, காதல் தேசம் படத்தில் அப்பாஸூக்கு என தொடர்ந்து 7 ஆண்டுகள் பிற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்தார். சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து விக்ரமிற்கு படங்கள் வந்தப்பிறகுதான் அவரால் டப்பிங் கொடுக்க முடியவில்லை.

வெரைட்டி ஆக்டர்:

சேது படம் மூலம் விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் பண்ணக்கூடிய ஆள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அந்தப் படத்தில் இருந்து இப்போது வரை கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதையும், வித்தியாசமான நடிப்பை கொடுப்பதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார். சேதுவிற்கு பிறகு காசி, பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வ திருமகள், ஐ, இருமுகன், கோப்ரா என தனது வெரைட்டி நடிப்பை விடாமல் கொடுத்து வருகிறார்.

கூல் ஆக்டர்:

நடிப்புக்கு முக்கியத்துவமாக படங்களில் நடித்தாலும் கமர்ஷியல் ஏரியாவையும் விட்டுவிடாமல் அதிலும் சிக்ஸர் அடிப்பவர்தான் சீயான். ஒரு படம் உடலை வருத்தி நடித்தப்பின்னர், கூலாக ரிலாக்ஸாக ஒரு கமர்ஷியல் படம் நடிப்பதுதான் விக்ரமின் ஃபார்மிலா. அந்தப் படங்களும் மாஸான வெற்றியை விக்ரமிற்கு கொடுத்திருக்கிறது. தில், ஜெமினி, தூள், சாமி, அருள், பீமா, ஸ்கெட்ச், மகான் என விக்ரம் நடித்த இந்த கமர்ஷியல் படங்களிலும் நடிப்பிற்கென சில மெனக்கெடல்களும் இருக்கும்.

சிங்கர்:

ஜெமினி படத்தில் ஓ போடு பாட்டோட விக்ரம் வெர்ஷனை எத்தனைப் பேரு கேட்டிருப்பீங்கனு தெரியலை. ஏன்னா அந்தப் பாட்டு எஸ்.பி.பி வெர்ஷன், அனுராதா வெர்ஷன், எஸ்.பி.பி – அனுராதா வெர்ஷன், விக்ரம் வெர்ஷன், விக்ரம் – அனுராதா வெர்ஷன்னு பல வெர்ஷன்ஸ் இருக்கு. ஜெமினி படம் முடிஞ்சதுக்கு அப்பறம் எண்ட் கிரிடிட்ஸ் போடும் போது ஓ போடு பாட்டுக்கு விக்ரமும், கிரணும் ஆடுவாங்க. அந்த வெர்ஷனைத்தான் அவர் பாடியிருப்பார். இது மட்டுமில்லாமல் கந்தசாமி படத்தோட எல்லா பாட்டையும் பாடியிருப்பார். தெய்வதிருமகள், ராஜபாட்டை, டேவிட், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர்னு தொடர்ந்து பாடல்கள் பாடிட்டு இருக்கார்.

ரியல் மாஸ்:

விக்ரம் நடிக்க வந்ததில் இருந்து ரசிகர்களுக்காக ஏங்கியவர்னு சொல்லலாம். ஏன்னா, ஆரம்பகாலத்தில் அவருக்கென ஆடியன்ஸ் இல்லாததுதான் அவர் ஒரு பெரிய ஹீரோவா மாறுவது தாமதமாச்சு. அப்படி கொஞ்ச, கொஞ்சமா சேர்ந்து இப்போ ஒர் கூட்டமா இருக்கிற ரசிகர்கள்தான் விக்ரமுக்கு ரொம்ப முக்கியமானவங்கனு சொல்லலாம். இதை உணர்த்துகிற மாதிரி ஒரு மாஸ் சம்பவமும் நடந்துச்சு. சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த ஏசியா நெட் விருது நிகழ்ச்சியில் விக்ரமின் ரசிகர் ஒருத்தர் பாதுகாப்பாளர்களை தாண்டி அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கே போய் அவரை கட்டிப்பிடிச்சிருவார். உடனே சிலர் வந்து அந்த பையனை இழுத்து கீழே தள்ளிடுவாங்க. உடனே டென்ஷன் ஆன விக்ரம் எல்லாரையும் ஸ்டாப் பண்ணிட்டு அந்தப் பையனை அழைச்சு கட்டிப்பிடிச்சு போட்டோ எடுத்துப்பார். இந்த சம்பவத்தை இப்போ பார்த்தாலும் செம மாஸா இருக்கும்.

விக்ரமிடன் உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? அவர் நடிச்சதுக்கு உங்களோட ஃபேவரைட் படம் என்னனு கமெண்ட் பண்ணுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top