தஞ்சை பெரியகோயில்

தஞ்சை பெரிய கோயில் ராசி இப்படியா?!

தமிழ் நாட்டோட அடையாளமா இருக்குற தஞ்சை பெரிய கோயில் அரசியல்வாதிகளுக்கு ஆகவே ஆகாதாம். கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, ஆ.ராசா, ஹெச். ராஜானு பலபேரை காவு வாங்கிருக்கு இந்த சுவருனு சொல்லப்படுது. அரசியல்வாதிகளை விடுங்க கமிட்டானவங்க லவ்வர்ஸா இந்த கோயிலுக்கு போனாலே லவ் புட்டுக்கும்னு உள்ளூர்ல ஒரு வதந்தி சுத்துது. சினிமாவுக்கும் பெரிய கோயிலுக்கும்கூட ஏழாம் பொருத்தம்னு சமீபத்துல மணிரத்னத்துக்கு நடந்த ஒரு சம்பவம்கூட உதாரணமா சொல்றாங்க. நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்னு பார்த்திபன்கூட புலம்பனாரு.  ஒவ்வொரு கதையும் கேட்டாலே ‘ஆயிரத்தில் ஒருவன்’ பி.ஜி.எம்ல சிலிர்த்து போற பிரமாண்டத்தோட இருக்குற கோயிலுக்கு இப்படி ஒரு ராசியானு திகைக்க வைக்குது. நடந்தது என்ன? வாங்க பார்க்கலாம்.

தஞ்சை பெரியகோயில்

1000 வருசத்துக்கு முன்னாடி ராஜராஜ சோழன் கட்டின தஞ்சை பெருவுடையார் கோயில் உண்மைலயே தமிழ்நாட்டோட பெருமிதங்கள்ல ஒண்ணு. எந்தக் கட்சி அரசியலுக்கு வந்தாலும் பெரிய கோயிலுக்கு எதாவது பண்ணுவாங்க. கலைஞர் இருந்தப்போ சதய விழா நடத்தினார். எடப்பாடி ஆட்சில கும்பாபிஷேகம் நடந்தது. இப்போ ஸ்டாலினும் ராஜராஜன் மணிமண்டபம் உள்ளிட்ட சில திட்டங்களை அறிவிச்சிருக்காரு. ஆனாலும் அரசியல்வாதிகள் யாரும் இந்தக் கோவிலுக்கு போக மாட்டாங்க. அரசியல்வாதிகளுக்கும் இந்த கோவிலுக்கும் ராசியில்லைனு ஒரு கருத்து இருக்கு. எப்படி இந்த கருத்து வந்ததுனு எடுத்துப் பார்த்தா ராஜராஜன் காலத்துல இருந்தே ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்குது. இந்தக் கோயில் கட்டி நாலே வருசத்துல ராஜராஜ சோழன் இறந்துட்டாராம். எப்பேர்பட்ட துயரம்.

அடுத்த ஃப்ளாஷ்பேக் 1976 ல நடக்குது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில இருந்தப்போ தஞ்சை பெரிய கோயிலுக்கு உள்ள ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்கணும்னு நினைக்குறாரு. ஆனா அந்தக் கோயில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டுல இருந்ததால அதுக்கான அனுமதியை மறுத்திடுறாங்க அப்போ இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு. அதே நேரத்துல அந்த கோயிலுக்கு உள்ள வராஹி அம்மனுக்கு மணிமண்டபம் கட்டுனாங்க. சிலை வைக்க அனுமதிக்க மாட்டீங்க. நீங்க மட்டும் மணிமண்டபம் கட்டலாமா? அப்படினு முறையிட்டார் கலைஞர். உடனே அந்த மணிபண்டத்தை இடிக்க உத்தரவிட்டாங்க இந்திரா காந்தி. இது நடந்த கொஞ்ச நாள்லயே எமெர்ஜென்சியால கலைஞர் ஆட்சி பறிபோகுது. அதுவும் குறிப்பா 1976 ஜனவரி 31 ஆம் தேதி அந்த மண்டபத்தை இடிக்குற அன்னைக்குதான் கருணாநிதி ஆட்சியும் போனதாம். அடுத்த சில நாட்கள்ல இந்திரா காந்தியும் தேர்தல்ல தோத்துடுறாங்க.

சில வருடங்கள் கழிச்சு ராஜ ராஜ சோழனோட ஆயிரமாவது முடிசூட்டு விழா தஞ்சை பெரிய கோயில்ல நடந்தது. அப்போ முதல்வரா இருந்த எம்.ஜி.ஆர், பிரதமரா இருந்த இந்திரா காந்தி ரெண்டு பேருமே அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டாங்க. அந்த நிகழ்ச்சில இருக்கும்போதே எம்.ஜி.ஆர் மயங்கி விழுந்தார். சில நாட்கள்லயே அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அது மட்டுமில்லாம இந்திரா காந்தியும் சுடப்பட்டு இறந்து போனாங்க.

தஞ்சை பெரியகோயில்

1997 தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தப்போ தீவிபத்தாகி 40-க்கும் மேற்பட்டவங்க இறந்துபோனாங்க. இப்படி அப்பப்போ எதாவது சம்பவங்கள் நடந்துகிட்டே இருக்கும். இந்த நிகழ்வுகளுக்கு பிறகுதான் அரசியல்வாதிகள் மத்தியில இந்த பயம் அதிகமானது. அதனால பெரும்பாலும் அந்தக் கோவிலுக்குப் போறதை தவிர்த்துடுவாங்க. அப்படி வேற வழியே இல்ல போயிதான் ஆகணும்ங்குற சூழ்நிலை வர்றப்போ ஒரு டெக்னிக் வச்சிருக்காங்க. அதைத்தான் 2010-ல கலைஞர் பண்ணாரு.

2010 செப்டம்பர்ல தஞ்சை பெரிய கோயிலோட ஆயிரமாவது ஆண்டுவிழா அரசு நடத்துனாங்க. கோயிலுக்குள்ள நடந்த ஒரு நடன நிகழ்ச்சியை கலைஞர் பட்டுவேட்டி பட்டு சட்டைல போட்டு கலந்துகிட்டு பார்த்தாரு. ஆனா அவர் கோயிலுக்குள்ள பிரதான வாசல் வழியா வராம சைடுல இருந்த சிவகங்கைப் பூங்கா வழியா வந்து If you are bad. I’m your dad னு பேட் லக்குக்கே டஃப் கொடுத்தாரு. ஆனாலும் பாருங்க அந்த சுவரு சும்மா விடல. அந்த நிகழ்வுல கலந்துகிட்ட ஆ.ராசா, கனிமொழி ரெண்டு பேருமே அடுத்த சில நாட்கள்ல 2ஜி கேஸ்ல அரெஸ்ட் ஆனாங்க. அடுத்து வந்த தேர்தல்ல கலைஞர் கருணாநிதி ஆட்சியை இழந்தாரு. அதுக்கப்பறம் அவர் முதல்வர் ஆகவே இல்ல.

2020-ல எடப்பாடி ஆட்சில பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  ஆனா அரசுத் தரப்புல இருந்து ஒரு அமைச்சர் தவிர வேற யாருமே கலந்துக்கல. எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர்செல்வமோ அந்த பக்கமே வரல. ஆனா அந்த நிகழ்ச்சியில ஹெச். ராஜா கலந்துகிட்டாரு. சோகம் என்னன்னா அவரும் இனிமே தேர்தல்ல நிக்கப்போறதில்லனு இப்போ சமீபத்துல அறிக்கை விட்டாரு. அதே மாதிரி 100 வருடங்களுக்கு பிறகு தேரோட்டமும் எடப்பாடி ஆட்சிலதான் நடந்தது. அதனாலதான் எடப்பாடி பதவி போயிடுச்சுனும் உச்சுக்கொட்டுறாங்க சில பேர்.

தஞ்சை பெரியகோயில்

அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்ல காதலர்களுக்கும் இந்த கோயில் ராசியில்லையாம். லவ்வர்ஸா இந்தக் கோயிலுக்கு போனாலே புட்டுக்கும்டானு தஞ்சாவூர் சைடு வதந்திகள் அதிகம் சுத்துது. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுன ராஜ ராஜ சோழனோட கதைதானே பொன்னியின் செல்வன். அதனால பொன்னியின் செல்வன் படத்தோட ஆடியோ லாஞ்சை அந்தக் கோயில்ல வச்சி பண்ணலாமானு யோசிச்சாராம் மணி ரத்னம். அய்யா அது ரத்தக்காவு வாங்குற ஏரியா அங்கிட்டு போயிடாதீங்கனு அட்வைஸ் வந்ததாலதான் நேரு ஸ்டேடியத்துல வச்சாருன்னும் வலைதளங்கள்ல பேசிக்கிட்டாங்க. அதையும் மீறி நான் தலைகீழாதான் குதிப்பேன்னு தஞ்சாவூர்ல படம் பார்க்க போனாரு பார்த்திபன். படத்தை பார்க்கவிடாம பாதிலேயே திருப்பி அனுப்பி அவரு இன்னைக்கு வரைக்கும் பார்க்காம இருக்காரு.

Also Read – தமிழ் சினிமாவின் மரண மாஸ் இயக்குநர்.. சுசீந்திரன் சம்பவங்கள்!

அப்பறம் ஒரு முக்கியமான மேட்டரு… இப்போ நான் சொன்ன எல்லாமே சமூகத்தில் நிலவுற பொதுவான கருத்துகள்தான். நாங்க எந்த விதத்துலயும் இதை ஆதரிக்கல. கோயிலோட பெருமையையோ, புனிதத்தையோ சிறுமைப்படுத்தவும் இல்ல. ஜஸ்ட் காத்து வாக்குல இப்படியெல்லாம் வதந்திகள் சுத்துதுனு உங்களுக்கு தெரியப்படுத்துறோம் அவ்ளோதான். நமக்கு எதாச்சும் நெகட்டிவா நடந்தா உடனே நம்ம வீட்டுல அன்னைக்கு கோயிலுக்கு கூப்டேன் நீ வரலைனு சொன்னேல அதான் இப்படி நடக்குதுனு சம்பந்தமே இல்லாம கோத்துவிடுவாங்கள்ல அந்த மாதிரிதான் இதுவும். மத்தபடி எதுவும் இல்ல மக்களே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top