விடுதலை படத்துல வர்ற இன்ஸ்பெக்டர் ராகவேந்தரைப் பார்த்தாலே கடுப்புதான் வரும். யார்ரா இவன்.. மன்னிப்பு கேட்குறதுக்காக இவ்வளவு டார்ச்சர் பண்றான்னு தோணும், அதேநேரத்துல கிளைமாக்ஸ்ல மலை கிராமத்துல உள்ள எல்லா பெண்களையும் கூட்டிட்டு வந்து கேஷுவலா சேர்ல உட்கார்ந்து துணிகளை கழட்டி டார்ச்சர் பண்ணும் போது சைக்கோவா இருப்பான் போலயேனு தோணும். படம் ரிலீஸ் ஆனப்புறம், சுகா இவருக்கு ஃபோன் பண்ணி திருநெல்வேலில என்னென்ன கெட்டவார்த்தை இருக்கோ, எல்லா வார்த்தைலயும் அபிஷேகம் நடக்குது.. நடிகனா அதுதான் வெற்றினு சொல்லியிருக்காரு. இவ்வளவு சொல்லும்போதே அந்த ராகவேந்தர் முகம்தான் உங்க கண்ணுக்கு முன்னாடி வந்து நிக்கும். சேத்தன் வெற்றி பெறும் இடம் அதுதான். இத்தனை வருஷமா சினிமால இருக்காரு. ஆனால், பெயர் சொல்லும்படி இப்போதான் கேரக்டர் அமையுது. அவரோட டிராவல் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
ஆக்சுவலா சேத்தன் சென்னைக்கு வந்ததே ஆக்ஸிடண்ட்தான். கர்நாடகாலதான் பிறந்து, வளர்ந்து, படிப்பு எல்லாமே முடிச்சிருக்காரு. சின்ன வயசுல இருந்தே நடிகனாகனும்னு பயங்கரமான ஆசை. படிக்கும்போதே ஸ்கூல்ல நடிக்கிறது, கதைகள் எழுதுறதுனு கிரியேட்டிவ் சைட்தான் பயங்கரமா வேலை பார்த்துருக்காரு. படிச்சு முடிச்சுட்டு வாய்ப்புகள் தேடிட்டு இருக்கும்போது தூர்தர்ஷன் டிராமல நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. அப்போலாம், நடிகர், அஸிஸ்டெண்ட் டைரக்டர்னுலாம் இல்லை. எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கணும்னு சொல்லுவாங்க. அப்படிதான் ஒருநாள் செட்டுக்கு கிளாப் போர்டு அடிக்கிற பையன் வரலையாம். நான் அதை பண்ணட்டுமானு இவரே கேட்ருக்காரு. ரைட்டு பண்ணுனு சொன்னதும், இவரோட அஸிஸ்டெண்ட் டைரக்டர் வாழ்க்கை ஸ்டார்ட் ஆகியிருக்கு. ரொம்பவே இன்டரஸ்டிங்கா அதுவும் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. நிறைய கதைகள் எழுதி டைரக்டர் ஆகணும்ன்றதும் அவரோட கனவா இருந்துருக்கு. இப்பவும் அவருக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. கன்னடால மிகப்பெரிய டைரக்டரா இருந்த துவாரகேஷ்கிட்ட வொர்க் பண்ணியிருக்காரு. நடிகனாகவும் சில படங்கள்ல நடிச்சிருக்காரு.
Also Read – ரக்ஷன்… குக் வித் கோமாளியின் டார்லிங் ஆனது எப்படி?
துவாரகேஷ் சாரோட பையன் இவரைக் கூப்பிட்டு ராமாயணம் சீரியலை கன்னடம், தமிழ்ல எடுக்குறாங்க. நீ அஸிஸ்டெண்ட் டைரக்டரா வறியானு கேட்ருக்காரு. இப்போதான் கன்னடா இன்டஸ்ட்ரீல ஓரளவுக்கு தெரிய ஆரம்பிக்கிறோம். இப்போ, ரிஸ்க் எடுக்கலாமானு யோசிக்கிறாரு. அப்போ, ஃப்ரெண்டு தைரியமா ரிஸ்க் எடுக்கலாம்னு சொன்னதும், சென்னைக்கு ஓடி வந்துருக்காரு. இங்க வந்ததும் கன்னட ராமாயணம் சீரியல் பாதில நின்னுருக்கு. இவரை கிளம்ப சொன்னதும், இங்கயே வாய்ப்புகளை தேடலாம்னு ஸ்டில்ஸ் ரவி எடுத்த ஃபோட்டோஸ ஆல்பமா தூக்கிட்டு எல்லா கம்பெனிக்கும் ஏறி, இறங்கியிருக்காரு. அப்போதான், கரெக்டா மர்ம தேசம் – விடாது கருப்புல நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. 90’ஸ் கிட்ஸ் மத்தில அந்த சீரியல் செம ஹிட்டு. லாக் டௌன்ல கூட யூ டியூப்ல அந்த சீரீஸ உட்கார்ந்து பார்த்து ஸ்டேட்டஸ் போட்டு அலறிட்டு இருந்தாங்க. அதுவும் இவரோட இன்னசெண்டான கருப்பு கேரக்டர் அவரை பலர் மத்திலயும் கொண்டு போய் சேர்த்துச்சு. இன்னைக்கும் 90’ஸ் கிட்ஸுக்கு சேத்தன்ற பெயரைவிட கருப்பு பெயர்தான் பரிட்சயம்.
விடாது கருப்பு வந்த பிறகு தமிழ்நாட்டுல எங்க போனாலும் யார் அந்த கருப்பு? யார் அந்த கருப்பு? அப்டினு இவர்கிட்ட கேப்பாங்களாம். சீரியல்ல கூட இருக்குற ஆர்டிஸ்ட்டே கேப்பாங்களாம். கடைசில இவர்தான் அந்த கருப்புன்ற ட்விஸ்ட் உடைஞ்சதும் பலரும் அரண்டு போய்ட்டாங்கனே சொல்லலாம். அந்த சீரியலுக்கு அப்புறம் மெட்டி ஒலி, மாணிக்கம் கேரக்டர். மெட்டி ஒலி.. தமிழ் சின்னத்திரைல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துன சீரியல். மாணிக்கம்ன்ற கோவமான கேரக்டர்ல நடிக்கும்போதுலாம் நிறைய பேருக்கு அவங்க அப்பாவும் இன்னும் சிலருக்கு எம்டன் மகன் நாசரும் நியாபகம் வந்துட்டுப் போவாங்க. சேத்தனுக்கு நாசர் ரொம்பவே புடிச்ச கேரக்டர். வில்லன், அப்பா, மாமா, காமெடியன், போலீஸ், ஃபாதர், புரொஃபஸர்னு எல்லா கேரக்டருக்கும் நாசர் செட் ஆவாரு. அவருக்குனு ஒரு வட்டம் போடவே முடியாது. சேத்தனுக்கும் அப்படியான நடிகனா அறியப்படணும்ன்றதுதான் ஆசை. சின்னத்திரைல மெட்டி ஒலிக்கு அப்புறம் ஏகப்பட்ட சீரியல்ஸ்ல நடிச்சிருக்காரு. சின்னத்திரைல கிட்டத்தட்ட செம பிஸியான ஆர்டிஸ்ட்டாவே வலம் வந்தாரு. அந்த நேரம் தான் சினிமால நடிக்கிறதுக்கான வாய்ப்பு அவருக்கு வருது.
வெற்றிமாறன் அஸிஸ்டெண்டா வொர்க் பண்ணும்போதுல இருந்து சேத்தனை அவருக்கு நல்லாவே தெரியும். பொல்லாதவன் ஷூட்டிங் அப்போ தனுஷுக்கு பாஸா நடிக்க ஆள் கிடைக்கலை. கடைசி நிமிஷத்துல அவர் அஸிஸ்டெண்ட் சேத்தனை கேக்கலாம்டானு சொல்லவும்.. அவரை கேட்ருக்காங்க. உடனே, ஓக்கே சொல்லி நடிக்க வந்துருக்காரு. தனுஷ்கிட்ட டூவிலர் இருக்கானு கேக்குற சின்ன சீன்தான். ஆனால், அந்த கதையே அதான. அதுனால, நிறைய பேரால அவரை நியாபகம் வைச்சுக்க முடிஞ்சுது. அதுக்கப்புறம் படிக்காதவன், தாம் தூம்னு நிறைய படங்கள்ல சின்ன சின்ன கேரக்டர்தான் பண்ணிட்டு இருந்தாரு. சி.எஸ்.அமுதன், அப்ப ரெண்டாவது படம்னு அவரோட ரெண்டாவது படத்தை டைரக்ட் பண்ணிட்டு இருந்தாரு. அதுல முக்கியமான ரோல் இவருக்கு கொடுத்துருக்காரு. ஷூட்டிங் ஸ்பாட்ல அமுதன்கிட்ட சேத்தன், ஏங்க எல்லாருக்கும் ஜாலியா போற சீன்ஸ் கொடுக்குறீங்க, எனக்கு மட்டும் இவ்வளவு சீரியஸான போர்ஷன் கொடுத்துருக்கீங்கனு கேட்டு அட்ராசிட்டீ பண்ணியிருக்காரு. அதுக்கு அமுதன், என்னோட தப்பு இல்லைங்க. நீங்க மர்ம தேசம்னு ஒண்ணு பண்ணீங்கள்ல அதனாலதான்னு சொல்லியிருக்காரு. ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. அதுக்கப்புறம் தமிழ்படம் 2-ல செமயான ரோல் சேத்தனுக்கு கிடைச்சுதுனே சொல்லலாம்.
தமிழ்படம் 2ல கமிஷனல் ஏழுசாமின்ற கேரக்டர்ல வந்து சும்மா வெளுத்துருப்பாரு. சீரியஸா பேசி பில்டப் ஏத்தி விட்டுட்டு.. என்னலாம் சொல்ல வேண்டியது இருக்குனு சொல்லும்போது.. பல ஹீரோவோட மாஸான பில்டப் சீன்கள் நம்ம கண்ணு முன்னால வந்துட்டுப் போகும். அப்புறம் சுட வரலைனு சிவாவை கலாய்க்கிற சீன்னு ஏகப்பட்ட சீன்ஸ்ல நம்மள சிரிக்க வைச்சிருப்பாரு. சீரியல்ல இருந்து ஒதுங்கி பல வருஷம் ஆச்சு. ஆனால், இன்னைக்கும் சீரியல்ல நடிக்கிறீங்களானு அவர்கிட்ட கேட்டுட்டுதான் இருக்காங்களாம். அவ்வளவு பவர்ஃபுல்லான சம்பவங்களை இங்க பண்ணிட்டுதான் போய்ருக்காரு. மாநகரம் முடிச்சுட்டு லோகேஷோட அறிமுகம் கிடைச்சுருக்கு. கைதில சின்ன ரோல்தான். ஆனால், டீசண்டா இருக்கும். பிஜாய்க்கு உதவுற டாக்டர் கேரக்டர் பண்ணியிருப்பாரு. அங்க இருந்து அப்படியே மாஸ்டர் படத்துலயும் காலேஜ்ல ஜே.டிக்கு எதிரா பேசுற புரொஃபஸர்ஸ் கூட்டத்துல ஒரு கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. மாஸ்டர்ல அவர் நடிக்கிறாருன்றது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. ஆனால், அந்த கேரக்டர் அவ்வளவு பெருசா இல்லை.
சேத்தன், பொல்லாதவன் முடிஞ்ச பிறகு தொடர்ந்து அவர்கூட டச்லயேதான் இருந்துருக்காரு. அடிக்கடி என்ன வெற்றி எங்களைப் பார்த்தா நல்ல நடிகரா தோணலையானு அப்பப்போ கேப்பாராம். வெற்றியும் நல்லதா ஒரு கேரக்டர் சிக்கட்டும் சொல்றேன்னு சொல்லிட்டே இருந்துருக்காரு. அப்படி மாட்டுனதுதான் ராகவேந்தர் கேரக்டர். ஆக்சுவலா சட்டிலா செமயா நடிச்சிருந்தாரு. சீனியர் ஆஃபீஸர் அப்டின்ற திமிர் இருக்கும்ல, அவர் நடந்து போறதுல இருந்து.. பெல்ட்ட அட்ஜஸ்ட் பண்றது வரைக்கும் அந்த திமிர் தெரியும். சூரி வரும்போது என்ன மன்னிப்பு கேட்க வந்தியானு ராகவேந்தர் கேட்கும்போதுலாம் தியேட்டரே சிரிச்சுச்சு. வெற்றிமாறன் படத்துல சிரிப்பானு தோணுனாலும், அதுக்கு அந்த கேரக்டர் பண்ற ஆட்டிடியூட்தான் காரணம். இன்னொரு டீம் வரப்போறாங்கனு தெரிஞ்சதும், பெயர் வாங்க இவங்க போடுற பிளான்லாம் செம. கிளைமாக்ஸ்ல அந்த ஊர் பொண்ணுங்க எல்லாத்தையும் டார்ச்சர் பண்ணும்போது, எந்தவித சலனத்தையும் மூஞ்சுல காட்டாமல், மிளகாப்பொடி எடுத்துட்டுவானு சொல்றதுலாம் வில்லத்தனத்தோட உச்சம். இப்படி சின்ன இடங்கள்லயும் செமயா ஸ்கோர் பண்ணியிருந்தாரு. வெற்றி ஆடியோ லாஞ்ச்ல சொன்ன மாதிரி ரொம்பவே ஸ்பெஷலான ரோல்லதான் நடிச்சிருக்காரு. இதுக்கப்புறம் பெஸ்ட்டான கேரக்டர்ஸ் அவருக்கு அமையும்னு நம்புவோம்.