உங்களோட டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பவே முக்கியமானது. ஒருத்தர் உங்கக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி அவங்க உங்கள ஜட்ஜ் பண்றது டிரெஸ்ஸிங் சென்ஸ் வைச்சுதான். பக்காவா டிரெஸ் பண்ணிங்கனா உங்களுக்குள்ள தானாகவே ஒரு கான்ஃபிடண்ட் வரும். அவ்வகையில், நீங்க டிரெஸ் பண்ணும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
- கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிவதற்கு தேர்ந்தெடுங்கள். சட்டையில் இருக்கும் கஃப் முதல் பட்டன் வரை அது கச்சிதமாக இருக்கிறதா என்பதை கவனித்து உடைகளை அணியுங்கள்.
- நீங்கள் அணியும் துணி தரமானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- நீங்கள் ஆடை அணியும்போது சுத்தமாகவும் சுருக்கம் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
- உங்களது நிறத்துக்கு ஏற்ற வகையில் உடையின் நிறங்களை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலும் கிளாசிக்கான நிறங்களை தேர்வு செய்வது நல்லது.
- உங்களது உடையை இன்னும் அழகாக்க சின்ன சின்ன டீட்டெய்ல்களை சேர்க்கலாம். பாக்கெட்டில் பேனா வைப்பது, கஃப்லிங்க்ஸில் சிம்பிளான அழகான ஒரு பொருளை வைப்பது போன்றவற்றை செய்யலாம். ஆடைகளுக்கு பொருத்தமான ஹேண்ட்பேக்களை அணியலாம்.
- உங்களுடைய உடைகளுக்கு பொருத்தமான நகைகளை அணிய வேண்டும். மலிவான நகைகள் வாங்கி அணிவதை முடிந்தவரை தவிருங்கள். பெண்கள் தாவணி போன்றவற்றை அணியும்போது எடை அதிகம் இல்லாத ஆபரணங்களை அணியலாம்.
- உடைகளை அணிந்தவுடன் தங்களுக்குப் பொருத்தமான வாசனைத் திரவியங்களை தேர்வு செய்ய வேண்டும். பெண்கள் லேசான மலர் வாசனை திரவியங்களை தேர்வு செய்யலாம்.
- உங்களது டிரெஸ்ஸிங் சென்ஸில் உங்களுக்கென தனியான அடையாளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- உங்களது ஆடைகளுக்கு தகுந்த காலணிகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணிகள் உங்களது அவுட் ஃபிட்டை இன்னும் அழகாக காட்டும். பெரும்பாலும் ஷூக்களை அணிவது நல்லது.
- எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் உடையணியும்போது உங்களது கம்ஃபர்ட்சோனைவிட்டு வெளியேற வேண்டாம். அதை மீறினால் ஒருவேளை சொதப்புவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸில் தவறாமல் பின்பற்றும் ஒரு விஷயம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: மென்டார் ரோல், ஃபேஷன் டிப்ஸ்… கேர்ள் பெஸ்டி இருந்தா எவ்வளவு நன்மைகள்?!