மிதுன ராசி

New Year Rasi Palan 2022: மிதுன ராசி புத்தாண்டு ராசிபலன்!

மிதுன ராசி அன்பர்களே ஒட்டுமொத்தமாக 2022-ம் ஆண்டு உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமாகவே இருக்கும்.

2022-ம் ஆண்டு உங்கள் வாழ்வில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஆண்டாக அமையும். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் பார்வையால் சில விஷயங்களில் நீங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். எந்தவொரு முடிவையும் தீர ஆலோசித்து எடுப்பது நலம். ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால், எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு புதிய நபர்கள் அதிகம் பேரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி
மிதுன ராசி

கல்வி

மிதுன ராசி மாணவர்களுக்குக் கல்வியைப் பொறுத்தவரை 2022-ம் ஆண்டு சிறப்பானதாக அமையும். கடின உழைப்பையும் விடா முயற்சியையும் நீங்கள் கைவிடாமல் இருப்பின், அதற்கேற்ற கைமேல் பலன் உங்களை வந்தடையும். உயர் கல்வியில் சாதிக்கும் வாய்ப்பைப் பெறும் உங்களுக்குப் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறும் அதிர்ஷ்டமும் கிட்டும். போட்டித் தேர்வுகளில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சாதிப்பீர்கள்.

Also Read:

எந்த ராசிக்காரர்கள் எந்த கோவில்களில் வழிபடவேண்டும்?

குடும்பம்

உங்கள் ராசிப்படி இந்த ஆண்டு குடும்பத்துடன் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பீர்கள். இதனால், 2022-ல் உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரணையான போக்கு ஆண்டு முழுவதும் இருக்கும். சுப காரியங்கள் குடும்ப உறுப்பினர்களையிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதோடு, மனநிறைவையும் கொடுக்கும். புதிதாகத் திருமணமாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தைகளால் சில தலைவலிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், அவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

மிதுன ராசி
மிதுன ராசி

பொருளாதாரம் – தொழில்

தொழில்ரீதியாக மிதுன ராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவீர்கள். குரு பகவான் பார்வை நிதிசார்ந்து பலன்களை ஏற்படுத்தும் என்றாலும், சனி பகவான் எட்டாவது வீட்டில் சஞ்சரிப்பதால் கூடுதலாக முயற்சிக்க வேண்டி வரும். ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பாராத பண வரவு இருக்கும். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். புதிய தொழில் தொடங்குவது, முதலீடு உள்ளிட்டவைகளை ஆண்டின் இரண்டாம் பாதியில் வைத்துக் கொள்வது நல்லது. முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வாகனம், கட்டடம், நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கும் சூழல் கைகூடி வரும்.

மிதுன ராசி அன்பர்கள் வழிபட வேண்டிய கோவில் :

மிதுன ராசிக்காரர்கள் திருநெல்வேலி அருகே அமைந்துள்ள இரட்டை திருப்பதி எனப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் ஆலயம் சென்று வழிபட்டால் குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம்.

Also Read – New Year Rasi Palan 2022: ரிஷப ராசி புத்தாண்டு ராசிபலன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top