விஜய் – வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகியிருக்கும் GOAT படம் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. IMAX என்றால் என்ன… வழக்கமான சினிமா அனுபவத்தில் இருந்து இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேறுபட்டது… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

IMAX தொழில்நுட்பம்
Multiscreen Corporation என்கிற பெயரில் கனடாவில் கடந்த 1967-ல் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இன்று IMAX என்று பெயர் மாறி ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. திரைக்கலைஞர்களான Graeme Ferguson, Roman Kroitor, Robert Kerr மற்றும் பொறியாளர் William Shaw ஆகியோர் இணைந்து படங்களைத் தயாரிக்கும் புதிய ஃபார்மேட்டை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். Maximum Image என்பதன் சுருக்கம்தான் IMAX. 1967-ல் மாண்ட்ரியாலில் நடந்த திரைவிழாவுக்காக இவர்கள் தயாரித்த In the Labyrinth படம்தான் இந்த ஃபார்மேட்டில் உருவாக்கப்பட்ட முதல் படம்.
IMAX தொழில்நுட்பம் என்பது, இதற்கென தனியான சிறப்பம்சங்கள் கொண்ட கேமரா, ஃபார்மேட், திரை என மொத்தமாக உள்ளடக்கம் கொண்டது. இந்த வகை தியேட்டர்களில் திரையின் குறைந்தபட்ச அளவே 72 x 53 அடிக்கு இருக்கும். உலக அளவில் பார்த்தால், ஜெர்மனியில் 144 x 75 அடி என்கிற அளவில் இருக்கும் IMAX ஸ்கிரீன்தான் பெரியது. ஹைதராபாத்தில் 95×72 என்கிற அளவில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கிரீன்தான், இந்தியாவில் பெரியது. ஐமேக்ஸ் ஸ்கிரீன்கள் வழக்கமான ஸ்கிரீன்களைப் போல் அல்லாமல், 1.43:1 என்கிற விகிதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில், திரைக்குப் பின்னால் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல், வழக்கமான சீட்டிங் போல் இல்லாமல், திரையின் உயரமான பகுதியைப் பார்வையாளர்கள் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும். 12.1 Channel Surround சவுண்ட் சிஸ்டம் என பார்வையாளர்களுக்குப் புதுமையான திரை அனுபவத்தை அளிக்கக் கூடியது இந்த IMAX தொழில்நுட்பம். பார்வையாளர்கள் எங்கிருந்து பார்த்தாலும் நேரடியாகத் திரையைப் பார்க்கும் வகையில் DOME எனப்படும் குழிவு வடிவில் திரையும் சீட்டிங்கும் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆரம்ப காலகட்டத்தில் கல்வி நோக்கில் எடுக்கப்படும் ஆவணப் படங்கள், இயற்கைக் காட்சிகள் போன்றவைகளே ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டு வந்தன. 2000-த்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஐமேக்ஸ் வியாபாரரீதியிலான சினிமாவிலும் பயன்படுத்தப்பட்டது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தின் மீது மிகப்பெரிய காதல் கொண்டவர் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தனது பெரும்பாலான படங்களை இந்தத் தொழில்நுட்பத்திலேயே படம் பிடித்து திரையிடுபவர். அந்தவகையில், The Dark Knight Rises, Interstellar, Dunkirk போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. அதேபோல், மார்வெல் யுனிவெர்ஸின் அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்கள், டிஸ்னியின் Fantasia 2000 போன்றவை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிவந்த படங்கள்.
Dolby Cinema vs IMAX
இந்திய சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது டால்பி சினிமா தொழில்நுட்பம். இதற்கும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துக்கும் சில அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரே தியேட்டரில் டால்பி ஸ்கிரீனும் ஐமேக்ஸ் ஸ்கிரீனும் அருகருகே இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். டால்பியும் பெரிய ஸ்கிரீனைக் கொண்டதுதான் என்றாலும், அதைவிட பெரிய ஸ்கிரீனையும், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் இருக்கையையும் கொண்டது ஐமேக்ஸ். அதேபோல், டால்பி தொழில்நுட்பம் Sharp, Clearer Image-க்காகப் புகழ்பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படம்தான் தமிழில் IMAX தொழில்நுட்பத்தில் வெளியான முதல் படம்.
I am extremely inspired together with your writing talents and also with the structure on your weblog. Is this a paid theme or did you modify it yourself? Either way keep up the nice quality writing, it’s uncommon to see a great blog like this one nowadays!
I wass curious if you evver considered changing the layout of your site?
Its very well written; Ilove what yopuve got to say.
But maybe you could a little mor in the way off content so people could connect with it
better. Yoouve got an awful lot of text for only having one or two images.
Mybe you could space it out better? https://Glassiindia.Wordpress.com/