பிரபலங்களின் ஃபேவரைட் – பால்மெய்ன் பாரிஸ் டீ-ஷர்ட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும்… உலக கிரிக்கெட் செலிபிரிட்டில இருந்து உள்ளூர் கிரிக்கெட் வரைக்கும்… யாரப் பார்த்தாலும் பால்மெய்ன் பாரிஸ் டீ ஷர்ட் போட்டுட்டு சுத்துறாங்க. அப்படி அந்த டீ ஷர்ட்ல என்னதான் இருக்கு? நாமளும் பால்மெய்ன் டீ ஷர்ட் ஒண்ண ஆர்டர் போடுறோம். கெத்து காட்டுறோம். அப்டினு நெட்ல தேடிப் பார்த்தா ஐயயோ… அப்படினு ஷாக் ஆகுற அளவுக்கு சில ஆச்சரியமான தகவல்களும், அடடே… அப்படினு சொல்ற அளவுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களும் நமக்கு கிடைச்சுது. அதைதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

ஷாரூக்கான்
ஷாரூக்கான்

ஆர்கிடெக்ட் ஆசை

உலகத்துல உள்ள செலிபிரிட்டிகள் பலருக்கும் ஃபேவரைட்டான `பால்மெய்ன் பாரிஸ்’ ஃபேஷன் நிறுவனத்தோட ஓனர்தான் பியேர் பால்மெய்ன். இவரோட முழுப்பெயர் Pierre Alexandre Claudius Balmain. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஃபேஷன் உலகத்தை கட்டி ஆண்ட, இறந்த பிறகும் ஆண்டுகொண்டிருக்குற பால்மெய்னுக்கு சின்ன வயசுல ஃபேஷன் துறைக்குள்ள வரணும்ன்றது ஆசையில்லை. ஆர்கிடெக்சர் படிச்சு பெரிய ஆர்கிடெக்ட் ஆகணும்ன்றதுதான் அவரோட கனவா இருந்துச்சு. ஆனால், அவரோட அப்பா, அம்மா, சகோதரிகள்னு எல்லாருமே டெக்ஸ்டைல்/ஃபேஷன் துறையில் இருந்தாங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டதால அம்மாதான் இவரை படிக்க வைச்சிருக்காங்க. லீவ் நாள்ல அடிக்கடி தன்னோட அங்கிள் வீட்டுக்கு போவாராம். அங்க அவரோட அங்கிள் கஸ்டமர்ஸ் கேக்குற மாதிரி டிரெஸ் எல்லாம் டிசைன் பண்ணி கொடுப்பாராம். அதைப் பார்த்துதான் இவருக்கு கொஞ்சம் இந்த ஃபேஷன் துறை மேல ஆர்வம் வந்திருக்கு. இருந்தாலும் பாரிஸ்க்கு வந்து ஆர்கிடெக்சர் படிச்சிருக்காரு. ஆனால், பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு ஒரு டிசைன் கம்பெனில வேலைக்கு சேர்ந்துருக்காரு.

பியேர் பால்மெய்ன்

போரில் கிடைத்த ஃப்ரெண்ட்ஷிப்

டிசைன் கம்பெனில வேலை பார்த்துட்டு இருக்கும்போது இரண்டாம் உலகப்போர்ல விமானப்படைல சேர்ந்து கொஞ்ச காலம் வேலை பார்த்திருக்காரு. அங்கதான் உலகின் இன்னொரு மிகப்பெரிய ஃபேஷன் டிசைனரா அறியப்படுற Christian Dior-ஐ சந்திச்சிருக்காரு. இரண்டு பேருமே இரண்டாம் உலகப்போர் முடிஞ்சதுக்கு அப்புறம் தனித்தனியா ஃபேஷன் டிசைன் கம்பெனி ஆரம்பிச்சு அதுல தன்னோட முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சாங்க. 1945-ல பால்மெய்ன் தன்னோட கம்பெனியை தொடங்கினாரு. ஆர்கிடெக்ட் ஆகணும்ன்ற ஆசை இருந்ததால. பால்மெய்ன் கம்பெனிக்கான கட்டடம் கட்டும்போது ரொம்பவே ரசிச்சு அதை கட்டியிருப்பாரு. இப்போ வரைக்கும் அவரோட அந்த பால்மெய்ன் பில்டிங் ஸ்பெஷலான பில்டிங்கா இருந்துட்டு வருது.

பியேர் பால்மெய்ன்
பியேர் பால்மெய்ன்

முதல் வெற்றி

ஆரம்பத்துல போஸ்ட் வார் ஸ்டைல் ஆடைகளை பால்மெய்ன் வடிவமைத்து வந்தார். இவர் வடிவமைத்த ஃபஸ்ட் கலெக்‌ஷன் டிசைனை Vogue இதழ்ல வெளியிட்டாங்க. அதைப் பார்த்து ஆடை விமர்சகர்கள், `நீங்க நல்ல ஆடைகளை அணிய விரும்பினால் பால்மெய்ன் அதற்கு சரியான தேர்வு’னு பாஸிட்டிவான விமர்சனங்களை வழங்கினாங்க. அப்புறம் பிரபலங்கள் பலரும் பால்மெய்ன் நோக்கி தங்களது கவனத்தை திருப்பினாங்க. ஃபேஷன் கம்பெனி ஆரம்பிச்ச சில வருடங்கள்லயே உலக அளவுல தன்னோட கம்பெனியை ஃபேமஸ் ஆக்கணும்னு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து விளம்பரப்படுத்தினார்.

பியேர் பால்மெய்ன்
பியேர் பால்மெய்ன்

ஸ்பெஷாலிட்டி

பால்மெய்ன் பாரிஸின் ஸ்பெஷாலிட்டி என்னா, அவங்க பொதுவான டிசைன் பண்ணி சேல் பண்றதில்லை. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட முறையில அவங்க கேக்குற மாதிரி டிசைன் பண்ணி கொடுப்பாங்க. கருப்பு கலர்ல இவங்கக்கிட்ட இருக்குற டிரெஸ் கலெக்‌ஷன் வேற யார்க்கிட்டயாவது இருக்குமானு கேட்டா கரெக்டா சொல்ல முடியாது. கருப்புலயே அவ்வளவு கலெக்‌ஷன்ஸ் வைச்சிருக்காங்க. அன்னைக்கு ரொம்ப ஃபேமஸா உச்சத்துல இருந்த Marlene Dietrich, Katharine Hepburn போன்ற நடிகைகள் பால்மெய்ன் பாரிஸின் ரசிகைகளா இருந்தாங்க. பின்னர், தாய்லாந்து ராணில இருந்து மேலேசியா – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுவுக்கு யூனிஃபார்ம் டிசைன் பண்றது வரைக்கும் பல வேலைகளை செய்திருக்காரு. இன்னைக்கு பால்மெய்ன் பாரிஸ் ரசிகர்களோட லிஸ்ட் சொல்லணும்னா டைம் பத்தாது. சுமார் 16 படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனரா பாம்பெய்ன் வொர்க் பண்ணியிருக்காரு.

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

பால்மெய்ன் விலை

பார்க்க ரொம்பவே சிம்பிளா இருக்குற பால்மெயின் டீ ஷர்ட்டோட குறைந்தபட்ச விலை 22,500 ரூபாய். அதிகபட்ச விலை லட்சக்கணக்குல இருக்கும். நம்ம இந்தியால பால்மெய்ன் டீ ஷர்ட்டோட வெறித்தனமான ரசிகர்னா அது அல்லு அர்ஜூன்தான். ஏகப்பட்ட கலெக்‌ஷனை வைச்சிருக்காரு. கருப்புக்கலர்ல டீ ஷர்ட் போடணும்னு அல்லு அர்ஜூன் முடிவெடுத்தா பால்மெய்ன் டீ ஷர்ட்தான் போடுவாருபோல. அப்படியே, நம்ம கோலிவுட்டுக்கு வந்தோம்னா… விக்னேஷ் சிவன் பால்மெய்ன் டீ ஷர்ட் அதிக கலெக்‌ஷன் வைச்சிருக்காரு. கருப்பு கலர்ல மட்டுமில்ல, வெள்ளை, கிரேனு வெரைட்டியான கலெக்‌ஷன்ஸ் வைச்சிருக்காரு. அவரைத் தவிர சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், நயன்தாரானு பலரும் இந்த டீ ஷர்ட் வைச்சிருக்காங்க. பால்மெய்ன் கம்பெனி டீ ஷர்ட் மட்டுமில்லாம, ஜேக்கட், ஷூ, பேக், தொப்பி, செண்ட்னு ஏகப்பட்ட விஷயங்களை விக்கிறாங்க.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

பால்மெய்ன் சாங்

பொதுவா ஃபேஷன்னு வந்தாலே வெள்ளையா ரொம்ப அழகா இருக்குறவங்கதான் புரோமோ வீடியோலலாம் வருவாங்க. ஆனால், பால்மெய்ன் ஒரு ஃபேஷன் கேம்பைன் வீடியோ ஒண்ணு வெளியிட்ருப்பாங்க. மில்லியன் வியூஸ்களைப் பெற்ற இந்த வீடியோல அமெரிக்க ஆப்பிரிக்க பாடகர்கள், மாடல்கள் இடம்பெற்றிருப்பாங்க. இந்த வீடியோவையும் கலர்ஃபுல்லா எடுக்காமல் பிளாக் அண்ட் வொயிட்லயே எடுத்துருப்பாங்க. பால்மெய்ன் பாரிஸ் பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துருக்குன்றதும் குறிப்பிடத்தக்கது. பால்மெயின் நிறுவனத்தோட கிரியேட்டிவ் டிசைனரா இப்போ ஆலிவர் ரூஸ்டிங் இருக்காரு. இவர் வந்ததுக்கு அப்புறம் கம்பெனியோ ஆண்டு வருமானம் பல மில்லியன் டாலர்கள்ல போய்ட்டு இருக்காம்.

தோனி
தோனி

இந்த தகவல் எல்லாம் தெரிஞ்ச பிறகு நாம என்ன பண்ணப் போறோம்? அப்படினு யோசிச்சா வானம் படத்துல சிம்பு பண்ணுவாருல… அந்த மாதிரி ஸ்பென்சர் இல்லைனா உஸ்மான் ரோட்டுக்குப் போய் டூப்ளிகட் பால்மெய்ன் பாரிஸ் ஒண்ணு வாங்கி போட்டு ஒரு போட்டோ ஷூட் பண்ணி சோஷியல் மீடியால போட்டு லைக்ஸ் வாங்குவோம். அப்படித்தான? ரைட்டு நடத்துங்க!

Also Read: ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய 7 மலையாள நடிகைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top