ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய 7 மலையாள நடிகைகள்!

தமிழ்நாட்டு பசங்களோட இன்ஸ்டாகிராம் புரொஃபைல ஓப்பன் பண்ணி அவங்க யாரையெல்லாம் ஃபாலோ பண்றாங்கனு செக் பண்ணி பார்த்தா அதுல மலையாள நடிகைகள்தான் அதிகமா இருப்பாங்க. ஒவ்வொரு மலையாள ஹீரோயினையும் பார்க்கும்போது சே… நாமளும் கேரளால பொறந்துருக்கக்கூடாதானு மனசு ஏங்கும்.`எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ, எங்க சிஎம் விஜயன் ஆனோ, எங்க டான்சு கதக்களி ஆனோ, எனக்கு நீ வேணும்’னு பாடுற நம்ம பசங்க அவங்க வைக்கிற சின்ன ஸ்டிக்கர் பொட்டுக்கே அடிமைதான்னா மறுக்கவா போறீங்க? கடவுளின் தேசத்தில் பெண்கள் கிடையாது. தேவதைகள் மட்டும்தான். அப்படி நீங்க அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 கேரளத்து தேவதைகள் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

நிகிலா விமல்

காலேஜ்ல இல்லைனா ஸ்கூல்ல ரொம்ப அழகான ஒரு பொண்ணு நமக்கு சீனியரா இருக்கும். அந்த கேம்பஸ்ல இருக்குற எல்லாருமே அந்தப் பொண்ணைதான் சைட் அடிச்சுட்டு திரிவாங்க. அப்படியான ஒரு பொண்ணுதான் நிகிலா விமல். திருவனந்தபுரத்துக்காரி அல்லா… கண்ணூர்காரியானுனு சொல்லி சொல்லி தேஞ்சு போன நிகிலா, 9-வது படிக்கும்போதே காதல்ல விழுந்தாங்களாம். அவங்க ஃபேன்ஸ்க்கு நல்ல விஷயம் என்னனா கொஞ்சம் நாள்ல பிரேக்கப்பும் ஆய்டுச்சு. பாக்யதேவதா படம் மூலமா அறிமுகமாகன நிகிலா அரவிந்தன்டே அதிதிகள், ஞான் பிரகாஷன் போன்ற படங்களின் மூலமா மலையாள சினிமா ரசிகர்கள் மனசுல நீங்கா இடம் பிடிச்சாங்க. தமிழ்லயும் இவங்க நடிச்ச கிடாரி படம் ரொம்பவே வரவேற்பை பெற்றிச்சு. ரொம்பவே சாஃப்ட்டான கேரக்டர்களை தன்னோட அழகான நடிப்பு மூலமா செமயா ஹேண்டில் பண்ணி வெளிப்படுத்துவாங்க. ஆனால், நிஜத்துல ரொம்ப பாவமான கேரக்டர்லாம் இல்லை. தேவைப்படுற இடத்துல ரொம்பவே போல்டா பேசுற ஒரு ஆளு. நிகிலாவோட அப்பா நக்ஸல். கம்யூனிஸ்ட் கொள்கையால நிகிலா விமல் ஈர்க்கப்பட்டுருக்காங்க.

நிகிலா விமல்

சம்யுக்தா மேனன்

கேரளால போய் நீலாம்ஷமாய்’னு பாட்டுப்பாடுங்க. பக்கத்துல நிக்கிற சேட்டா உங்களப் பார்த்து கேக்குற முதல் கேள்வி...சம்யுக்தா மேனன் ஃபேன் ஆனா?’ அப்டினுதான். இவங்களோட முதல் படம் என்னனு அவங்க சொந்தக்காரங்களுக்கே தெரியாது. ஆனால், இவங்களோட ரெண்டாவது படம் கால் இந்தியாவுக்கு தெரியும். அதாங்க தீவண்டி’ படம். படத்துல ஹீரோ டொவினோ தாமஸ்க்கு இவங்க கொடுத்த ஒவ்வொரு அறையும் சிகரெட் புடிக்கிற ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த மாதிரி இருக்கும். படம் ரிலீஸ் அனதுக்கப்புறம் இவங்கக்கிட்ட நிறைய பேர் கேட்ட கேள்விடொவினோக்கு எத்தனை அடி கொடுத்தீங்க?’ அப்டினுதான். பாலக்காட்டு பைங்கிளியான சம்யுக்தா மேனன் வெரைட்டியான ஸ்கிரிப்டா செலக்ட் பண்ணி நடிக்கிறாங்க. ரொம்பவே எதார்த்தமான ஆளு. ரொம்பவே எமோஷனலான ஆளும்கூட. இவங்களோட இன்ஸ்டா ஐடில பல இளைஞர் இன்னைக்கு தவம் கிடக்காங்கனா பார்த்துக்கோங்க.

சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்

நிமிஷா

நம்மளோட அக்கா, தங்கச்சி இல்லைனா பக்கத்து வீட்டுப் பொண்ணு நடிக்கப் போய் இண்டஸ்ட்ரீல சக்ஸஸ் ஃபுல்லா இருக்குறத பார்த்தா செம ஹேப்பியா ஃபீல் பண்ணுவோம்ல. அப்படியான வெற்றிதான் நிமிஷாவோட வெற்றியும். நிமிஷா’ அப்டினா என்ன அர்த்தம் தெரியுமா? நிமிஷமாம். அந்தப் பேரை வைச்சதாலயோ என்னவோThondimuthalum Driksakshiyum’-னு ஒரு படத்துல நடிச்சதுக்கு அப்புறம் பிஸியா எந்த நிமிஷத்தையும் வேஸ்ட் பண்ணாமல் இண்டஸ்ட்ரீல ஓடிக்கிட்டே இருக்காங்க. மும்பைல பிறந்திருந்தாலும் மலையாளம் அவ்வளவு அழகா பேசுவாங்க. சோழா, தி கிரேட் இந்தியன் கிச்சன், நாயாட்டு, மாலிக்னு இவங்க நடிச்ச எல்லா கேரக்டர்களும் வேறலெவல். படத்துல வர்ற கேரக்டர்ஸ் மாதிரியே ரொம்பவே ஆக்டிவான, தைரியமான பொண்ணுதான் நிஜமான நிமிஷாவும். நம்ம ஊர்ல ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்குற மாதிரி மலையாளத்துல நிமிஷானு சொல்லலாம். என்னக் கேரக்டர் பண்ணாலும் நம்மக்கூட இருக்குற பொண்ணுங்கள அந்தக் கேரக்டரோட கனெக்ட் பண்ணிக்க முடியும். நடிப்பைத் தொடங்கி கொஞ்ச காலத்துலேயே கேரளா ஸ்டேட் அவார்ட் உட்பட நிறைய அவார்ட்ஸ் வாங்கியிருக்காங்கனா பாத்துக்கோங்க.

நிமிஷா
நிமிஷா

அன்னா பென்

இந்தப் பெயரை சொன்னா எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியலை. ஆனால், `கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துல வந்த பேபி மோள் எத்தனை பேருக்கு நியாபகம் இருக்குனு கேட்டா. ஓ, ஆக்குட்டி அல்லே. அறியாம். நன்னாயிட்டு அறியாம்னு சொல்லுவோம். மலையாள சினிமால அன்னா பென்னோட அப்பாவுக்கு தனி பெயரே இருக்கு. இருந்தாலும் அந்த அடையாளங்களை வெளிய காட்டாமல் தனியா ஆடிஷன்ல போய் கலந்துக்கிட்டு செலக்ட் ஆகி கும்பளாங்கி நைட்ஸ்ல நடிச்சாங்க. இவங்க செலக்ட் ஆனதுக்கு அப்புறமா அந்த டீம் இவங்களோட பேக்ரௌண்ட விசாரிச்சிருக்காங்க. அதைக்கேட்டு எல்லாருமே ஷாக் ஆயிட்டாங்களாம். இவ்வளவு நேரம் சொன்னேன்ல, சிலர் நம்ம சீனியர் பொண்ணு மாதிரி இருப்பாங்க, சிலர் நம்ம பக்கத்துவீட்டு பொண்ணு மாதிரி இருப்பாங்க. ஆனால், ஆன்னா பென் நம்ம கிளாஸ்மேட் இல்லைனா ஃப்ரெண்ட் மாதிரினு சொல்லலாம். ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் ரெண்டுலயுமே செம கியூட்டா இருக்குற எக்ஸ்பிரஷன்ஸ்… அந்த கர்லிங் ஹேர்… எல்லாத்துக்குமே பல இளைஞர்கள் அடிமைனே சொல்லலாம். ஃபியூச்சர்ல இந்தப் பொண்ணு மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்குவாங்கனு ஃபிலிம் கிரிட்டிக் சொல்லுவாங்க. ஆனால், அவங்க இப்பவே கலக்கிட்டுதான் இருக்காங்க.

அன்னா பென்
அன்னா பென்

கிரேஸ் ஆண்டனி

கும்பளாங்கி நைட்ஸ்ல பேபி மோளோட அக்காவா வருவாங்கள்ல… அவங்கதான் கிரேஸ் ஆன்டனி. சின்ன வயசுல இருந்தே சினிமாவுக்கு வரணும்னுதான் இவங்களுக்கு ஆசை. அது அவங்களுக்கு நிறைவேறிச்சு. நம்ம ஒரு கோல் வைச்சிட்டு அதை அடையுறது பெருசில்ல. அந்த கோலை அடைந்த பிறகு நாம என்ன பண்றோம் அப்டின்றதுதான் பெருசுனு. கிரேஸ் ஆன்டணி அந்த கோலை எட்டின பிறகு ரொம்பவே அழகா அதை ஹேண்டில் பண்றாங்கனு சொல்லலாம். கிரேஸ்க்கு ஒரு இன்னசெண்டான ஃபேஸ். கும்பளாங்கி நைட்ஸ்ல அந்த ஃபேஸ் அவங்களுக்கு ரொம்பவே ஹெல்ப் ஆகியிருக்கும். அதைத் தவிர்த்து ஹலால் லவ் ஸ்டோரி, கனகம் காமினி கலகம் போன்ற படங்கள்ல எல்லாம் நடிகையா நடிக்கணும். அதையும் சூப்பரா பண்ணியிருப்பாங்க. குறிப்பிட்டு சொல்லணும்னா, நடிக்கத் தெரியாமல் நடிக்கணும்ன்ற மாதிரியான சீன்லாம் வேறலெவல் ஃபன்னா இருக்கும். இவங்களும் மலையாள சினிமால நல்ல கேரக்டர்களை சூஸ் பண்ணி நல்ல படங்களை தர்ற ஒரு ஆளுனு சொல்லலாம். உங்கக்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்.

கிரேஸ் ஆண்டனி
கிரேஸ் ஆண்டனி

அதிதி ரவி

இந்த லிஸ்ட்ல பேரழகினு ஒருத்தரை குறிப்பிட்டு சொல்லணும்னா… நான் அதிதியதான் சொல்லுவேன். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன், நடிப்பு எல்லாத்துலயும் பின்னி பெடலெடுப்பாங்க. சோஷியல் மீடியால இவங்களுக்குனு ஒரு பெரிய ஃபேன்பேஸே இருக்கு. இவங்களோட நடிப்புக்கு சின்ன உதாரணமா `என்டே நாராயணிக்கு’ ஷார்ட் ஃபிலிமை சொல்லலாம். பஷீரோட மதில்கள் நாவலை இப்போ கொரோனா காலத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் படம். எதிர்ல மனுஷங்க இருந்தா அவங்களப் பார்த்து நடிக்கிறது கொஞ்சம் ஈஸி. ஆனால், யாருமே இல்லாமல், வெறும் குரலை மட்டும் கேட்டு அந்தப் படத்துல நடிச்சிருப்பாங்க. அதுலாம் வேறலெவல்தான? ஃபீச்சர் ஃபிலிம்ல இவங்களுக்கு பெரிய கேரக்டர்ஸ் இன்னும் கிடைக்கல. ஆனால், நிறைய பெரிய படங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுலலாம் இவங்களோட கேரக்டர்ஸ் செமயா இருக்குனு நம்புவோம்.

அதிதி ரவி
அதிதி ரவி

அனஸ்வரா ராஜன் (Super Saranya)

பக்கா 2கே கிட் இவங்க. எப்பவுமே ஹீரோயின்னா கியூட்டா, நீட்டா இருக்கணும்ன்ற ஃபார்முலாவை எல்லாம் உடைச்சு எறிஞ்சு தன்னோட படங்கள்ல நடிச்சுட்டு வர்றாங்க. பொண்ணுங்கனா இப்படிதான் இருக்கணும், அப்படி சிரிக்கக்கூடாது எல்லாத்தையுமே இவங்க லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணியிருப்பாங்க. ரியல் லைஃப்லயே செம எனர்ஜியான ஒரு ஆள். ஸ்கூல்ல படிக்கும்போது மோனோ ஆக்டிங்லாம் பண்ணியிருக்காங்க. தண்ணீர் மாத்தான் தினங்கள் முதல் சூப்பர் சரண்யா வரைக்கும் இவங்களோட கேரக்டர் எல்லாமே யூனிக்னஸாதான் இருக்கும்.

அனஸ்வரா ராஜன்
அனஸ்வரா ராஜன்

நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 7 மலையாள நடிகைகள் பற்றி நான் இப்போ சொல்லியிருக்கேன். மலையாளத்துல உங்களோட ஃபேவரைட் ஹீரோயின் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: `அனுராதா ஶ்ரீராமின் நான்கு பரிணாமங்கள்’ – இதில் எந்த ஜானரில் குயின்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top