2000-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு சூப்பர் ஹிட் ஃபேமிலி எண்டர்டெய்னர் படம்தான் ‘பிரியமாவனளே’. விண்டேஜ் ஹிட் காம்போவான விஜய் – சிம்ரன் காம்போவுல உருவான இந்தப் படம் அந்த வருஷ தீபாவளிக்கு வெளியான ‘தெனாலி’ உள்ளிட்ட சிலப் படங்களோட மோதி வெற்றி பெற்றுச்சு. விஜய் நடிப்புல அதுக்கு முன்னாடி வெளியான‘குஷி’ படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிச்சிருந்ததாலும், நினைத்தேன் வந்தாய் ஹிட் தந்த செல்வபாரதி டைரக்சன்ல விஜய் திரும்ப நடிச்சிருந்ததாலயும் ஆரம்பத்துலயே ரசிகர்களுக்கு இந்தப் படம் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதற்கேற்ப படமும் ரசிகர்களை குறிப்பா பெண்களை ரொம்பவும் ஈர்க்கவே எல்லா செண்டர்களிலேயும் நல்லா ஓடி வெற்றியை ருசிச்சுது. அப்படி இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற முக்கியமாக இருந்த 5 காரணங்கள் என்னென்னனு இப்போ பார்த்துடலாம்.
கதை
மேற்குலக கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பணக்கார யூத், ஒரு வருச கல்யாணம் அப்படிங்கிற அக்ரிமெண்டோட ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்து பொண்ணை கல்யாணம் பண்றான். அதுக்கப்புறம் அந்த பொண்ணு எப்படி தன்னோட அன்பால அவனை மாத்த நினைச்சா, அப்படி அவன் மாற நினைக்கும்போது அவங்க என்னென்ன பிரச்சனைகளை சந்திச்சாங்க அப்படிங்கிற இந்த கதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே புதுசு. தமிழ்ல எந்தப் படம் ஹிட்டடிச்சாலும் அதை தெலுங்குக்கு ரீமேக் பண்ணி நடிக்கிற வெங்கடேஷ், நடிச்ச நேரடி தெலுங்கு ஹிட் படம்தான் ‘பவித்ர பந்தம்’. 1996-ல வெளியான அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகள்ல ரீமேக் ஆகி வெற்றியைக் குவிச்சது. அந்த அளவுக்கு மொழிகளைக் கடந்து உணர்வுகளைத் தொடும் இந்தப் படத்தின் அழுத்தமான கதை படத்தின் வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம்.
விஜய்

ஃபாரீன் ரிட்டர்னரா தன்னுடைய ஒரிஜினல் பேரான விஜய்ங்கிற பேர்லயே அவர் நடிச்ச இந்தப் படத்துல அந்தக் கேரக்டருக்கான ஸ்டைல் பாடி லேங்க்வேஜ், காஸ்டியூம், வாய்ஸ் மாடுலேசனு விண்டேஜ் விஜய் கலக்கியிருப்பாரு. தெலுங்கில் வெங்கடேஷ், ஹிந்தியில் அனில் கபூர், கன்னடத்தில் ரவிச்சந்திரன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நடிச்ச இந்த கேரக்டரை தமிழ்ல விஜய் எந்த குறையும் இல்லாம தன்னுடைய பாணியில அட்டகாசமா பண்ணியிருப்பாரு. ஃபர்ஸ்ட் நைட் சீன்ல, நீ என் கால்ல விழுகுறது சம்பிராதயம்னா நான் உன் கால்ல விழுகுறதும் சம்பிராதயம்தான என சிம்ரன் காலைப் பிடித்துக்கொண்டு விஜய் அடம்பிடித்ததை தமிழ்நாடே ரசித்தது. அதுமட்டுமில்ல விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கும் இந்தப் படத்துக்கும் நடவுல ஒரு கனெக்ட் இருக்கு, அதாவது பிரியமானவளே பட இறுதிக்கட்ட ஷூட்டிங் பேலன்ஸ் இருந்தப்போதான் விஜய்யின் மனைவி சங்கீதா தன்னுடைய முதல் பிரசவத்துக்காக சொந்த ஊரான லண்டன் போயிருந்தாங்க. டெலிவரி நேரத்துல தன் மனைவிகூடவே இருக்கணும்னு நினைச்ச விஜய், டாக்டர்கள் சொன்ன தேதியை மனசுல வெச்சு ஷூட்டிங்கை ரெண்டு நாள் தள்ளி போட சொல்லிட்டு லண்டன் கிளம்பி போயிருக்காரு.
ஆனா, சொன்ன தேதியில டெலிவரி நடக்கலை, அதேசமயம் இங்க டைரக்டர் செல்வபாரதி ஷுட்டிங்கை தொடங்கி விஜய் இல்லாத போர்சன்களை ஷூட் பண்ண ஆரம்பிச்சிருக்காரு. அவர்கிட்ட லேட் ஆன விஷயத்தை சொன்ன விஜய் இன்னும் இரண்டு நாள் எக்ஸ்கியூஸ் கேட்டிருக்காரு. ஆனா அப்போவும் டெலிவரி நடக்காததால அதுக்கப்புறம் விஜய், என்னால ஷெட்யூல் ப்ளான் கெட்டுடக்கூடாதுன்னு சொல்லி உடனே இந்தியா கிளம்பி நேரா ஸாபாட்டுக்கு வந்துட்டாரு. வந்த இடத்துல விஜய்யை வெச்சு என்ன ஷூட் பண்ண ப்ளான் பண்ணியிருந்தாங்க தெரியுமா ஜூன் ஜூலை மாதத்தில் பாட்டு. விஜய் இங்க ஷூட்டிங் ஸ்பாட் வரவும் லண்டன்ல இருந்து, விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்திருக்குன்னு போன் வந்திருக்கு. விஷயத்தை கேட்டு உற்சாகமான விஜய், செம்ம ஹேப்பியா அந்த பாட்டை ஆடி கொடுத்திருக்காரு. அப்படி தன்னோட ரியல் ஹேப்பினெஸை தன்னோட படத்துல விஜய் பதிவு செஞ்ச மொமண்ட்னு இந்தப் படத்தை சொல்லலாம். அதேமாதிரி இந்தப் பாட்டுல ஒரு இடத்துல விஜய் லேடி கெட்டப்ல வருவாரு, அதுக்கு விஜய் படத்தோட ஆரம்பத்துல இருந்தே ஒத்துக்கவே இல்லையாம், இல்லண்ணா கிண்டல் பண்ணுவாங்கன்னு சொல்லி தவிர்த்துக்கிட்டே இருந்தாராம். ஆனா குழந்தை பிறந்த குஷியில அவர் இருக்குற நேரம் பாத்து டைரக்டர் போய் விஜய்கிட்ட இதைப் பத்தி கேக்கவே பண்ணிடலாம்ணானு கூலா சொல்லியிருக்காரு.
சிம்ரன்

சிம்ரனோட கரியர்ல மிக முக்கியமான படம் இது. மிடில் கிளாஸ் குடுமபத்தைச் சேர்ந்த, தெரிந்தே தன் எதிர்கால வாழ்க்கைமேல ரிஸ்க் எடுக்குற பிரியா அப்படிங்கிற கேரக்டர்ல அசத்தலா நடிச்சிருப்பாங்க சிம்ரன். ஒரு பக்கம் ஹோம்லியாவும் இன்னொரு பக்கம் பாடல்கள்ல ரசிக்கும்படியான கிளாமர்லயும் சிம்ரனின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரொம்பவே அழகா இருக்கும். ஃபர்ஸ்ட் ஹாஃபில் கணவன்மீது அளவு கடந்த காதலை வைத்திருக்கும் வெகுளிப் பெண்ணாகவும் இரண்டாம் பாதியில் தன்னைத் தேடிவரும் கணவனை வெறுக்கும் பெண்ணாகவும் சிம்ரன் நடிச்சிருப்ப்பாங்க. இந்த இடத்துலதான் சிம்ரன் நடிப்பை நாம பாராட்டனும், செகண்ட் ஆஃப்ல அவங்க விஜய்யை வெறுக்கும் காட்சிகள்ல கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகியிருந்தாலும் ‘ஓவரா பண்ணுறாப்பா இந்த பொண்ணுன்னு’ ஆடியன்ஸ் எரிச்சல் ஆகியிருப்பாங்க. கொஞ்சம் வீக்கா பர்ஃபாமென்ஸ் பண்ணியிருந்தா அந்தக் கேரக்டர் மட்டுமில்ல திரைக்கதையும் அடிவாங்கியிருக்கும். ஆனா சரியான மீட்டர்ல, சிம்ரன் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, அந்த பொண்ணு நடந்துக்கிறதும் சரிதானப்பா என ஆடியன்ஸை நினைக்கவைத்திருப்பார். அப்படி தன்னுடைய திறமையால் படத்தின் வெற்றிக்கு வலுசேர்த்த சிம்ரனின் பங்களிப்பு மிக முக்கியமானது.
விஜய் -செல்வபாரதி கெமிஸ்ட்ரி

சுந்தர்.சியின் ஆஸ்தான வசனகர்த்தாவா அவரோட உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற பல படங்களின் வெற்றியில முக்கிய பங்கு வகிச்ச செல்வபாரதியை நினைத்தேன் வந்தாய் படம் மூலமா விஜய்தான் இயக்குநரா அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் ஹிட் ஆக, அந்த காம்போ திரும்பவும் ‘தாலாட்ட வருவளா’ அப்படிங்கிற பேர்ல விஜய்க்கு ஜோடியா இஷா கோபிகர், ரம்பான்னு இரண்டு ஹீரோயின்களோட ஒரு படத்தை பிளான் பண்ணாங்க, ஆனா அந்தப் படம் ட்ராப் ஆகவே, அதன்பிறகுதான் ‘பிரியமானவளே’ படம் மூலமா மீண்டும் இந்த காம்போ சேர்ந்துச்சு. பொதுவா மூத்த இயக்குநர்கள் விஜய்யை பேர் சொல்லியோ இளையவர்கள் சார்னோ கூப்பிட்டிக்கிட்டிருந்தப்போ முதன்முறையா விஜய்யை தம்பின்னு கூப்பிட்ட டைரக்டர்னா அது செல்வபாரதிதான். அந்த அளவுக்கு அவங்களுக்கு இடையில ஒரு ஸ்டிராங் கெமிஸ்ட்ரி உருவாகியிருந்துச்சு.
எந்த அளவுக்குன்னா தெலுங்கு ஒரிஜினல் படத்தை பாத்தவுடனே விஜய் செல்வபாரதிகிட்ட, ‘ண்ணா, செகண்ட் ஆஃப்ல ஹீரோ கேரக்டர் நெகட்டிவ் ஆகிடுது. நான் இந்தப் படத்தை பண்ணலைண்னானு சொல்லி மறுத்திருக்காரு. ஆனா டைரக்டர் செல்வபாரதிதான் விஜய்கிட்ட, அப்படி ஒரு ஃபீல் வராத மாதிரி உங்க சைடும் நியாயம் இருக்குங்கிற மாதிரி நான் டயலாக்ஸ் எழுதிக்கிறேன்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணவே, உங்கள நம்பிதான் பண்றேன்னா என்னை வில்லனா காட்டிடாதீங்க அப்படின்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு விஜய் நடிச்சார். அதுக்கேத்த மாதிரி செல்வபாரதியும் தெலுங்கை விட தமிழ்ல இன்னும் இந்தப் படத்தை அழகா மெருகேத்தியிருந்தாரு. உதாரணத்துக்கு, விஜய், சிம்ரன்கிட்ட முதன்முதலா அக்ரீமெண்ட் பத்தி சொல்ற சீனை எடுத்துக்கலாம். இந்த சீன் தெலுங்குல சாதாரணமா ஒரு ஆஃபிஸ்குள்ள நடக்குற கான்வர்சேசனாதான் வெச்சிருப்பாங்க. அதுவே தமிழ்ல, இவ்வளவு பெரிய விஷயம் பேசும்போதும்கூட ஹீரோவோட மனநிலை எவ்வளவு கேஷூவலா இருக்குன்னு காட்டுற மாதிரி பேஸ்கட் பால் விளையாடிக்கிட்டே விஜய் அந்த விஷயத்தைப் பத்தி பேசுறமாதிரி செல்வபாரதி டைரக்ட் பண்ணியிருப்பாரு. இப்படி செல்வபாரதி இந்தப் படத்துல மெருகேத்துன பல விசயங்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்துச்சுன்னு சொல்லலாம்.
Also Read – ரெனே, ஜோ, ஹாசினி – எந்த கேரக்டரை ஆண்களுக்குப் பிடிக்கும்?!
எஸ்.ஏ.ராஜ்குமார்
தொட்டதெல்லாம் ஹிட்டுன்னு எஸ்.ஏ.ராஜ்குமார் இருந்த காலம் அதுங்கிறதால இந்தப் பட பாட்டு எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிச்சுது. அதிலும் குறிப்பாக, என்னவோ என்னவோ பாட்டையும் எனக்கொரு சிநேகிதி பாட்டையும் முனுமுனுக்காதவர்களையே அப்போது பார்க்க முடியாது. அந்த டைம்ல எந்த ஸ்கூல் ஆண்டுவிழாவுலயும் வெல்கம் கேர்ள் வெல்கம் பாய்ஸ் பாட்டுல ஒரு பர்ஃபாமென்ஸ் கண்டிப்பா இருக்கும். அந்த அளவுக்கு இந்தப் பட ஆல்பம் நல்ல ரீச் கொடுத்துச்சு. பாடல்கள் ஒருபுறம் இப்படி என்றால், பின்னணி இசையிலும் எஸ்.ஏ.ராஜ்குமார் அசத்தியிருப்பார். விஜய் ஆக்ஸிடேண்டாகி ட்ரீட்மெண்ட்ல இருக்குறப்போ உன்னிமேனன் குரல்ல ஒரு பிட் ஸாங் வரும் பாருங்க , கதையின் எமோசனை டக்கென பத்து மாடி உயரத்துக்குக் கொண்டுபோயிருக்கும். அந்த அளவுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப் படத்துக்கு தந்த உழைப்பும் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இப்படியான பல பெருமைகளைக் கொண்ட ‘பிரியமானவளே’ படம் மிகப்பெரிய வசூலாகி ஹிட் ஆனதும், விஜய்யோட கரியர்ல முக்கியமான ஒரு படமா அமைஞ்சதும் இல்லாம, அந்தக் காலகட்டத்துல திருமண உறவில் தோல்வியடைஞ்ச பலரை மீண்டும் ஒண்ணு சேர்க்கவும் செய்தது. இது எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கும் பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கு அவர் பிரியமானவளே மாதிரி ஒரு படம் பண்ணனும்ங்கிற மிகப்பெரிய ஏக்கத்தை தந்துக்கிட்டுதான் இருக்கு. அதுதான் ‘பிரியமானவளே’ படத்தோட மிகப்பெரிய வெற்றி.





Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.