`இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனை ஏன் எல்லாருக்கும் புடிக்கும்?’ – அட்டகாசமான 5 காரணங்கள்!

பிரபுதேவானு சொன்னதும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் அப்டின்றதுதான் எல்லாருக்கும் நியாபகம் வரும். அப்படிப்பட்ட பிரபுதேவா மைக்கேல் ஜாக்சனை சந்திச்ச சுவாரஸ்யமான தருணம் பற்றிகேள்விபட்டிருக்கீங்களா? பிரபுதேவாவிடம் இருக்கும் அந்த ஒரு மேஜிக் பத்தி தெரியுமா? பிரபுதேவா ஒரு பாட்டு பாடிருக்காரு… அந்தப் பாட்டை கேட்ருக்கீங்களா? பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் ஆன கதை தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்க முழுசா பங்க!

பிரபுதேவா

என்றும் இளமை.. எப்போதும் புதுமை!

தமிழ் சினிமா ஹீரோக்கள்ல உங்களுக்கு வயசே ஆகாதா?’ அப்டினு ரெண்டு பேர பார்த்துதான் கேட்கத்தோணும். ஒண்ணு, விஜய். இன்னொன்னு, பிரபுதேவா.90’ஸ் கிட்ஸோட குழந்தைப் பருவத்துல இருந்து 2’கே கிட்ஸோட கல்யாணப் பருவம் வரைக்கும் காலங்கள் ஓடினாலும் காதருகே நரைத்தமுடி ஒன்றில்லை’னு கவிப்பேரரசுவையே மிஞ்சுற அளவுக்கு பிரபுதேவாவைப் பார்த்து கவிதை எழுதலாம். மனுஷன் அப்படியே இருக்காரு. காதலன்ல நடிச்சப்போ பிரபுதேவாவுக்கு 21 வயசு… இப்போ 49 வயசு… இப்பவும் காதலன் படத்துல வர்ற அதே மாதிரிதான் இருக்காரு. அதுமட்டுமல்ல இன்றைய டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நடன அமைப்புகள்லயும் சரி, டிரெஸ்ஸிங் சென்ஸ்லயும் சரி பக்கா அப்டேட்டா இருக்காரு. ஒரு பக்கா ஹீரோக்கு இதெல்லாம்தான முக்கியம். `வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே இருக்கு’… ஆனால், ஒரு ரெக்வஸ்ட்… அப்படியே உங்க ஃபேன்ஸை மனசுல வைச்சு டிரெண்டிங்கா நல்ல கதையும் சூஸ் பண்ணி நடிச்சு பழைய பன்னீர் செல்வமா நீங்க வரணும்.

பிரபுதேவா
பிரபுதேவா

இந்தியாவின் ட்ரெண்ட்செட்டர் மாஸ்டர் பிரபுதேவா

உலக அளவுல டேன்ஸ்ல தனக்குனு தனி ட்ரெண்டை உருவாக்கி பல இளைஞர்களை/இளைஞிகளை தன்பக்கம் ஈர்த்தவர், மைக்கேல் ஜாக்சன். அவரோட வெறித்தனமான ஃபேன்தான் பிரபுதேவா. 1999-ல மைக்கேல் ஜாக்சன் மும்பைக்கு வந்திருந்தாரு. அப்போ உலகின் மைக்கேல் ஜாக்சனும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனும் சந்தித்துக்கொள்ளும் வரலாற்று சம்பவமும் நடந்துச்சு. சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துல மைக்கேல் ஜாக்சனோட சிலையை திறந்து வைச்சு பிரபுதேவா பேசும்போது, “மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவசர அவசரமா ஃப்ளைட் புடிச்சு போனேன். ஆனால், நிகழ்ச்சியில அவரை மீட் பண்ண முடியலை. ஆனால், அந்த நிகழ்ச்சியோட ஒருங்கிணைப்பாளர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் மீட் பண்ண சொன்னாங்க. நானும் போனேன். அவரை சுத்தி நிறைய செக்யூரிட்டி இருந்தாங்க. அவங்க என்னைப் பத்தி அவர்கிட்ட சொன்னாங்க. அவரோட கையை புடிச்சு ஷேக்ஹேண்ட் பண்ண போனேன். ஆனால், அவர் என்னைக் கட்டிப்புடிச்சாரு. வாயடைச்சுப்போய்ட்டேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது” அப்டினு நெகிழ்ந்துபோய் சொன்னாரு.

பிரபுதேவா
பிரபுதேவா

வெறுமனே வாயால மட்டும் சொல்லாமல் அவரோட ஃபேன்னு சொல்லிக்கிற அளவுக்கு பிரபுதேவாவும் பல சம்பவங்களை இந்தியால பண்ணியிருக்காரு. பிரபுதேவா ஃபீல்டுக்கு வந்தப்புறம் அதுவரைக்கும் இருந்த டேன்ஸ் ஸ்டெப் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினாருனே சொல்லலாம். ஷார்ட்டா சொல்லணும்னா மியூசிக்ல ஏ.ஆர்.ரஹ்மான் பண்ண மாதிரி டேன்ஸ்ல பிரபுதேவா பண்ணாரு. டேன்ஸ்ல மட்டுமில்ல பேகி பேண்ட் ஸ்டைல்கூட இவர் பண்ண ட்ரெண்ட்தான். மைக்கேல் ஜாக்ஸன்னு சொன்னதும் நமக்கு சில ஸ்டெப்ஸ் நியாபகம் வரும்ல.. அப்படித்தான் பிரபுதேவானு சொன்னதும் முக்காலா முக்காபுலா ஸ்டெப், போக்கிரி சட்டை ஸ்டெப், வெண்ணிலவே வெண்ணிலவே ஸ்டெப், ஊர்வசி ஊர்வசி ஸ்டெப், சல்மார் ஸ்டெப் இதெல்லாம் நியாபகம் வரும். ஆடவருதோ இல்லையோ இந்தப் பாட்டைக் கேட்டா அந்த ஸ்டெப் போட தோணும். இந்த ட்ரெண்ட் பிரபுதேவாக்கிட்ட இருந்துதான் தொடங்கிச்சுனு சொல்லணும்.

எல்லாரையும் ஆடத்தூண்டும்.. யாராலும் ஆட முடியாத பிரபுதேவா மூவ்ஸ்!

பிரபுதேவா ஆடுற டேன்ஸ பார்த்தா நமக்கும் ஆடணும்னு தோணும். ஆனால், அவர் போடுற சிம்பிள் ஸ்டெப்பைகூட நம்மளால போட முடியாது. ஆடும்போது செம ஸ்டைலா ஆடுவாரு. அதுக்காகவே பொறந்தவர்போல ஆடுவாரு. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி அந்த ஸ்டெப்லாம் நாம ட்ரை பண்ணி யப்பா முடியலடா சாமினு படுத்துருப்போம். பாலிவுட் ஸ்டார்ஸ்லாம் சொல்லுவாங்க பிரபுதேவா ஸ்டைல் டேன்ஸ் ஆடுறதுலாம் ரொம்பவே கஷ்டம். அதுவும் பிரபுதேவா முன்னாடி ஆடுறது ரொம்பவே எர்வஸா இருக்கும்’ அப்டினு. அதுதான் பிரபுதேவா மேஜிக். அந்த மேஜிக் தெரிஞ்சாதான் நாமளும் பிரபுதேவா ஆயிடுவோமே! ஆனால், ஒண்ணு பிரபுதேவாவைப் பார்த்து நடனம் கத்துக்கிட்டு ஸ்டேஜ்ல கலக்குனவங்க நிறைய பேர் இருக்காங்க. இதுக்கு சின்ன எக்ஸாம்பிள்உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ போன்ற நிகழ்ச்சிகள். எப்படி மறக்க முடியும் இந்த நிகழ்ச்சியையெல்லாம்?! டீனேஜ்லயே கோரியோகிராஃப் பண்ண ஆரம்பிச்ச பிரபுதேவா இதுவரைக்கும் 100 படத்துக்கும் மேல கோரியோகிராஃப் பண்னியிருக்காரு. அதுல ரெண்டு படத்துகு நேஷனல் அவார்ட் வாங்கியிருக்காரு.

பிரபுதேவா
பிரபுதேவா

நடனத்துக்குள் ஒரு நடிப்பு… நடிப்புக்குள் ஒரு நடனம்

நடனத்துலதான் கலக்குவாருனு பார்த்தா… இன்னொரு பக்கம் நடிப்பை அசால்ட்டா டீல் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாரு. டாப் ஸ்டார் பிரசாந்துக்கு சமமா 90,2000-களில் பிரபுதேவாவும் நடிப்புல பேசப்பட்டாரு. அதாவது இன்னைக்கு அஜித் – விஜய் மாதிரி அப்போ அவங்க இருந்தாங்க. இந்து படத்துல தொடங்கி பொன்மாணிக்க வேல் வரைக்கும் 50 படங்கள் நடிச்சிட்டாரு. இன்னும் நிறைய படங்கள் ஷூட்டிங்ல இருக்கு. இவர் நடிச்ச காதலன் படத்துக்குலாம் நம்மள்ல பலபேர் சில்லறைய சிதற விட்ருப்போம். இன்னைக்கும் பலரோட ஃபேவரைட்ல இந்தப் படம் இருக்கும். நேஷனல் அவார்டு, ஃபிலிம்ஃபேர் அவார்டுனு ஏகப்பட்ட அவார்டுகளையும் இந்தப் படம் வாங்கிச்சு. மின்சாரக்கனவுல ஒரு காமெடி கலந்த எமோஷனல் கேரக்டர், காதலா காதலால காமெடி கேரக்டர், பெண்ணின் மனதைத் தொட்டு படத்துல ஏக்கமும் குற்றவுணர்ச்சியும் நிறைந்த கேரக்டர், ஏழையின் சிரிப்பின் படத்துல ரொம்ப பாவமான கேரக்டர், வானத்தைப் போல படத்துல செண்டிமெண்ட் கேரக்டர், 123 படத்துல பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டர்னு எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமா கரெக்டா நடிச்சு தூள் கிளப்பிருவாரு. அதேநேரம் படம் ஃபுல்லா இவரோட பாடிலாங்குவேஜ்ல ஒரு நடனம் இருந்துட்டேதான் இருக்கும். அதுபோல நடனம் ஆடும்போது ஃபேஸ் எக்ஸ்பிரஷன்லயும் பின்னி பிடலெடுத்துருவாரு. இவர் நடிச்ச ஏபிசிடி படம் எல்லாம் டேன்ஸ் புடிச்சவங்களுக்கு ரொம்பவே புடிச்ச படம்.

பிரபுதேவா
பிரபுதேவா

செம்ம என்கேஜிங் கதை சொல்லி

பிரபுதேவாவோட வீட்டுல யாருமே சினிமா பத்தி அதிகம் பேசிக்கமாட்டாங்களாம். இந்தியாவே மைக்கேல் ஜாக்சன்னும், தமிழ்நாடே சிறந்த நடிகன்னும் பிரபுதேவாவை கொண்டாடிக்கிட்டு இருக்கு. ஆனால், அவங்க அப்பா ஒரே ஒருதடவைதான் பிரபுதேவாவை பாராட்டியிருக்காராம். அது எப்போனா… பிரபுதேவா முதல் முதல்ல தெலுங்குல டைரக்ட் பண்ண Nuvvostanante Nenoddantana' படத்தைப் பார்த்துட்டுவெல் டன்’ அப்டினு சொன்னாராம். இவர் தமிழ்ல எடுத்த முதல் படம் போக்கிரி. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி மறப்பாங்க. இந்தப் படம் வெளியானப்போ பிரபுதேவாவையும் சேர்த்து தலைல தூக்கி வைச்சு கொண்டாடுனாங்க. ஒரு படத்தை ரீமேக் பண்றது ரொம்பவே கஷ்டம். கொஞ்சம் சொதப்பிச்சுனாலும் ரெண்டு இண்டஸ்ட்ரீல இருந்தும் அடிவிழும். ஆனால், அதை அழகா ஹேண்டில் பண்ணி என்கேஜிங்கா கதை சொல்லி ஆடியன்ஸை உட்கார வைச்சிருப்பாரு. இவர் பாலிவுட்ல அக்‌ஷய் குமார வைச்சு எடுத்த ரௌடி ரத்தோர் படம்லாம் 200 கோடி வசூல் பண்ணி சாதனைப் படைச்சுச்சு. அப்புறம் பாலிவுட்ல மோஸ்ட் வாண்டட் டைரக்டராகவும் இருந்தாரு. பிரபுதேவா சில பாடல்களை பாடவும் செய்திருக்காரு. சுயம்வரம் படத்துல வர்ற சிவ சிவ சிவ சங்கரா பாட்டு இவர் பாடினதுதான். ஆரம்பத்துல விக்ரம்தான் இவருக்கு வாய்ஸ் கொடுத்தாரு. ஆனால், பின்னாடி பாட்டு பாடுற அளவுக்கு வந்ததுலாம் வேறலெவல்தான? அப்புறம் சார்லி சாப்ளின் 2, தேவி 2, யங் மங் சங் படத்துலலாம் ஒரு பாட்டை எழுதவும் செய்திருக்காரு.

ரௌடி ரத்தோர்
ரௌடி ரத்தோர்

பிரபுதேவாவை உங்களுக்கு ஏன் பிடிக்கும்ன்றதுக்கான காரணத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read: பிரபலத்தின் டப்பிங் முதல் தேசிய விருது வரை… பிரபுதேவா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top