யுவனோட மனைவி ஸஃப்ரூன் நிஸார்கிட்ட ஒரு பேட்டில, “வீட்டுல ட்ரக்ஸ் வைச்சிருக்குறதுக்கு கட்டணம்லா கரெக்ட்டா கட்றீங்களா?”னு காமெடியா கேள்வி கேப்பாங்க. அதுக்கு ஸஃப்ரூன், “யுவன்தான? ஆமா… வீட்டுல 70 கிலோ ட்ரக்ஸ் வைச்சிருக்கோம். எங்கப் போனாலும் கூடவே எடுத்துட்டுப் போறேன்”ன்னு ஃபன்னியா ரிப்ளை பண்ணுவாங்க. ஸஃப்ரூன் கிலோ கணக்குல ட்ரக்ஸ் வைச்சிட்டு சுத்துறாங்கனு சொன்னா… நம்ம மொபைல்ல ஜி.பி கணக்குல ட்ரக்ஸ் வைச்சிட்டு சுத்துறோம்னு சொல்லலாம். அந்த மனுஷனோட பாட்டைக் கேக்காமல் ஒரு நாளாவது நம்ம வாழ்க்கைல கடந்து போகுமா?னு கேட்டா… டவுட்தான். ‘யுவன் ஷங்கர் ராஜா’ இஸ் பேக்’னு சொல்லுவாங்க. ஆனால், என்னையெல்லாம் கேட்டா ‘யுவன் இஸ் ஆல்வேஸ் வித் மீ’னுதான் சொல்லுவேன். சரி, யுவன் ஷங்கர் ராஜா பாட்டையெல்லாம் ஏன் ட்ரக்ஸ்னு சொல்றோம்? அதைத்தான் இந்த வீடியோல 4 ‘நச்’ பாயிண்ட்ல பார்க்கப்போறோம்.
பாட்டுல யுவன் வைக்கிற மேஜிக் மொமண்ட்
இயக்குநர் பார்த்திபன், “எல்லாரும் இசைக்கருவிகள்ல இருந்து மியூசிக் போடுவாங்க. ஆனால், யுவன் இதயத்துல இருந்து மியூசிக் போடுவாரு”னு ஒரு வீடியோல பேசியிருப்பாரு. அதனாலயோ, என்னவோ, அவருடைய பாடல்கள் எல்லாம் ஸ்ட்ரெயிட்டா இதயத்தை டச் பண்ணிருது. அதுக்கு அவர் ஒரு மேஜிக் டெக்னிக் வைச்சிருக்காரு. எல்லாப்பாட்டுலயும் ஒரு மேஜிக் மொமண்ட யுவன் கண்டிப்பா கிரியேட் பண்ணிடுவாரு. அந்த மொமண்ட்தான் அந்தப் பாட்டை நம்மள திரும்ப திரும்ப கேட்க வைக்குது. யுவனே அந்த மொமண்ட் பத்தி, “நான் வேணும்னுதான் அந்த மொமண்ட கிரியேட் பண்றேன். அப்போதான் அந்தப் பாட்டை அந்த மொமண்டுக்காகவே திரும்ப கேக்கணும்னு தோணும்’னு சொல்லுவாரு.
எக்ஸாம்பிள்க்கு சொல்லணும்னா… காதல் கொண்டேன் படத்துல ‘தேவதையைக் கண்டேன்’ பாட்டுல வயலின் வாசிக்கிற மியூசிக் ஒண்ணு வரும். திரும்ப திரும்ப அதை லூப்ல கேக்கணும்னு தோணும். 7 ஜி ரெயின்போ காலணில ‘கண்பேசும் வார்த்தைகள்’ பாட்டுல மழைல ஆடும்போது வர்ற மியூசிக், நந்தா படத்துல ‘முன்பனியா பாட்டுல’ பாட்டு தொடங்கும்போது வர்ற மியூசிக், சர்வம் படத்துல ‘சிறகுகள்’ பாட்டுல அழகே நீ எங்கிருக்கிறாய் வரிகள் வர்ற இடம் இப்படி சொல்லிட்டே போகலாம். தரமணி, கற்றது தமிழ், தங்க மீன்கள்ல உள்ள பாட்டுலலாம் எல்லாமே மேஜிக் மொமண்ட்ஸாதான் தோணும்.
பாடல் வரிகள்
“நான் லவ் பண்ணும்போது யுவன் பாட்டுதான் கேட்டேன், லஃப் ஃபெயிலியர் ஆனப்போ யுவன் பாட்டுதான் கேட்டேன். முதல் படம் பண்ணேன். அப்பவும் யுவன் மியூசிக்தான்”னு டைரக்டர் மித்ரன் சொல்லுவாரு. அவரோட வாழ்க்கைல மட்டுமில்ல. எல்லாரோட வாழ்க்கைலயும் எல்லா எமோஷன்லையும் கனெக்ட் ஆகுறது யுவனோட மியூசிக்காதான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு அவர் பாட்டுல இருக்குற பாடல் வரிகளும் முக்கியம். யுவன் – வாலி, யுவன் – வைரமுத்து, யுவன் – பா.விஜய், யுவன் – தாமரை, யுவன் – யுகபாரதி இப்படி யுவன் சேர்ந்த எல்லாக்கூட்டணியும் வெற்றிதான். ஆனால், நமக்கு ரொம்பவே ஃபேவரைட்டான காம்போனா யுவன் – நா.முத்துக்குமார், யுவன் – சினேகன்.
சொல்ல முடியாத துயரங்கள், சொல்ல முடியாத அன்பு எல்லாத்தையும் இவர்கள் தங்களோட வரிகள்ல சொல்லுவாங்க. நம்ம இதைதான சொல்ல நினைச்சோம்னு வரிகளைக் கேட்டதும் தோணும். எக்ஸாம்பிளா சொல்லணும்னா நா.முத்துகுமார் எழுதின “இது காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை, கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி, கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம், உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்”. அதேமாதிரி சினேகன் எழுதின, “ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே, ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா” – இப்படி யுவன் இசையில் நா.முத்துக்குமாரும் சினேகனும் எழுதுன வரிகளை சொல்லிட்டே போகலாம். ரொம்பவே எதார்த்தமான வரிகளைதான் யுவன் எப்போதும் தன்னோட பாடல்கள்ல பயன்படுத்திட்டே வந்திருக்காரு. இனியும் அப்படித்தான். ஒருநாளில் பாட்டுலாம் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆறுதல் சொன்ன வரிகள்.
வாய்ஸ்
ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட ஒரு மேடைல யுவனோட வாய்ஸ் ஏன் உங்களுக்கு புடிக்கும்னு கேப்பாங்க. அதுக்கு ரஹ்மான், “யுவன் வாய்ஸ்ல ஒரு ஈரம் இருக்கு”னு சொல்லுவாரு. அந்த ஈரம்தான் நம்மளை பல சமயங்கள்ல ஈர உணர்வோடு இருக்க வைக்குது. ஒரு பாட்டு நம்மள உருக வைக்கும்னு சொல்லுவாங்கல்ல, அதே யுவன் பாட்டா இருந்தா நம்மள கண்டிப்பா அந்த மொமண்ட்ல இருந்து மறக்க வைச்சிரும். ‘போகாதே போகாதே, இதுவரை இல்லாத உணர்விது, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஒருநாளில் வாழ்க்கை இங்கே, உனக்காகத்தானே, நட்புக்குள்ளே பிரிவொன்று வந்தது, டோப் டிராக், பொய் சொல்ல” இப்படி யுவன் பாடுன எல்லாப் பாட்டுமே நம்மள எதாவது ஒரு பாய்ண்ட்ல அழ வைச்சிரும். அந்த வாய்ஸ் நம்மள ஏதோ பண்ணும். அதை எப்போதும் யாராலயும் சொல்ல முடியுறதில்ல.
வயலின், பியானோ, ஃப்ளூட்
வயலின், பியானோ மியூசிக்கை யுவன் யூஸ் பண்ற இடங்களும் அவ்வளவு கனமா இருக்கும். அதை நம்மளால கடந்து போகவே முடியாது. காதல் கொண்டேன்ல திவ்யா இண்ட்ரோ மியூசிக் கொஞ்சம் எனர்ஜியை தரும். சிவா மனசுல சக்தில டைட்டில் பி.ஜி.எம்ல வயலின் – பியானோ ரெண்டுமே சேர்ந்து வரும். அது ஒருவிதமான போதையை தரும். மௌனம் பேசியதேல ஒரு லவ் பி.ஜி.எம் வருமே ஐயோ, அதெல்லாம் அடிச்சிக்க இன்னொரு பி.ஜி.எம் வரவே இல்லேல. 7 ஜி ரெயின்போ காலணில வர்ற ஃப்ளூட் + பியானோ மியூசிக், பருத்தி வீரன்ல வர்ற ஃப்ளூட் மியூசி, வல்லவன்ல வர்ற வயலின் தீம், சர்வம்ல வர்ற பியானோ தீம், பையால வர்ற வயலின் + பியானோ தீம் இப்படி வயலினை வைச்சு யுவன் விளையாடுன தீம்களோட பட்டியலும் ரொம்ப பெசு. “நான் ஒரு பேருக்கு தியேட்டர்ல கத்துனேனா… அது யுவனுக்குதான்”னு பா.ரஞ்சித் சொல்லுவாரு. அவரு மட்டுமா இன்னைக்கு தமிழ்நாட்டுல்ல இருக்குற நிறைய பேர் ஒரு மியூசிக் டைரக்டர் பேருக்கு கத்துறாங்கனா அது யுவனுக்குதான். அந்த மாஸ் எப்பவுமே குறையாது. அதுக்குக் காரணம் அந்த ஆளு இன்னைக்கும் ட்ரக்ஸா பலரோட பிளேலிஸ்ட்லயும் இருக்குறதுதான். என்ன வார்த்தையைப் போட்டு பேசுனாலும் யுவனோட மியூசிக் தரும் சரியான உணர்வுகளை வெளிப்படுத்தவே முடியாது. அதுதான் யுவனிஸம். எப்போலாம் தனியா இருக்குமோ அப்போலாம் “ஐ வில் தேர் ஃபார் யூ” பாட்டு கேட்டோம்னா, நமக்கு யுவன் இருக்காருனு தோணும். ஃபேன்ஸ்க்கு அதுபோதும்.
யுவனோட பாட்டுல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: டி.ராஜேந்தரை ஏன் எல்லாருக்கும் பிடிக்கும்? 3 காரணங்கள்!