மம்முட்டி நடிப்பில் ஏன் மாஸ்டர்… 4 ‘நச்’ காரணங்கள்!

நம்ம தாத்தா, அப்பாவோட Young ஸ்டேஜ்லலாம் மலையாள படம் பார்த்துட்டு வரேன்னு சொன்னா மேலயும் கீழயும் பார்ப்பாங்களாம். ஏன், நம்மளோட சின்ன வயசுலகூட மலையாள படம்ன்றது கொஞ்சம் அப்படி இப்படியான படம்னுதான் சொல்லுவாங்க. ஆனால், இன்னைக்கு அது மாறி ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் மலையாள திரையுலகை கவனிக்குது. மலையாள படங்களை பல மொழிகள்ல ரீமேக் பண்றாங்க. இப்படி ஒரு மாற்றத்துக்கு மம்முட்டி மற்றும் அவரை இயக்கிய இயக்குநர்கள் முக்கியமான ஒரு காரணம். இதை நான் சொல்லல… பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் சொல்லியிருக்காங்க.

மம்முட்டி
மம்முட்டி

மம்முட்டியோட படங்கள் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறமா இப்படியெல்லாம் யதார்த்த சினிமாக்கள் எடுக்கலாமா? இப்படிலாம் மாஸ் காட்டலாமா?னு மூக்கு மேல விரல வைச்சு மல்லுவுட்ட பார்க்க ஆரம்பிச்சாங்க. நம்ம கற்றது தமிழ் ராம் ஒரு பேட்டில, “நான் என்னோட வாழ்க்கைல மூணு பேரை மாஸ்டர்ஸா நினைக்கிறேன். ஒண்ணு பாலு மகேந்திரா, எடிட்டிங்ல ஸ்ரீகர் பிரசாத், நடிப்புல மம்முட்டி. நான் நடிப்பு சம்பந்த வைச்சிருந்த தியரியை அப்படியே அசைச்சு பார்த்துட்டாரு”னு சொல்லுவாரு. மம்முட்டி நடிப்புல ஏன் மாஸ்டர்? அதுக்கான 4 ‘நச்’ காரணங்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஹீரோ இல்லை கேரக்டர்

இன்னைக்கு இந்தியால முக்கியமான நடிகர்களாக இருக்குற எல்லாருமே தங்களோட முதல் 2, 3 படங்கள்ல கேரக்டரா மட்டுமே தெரிவாங்க. அடுத்தடுத்து நடிக்கிற படங்கள்லயெல்லாம் அந்த கேரக்டர் மறைந்து அவங்களோட ஒரிஜினல் முகம் மட்டுமே தெரிய ஆரம்பிக்கும். ஆனால், மம்முட்டியோட கதையே வேற. ஒவ்வொரு படத்துலயும் இன்ட்ரோ ஷாட்ல மட்டும்தான் மம்முட்டி தெரிவாரு. கதைக்குள்ள போகப்போக மம்முட்டி மறைஞ்சு அந்த கேரக்டர் மட்டும்தான் தெரியும். அதுதான் மம்முட்டியோட யுனிக் ஸ்டைல். எக்ஸாம்பிளா சொல்லணும்னா, சேதுராம ஐயர் கேரக்டர். 30 வருஷமா படத்துல வந்த கேரக்டர் நம்மளக் கட்டிப் போட்டு வைச்சிருக்குனா சும்மாவா. மலையாள சினிமாவின் முகத்தை மாற்றிய அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவ நாயர், பத்மராஜன், கே.ஜி. ஜார்ஜ், ஐ.வி.சசி போன்றவர்களின் கேரக்டர்களுக்கு அப்படியே உயிர் கொடுத்தது மம்முட்டிதான். எவ்வளவு வேஷம் வேணும்னாலும் போடுவாரு.

சேதுராம ஐயர்
சேதுராம ஐயர்

வரலாற்று திரைப்படங்கள்ல நடிக்கணும்னா வேகமும் கோபமும் தேவை. அதுக்கும் மம்முட்டி பொருத்தமா இருப்பாரு. ‘ஒரு வடக்கன் வீரகதா’ படம், அவரை மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரா மாத்த முக்கியமான காரணமா அமைஞ்சுது. அந்தப் படத்துலகூட ‘சந்து’ கேரக்டர்தான் இன்னைக்கும் நமக்கு நியாபத்துல இருக்கும். ‘விதேயன்’ பாஸ்கரா படேலர், ‘நிறக்கூடு’ ரவி வர்மா, ‘நியூ டெல்லி’ ஜே.கே, ‘யாத்ரா’ உன்னிக்கிருஷ்ணன், ‘தனியாவர்த்தனம்’ பாலன் மாஸ்டர், ‘தளபதி’ தேவா, பொந்தன் மடா, ‘பேரன்பு’ அமுதவன் இப்படி மம்முட்டியால மட்டுமே சாத்தியமான பல கேரக்டர்களை சொல்லிட்டே போகலாம். ‘வடக்கன் வீரகதா’ படம்லாம் என்னால பண்ண முடியாதுனு மோகன்லாலே சொல்லுவாரு. அவரோட நடிப்பைப் பத்தி ரிசர்ச்சே பண்ணலாம்னு கேரளால இருக்குற பிரபல தியேட்டர் ஆர்டிஸ்ட்லாம் சொல்லுவாங்க. நடிப்பு மேல அவ்வளவு பேஷனோட, வெறியோட இருக்குற ஆளு, மம்முட்டி.

அம்பேத்கர்
அம்பேத்கர்

குறிப்பா சொல்லணும்னா இரண்டு படம். ஒண்ணு, டாக்டர் அம்பேத்கர் படம். இன்னொன்னு மதிலுகள். மனுஷனோட நடிப்புக்கு தீனி போட்ட படம்னே சொல்லலாம். அம்பேத்கரை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்தி, அவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக ஒரு ஏணியா இருந்தவரு மம்முட்டி. பூனே இன்ஸ்டிடியூட்ல அம்பேத்கர் வேஷம் போட்டு நடந்து வந்துருக்காரு. ஒருத்தர் ஓடி வந்து கால்ல விழுந்துருக்காரு. மம்முட்டிக்கு அவ்வளவு ஃபேன்ஸ் அங்க இருக்காங்கனு நினைச்சிருக்காரு. அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் விழுந்தது அம்பேத்கர் கால்லனு. இந்த இன்சிடண்ட் ஒண்ணு போதும். மனுஷன் எவ்வளவு இண்டன்ஸ் ஆன ஆள்னு தெரியுறதுக்கு. பஷீரோட மதிலுகள் நாவல்லயும் வைக்கம் முகமது பஷீரா கலக்கியிருப்பாரு. வீட்டு வேலைக்காரன்ல இருந்து முதலமைச்சர் கேரக்டர் வரைக்கும் மம்முட்டி பண்ணாத கேரக்டரே இல்லைனு சொல்லலாம். காமெடி, ஆக்‌ஷன், எமோஷனல்னு எல்லாத்துலயும் பின்னிருவாரு. அதனாலதான் சொல்றேன். அவர் எந்தப் படத்துலயும் ஹீரோ கிடையாது. கேரக்டர். அதுனாலதான் நம்மகூட அந்தக் கேரக்டர் ஒட்டிக்குது.

வட்டார மொழி

ஆனந்தம் படத்துக்கு அப்புறமா, “டப்பிங் பேசுறது எப்படினு மம்முட்டிக்கிட்ட மற்ற நடிகர்கள் கத்துக்கணும்னு” ஒரு விமர்சனம் எழுதுனாங்க. இந்தியால இருக்குற எல்லா பிரபல நடிகர்களுமே வேற மொழில தங்களோட படம் வெளியாகும்போது வேற ஆளுதான் அவங்க படத்துக்கு டப்பிங் பேசுவாங்க. ஏன், கமலே எல்லா மொழிலயும் டப்பிங் பேச மாட்டாரு. ஆனால், மம்முட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ்னு தன்னோட படங்கள் வெளியாகுற எல்லா மொழிலயும் தானேபோய் டப்பிங் பேசுவாரு. அவ்வளவு துல்லியமா இருக்கும். மலையாளத்துலயே வெரைட்டியா பேசுற ஒரு ஆளும் மம்முட்டிதான். கோழிக்கோடு ஸ்லாங், இடுக்கி ஸ்லாங், கோட்டயம் ஸ்லாங், திருச்சூர் ஸ்லாங், ஆலப்புழா ஸ்லாங், மலப்புரம் ஸ்லாங், எர்ணாகுளம் ஸ்லாங், கண்ணூர் ஸ்லாங், திருவனந்தபுரம் ஸ்லாங்னு எல்லாத்துலயும் மனுஷன் பிச்சி உதருவாரு. கடைக்கோடில இருக்குற மலையாளி வரைக்கும் அவரைக் கொண்டு போய் சேர்ந்ததுக்கு இந்த வட்டார மொழியை அவர் சிறப்பா பேசுறதும் முக்கியமான காரணம்.

மம்முட்டி
மம்முட்டி

வாசிப்புப் பழக்கம்

மம்முட்டிக்கு அருமையான வாசிப்பு பழக்கம் இருக்கு. வைக்கம் முகமது பஷீரையெல்லாம் எவ்வளவு தடவை வாசிச்சிருப்பாருனு நினைக்கிறேன். யூ டியூப்ல போய் பார்த்தாலே மம்முட்டி பஷீரை வாசிக்கிறதை அதிக தடவை பார்க்க முடியும். அதைத் தாண்டியும் மம்முட்டி எம்.டி.வாசிதேவன் நாயரில் இருந்து ஷாஜிகுமார் வரை பலரையும் வாசிக்கக்கூடியவர். பஷீரையெல்லாம் வாசிக்கலைனா மதிலுகள் படத்துல ‘வைக்கம் முகமது பஷீர்’ கேரக்டரை அவ்வளவு துல்லியமா பண்ண முடியாதுனு தியேட்டர் ஆர்டிஸ்ட் சொல்லுவாங்க. பஷீருக்கும் மம்முட்டிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டு பேருமே வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர்தான். ஒருவேளை நான் எழுத்தாளர் ஆகியிருந்தால் வைக்கம் முகமது குட்டியா இருந்துருப்பேன்னு மம்முட்டி ஒரு இன்டர்வியூல சொல்லியிருப்பாரு. நடிகனாகணும்னா ஒருநாளைக்கு 2 சிறுகதை படிங்க. ஒரு படம் பாருங்கனு சொல்லுவாங்க. அதை மம்முட்டி தெரிஞ்சோ, தெரியாமலோ இன்னைக்கு வரைக்கும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காருனே சொல்லலாம். அப்பப்போ, தனக்கு புக்ல புடிச்ச வரிகளை வாசிச்சு யூ டியூப்லயும் போடுவாரு. பஷீர், எம்.முகுந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர் எல்லாரும் அவரோட ஃபேவரைட் எழுத்தாளர்கள். மம்முட்டியும் கதைகள் எல்லாம் எழுதக்கூடியவர்தான்.

வாசிப்பு பழக்கம்
வாசிப்பு பழக்கம்

தேடிப்போய் வாங்கும் வாய்ப்பு

சினிமால அடுத்து என்ன கேரக்டர் நடிக்கப்போறோம்ன்ற ஆவலும் தேடலும் மம்முட்டிக்கு இன்னைக்கு வரைக்கும் இருந்தேட்டு இருக்கு. 350 படத்துக்கு மேல நடிச்சிட்டாரு. ஆனால், இன்னும் அந்த தேடல் இருக்குல அதுதான் மம்முட்டிக்கிட்ட இருக்குற ஆச்சரியமே. 2009-ல் வெளிவந்த இயக்குநர் ரஞ்சித்தின் ‘பாலேறி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதம்’ சினிமாவுக்கான வாய்ப்பை மம்முட்டி தேடிப் போய் வாங்கினாரு. அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘அனந்தரம்’ படத்தில் இரண்டாம் நாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் அவர்தான் தேடிப்போய் வாங்கியிருக்காரு. அதேமாதிரி புதிய இயக்குநர்கள் பலருக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்துருக்காரு. ப்ளஸ்ஸீல இருந்து அன்வர் ரஷீத் வரைக்கும் அவர் புதுமுக இயக்குநர்களுடன் சேந்து பணியாற்றியதற்கு எடுத்துக்காட்டு.

மம்முட்டி
மம்முட்டி

அவருடைய படங்கள் தோற்கலாம், மாஸ் காட்சிகள் வொர்க் அவுட் ஆகாமல் போகலாம். ஆனால், அவருள் இருக்குற அசாத்தியமான நடிகன் எந்தக் காரணத்தைக் கொண்டும் எப்போதும் தோற்கமாட்டான். அதனால் மட்டும்தான் மம்முட்டியை நடிப்பின் மாஸ்டர்!

மம்முட்டியோட படங்கள்ல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் இளவரசுனு உங்களுக்குத் தெரியுமா!? – நடிகர் இளவரசு கதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top