குஜராத்தில் கரையைக் கடக்க இருக்கும் `tauktae’ புயல் பற்றிய 5 தகவல்கள்..
- சமீபத்திய ஆண்டுகளில் அரபிக் கடலில் உருவான மிகவும் வலிமையான புயல்களில் டாக் தே புயலும் ஒன்று. இந்தப் புயல் நாளை குஜராத்தின் தென் பகுதியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மிகவும் கடுமையான மழையும் பலத்த சூறாவளி காற்றும் இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு சுமார் 175 கி.மீ வேகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2018-ம் ஆண்டு ஓமனைத் தாக்கிய மேகனு சூறாவளி, 2019-ம் ஆண்டு குஜராத்தை தாக்கிய வாயு சூறாவளி, 2010-ம் ஆண்டு மகாராஷ்டிராவை தாக்கிய நிசர்கா சூறாவளி ஆகியவைக்கு அடுத்து பருவமழைக்கு முந்தைய காலத்தில் அரபிக் கடலில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக உருவான சூறாவளி இந்த டாக் தே.
- வாயு சூறாவளி உருவாக 36 மணி நேரங்கள் ஆனது. மேகனு உருவாக நான்கு நாள்கள் ஆனது. நிசர்கா உருவாக ஐந்து நாள்கள் ஆனது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த டாக் தே சூறாவளியானது மே 14-ம் தேதி காலை தொடங்கி மே 16-ம் தேதி அதிகாலைக்குள் அதிதீவிர சூறாவளியாக உருவானது.

- தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த புயலால் பாதிப்படைந்துள்ளது. அதிகமாக பாதிப்படைவதாக வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு மேலாண்மைக் குழு தயார் நிலையில் உள்ளன.
- சூறாவளிக்கு டாக் தே (Tauktae) என்று பெயரிட்டுள்ளது, அண்டை நாடான மியான்மர் தான். `சப்தத்தை அதிகமாக எழுப்பும் பல்லி’ என்பதுதான் இதனுடைய பொருள்.
Also Read : ஜப்பானில் அதிக விலைக்கு விற்பனையாகும் ஈல் மீன்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்?