கேப்டன் பிரபாகரன் வெற்றிக்கு 5 காரணங்கள்!

அதுவரை தமிழ்சினிமாவுக்கு பெரிய நடிகர்களின் 100-வது படம் ஓடாது என்ற ஒரு கரும்புள்ளி இருந்தது. அதை விஜயகாந்த்- ஆர்.கே செல்வமணி கூட்டணி கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் தகர்த்தது. அந்தப் படத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்தளவு அந்தப் படத்திலும், பட உருவாக்கத்திலும் பல விஷயங்கள் உண்டு. விஜயகாந்த்க்கு இந்தப்படத்துக்குப் பின்னாலதான் கேப்டன்ங்குற பெயரே வந்துச்சு. அந்த அளவுக்கு ஆக்‌ஷனை ஏத்தி மாஸ் மசாலாவைக் கூட்டி கேப்டன் பிரபாகரனை கொடுத்திருந்தார், செல்வமணி. கை கால்களில் காயங்கள் ஏற்பட்டும்கூட தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்திருந்தார், விஜயகாந்த். இப்படி பலரின் வலிகளுக்குப் பின்னால் உருவான இப்படம் வெற்றிக்கான 5 காரணங்களைத்தான் பார்க்கப் போறோம்.

வீடியோவுக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன கேள்வி, கேப்டன் பிரபாகரன் படத்துல ரம்யா கிருஷ்ணன் ரோல், இன்னைக்கு அம்மா நடிகையா இருக்க ஒருத்தவங்க பண்ண வேண்டியது. அது யார்னு யோசுச்சு வைங்க அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.

Captain Prabhakaran
Captain Prabhakaran

விஜயகாந்த்

இந்த படத்துக்குப் பின் விஜயகாந்தின் பெயரே கேப்டன் என மாறியது. இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருப்பார். ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங் இல்லாத வித்தியாசமான விஜயகாந்த் சினிமா. ஆனால் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷன் சினிமா. அறிமுகக் காட்சியிலேயே வரும் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டு, டிரெயின் ஃபைட்டு, க்ளைமேக்ஸ் பைட்டுனு வெளுத்து வாங்கி விளையாடியிருப்பார், விஜயகாந்த். குறிப்பா ஆக்‌ஷன் காட்சிகள்ல ரொம்பவே ரிஸ்க் எடுத்துத்தான் விஜயகாந்த் பண்ணியிருப்பார். அதுலயும் ஆற்றைக் கடக்கிற காட்சியில் நடிக்கும்போது தோள்பட்டை வலியையும் பொருட்படுத்தாமல் நடித்திருப்பார். அதேபோல அம்மா செண்டிமெண்ட், நீளமான தேசப்பற்று வசனங்கள்னு வெரைட்டியும் காட்டியிருப்பார். அதே மாதிரி விஜயகாந்த்க்கு இந்த படத்துல டூயட்டோ, டான்ஸ் பாட்டோ இல்லவே இல்லை. ரெண்டு பாட்டுகளிலும் ரம்யா கிருஷ்ணனுக்கே இருந்தது.

ஆர்.கே செல்வமணி

RK Selvamani
RK Selvamani

25 லட்சம் சம்பளம் பேசப்பட்டு வேறு ஒரு நிறுவனத்துக்கு படம் செய்ய தயாராக இருந்தார், ஆர்.கே செல்வமணி. இப்போது அவரை அறிமுகப்படுத்திய ராவுத்தர் அழைத்து 25 ஆயிரம் சம்பளமாக பேசி கேப்டன் பிரபாகரனை பண்ணச் சொன்னார். தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்பதால் மறுப்பு ஏதுமே சொல்லாமல் சம்மதித்தார், ஆர்.கே செல்வமணி. ஹீரோவுக்கான ஓப்பனிங் பாடல்ங்குற கமர்சியல் டெம்ப்ளேட்டுகள்ல இருந்து விலகியே கேப்டன் பிரபாகரனை ஹேண்டில் பண்ணியிருப்பார், இயக்குநர் செல்வமணி. நிஜ வீரப்பன் கதையை எடுத்துக்கிட்டு மொத்தமா 45 நாட்கள் காடுகள்ல அலைஞ்சு வீரப்பனை பார்த்து, அதிகமான தகவல்களை திரட்டி, படத்தோட கதைக்கு பெரிய உழைப்பைக் கொடுத்திருந்தார். அதேபோல சூட்டிங் எடுக்கும்போது வெள்ளம் வந்து கேமராக்களை அடித்துக் கொண்டுபோக, தயாரிப்புத் தரப்பால் தாமதம் என பல இடர்பாடுகள் வந்த நேரங்களேயும், படத்தை முடிச்சுக் கொடுத்தார், செல்வமணி. படத்தின் கதை ஆரபிக்கும்போதே காமெடிக்கு இடம் இல்லாமல், ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து முழுவதுமாக படமாக்கியிருந்தார். அதேபோல வில்லனாக மன்சூர் அலிகானை முதல் காட்சியிலேயே பலமானவனாக காட்டி, கதைக்கும் அது வலு சேர்க்கிற மாதிரி படமாக்கியிருப்பார். படத்தோட வெற்றிக்கு காரணம்னா இப்படிக்கூட சொல்லலாம். அதாவது திரைக்கதையில ஒரு வில்லனை அழிக்க துணைகதாநாயகன் வர்றார். அந்த துணை கதாநாயகன் அடிக்கிற அடியே வில்லனுக்கு மசாஜ் செய்றது மாதிரியே இருக்கும். அவரையும் வில்லன் அழிச்சு, ஒரு குடும்பத்தையே பாம் போட்டு கொல்லுற பலம் வாய்ந்த வில்லனை அழிக்க ஹீரோ எப்ப வருவார்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க. ஹீரோ வில்லனை தேடி ஒவ்வொரு படியா ஏறி வருவார். ஆனா வில்லன் தப்பிச்சு போய்கிட்டே இருப்பார். எப்படா வில்லனை பிடிக்க போறார்னு மக்களை ஏங்க வச்சது. அதுக்காக ஹீரோ க்ளைமேக்ஸ்ல வில்லனை அடிக்கிறப்போ வில்லன் அடிமட்டும் வாங்க மாட்டார். அந்த ஃபைட்ல அவ்ளோ டஃப் இருக்கும். ஹீரோவுக்காக வில்லன் கேரெக்டரில் எந்த சமரசமும் செய்திருக்க மாட்டார், ஆர்.கே செல்வமணி. இதை அந்தக்கால அட்வென்ஞசர் ஆக்‌ஷன் பிலிம்னு கூட சொல்லலாம்.  

மன்சூர் அலிகான்

Mansoor Ali Khan
Mansoor Ali Khan

காதுல ஒரு கடுக்கன், கறைபடிஞ்ச பற்கள், தலையை ஒருபக்கம் சாய்ச்சு பேசுன வசனங்கள், கோபத்தில் சிரிக்கிற சிரிப்பு, பார்த்தவுடனே பதறவைக்குற உடல்மொழினு கேரெக்டராவே மாறியிருந்தார், மன்சூர். முகத்துல ரத்தம் தெறிக்க மிரட்டலான  அறிமுகத்துல சிரிப்பை வெளிப்படுத்துன அந்த சீன் ஹீரோவை விட பலமானவன் நான்னு நிருபிச்சார், மன்சூர். அதுவரைக்கும் அப்படி ஒரு வித்தியாசமான வில்லனை தமிழ்சினிமா பார்த்தில்லைனுகூட சொல்லலாம். இப்படி ஒரே படத்துல பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார், மன்சூர். ஆனா அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல இவர் பண்ண அலப்பறைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒருமுறை காதுல போட்டுருந்த கடுக்கன் கீழே விழுந்துடுச்சு. அசிஸ்டெண்ட் டைரக்டர் ‘அண்ணே கடுக்கன் கீழ் விழுந்துருச்சு, அதை தேடுங்க’னு சொல்ல, அதுக்கு மன்சூர், “நீயே போய் பாருடா”னு சொல்ல, அதைக் கேட்ட ஆர்.கே செல்வமணி ஓங்கி பளார்னு மன்சூரை அடிச்சிருக்கார். அதுக்கு மன்சூர் சொன்ன பதில்தான் அல்டிமேட் “அண்ணே, வீரப்பன்கிட்ட எப்படி பேசணும்னு அவனுக்கு சொல்லிக் கொடுங்கண்ணே”னு சொல்லியிருக்கார். இதைக் கேட்ட ஆர்.கே செல்வமணி ‘என்ன இவன் இப்படி பண்ணிட்டிருக்கான்’னு நினைச்சிருக்கார். அடுத்ததா குதிரை ஓட்டுற சீன்ல குதிரையை மன்சூர் அலிகான் அடிக்க, குதிரை கேமராவை தாண்டிக் குதிச்சு தறிகெட்டு ஓடியிருக்கு. இப்போ ஆர்.கே செல்வமணி ‘இன்னும் என்னவெல்லாம் பண்ண காத்திருக்கானோ, முதல்ல இவனை மாத்தணும்’னு ஒரு முடிவுக்கு வந்துட்டார். அதுக்கப்புறமா நைட்டு முழுக்க பயிற்சி செஞ்சு, காலையில ஷாட்டை கரெக்டா பண்ணியிருக்கார், மன்சூர். அந்த வெகுளித்தனமான குணமும், கடுமையான உழைப்பும்தான் அவரை கேப்டன் பிரபாகரன் படத்தில் தனித்துக் காட்டியது.

Captain Prabhakaran
Captain Prabhakaran

இளையராஜா!

  பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆக்‌ஷன் கதையில ‘பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா’ன்னு ரெண்டு பாட்டை வச்சு தெறிக்க விட்டிருப்பார், இளையராஜா. கம்மியான பாட்டுக்கள்னாலும் பேக்ரவுண்ட் ஆர்.ஆர்ல க்ரைம் த்ரில்லர் ஜானர்ல ஆக்‌ஷனுக்கும், திரில்லருக்கும் தன் இசையால பரபரப்பைக் கூட்டியிருப்பார், இளையராஜா. அதேபோல ஆட்டமா தேரோட்டமா பாடல் அந்த படத்தில் முதலில் இல்லை. அதுக்கு பதிலா இன்னொரு பாட்டை கொடுத்திருந்தார், இளையராஜா. அதற்கு ஆர்.கே. செல்வமணி எனக்கு இந்த பாட்டு வேண்டாம். வேற பாட்டு வேணும்னு இளையராஜாகிட்ட கேட்க, போனை வைனு சொல்லி இளையராஜா கட் பண்ணிட்டு இரவோட இரவா, ஆட்டமா தேரோட்டமா பாட்டை தயார் பண்ணி மறுநாளே ஸ்பாட்டுக்கு அனுப்பியிருக்கார். இதைக் கேட்ட ஆர்.கே செல்வமணிக்கும் அந்த பாட்டு பிடிச்சுப்போக, அதை வெரைட்டியா படமாக்கியிருந்தார். அதே மாதிரி பரபரப்பான இடங்கள்ல அதை இன்னும் கூட்டுற மாதிரி இருந்த பேக்ரவுண்ட் ஸ்கோர் படத்துக்கு பக்கபலமா இருந்தது. அதேபோல காட்டை காட்டுறப்போ தனி ஒரு மியூசிக்கும், நார்மலான இடத்துக்கு வேற மாதிரி மியூசிக்லயும் வேரியேஷன் காட்டியிருப்பார்.  

கேப்டன் பிரபாகரன் தனித்துவம்!

கேப்டன் பிரபாகரன் படத்துல படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்துக்குப் பின்னால விஜயகாந்தோட என்ட்ரி இருக்கும். அதுவரைக்கும் சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைச்சு அசுரத்தனமான வில்லனாக மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தியிருப்பார், இயக்குநர் செல்வமணி. தமிழ் சினிமாவில் க்ரைம் திரில்லர் இல்லாத கொடூரமான வில்லனா ஸ்கோர் பண்ணியிருந்தார், மன்சூர். இப்படிப்பட்ட கொடூரமான வில்லனைத் தோற்கடிக்க ஹீரோ எப்ப வருவார்னு மக்கள் ஏங்கித் தவிச்சுகிட்டிருந்தாங்கனு சொல்லலாம். சுமார் அரை மணிநேரம் கழிச்சுதான் திரையில எண்ட்ரி கொடுப்பார், விஜயகாந்த். ஜிப்ஸியில இருந்து கெத்தா இறங்கி வந்து பொன்னம்பலத்தை போட்டு பொளக்குற சீன்ல இருந்து ஆக்‌ஷன் மோடுதான். தீவிரமான விஜயகாந்த் ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்தப்படம் டபுள் டமாக்கா ட்ரீட்டுதான். அதுவும் கோர்ட் சீன்ல ஆக்ரோஷமான வசனங்களை அவர் பாணியிலயே பேசி அசத்தியிருந்தார் கேப்டன்.

Also Read – `என்னைக் கட்டிவைச்சு அடிங்க’ – ஆனந்தராஜிடம் விரும்பிக் கேட்ட ரஜினி

ரம்யா கிருஷ்ணன் ரோல்ல இந்தப் படத்துல கமிட் ஆகியிருந்தவங்க, நடிகை சரண்யா பொன்வண்ணன். மேக்கப் எல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து, அவங்க வேணாம்னு சொல்லி ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைச்சார், செல்வமணி.  

கேப்டன் பிரபாகரன் படத்தைப் பத்தின கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top