ஜெயலலிதா

`உங்ககூட பேசுனது மகிழ்ச்சியா இல்ல…’ ஜெயலலிதா பிரஸ்மீட் அலப்பறைகள்!

ஜெயலலிதா பிரசாரம் என்றாலே முதலில் நம்மோட நினைவுக்கு வருவது, `செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா?’னு 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல்கள்ல கூட்டத்துக்குக் கூட்டம் அவர் கேட்ட கேள்விதான் வரும். அப்போ அது டிரெண்டாவும் ஆச்சு. ஆனால், அவர் அப்போதான் இப்படி பேச ஆரம்பிச்சாரானு கேட்டா… நிச்சயம் இல்லை. அவரோட பொலிட்டிக்கல் கரியரோட ஆரம்பத்துலயே இதே டைப்ல அவர் பேசி ரெஸ்பான்ஸ் வாங்குன சம்பவங்களும் நடந்துருக்கு.

பிரஸ்மீட்கள் ஒருபுறம்னா ஜெயலலிதா கொடுத்த ரேரான 2 வீடியோ இன்டர்வியூக்கள் ரொம்பவே ஃபேமஸ். 1999 ஜனவரி 8-ல சிமி கார்வால் எடுத்த Rendezvous with Jayalalithaa, 2004 அக்டோபர்ல எடுக்கப்பட்ட கரண் தாப்பாரோட Hardtalk India-ங்குற இந்த இரண்டு இண்டர்வியூக்கள் ஜெயலலிதா, தன்னோட கரியர்ல அபூர்வமா கொடுத்த இன்டர்வியூக்கள். என்டிடிவி இன்டர்வியூ மாதிரியான இன்னும் சில இருந்தாலும், இது ரெண்டுக்கும் தனி இடம் இருக்கு. அதுலயும் கரண் தாப்பார் இண்டர்வியூ ஐகானிக்கானது. அந்த இன்டர்வியூவோட ஆரம்பத்துல இருந்தே ஜெயலலிதா ஒருவித இறுக்கத்தோடேயே பதில் சொல்லிட்டு இருப்பாங்க. இண்டர்வியூவோட ஃபைனல்ல அது தெளிவாவே தெரியும். Chief Minister It is Pleasure to Talking with you’னு கரண் தாப்பார் எழுந்து கைகொடுக்கப் போவார். ஆனா, அதைத் தவிர்த்துட்டு, `I must say it wasn’t a pleasure talking to you. Namaste’னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிப் போயிருப்பாங்க. இதுக்கு அப்புறம் இன்னொரு இன்டர்வியூ உங்களுக்கு அவங்க கொடுக்கவே போறதில்லைனு கரண் தாப்பார்கிட்ட புரடியூஸர் சொல்லிருக்கார். சிமி கார்வால் இண்டர்வியூல கிரிக்கெட்டர் நாரி காண்ட்ராக்டர், ஆக்டர் ஷம்மி கபூர் மேல இருந்த கிரஷ், பிடிச்ச பாடல்கள், அம்மா சந்தியா, ஸ்கூல் டேஸ்னு தன்னோட பெர்சனல் சைட் பத்தியும் ஜெயலலிதா பகிர்ந்திருப்பாங்க.

ஜெயலலிதா இனிமேல் நம்மளை சந்திக்கவே விரும்பமாட்டாங்கன்னுதான் கரண் தாப்பார் நினைச்சிருக்கார். ஆனா, இன்டர்வியூ எடுத்து 2 வருஷத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் அவருக்கே சர்ப்ரைஸா இருந்துருக்கு.

இரண்டு வருஷத்துக்குப் பிறகு டெல்லி விஞ்ஞான் பவன்ல நடந்த ஒரு நிகழ்ச்சியப்போ ஒடிஷா முதலமைச்சர்கிட்ட கரண் பேசிட்டு இருந்திருக்கார். அப்போ அந்த இடத்துக்கு ஜெயலலிதா வர்றதைப் பார்த்துட்டு அவர் மெதுவா அங்க இருந்து கிளம்ப டிரை பண்ணபோது, எங்க போறீங்க கரண்?’னு இயல்பா கேட்டுட்டே வந்தாங்களாம்.நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நவீன் பட்நாயக்கை நான் சந்திக்குறது வழக்கமானதுதான்’னு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்காங்க. அப்படியே நாம் அமைதியா இருக்கதைப் பார்த்துட்டு, ஏதாவது பேசுவீங்களானு கேட்டாங்க. நம்மளோட லாஸ்ட் மீட்டிங்கை நீங்க மறந்துட்டீங்களானு கேட்ட உடனே, `ofcourse. இன்னும் சொல்லப்போனா இது இன்னொரு பேட்டிக்கான டைம்தானே’னு ரொம்பவே இயல்பா அந்த சூழ்நிலையைக் கடந்து போனாங்களாம். ஆனால், அப்படியான இன்னொரு பேட்டி நிகழவே இல்லை.

தமிழ்நாட்டில் அதிகம் செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தாத ஜெயலலிதா, டெல்லியில் தனது ஸ்டைலை அப்படியே வேறுவிதமாக வைத்திருந்தார். டெல்லி செல்லும்போது அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதை ஜெயலலிதா வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக செய்தியாளர்கள் பலரை நேரில் சந்தித்துப் பேசுவதையும், டெல்லி நிலவரம் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுவார். அப்படி ஒரு சந்திப்பில் மத்திய அரசில் அதிமுக பங்கு வகித்தபோது இணையமைச்சராக இருந்த சீனியர் ஒருவர் நடந்துகொண்ட விதம்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் வாயிலாகத் தெரிந்துகொண்ட ஜெயலலிதா, அவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். இப்படி பத்திரிகையாளர்கள் வாயிலாகக் கள நிலவரங்களை அறிந்துகொண்டு அவர் பொங்கியெழுந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதேமாதிரி, ஒரு தடவை நமஸ்தேனு சொல்லி அவங்க பிரஸ்மீட்ல இருந்து கிளம்பிட்டா, என்ன கேள்வி கேட்டாலும் திரும்பிப் பார்க்காம நடந்து போய்டுவாங்க. ஆனா, அதுக்கும் ஒரு விதிவிலக்கான சம்பவம் டெல்லில நடந்துச்சு. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துல இருந்து அவங்க வெளிநடப்பு செஞ்சாங்க. பின்னாடி, இதைப்பத்தின ஒரு செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு பண்ணிருந்தாங்க. அப்போ, கேள்விகளையெல்லாம் முடிச்சுக்கு அவங்க கிளம்புனத்துக்கு அப்புறம் ஒரு இளம் ரிப்போர்ட்டர், ஜெயலலிதாஜி’னு சத்தமாக் கூப்பிட்டு,காவிரி விவகாரத்துல உங்க அடுத்த கட்ட நடவடிக்கை என்ன’னு கேள்வி கேட்டுருக்காரு. ஆச்சர்யமா திரும்ப வந்த ஜெயலலிதா, `அடுத்து நாங்க கோர்டுக்குப் போறோம்’னு ஒன்லைன்ல முடிச்சுட்டு கிளம்பிப் போய்ட்டாங்களாம்.

Also Read – இந்த விஷயங்கள்லாம் உங்ககிட்ட இருக்கா? அப்போ, நீங்களும் சீமான்தான்..!

பொதுவா ஜெயலலிதாவோட பிரஸ்மீட்கள் ரொம்ப நேரம் நீடிக்காது. ஆனால், விஸ்வரூபம் பிரச்னை அப்போ, நடந்ததே வேற. தலைமைச் செயலகத்துல பிரஸ்மீட் நடத்துன ஜெயலலிதா, கிட்டத்தட்ட அரை மணி நேரம் அளவுக்கு விலாவரியா பேசுனாங்க. செய்தியாளர்களோட பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தாங்க. தமிழ்நாட்டுல நடந்தது – நீண்ட நேரம் நடந்ததுனு அந்த பிரஸ்மீட் ஜெயலலிதாவோட ஸ்பெஷல் பிரஸ்மீட்னு சொல்வாங்க. ஆனா, அந்த பிரஸ்மீட்லயும் கவர்மெண்ட் மைக் தவிர்த்து அவங்களோட கட்சி சேனல் மைக் மட்டும்தான் இருந்துச்சு. தேர்தல் பிரசாரங்களின்போது சில இங்கிலீஷ் நியூஸ் சேனல்ஸுக்கு பேட்டி கொடுத்திருக்காங்க. எலெக்‌ஷன் ரிசல்டுக்குப் பிறகு போயஸ் கார்டன்ல நடக்குற பிரஸ்மீட்ஸ் பெரும்பாலும் கேள்வி – பதில் இல்லாம ரிசல்டுக்கு அவங்களோட ரியாக்‌ஷன் என்னங்குறதைச் சொல்ற மாதிரிதான் இருக்கும்.

ஜெயலலிதாவோட பொலிட்டிக்கல் கரியர்ல 1989 எலெக்‌ஷன் ரொம்பவே முக்கியமானது. அப்போ, பிரசாரங்கள்ல ஜெயலலிதா. `நான் உங்களுக்கு ஊழலற்ற ஆட்சியை அமைத்துத் தரப்போகிறேன். என்னை ஆதரிப்பீர்களா… என்னை ஆதரிப்பீர்களா…’னு கேட்டு மக்களிடம் ரெஸ்ஃபான்ஸ் வாங்கினார். இதன் பரிணாம வளர்ச்சிதான், 2011, 2014 தேர்தல்களில்,செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா’ என்று ஜெயலலிதா பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கியது.

பிரஸ்மீட்கள்ல ஜெயலலிதா பண்ண தக்லைஃப் சம்பவம் ஏதாவது ஒண்ணு உங்களுக்குத் தெரியும்னா… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top