தமிழ் சினிமாவுக்கு ஒரு தேவாங்கு முகம் கொண்ட நடிகர் ஒருத்தர் கிடைச்சிருக்கார்னு ஒரு பத்திரிக்கையில விமர்சனம் ரிலீஸ் ஆச்சு. அந்த நாள் நியூ இயர் வேற. அந்த நடிகர் மனசு உடைஞ்சு போயிட்டார். நிறைய மன உளைச்சலுக்கு ஆளான அவர் மறுபடியும் உழைச்சார். இன்னைக்கு தமிழ் சினிமாவோட மோஸ்ட் குட் லுக்கிங் நடிகரா அவர்தான் வலம் வந்துக்கிட்டிருக்கார். அவர்தான் தளபதி, வசூல் சக்கரவர்த்தி விஜய். அப்படி இன்னைக்கு தமிழ் சினிமாவோட பிரம்மாண்டத்தின் உச்சமா வலம் வந்துக்கிட்டிருக்கிற விஜய் சந்திச்ச விமர்சனங்கள் ஏராளம். நிறைய பேர் அவர்கிட்ட வைக்கிற விமர்சனம், விஜய் ஸ்டார்தான்..ஆனா பெர்ஃபார்மெர் இல்லனு நிறையபேர் சொல்வாங்க. ஆனா தளபதி பெர்ஃபார்மரா பட்டைய கிளப்பின பல படங்கள் இருக்கு. அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
விஜயோட பெர்ஃபார்மென்ஸ் பார்த்துட்டு அந்த படத்தோட இயக்குநருக்கு அஜித் கால் பண்ணி சம்பவம் பண்ணியிருக்கார், அதுவும் இந்த வீடியோவுல இருக்கு, வெயிட் பண்ணி பாருங்க.
கரியரோட ஆரம்பத்தில நிறைய படங்கள் பண்ணாலும், பிரேக் என்னவோ பூவே உனக்காகதான். காதலை சொல்லாமலேயே விட்டுக் கொடுக்கிறதுல வர்ற வலியும் சுகம்தான்னு கேரக்டராவே வாழ்ந்திருப்பார். அதுல என்ன டயலாக்ஸ்தானே ப்ரோ இருக்கும்னு நீங்க நினைக்கிறது கேட்குது. ஆனா என்னதான் டயலாக்கா இருந்தாலும், அதை பெர்பார்ம் பண்றதை பொறுத்துதான் சீனே கனெக்ட் ஆகும். அதனாலதான் படம் ரிலீஸ் ஆகி 25 வருஷம் கழிச்சு இன்னைக்கும் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களா வலம் வந்துக்கிட்டிருக்கு. அதுவும் க்ளைமாக்ஸ்ல எல்லோரோட மனசையும் உணர்வான நடிப்பால டச் பண்ணியிருப்பார். விஜயோட கரியரைதே பூவே உனக்காக முன், பின்னு ரெண்டு டைப்பா பிரிக்கலாம்.
இந்த ஜெனரேஷனுக்கு எப்படி கார்த்திக் – ஜெஸ்ஸியோ, அதுபோல போன ஜெனரேஷனுக்கு ஜீவா-மினி. அப்படி ஒரு ஐகானிக் படம் காதலுக்கு மரியாதை. இந்த விஜயோட பெர்ஃபார்மென்ஸ் இன்னைக்கு வரைக்கும் நின்னு பேசக்கூடிய ஒன்னு. விஜய் மறுபடியும் பெஸ்ட் பெர்ஃபார்மரா நிரூபிக்கக் கூடிய படமா காதலுக்கு மரியாதை அமைஞ்சது. விழுந்து உருண்டு புரண்டு அழுறது மட்டும் நடிப்பு இல்லை, உணர்ச்சிப் பூர்வமான வசனங்களாலகூட நடிக்கலாம்னு இதுல காட்டியிருந்தார். தற்கொலை காதல், ஊரை விட்டு ஓடும் காதல்னு பல டைப்பான காதல்களுக்கு மத்தியில இந்த காதல் உண்மையாவே மரியாதையை கொடுத்தது. அதுலயும் க்ளமாக்ஸ்ல அம்மாகிட்ட அழுதுக்கிட்டே பேசுற விஜய்யோட நடிப்புக்கு யாரா இருந்தாலும் கலங்கிடுவாங்க. இன்னொரு விஷயம், அதுல இளையராவோட பேக்ரவுண்ட் ஸ்கோர்க்கு மத்தியில ஷாலினியும், விஜய்யும் கண்ணால பேசிக்கிற சீன்லாம் தெறிக்கவிட்டிருப்பார் விஜய். விஜய் ஒரு ஸ்டாராவோ, நடிகனாவோ தெரிஞ்சிருக்கா மாட்டார். நம்ம பக்கத்துவீட்டு பையன் மாதிரித்தான் தெரிவார். இன்னைக்கும் தளபதிக்கு பிடிச்ச படங்கள்ல காதலுக்கு மரியாதைக்கு முக்கியமான இடம் இருக்கு.
என்னப்பா சாஃப்டான பையனா வந்தா நல்லாத்தான இருக்கும்னு இப்பவும் நீக்க நினைக்கலாம். இங்கதான் விஜய்யோட புத்திசாலித்தனம் இருக்கு. சாஃப்டான கேரக்டர் போதும்னு முடிவு பண்ணி நெகட்டீவ் கதாபாத்திரத்துல நடிச்சார். முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரம், ஒவ்வொரு ப்ரேம்லேயும் ஈவிலான முகம் காட்டி பின்னியெடுத்திருப்பார். இந்த படத்தைப் பார்த்த அஜித், இயக்குநர் வின்செண்ட் செல்வாவுக்கு போன் பண்ணி வாழ்த்தியிருக்கார். அடுத்ததா விஜய்க்கு கைகொடுத்த படம் துள்ளாத மனமும் துள்ளும். அம்மா இறந்துபோனதை யாருக்கும் தெரியாம பாத்ரூம்க்குள்ள போய் அழுகுற இடம் கல் மனசையும் கரைய வைச்சிரும்.இன்னைக்கும் பார்க்கக் கூடிய படம், எமோசனலான க்ளைமாக்ஸ்னு விஜய் அடுத்தக் கட்டத்துக்கு போன படம்னு கூட இதை சொல்லலாம்.
இதுக்கப்புறம் குஷி, ப்ரியமானவளே, அடுத்து வந்த வசீகரா விஜய்யோட பெர்ஃபார்மரா முன் நிறுத்திச்சு. இதுவரைக்கும் விஜய் படங்கள்ல இருந்த பாடிலாங்வேஜை மாத்தி இதுக்காக புதுபாடிலாங்வேஜை கொண்டுவந்தார் விஜய். கூடவே எம்.ஜி.ஆர் பாடிலாங்வேஜூம் இருக்கும். கொங்குதமிழ் பேசி சில இடங்கள்ல சிரிக்கவும், அழுகவும் வைச்சிருப்பார். விஜய்க்குள்ள இருக்கிற ஹ்யூமர் பேஜை முழுசா கொண்டுவந்த படம்னும் வசீகராவை சொல்லலாம். அடுத்ததா திருமலை. மாஸ் ஆக்டரா டிரான்ஸ்பார்ம் ஆன படம்னும் இதை சொல்லலாம். அடுத்ததா கில்லி, திருப்பாச்சினு ஆக்ஷன் ரூட் எடுத்தவர் சச்சின் மூலமா எல்லார் மனசுலயும் நின்னார். இதுக்கு முன்னாடி விஜயை பிடிக்காத சிலருக்குகூட இந்த படத்துல விஜய் பிடிச்சிருந்தது. திருப்பாச்சி குடுத்த கையோட அடுத்த படமா சச்சின் குடுத்து மனசை கவர வைக்க விஜய்யால மட்டும்தான் முடியும். இனி ஒருமுறை தளபதியை இப்படி பார்க்க முடியுமானு பெர்ஃபார்மரா பின்னி எடுத்திருப்பார்.
Also Read – `லியோ’ சினிமோட்டோகிராஃபர் மனோஜ் பரமஹம்சா-வின் அட்டகாசமான சினிமா ஜர்னி!
இப்படிப்பட்ட விஜய் அடுத்ததா போக்கிரி, வில்லு, குருவினு மாஸ்பக்கம் ஒதுங்கினார். மறுபடியும் விஜயை பெர்ஃபார்மரா கொண்டுவந்த பெருமை இயக்குநர் சித்திக்கையும், ஷங்கரையும் சேரும். காவலன்ல இவர் கொடுத்த ஷட்டிலான நடிப்புல பின்னியிருப்பார். அதுல அசின்தான் தன் காதலினு தெரியாம அவங்ககிட்டயே ப்ரபோஸ் பண்ணி பேசுற இடம்லாம் வெறித்தனம். அடுத்ததா நண்பன், இந்தியில ஹிட்டடிச்சு இந்தியா முழுவதும் கொண்டாடின படத்தை தமிழ்ல எடுத்து ஒரிஜினலை மறக்கடிச்சிருந்தது. பஞ்சவன் பாரிவேந்தனா விஜய் கொடுத்த பெர்ஃபார்மென்ஸ் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டு போச்சு. அதுல டெலிவரி சீன்ல விஜய் கொடுத்த ரியாக்ஷன், ஆடியன்ஸ் ஹார்ட்டே வெளில வந்து விழுந்துடும்ங்குற அளவுக்கு இருந்தது.
அடுத்ததா துப்பாக்கியில டேபிள் கன் வைச்சுட்டு பேசுறப்போ ஆர்மிக்காரனோட கஷ்டத்தை தன்னோட உணர்ச்சிப் பிழம்பால கொட்டியிருப்பார், விஜய். அடுத்ததா கத்தி ஜீவானந்தம், அவ்ளோ பெரியமாஸ் ஹீரோ ஜட்டியோட ஸ்டேஷன்ல உட்கார்ந்துக்கிட்டதெல்லாம் வேற லெவல் விஜயோட டெடிகேஷன்னே சொல்லலாம். தெறியில மனைவி சுடப்பட்ட்ப்போ கதறி அழுற விஜய்யாகட்டும், மெர்சல் வெற்றிமாறன் கேரக்டருக்கு தனி உடல்மொழி, மாஸ்டர்ல ஜெயிலுக்குள்ள உட்கார்ந்து ஃபீல் பண்ற இடம்னு கிடைக்கிற கேப்ல எல்லாம் ஸ்கோர் பண்ணியிருப்பார். என்ன ப்ரோ அழுகுறதுல மட்டும்தான் ஸ்கோர் பண்றார்னு நீங்க நினைக்கலாம். ஆனா மனுஷன் சாஃப்டா நடிச்ச ரோல்கள்ல கூட அவர் சிரிச்சு நம்மை கண்கலங்க வைச்சிருக்கார். அழுற சீன்லாம் க்ளிசரின் போடாம தன்னோட பெர்ஃபார்மென்ஸ் மூலமா எல்லோரையும் கவனிக்க வைக்கவும் விஜய்யால முடியும். லியோவுலகூட மனைவிகிட்ட உட்கார்ந்து உணர்ச்சிகரமா பேசுற சீன்லாம் வெறித்தனமா இருக்கு. லியோவும் பண்ணுவார்னு நம்பலாம்.
உங்களுக்கு தளபதியோட நடிப்புல எந்தபடம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.