சச்சின் டெண்டுல்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸ் மாஸ்டர் கிளாஸ்… தரமான 4 சம்பவங்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் ரன் குவிப்பது எப்போதுமே நெருக்கடியானது என்பார்கள். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 378 ரன்கள் டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து அணி வேகமாக முன்னேறி வருகிறது. இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் மிரட்டிய நான்கு தரமான சம்பவங்களைப் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.

  1. பிரைன் லாரா

1999-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்படோஸ் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 308 ரன்கள் டார்கெட்டை நோக்கி விளையாடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்த்தில் 105/5 என்று தடுமாறியபோது, பிரைன் லாரா ஒருமுனையில் Anchor இன்னிங்ஸ் விளையாடி அசத்தினார். மெக்ராத், கில்லெஸ்பி கூட்டணி வெஸ்ட் இண்டீஸின் டாப் ஆர்டரைப் பிரித்துப் போட்டபோது, மற்றொரு முனையில் லாரா 153 ரன்கள் அடித்து கெத்து காட்டினார். கடைசி வரை களத்தில் நின்று லாரா வின்னிங் ரன்னை அடித்த தருணத்தை கரீபியன் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

  1. ரிக்கி பாண்டிங்

2005 ஆஷஸ் தொடரில் ஓல்டு டிராஃபோர்டு டெஸ்ட் அது. இங்கிலாந்து நிர்ணயித்த 423 ரன்கள் என்கிற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடியது. அந்தப் போட்டியில் ரிக்கி பாண்டிங் தவிர எந்தவொரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனும் ஜொலிக்கவில்லை. டெஸ்ட் டிராவானதில் பாண்டிங்கின் மராத்தன் இன்னிங்ஸ் முக்கியமானது. அந்த டெஸ்டில் 156 ரன்கள் அடித்த பாண்டிங், 4 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் ஆட்டமிழந்துவிடுவார். கடைசி கட்டத்தில் மெக்ராத்தும் கில்லெஸ்பியும் நிலைத்து நிற்கவே, இங்கிலாந்து வெற்றிபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்யும்.

  1. சுனில் கவாஸ்கர்

1979ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி. ஏற்கனவே ஒரு போட்டியில் தோற்று பின்தங்கியிருந்த நிலையில், அடுத்த போட்டியில் இந்தியாவுக்கு 438 ரன்களை டார்கெட்டாக இங்கிலாந்து நிர்ணயிக்கும். அந்தப் போட்டியில், இங்கிலாந்து வேகங்கள் இயான் போத்தம், பாப் வில்லீஸுக்கு டப் ஃபைட் கொடுத்த சுனில் கவாஸ்கர், இரட்டை சதமடித்து மிரட்டியிருப்பார். இதன்மூலம், நான்காவது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை அவர் படைப்பார். ஆனால், ஒரு கட்டத்தில் கவாஸ்கர் ஆட்டமிழக்கவே, இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ஒருவழியாக அந்தப் போட்டியை டிரா செய்யும். அந்த இன்னிங்ஸில் சுனில் கவாஸ்கரின் இரட்டை சதத்தின் உதவியோடு இந்தியா 429/8 ரன்கள் குவித்திருக்கும்.

  1. சச்சின் டெண்டுல்கர்

1990-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் சீரிஸில் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த போட்டி அது. இங்கிலாந்து நிர்ணயித்த 408 ரன்கள் டார்கெட்டோடு விளையாடிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 183/6 என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது ஆபத்பாந்தவனாக உருவெடுத்தார் 17 வயதே ஆன இளம் சச்சின். அந்தப் போட்டியில் 119 ரன்கள் அடித்து இந்திய அணியின் தோல்வியைத் தவிர்த்திருப்பார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் அவரது முதல் சதம். அவருக்கு உறுதுணையாக மறுமுனையில் நின்ற மனோஜ் பிரபாகர் 67 ரன்கள் அடித்து நாட்-அவுட்டாக ஜொலிக்கவே, இந்தியா அந்தப் போட்டியை டிரா செய்திருக்கும்.

Also Read – டெஸ்ட் கிரிக்கெட்டில் Underrated Wicket Keeper batter தோனி… ஏன்?

50 thoughts on “டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸ் மாஸ்டர் கிளாஸ்… தரமான 4 சம்பவங்கள்!”

  1. medication from mexico pharmacy [url=https://foruspharma.com/#]medication from mexico pharmacy[/url] mexico pharmacies prescription drugs

  2. canadian pharmacies that deliver to the us [url=https://canadapharmast.online/#]legitimate canadian pharmacy[/url] canada rx pharmacy

  3. indian pharmacy online [url=http://indiapharmast.com/#]top 10 online pharmacy in india[/url] india pharmacy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top