ராஜாதி ராஜா

முதல் நாள் கலெக்‌ஷனே ரூ.90 லட்சம்… தப்பா போன ரஜினி கணக்கு!

நடிகர் ரஜினியை பொறுத்தவரைக்கும் இவரோட கணிப்பு தப்பாது. இவர் சொன்ன சீன்ஸ்க்கெல்லாம் ஆடியன்ஸ் கை தட்டுவாங்கனு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா ரஜினியே இந்தப்படம்லாம் எங்க ஓடப்போகுதுனு நினைச்ச ஒரு படம் பேய் ஓட்டம் ஓடி அமிதாப்பச்சன் வசூலை விட அதிக வசூலை வாங்கிக் கொடுத்துச்சு. அப்படி ரஜினி நினைக்கக் காரணம் என்ன, அந்தப்படம் எதுனுதான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.

அப்படி ரஜினி நினைச்ச அந்தப் படம் ராஜாதி ராஜா.  இதுக்கு ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்னு இருக்கு. முதல்ல வைதேகி காத்திருந்தாள் படத்துக்கே ரஜினியைத்தான் மனசுல வைச்சிருக்கார், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். ஆனா அவரோட கால்ஷீட் வாங்க முடியாதுனு தெரிஞ்ச பின்னாடி, முரளிகிட்ட போய் அப்புறமா விஜயகாந்த்கிட்ட வந்தது. முன்னாடியே ரஜினியை வைச்சு படம் பண்ணனும்னு ஆசை இருந்திருக்கு. ரஜினிக்கும் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலேனு படங்களை பார்த்து இவர்கூட வொர்க் பண்ணனும்னு நினைச்சிருக்கார். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு யாருமே நினைச்சுக் கூட பார்த்திருக்க மாட்டாங்க. இளையராஜாவோட அண்ணன் ஒரு படம் தயாரிக்கிறதாவும், ரஜினி நடிக்கிறதாஇருந்தது. அதுக்கு முதல்ல எஸ்.பி முத்துராமனை இயக்குநரா செலக்ட் பண்ணி வைச்சிருந்தாங்க. ஆனா கதை மட்டும் கிடைக்கலை. ஒரு நாள் பஞ்சு அருணாச்சலம் சுந்தர்ராஜனை சந்திச்சப்போ உன்கிட்ட கதை இருக்கானு கேட்குறார். அப்போ ஒரு கதை சொல்றார். அதை பஞ்சு அருணாச்சலம் நேரா ரஜினிகிட்ட ‘சுந்தர்ராஜன்  ஒரு கதை வைச்சிருக்கார், கேட்டேன். நால்லா இருந்தது’னு சொல்றார். சரி இளையராஜாகிட்ட சொல்லிடுங்கனு சொல்ல, பஞ்சு அருணாச்சலமும் இளையராஜாகிட்ட சொல்றார். அவரும் ஓகே சொல்ல, அப்படித்தான் ஆரம்பிச்சது ராஜாதி ராஜா சினிமா. 

Also Read – முதலமைச்சரின் ஹீரோயின், ரஜினிக்கு ஜோடி, 10 வருச தலைமறைவு… நடிகை கனகா-வின் நம்பமுடியாத கதை!

ரஜினியோட டபுள் ஆக்ட் படங்கள்ல மிக முக்கியமான படம்னுகூட சொல்லலாம். பாடல்கள் உள்பட படம் சூப்பர் ஹிட். இன்னைக்கு, `மாமா உன் பொண்ணக்குடு’ பாட்டுக்கள் கிராமங்கள்ல ஒலிச்சுக்கிட்டேதான் இருக்கு. ஆன இந்தப்படம் நடக்கிறப்போ, ரஜினிக்கு நம்பிக்கையே இல்லையாம். என்னா சுந்தர் ராஜன் எடுத்த ஸ்டைல் அப்படி. ஷாட்களை முன்னப்பின்ன மாத்தி மாத்தி சுந்தர்ராஜன் எடுத்திருக்கார். சுந்தர்ராஜன் சார் இங்க வாங்க, இங்க இருந்து அங்க வாங்கனு ஷாட் எடுத்திருக்கார்.  அதனால ரஜினிக்கு பெரிசா நம்பிக்கை வரலை. ஆனா கதையைக் கேட்காம ஒத்துக்கிட்டோம், முடிச்சுக்குடுத்துட்டு போயிடுவோம்னு முடிவுல முடிச்சுக் கொடுத்திருக்கார்.ஆனா, நடந்ததோ வேற.

இந்த படத்துக்கு ரசிகர்கள்கிட்ட பெரிய ஓப்பனிங் இருந்திருக்கு. முதல் நாள் வசூல 94 லட்சம் ரூபாய் கிடைச்சிருக்கு. இது இந்தியில அமிதாப் பச்சன் நடிச்ச மாஸ்டர் பீஸ் படமான ஷோலே படத்தோட வசூலை விட 4 லட்சம் அதிகம். சென்னை, மதுரைனு வெளியான எல்லா தியேட்டர்கள்லேயும், 100 நாட்களைக் கடந்து ஓடிச்சு. தென்காசி பகுதியில சினிமா வலாற்றுல 100 நாட்களுக்கு மேல ஓடுன முதல் படம் இந்த ராஜாதி ராஜாதான். 1.20 கோடியில் உருவான இப்படம் 16 கோடி ரூபாய் வசூல் செய்தது. 1989-ம் வருடம் இது மிகப்பெரிய வசூல். ரஜினியே இந்த வசூலை கண்டு திகைக்க வைச்சு, ஆச்சர்யத்தில் உறைஞ்சு போனார்.ராஜாதி ராஜா பத்தின கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top