மிஸ் யூ

`சாக்லெட் பாய்’ சித்தார்த் ரிட்டர்ன்ஸ்… `மிஸ் யூ’ சீக்ரெட்ஸ்!

சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த், நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் `மிஸ் யூ’ என்ற காதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மிஸ் யூ
மிஸ் யூ


தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை, மாப்ள சிங்கம் மற்றும் களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்குப் படமாகத் தயாராகியுள்ளது. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் `7 miles per second‘ நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ படத்தைத் தயாரிக்கிறார்.

மிஸ் யூ
மிஸ் யூ

ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், நகைச்சுவை நடிகர்கள் சூழ இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் என்.ராஜசேகர். ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார். சதுரங்க வேட்டை போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். நடனம் தினேஷ் மாஸ்டர். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.ஆர், இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு திரைக்கதையிலும் பங்காற்றியிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சாக்லெட் பாய் சித்தார்த்தைப் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிஸ் யூ படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

34 thoughts on “`சாக்லெட் பாய்’ சித்தார்த் ரிட்டர்ன்ஸ்… `மிஸ் யூ’ சீக்ரெட்ஸ்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top