Clickbait இணையதளங்களுக்கு ஆப்படிக்கும் Google-ன் புதிய அப்டேட்

கற்காலத்தில் இருந்து மனிதர்களிடையே உலவும் ஒரு ஜோக் சொல்லப்போறேன். மிஸ் பண்ணாம படிங்க.

ரகசியமா ஒரு செய்தியை ஒளிச்சு வைக்கனும்னா அதை கூகுள் சர்ச் ரிசல்ட்டோட இரண்டாவது பக்கத்துக்குக் கொண்டு போகனும்.

கூகுள் சர்ச்சின் முதல் பக்கத்தில், முதல் இடத்தில் எப்படியாவது இடம்பெற்றுவிட பல உண்மையான/உபயோகமான தளங்கள் முட்டி மோதிக்கொண்டிருக்க, சில போலியான தளங்களும் பாசாங்கான தளங்களும் கிடைக்கும் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தியும் மக்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி click bait தனமான தலைப்புகளை வைத்தும் அந்த முதல் பக்கத்தை கபளீகரம் செய்துவிடுகின்றன.

Click bait தனமான தலைப்பு வைப்பதில் என்ன தவறு என யோசிக்கிறீர்களா? இந்த தலைப்புகள் ஒன்றுமே இல்லாத ஒரு வரி தகவலை பூதாகரமாக்கிக் காட்டும், நூற்றுக்கு 99 சதவிகிதம் Clickbait தலைப்புகள் போலியான செய்திகள் தான், ஒரு பிரபலத்தையோ நிகழ்வையோ வம்பிழுக்கும் தரக்குறைவாகவோ காட்டும் விதமாகத்தான் இருக்கும்.

இத்தகைய Clickbait தலைப்புகளைக் கொண்ட செய்தித்தளங்களை கூகுள் எப்படிப் பார்க்கிறது தெரியுமா? “இத்தகைய தளங்கள் பயன்படுத்துபவர்களுக்கு தகவல்களைத் தருவதில்லை. அதற்கு மாற்றாக தகவல்களைத் தேடி வருபவர்களுக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.” இதைத் தடுப்பதற்காக கூகுள் இதற்கு முன்பும் சில முயற்சிகளை எடுத்திருக்கின்றன. ஆனால், இந்த முறை கூகுள் கொஞ்சம் உறுதியான ஒரு தடுப்பு முறையைக் கொண்டு வந்திருக்கிறது.

Google's fight against click bait

இந்த வாரம் (August, 2022) கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய அப்டேட் மூலம் இத்தகைய தளங்களை முதல் பக்கத்தில் வர விடாமல் தடுக்க முடியும் என நினைக்கிறார்கள். “Helpful Content Update” என்ற தாராக மந்திரத்துடன் வரும் இந்த அப்டேட் மூலம், தரம் குறைந்த, உண்மையற்ற இணைய தளங்களை முதல் பக்கத்துக்கு வர முடியாமல் தடுக்க முடியும் என்கிறார்கள்.

Also Read : 2K kids-ன்பேவரைட் சர்ச் இன்ஜின் எது தெரியுமா?… கூகுள் இல்லை!

கூகுளின் முதல் பக்கத்தில் வருவதற்காக உருவாக்கப்படும் போலியான இணைய பக்கங்களை விட, மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரும் உபயோகமான தளங்கள் தான் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை இந்த அப்டேட் மூலம் உறுதிசெய்ய முடியும் என கூகுள் தரப்பு தெரிவித்திருக்கிறது.

முதலில் இந்த அப்டேட் ஆங்கில இணைய தளங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த அப்டேட் முடிவில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்ததாக கூகிள் தேடலின் முதல் பக்கத்தின் முடிவுகளை மேம்படுத்த திட்டமிடுகிறது கூகிள்.

உதாரணமாக, ஒரு புதிய திரைப்படத்தின் விமர்சனத்தை நீங்கள் தேடும் போது, பொழுதுபோக்கு இணையதளங்கள், தனிநபர் வலைப்பதிவுகள், சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட பக்கங்கள் இந்த அப்டேட் மூலம் முதல் பக்கத்தில் இடம்பெறாமல் போகும், அதற்கு மாற்றாக நம்பகமான விமர்சகர்கள், பொழுதுபோக்கு ஊடகங்கள், ஒரு தனிச்சிறப்பான பார்வையை முன்வைக்கும் உண்மையான இணைய தளங்கள் முதல் பக்கத்தில் இடம்பெறும் என கூகுளின் செய்திக்குறிப்பு கூறுகிறது. சினிமா விமர்சனங்கள் மட்டுமல்ல. ஆன்லைன் கல்வி, கலை, அறிவியல், பொழுதுபோக்கு, ஷாப்பிங் தொடர்பான தேடல்கள் இதன் மூலம் மேம்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த clickbait தளங்களில் நீங்கள் ஏமாந்த சம்பவம் எதாவது இருக்கிறதா? இருந்தால் அதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top