ட்விட்டர் ஸ்பேசஸ்-தான் இப்போ டிரெண்ட்… அது என்ன, எப்படி பயன்படுத்தலாம்?!

பிளாக்ல பக்கம் பக்கமா எழுதிக்கொண்டிருந்த இருந்த காலம் போய், ஃபேஸ்புக்ல எழுதுற காலம் வந்துச்சு. ஃபேஸ்புக்லயும் பக்கமா பக்கமா மக்கள் எழுத ஆரம்பிச்சதால.. ட்விட்டர், மக்கள் கிட்ட இந்தாங்க நீங்க 140 கேரக்டர்ல விஷயத்தை சொன்னா போதும்’னு சொல்லி மக்களை ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சிந்திக்க வச்சாங்க. ஸ்வீட்டா விஷயங்கள மக்கள் போஸ்ட் பண்ணாலும், அப்பப்போ சண்டையும் போட்டுட்டு இருந்தாங்க.ஏன் கஷ்டப்பட்டு எழுதி சண்டை போடுறீங்க, பேசியே சண்டை போட்டுக்கோங்க’ அப்டீன்னு ட்விட்டர் ஸ்பேசஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

ஆமா, இந்த ஸ்பேசஸை எப்படி கிரியேட் பண்றதுனு யோசிக்கிறீங்களா? `கம்போஸ் ட்வீட்டை முதலில் க்ளிக் பண்ணுங்க. அதுல ஸ்பேசஸ் என்கிற ஆப்ஷன் வரும். அதை க்ளிக் பண்ணுங்க. இப்போ எதாவது ஒரு டைட்டில் குடுத்து, ஸ்டார்ட் ஸ்பேசஸ் குடுத்தா ஸ்பேசஸ் ஸ்டார்ட் ஆயிடும்.”

லாக்டௌன் நேரத்துல மக்கள் பலரும் எழுத ரொம்பவே யோசிச்சு ஆடியோ சாட் ரூம்களை நோக்கி கவனத்தைச் செலுத்த ஆரம்பிச்சாங்க. அப்படி நகர்ந்ததுல, நீயா? நானா?, அரட்டை அரங்கம், கலக்கபோவது யாருனு ஒட்டுமொத்த பாப்புலர் டெலிவிஷன் ஷோவும் இந்த ட்விட்டர் ஸ்பேசஸ்ல நடக்க ஆரம்பிச்சுது. கிளப் ஹவுஸ், பாட்காஸ்ட் வரிசைல இந்த ஸ்பேசஸ் ஃபீச்சரும் தனக்கென தனியான ஒரு இடத்தை பிடிச்சுது. படிக்கும்போது படிக்கிற வேலைய மட்டும்தான் செய்ய முடியும். ஆனால், இந்த மாதிரியான ஆடியோ சாட் ரூம்கள் வந்ததால மற்ற வேலைகளை பாத்துகிட்டே ஸ்பேசஸில் பங்கேற்க முடியும்.

ஸ்பேசஸை கிரியேட் பண்றது ஓகே.. ஏற்கெனவே கிரியேட் ஆன ஸ்பேசஸில் இணைவது எப்படி தெரியுமா?” ட்விட்டரை ஓப்பன் பண்ணுங்க. ஸ்பேசஸ் ரன் ஆகிக்கொண்டிருப்பதை உங்களது டைம்லைனில் காண முடியும். அதில் கிளிக் செய்து ஸ்பேசஸில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் அதில் பேச விரும்பினால் ஹோஸ்டுக்கு ரிக்வெஸ்ட் கொடுக்க வேண்டும். ஹோஸ்ட் உங்களது ரிக்வெஸ்டை அக்ஸப்ட் செய்தால், நீங்கள் அதில் பேசலாம். நீங்கள் ஃபாலோ செய்யும் நபர்கள் ஸ்பேசஸை கிரியேட் செய்திருந்தால் மட்டுமே உங்களது டைம் லைனில் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.”

அரசியல், கலை, பொழுதுபோக்கு என பல தலைப்புகளிலும் மக்கள் இந்த ஆடியோ சேட் ரூமில் கலந்துரையாடி வருகின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும் இந்த ஸ்பேசஸ் சேட் ரூமில் பங்கேற்று பேசினார். ட்விட்டரில் பெண்கள் பெயரில் இயங்கி வரும் ஃபேக் ஐடிகளுக்கு இந்த ஸ்பேசஸ் ஒரு தலைவலியாக மாறியுள்ளது என்றே கூறலாம். ஸ்பேசஸ் சேட் ரூமை ஆரம்பிக்கும் நபர்கள் ஃபேக் ஐடிக்களை ஸ்பீக்கராக்கி அவர்களை வம்பில் இழுத்துவிட்டு வருகின்றனர். கருத்து வேறுபாடுகள் வரும்பட்சத்தில் `நீ வேணா என் ஏரியாவுக்கு வா’ என ஸ்பேசஸில் இருந்து லெஃப்ட் ஆகி தனியாக ட்வீட் போஸ்ட் செய்து குறிப்பிட்ட நபர்களை டேக் செய்து மோதி வருகின்றனர்.

ட்விட்டரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்பேசஸ் அம்சம் மூலம் நேரடியாக நம்மால் ஆடியோ சாட்களை உருவாக்கவும் பார்வையாளர்களை இணைக்கவும் முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் ட்விட்டர் இந்த அம்சங்களை சோதனை செய்து வருகிறது. பரவலாக அனைவருக்கும் இந்த அம்சம் இன்னும் வழங்கப்படவில்லை. எனினும், குறிப்பிட்ட சிலருக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பேசஸ் அம்சத்தை வெப் வெர்சனில் வழங்கவும் ட்விட்டர் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ட்விட்டர் ஸ்பேசஸ் அம்சத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே ஸ்பீக்கராக இருக்க முடியும். மற்றவர்கள் கேட்பவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஸ்பேசஸ் லைவ் ஆடியோ சாட்டை உருவாக்குபவர்களின் பின்தொடர்பவராக இல்லாதவர்களாக இருந்தாலும் லைவ் சாட்டிங் லிங்க் கிடைப்பதன் மூலம் இணைய முடியும். பாதுகாக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளைக் கொண்டவர்கள் ஸ்பேசஸில் ஹோஸ்ட் செய்ய முடியாது. ஆனால், லைவ் சாட் ரூமில் இணைய முடியும். சுமார் 30 நாள்கள் வரை இந்த ஆடியோ சாட் ட்விட்டரில் இருக்கும். ஆடியோ சாட்டில் ஒரே நேரத்தில் மொத்தம் 11 பேர் பேச முடியும். கேட்பவர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் கிடையாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top