“கியூட்னஸ் எனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே இருக்கு. நாம கண்ணாடியைப் பார்த்து சின்னதா சிரிப்பு ஒண்ணு சிரிச்சா போதும். கண்டிப்பா அதுல ஓவர்லோடா கியூட்னஸ் இருக்கும். அதேமாதிரி நாம நமக்காக இருக்கணும். நம்மள லவ் பண்ணனும். லவ் யுவர்செல்ஃப்” – சுமார் 3 மில்லியன் 2’கே கிட்ஸ் தங்கள் வாழ்க்கையோட தத்துவமா இதைத்தான் ஃபாலோ பண்றாங்க. அதெப்படி கரெக்டா 3 மில்லியன்னு சொல்ற?னுதான கேக்குறீங்க. வேற ஒண்ணுமில்ல, அவங்கலாம் அமலா சாஜியோட ஃபேன்ஸ். இந்த தத்துவத்தை சொன்னது புத்தரோ, காந்தியோ, ஏசுவோ இல்லை. எல்லாம் நம்ம அமலா சாஜிதான். திரிஷா இல்லைனா அமலானு சொல்ற அளவுக்கு எப்படி இவ்வளவு ஃபேன்ஸ், அமலா சாஜிக்கு? சவுத் இந்தியாவின் எக்ஸ்பிரஷன் குயின் ஆனது எப்படி? டிக் டாக் தடை பண்ணப்போ அமலா சாஜி என்ன பண்ணாங்க தெரியுமா? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்!
கில்லி படத்துல விஜய்யோட அப்பா, விஜய் ஃப்ரெண்ட்ஸ் பத்தி பேசும்போது, “இவன் ஃப்ரெண்ட்ஸ் பேருலாம் பார்த்தியா? கடா குமாரு, டுமீல் குப்பம் வௌவாலு, இப்போ பேசிச்சே ஒரு டிஸ்கவரி சேனல். டேய் அது பேரு என்ன?” அப்டின்னுவாருல. அதேமாதிரிதான் இன்னைக்கு 90’ஸ் கிட்ஸோட மைண்ட்லாம், இந்த 2’கே கிட்ஸோட க்ரஷ் லிஸ்ட்லாம் பார்த்தியா, “சிவாங்கி, குக் வித் கோமாளி அஷ்வின், பி.டி.எஸ், டி.டி.எஃப், அமலா சாஜி, அம்ரிதா சாஜி”னு மீம் போட்டு கிரிஞ்சுனு சொல்லிட்டு இருக்காங்க. நல்லா யோசிச்சுப் பாருங்க, நாம யாரையெல்லாம் கிரிஞ்சுனு சொல்லிட்டு இருக்கோமோ, அவங்களை இந்த உலகம் கொண்டாடுது, சேனல்கள் இண்டர்வியூ எடுக்குது, ஃபாலோயர்ஸ் மில்லியன் கணக்குல இருக்கு, ஃபேன்ஸ் கிளப் இருக்கு. ஒருவேளை நாமதான் கிரிஞ்சோனு சில சமயங்கள்ல நமக்கே டவுட் வருது. இன்னைக்கு நேஷனல் க்ரஷ்னு கூகுள்ல தேடுனா ராஷ்மிகா பெயர்தான் வரும். சவுத் இந்தியா க்ரஷ்னு நீங்க தேட வேணாம். சும்மா கேட்டாலே அமலா சாஜி பேரைதான் சொல்லுவாங்க.
அமலா 2019-ல 12 வது படிச்சிட்டு இருந்தாங்க. அப்போ, ஸ்டேட்டஸ்ல டிக்டாக் வீடியோஸ்லாம் பார்த்துட்டு, என்ன எல்லாரும் பண்றாங்க. நாமளும் இந்த டிக் டாக்கை ட்ரை பண்ணலாமேனு அமலா சாஜியும் அவங்க அம்மாவும் சேர்ந்து ஒரு டிக் டாக் வீடியோ பண்ணி போட்ருக்காங்க. அந்த வீடியோவை ஷூட் பண்ணது அமலா சாஜியோட தங்கச்சி அம்ரிதா சாஜி. 2 நாள்ல அந்த வீடியோக்கு 10,000 வியூஸ் வந்துருக்கு. ரொம்பவே ஷாக் ஆயிருக்காங்க. உடனே அமலாவோட அம்மா, “இனி நான் வீடியோல வரல. நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க. ரொம்ப நல்லாருக்கும்”னு சொல்லியிருக்காங்க. முதல்ல அப்பாவுக்கு தெரியாமல் அம்மா ரெண்டு பேருக்கும் செமயா சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ரெண்டு பேரும் செய்த வீடியோ ஒரு வாரத்துல 1,00,000 வியூஸ் போய்ருக்கு. முதல் வீடியோவே தமிழ்ல பண்ணியிருக்காங்க. அதனால, தமிழ் ஆடியன்ஸ் அவங்களுக்கு செமயா சப்போர்ட் பண்ண தொடங்கியிருக்காங்க.
டிக் டாக்ல வீடியோ வைரல் ஆனதும் வாட்ஸ் அப் வழியா அமலா சாஜியோட அப்பாவுக்கு வீடியோ வந்துருக்கு. உடனே அவரு, “பரிட்சையெல்லாம் வருது. படிக்க வேணாமா? இதுக்கு பின்னாடி நடந்தா போதுமா?”னு கோவப்பட்ருக்காரு. ஆனால், அமலாவோட அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ், “நல்லா பண்றாங்க. பார்க்க நல்லாருக்கு”னு சொல்லியிருக்காங்க. இதனால அமலாவோட அப்பாவும், “சரி, வீடியோ பண்ணுங்க. ஆனால், ஒழுங்கா படிக்கணும்”னு சொல்லியிருக்காங்க. 2019 பிப்ரவரி – ஏப்ரல்ல 74 வீடியோ பண்ணியிருக்காங்க. அதுல இருந்தே 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துருக்காங்க. டிக் டாக்ல இவங்க பேரு என்ன தெரியுமா? ‘டெவில் குயின்ஸ்’. லாக் டௌன்ல இந்த டிக் டாக் செம டிரெண்டிங்கா இருந்துச்சு. நிறைய பேரு வீடியோஸ் போட்டுட்டு இருந்தாங்க டிக் டாக் தடைனு அறிவிக்கும்போது அவங்களுக்கு 4.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருந்துருக்காங்க. தடைனு சொன்னதும் வீட்டுல அழுதுட்டு சாப்பிடாமல்லாம் இருந்துருக்காங்க. அப்புறம் இன்ஸ்டாகிராம் அப்டேட்ல ரீல்ஸ் வந்தபிறகுதான் கொஞ்சம் மனசமாதானம் ஆகியிருக்காங்க.
சோஷியல் மீடியால என்னப் பாட்டு வந்தாலும் கிட்டத்தட்ட அதே காஸ்டியூம்ஸோட அமலா சாஜியும் அம்ரிதா சாஜியும் ரீல்ஸ் போடுவாங்க. அதுக்கு ஸ்பான்சர்ஸ்லாம் இருப்பாங்க போல. அவங்கக்கிட்ட இருக்குற ஸ்பெஷலே அதுதான். குறிப்பா தமிழ் பாட்டு நிறைய ரீல்ஸ் போடுவாங்க. அதுனாலதான் தமிழ்நாட்டு ஃபேன்ஸ் அதிகம். தெலுங்கு ஆடியன்ஸும் இவங்களுக்கு அதிகம். அந்த அளவுக்கு ஃபேன்ஸ்னா ஒரு வீடியோ சமீபத்துல் செம வைரல் ஆச்சு. அதுல அமலா சாஜியோட ஃபேன் ஒருத்தர அவங்களைப் பார்க்கும்போது அழுதுருப்பாரு. அந்தப் பொண்ணே சின்னப்பொண்ணு. அவங்களைவிட இந்தப் பையன் சின்னவன். அவன் அழுறான். இந்தப் பொண்ணு, “அழுக வேணாம்”னு சமாதானம் பண்ணுது. சமாதானம் பண்ணக்கூட நமக்கு தோழி இல்லையே ஃப்ராண்ட்ஸ். அதேமாதிரி கல்யாண பேனர்லலாம் விஜய், சூர்யா ஃபேன்ஸ் சார்பா வாழ்த்துகள்னு போடுவாங்கள்ல. அதேமாதிரி இவங்க ரெண்டு பேரோட ஃபோட்டோவை போடுவாங்களாம்.
”ஐயோ வேறலெவல், என்னா கியூட்டு, மெழுகு டாலு” – இப்படிதான் அமலா ஆர்மியன்ஸ் கமெண்ட்லாம் போடுவாங்க. இவங்களை வைச்சு செய்யவும் செய்வாங்க. ஆனால், அதையெல்லாம் மைண்ட்ல எடுக்கக்கூடாது. நம்ம வேலையை நாம செய்யணும்னு அவங்க அப்பாம்மா அட்வைஸ் பண்ணியிருக்காங்க. அதுனால, அதையெல்லாம் கண்டுக்கமாட்டாங்க. அதாவது, “லிட்டில் ரீல்ஸ் லேடி சூப்பர் ஸ்டார்’னு கலாய்ப்பாங்கனா பார்த்துக்கோங்க. அவங்க அப்பாம்மாவுக்கு தனித்தனியா ஃபேன்ஸ் இருக்காங்க. அன்னைக்கு அட்வைஸ் பண்ணாங்க, அவங்க அப்பாம்மா. ஆனால், இன்னைக்கு அமலா சாஜி அப்பாம்மானு பெருமையா பேசிக்கிறாங்க. பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், நானும் ரௌடிதான், விண்ணைத்தாண்டி வருவாயா, மரியான், மதராசப்பட்டிணம், 3 இப்படி அமலா சாஜி பண்ணாத ரீல்ஸே இல்லைனு சொல்லலாம். செமல்ல… அதை பார்க்கும்போதுலாம் 2’கே கிட்ஸ் ஃபுல் வைப் மோடுல போய் ஹார்ட்டின்ஸ அள்ளி விடுவாங்க.
இன்னொரு சம்பவம் தெரியுமா? அமலா சாஜி ‘பெஸ்ட் எக்ஸ்பிரஷன் குயின்’னு அவார்ட்லாம் வாங்கியிருக்காங்க. ஒரு படம் நடிக்கல, ஷார்ட் ஃபிலிம் நடிக்கல, ஆல்பம் சாங்ல வரல, சின்னத்திரைல வரல ஆனால், ஃபேன்ஸ் மட்டும் அவ்வளவு பேர் இருக்காங்க. தப்பா எதாவது பேசுனீங்க நம்மள வைச்சு செஞ்சிருவாங்க. இப்படி உயிரைக் கொடுக்குற ஃபேன்ஸ்லாம் கிடைக்க ஒரு கொடுப்பனை வேணும்!
உங்களுக்கு புடிச்ச ரீல்ஸ் பண்றவங்க யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – டவுன் பஸ் பாட்டுகளோட மியூசிக் டைரக்டர்லாம் யாரு தெரியுமா?