தேசிய ஆடை முதல் Tunnel of Love வரை… உக்ரைன் பத்தி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. போருக்கு முன்பு வரை பெரிதாக வெளியில் தெரியாத குட்டி நாடான உக்ரைன் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அப்படி உக்ரைன் பத்தி அதிகம் வெளியில் தெரியாத 5 விஷயங்கள் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.

Vyshyvanka

Vyshyvanka
Vyshyvanka

ஒரு நாட்டுக்கு தேசிய விளையாட்டு, தேசியப் பறவை, தேசிய மரம் என்ற தேசிய அளவிலான அடையாளங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தேசிய ஆடை என்ற வகையில் குறிப்பிட்ட ஆடை அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி, உக்ரைனுக்கு தேசிய ஆடை என Vyshyvanka என்ற டிரெஸ் இருக்கிறது. கையால் நெய்யப்பட்ட இந்த ஆடை வண்ண மலர்களால் டிசைன் செய்யப்பட்டிருக்கும். உக்ரைன் மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் அவர்களின் மத உணர்வுக்கும் ரொம்பவே நெருக்கமானது இந்த ஆடை.

Tunnel of Love

Tunnel of Love
Tunnel of Love

உலகின் மிகவும் ரொமாண்டிக்கான இடங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது இந்த Tunnel of Love. உக்ரைனின் Klevan பகுதியில் இருக்கும் இந்த ரயில் பாதையில் பயணிப்பது லவ்வர்ஸ்களின் கனவாகவே இருக்கும். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இந்த ரயில் பாதையை சுற்றிலும் இயற்கையாகவே பசுமையான செடிகள் சூழ்ந்து காணப்படும். பார்ப்பது ரம்மியான சூழலைக் கொண்ட இந்த இடம் உக்ரைனின் மிக அழகான இடமாகக் கருதப்படுகிறது.

மெட்ரோ

Kyiv Metro
Kyiv Metro

உலக அளவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நீண்டகாலமாக இருக்கும் நாடுகளில் முக்கியமானது உக்ரைன். 1960 நவம்பர் 6-ல் தொடங்கப்பட்ட Kyiv Metro ஸ்டேஷன்தான் உலகின் மிக ஆழத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில் நிலையம். இது தரைமட்டத்தில் இருந்து 346 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Seven Wonders of Ukraine

Seven Wonders of Ukraine
Seven Wonders of Ukraine

பாரம்பரியமான கட்டடக் கலைக்கும் பெயர் போனது உக்ரைன். ரஷ்யாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு உக்ரைன்தான். யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்கள் என்கிற அந்தஸ்து பெற்ற 7 இடங்கள் உக்ரைனில் இருக்கின்றன. Kyiv-இல் இருக்கும் புனித சோபியா ஆலயம் மற்றும் Lviv-இல் இருக்கும் Historic Centre உள்பட இந்த 7 இடங்களும் உக்ரைனின் 7 அதிசயங்கள் என்றழைக்கப்படுகின்றன.

சூரிய காந்தி விதைகள்

சூரியகாந்தி
சூரியகாந்தி

உலக அளவில் சூரியகாந்தி விதைகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கும் நாடு உக்ரைன். உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு உக்ரைனில் இருந்துதான் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2021/22 ஆண்டில் மட்டுமே உக்ரைன் 17.5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சூரியகாந்தி விதைகளை உற்பத்தி செய்திருக்கிறது. தங்களது சுதந்திரத்துக்கான அடையாளமாகவும் சூரியகாந்தியை அந்நாட்டு மக்கள் முன்னிறுத்துகிறார்கள்.

Also Read – ரஷ்யா – உக்ரைன் போர் உங்க பாக்கெட்டை எப்படி பதம் பார்க்கும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top