சினிமா பிரபலங்கள் சோஷியல் மீடிக்களில் அவ்வப்போது வந்து ரசிகர்களுடன் உரையாடுவாங்க. அப்படி பிக்பாஸ் ஓவியா “Let’s have a chat! Shall we ?”னு ட்விட்டர்ல நேத்து தனது ரசிகர்களுடன் பேசுனாங்க. ரசிகர்கள் ஓவியாகிட்ட கேட்ட சுவாரஸ்யமான கேள்வி, அதுக்கு ட்விட்டரில் ஓவியா சொன்ன நச் பதில்கள் பத்தி இந்தத் தொகுப்புல பார்க்கலாம். ஆரம்பிக்கலாங்களா…
`தளபதி விஜய் பத்தி ஒரு வார்த்தை சொல்லுங்க’னு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நைஸா எஸ்கேப் ஆன ஓவியா கிட்ட ”உங்களோட கமெண்ட் செக்ஷன நான் படிச்சிருக்கேன். இளம்பெண்ணாக இந்த நெகட்டிவ் கேள்விகளை எப்படி கையாள்றீங்க. அது உங்களை மனதளவில் காயபடுத்தாதா?” அப்டினு ரசிகர் ஒருவர் கேட்ருந்தாரு. அதுக்கு, என்னை அது காயப்படுத்தாது. மக்கள் என்னோட பாஸிட்டிவிட்டியால என்டர்டெயின் ஆகுறாங்க. மக்களோட நெகட்டிவிட்டியால நான் என்டர்டெயின் ஆகுறேன்னு” கண்ணீர் சிந்தி சிரிக்கிற ஸ்மைலியோட பதில் சொல்லியிருந்தாங்க.
ஓவியாவோட மொபைல் நம்பர கேக்க மட்டும் தான் செய்யணுமா? நம்ம நம்பர ஓவியா கிட்ட குடுக்கலாம்னு.. மொபைல் நம்பர கமெண்ட் செக்ஷன்ல பதிவிட்டு `கால் மீ’னு ஒருத்தர் கமெண்ட் பண்ண.. இந்தா வரேன்னு மத்த ட்விட்டர் வாசிகள் அந்த கமெண்டுக்கு ரிப்ளை பண்ணிட்டு இருந்தாங்க நமக்கு எதுக்கு வம்புனு ஓவியா அந்த பக்கம் தலைவச்சே படுக்கல. உங்களுக்கு என்ன சாப்பாடு ரொம்ப புடிக்கும்”னு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தாரு. அதுக்குவீட்டுல சமைக்கிற எல்லாமே!”னு பதில் சொல்லியிருந்தாங்க.

பிக்பாஸ்க்கு முன்,பின் ஓவியாவப் பத்தி சொல்லுங்க.அது உங்கள பல வகையில வெற்றியாளரா மாத்தியிருக்கு, அந்தப் பயணம் எப்படி இருந்துச்சு”னு ரசிகர் கேட்ட கேள்விக்கு..“இதையெல்லாம் அனுபவிக்கிற அளவுக்கு நான் லக்கினு நினைக்கிறேன். யார் கூடவும் நம்மை ஒப்பிட்டு பார்க்கலைனா நாம எல்லாருமே வெற்றி பெற்றவங்கதான். அமைதியான மனசுதான் உண்மையான வெற்றி!”னு பதில் சொன்னாங்க. என்ன ஒரு தத்துவமான பதில்ல?!

“ஒரு காலத்துல உங்க ஃபேனா இருந்ததுக்கு வெட்கப்படுறேன்”னு ஒருத்தர் கமெண்ட் பண்ண.. `ஓகே’னு சொல்லிட்டு கடந்து போய்ட்டாங்க. இதுதான் இக்நோர் நெகட்டிவிட்டி போல.உங்களைப் போல நட்சத்திரங்கள், கொரோனா வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றனும்னு மக்கள் கிட்ட சொல்லுங்க. அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்னு” ஒருவர் சொல்ல, அதுக்கு அவங்க, “Wear mask, don’t hug. Don’t have fun. Die anyways”னு ரிப்ளை பண்ணிட்டாங்க. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!
ஆர்மியினர் இன்னும் நிறைய கேள்விகளை கேட்டுட்டு இருந்தாங்க. பல கேள்விகளுக்கு ஒரே வார்த்தைல பதில் சொல்லிட்டு போய்ட்டாங்க. எப்படியோ… ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி!






Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.