2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை தொடங்கி இப்போ வரைக்கும் தமிழ்நாடு அரசியல்ல ஓயாத ஒரு பிரச்னைனா அது செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை பிரச்னைதான். கரகாட்ட கோஷ்டி, அரசியல் கோமாளினு செந்தில் பாலாஜி பேச, சாராய அமைச்சருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்னு அண்ணாமலை பதிலடி கொடுக்கனு இன்னிக்கும் ஹாட் டாபிக்கா இருக்கது இவங்களோட உரசல்தான்… அதைப்பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை
இவங்க இரண்டு பேருக்குமான முதல் மோதல் 2021 தேர்தலப்போ நடந்துச்சு. கடந்த 2021 தேர்தல்ல அரவக்குறிச்சி தொகுதில அண்ணாமலையும் செந்தில் பாலாஜியும் நேருக்கு நேர் களத்துல நின்னாங்க. அப்போ நடந்த ஒரு கூட்டத்துல, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனே மாண்டு வண்டியை ஆற்றுக்கே விடலாம். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார். தடுத்தா என்னைக் கூப்பிடுங்க’ என்று செந்தில் பாலாஜி பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அண்ணாமலை,செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பற்களெல்லாம் வெளியே வந்துவிடும். கர்நாடக முகத்தைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என்று பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கும் பதிவானது. இதற்கு கனிமொழியும் பதிலடி கொடுத்திருந்தார். போடி பரப்புரையில் பேசிய அவர், `தி.மு.கவினரைத் தொட்டுப் பார் தம்பி. தமிழகத்தில் பா.ஜ.கவின் வேலை எடுபடாது. நாங்க எழுந்தா தாங்க மாட்டீங்க’ என்று பேசியிருந்தார்.
Also Read – அண்ணாமலையின் புது டிமாண்ட்… பி.ஜே.பி – இ.பி.எஸ் கூட்டணி நிலைக்குமா?
அரவக்குறிச்சியில் வென்று செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்நாளே, அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மின் துறையில் ஊழல் நடப்பதாக ட்வீட்டிய அண்ணாமலை, `இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார், அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக்கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம்’ என்று குற்றம்சாட்டினார். ரூ.29.99 கோடி என்று கூட எழுதத் தெரியாமல் அதிமேதாவி போல் பேசக்கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல, விடாது கருப்பு போல அண்ணாமலையும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இதுதான் என்று கூறி பதில் சொல்லவே, இந்தியா முழுவதும் இதுதான் ரேட் என்று புள்ளி விவரம் சொல்லப்பட்டது அமைச்சர் தரப்பில்… இப்படி தமிழ் ட்வீட் உலகம் இவர்களின் சண்டையால் அப்போது பிஸியானது.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தபோது, அதை பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் எதிர்த்து போராட்டங்களையும் நடத்தின. அப்போது, நிலக்கரி கொள்முதலில் அமைச்சர் ஊழல் செய்வதாக அண்ணாமலை ஊடகங்களிடம் பேட்டி அளித்தார். ஆதாரம் இருந்தால் அண்ணாமலை இதை நிரூபிக்கப்பட்டும் என்று செந்தில் பாலாஜி பதிலளித்தார். அதன்பிறகான ஒரு பிரஸ் மீட்டில் அண்ணாமலை பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜி பற்றிய கேள்வி ஒன்றுக்கு, `வெயிட் பண்ணுங்க. அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. ஃப்ரி ஆகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்’ என்று சொன்னது விவாதத்தை ஏற்படுத்தியது. தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும் என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய அண்ணாமலை, இந்தத் துறைக்கு சற்றும் தொடர்பில்லாத சாராய அமைச்சர் கோவை குண்டுவெடிப்பு பற்றி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஊழல் மட்டுமே செய்யத் தெரிந்த சாராய அமைச்சருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?’ என்று சீண்டினார்.எனக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்மந்தம் என அரசியல் கோமாளி கேட்டிருக்கிறார். முதலமைச்சரால் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டவன் நான்’ என்று சொன்னதோடு, `கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அண்ணாமலையைத் தான் விசாரிக்க வேண்டும்’ என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பந்த் நடத்தப்போவதாக பா.ஜ.க நிர்வாகிகள் அறிவித்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அப்போது, தமிழக பா.ஜ.க பந்த் அறிவிக்கவில்லை என்று அண்ணாமலை சொன்னார். இதற்கு செந்தில் பாலாஜி, `கட்சிக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். பா.ஜ.க மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்’ என்று சீண்டும் வகையில் பதிலளித்திருந்தார்.
கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் படித்த பா.ஜ.கவினர் பற்றி பேசிய செந்தில் பாலாஜி, இதுபோன்ற கோமாளித்தனத்தை உலகிலேயே இங்குதான் பார்க்க முடியும். அரசியல் கோமாளி பற்றி என்னிடம் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்றதோடு,உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அவர்’ என்றும் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, `சாராய அமைச்சருக்கு காதில் ஏதோ கோளாறு இருப்பதாக அறிகிறேன். எனக்குத் தெரியாது; எனக்குத் தெரியாமல் பந்த் அறிவித்து விட்டார்கள் என்று நான் சொன்னதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று சொல்லியிருந்தார்.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்கிறரீதியில் சமீபத்திய ரஃபேல் வாட்ச் வரையில் இவர்களின் உரசல் வந்து நிற்கிறது. வாட்சின் ரசீது இருக்கா இல்லையா என்று அமைச்சர் தரப்பும் எனது ஆட்டுக்குட்டிகளின் எண்ணிக்கை முதற்கொண்டு எல்லா கணக்குகளையும் வெளியிடுவேன். அமைச்சரால் அதைச் செய்ய முடியுமா என்று அண்ணாமலையும் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில்பாலாஜி – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தைப் போர் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!





iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.