இவங்க நிஜத்தில் மட்டுமில்ல படங்களிலும் அப்பா – மகன்; மகள்தான்!

சிவாஜியும் பிரபுவும் பல படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதில் மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் மட்டும்தான் அப்பா, மகனாக நடித்திருக்கிறார்கள். டி.ஆர் எடுத்த பல படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதில் சபாஷ் பாபு படத்தில் அப்பா, மகனாக நடித்திருக்கிறார்கள். வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் பாக்யராஜுக்கு மகனாக நடித்து சாத்தனு அறிமுகமானார். உயிரிலே கலந்தது படத்தில் சிவகுமாருக்கு மகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

விஜயகுமார் - அருண் விஜய்
விஜயகுமார் – அருண் விஜய்

பாண்டவர் பூமி படத்தில் விஜயகுமாருக்கு மகனாக அருண் விஜய் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான ஓ மை டாக் படத்தில் இவர்கள் இருவரும் அப்பா, மகனாக நடித்ததோடு இதில் அருண்விஜய்யின் மகன் ஆர்ணவ்வும் அருண்விஜய்க்கு மகனாக நடித்திருக்கிறார். ஜோர், வெற்றிவேல் சக்திவேல் போன்ற படங்களில் சத்யராஜும் சிபிராஜும் அப்பா, மகனாக நடித்திருப்பார்கள். மிஸ்டர்.சந்திரமெளலி படத்தில் கார்த்திக்கின் மகனாக கெளதம் கார்த்திக் நடித்திருப்பார். டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக ஆரவ் நடித்திருப்பார். மகான் படத்தில் விக்ரமும் த்ருவ் விக்ரமும் அப்பா, மகனாக நடித்திருந்தார்கள்.

விக்ரம் - துருவ் விக்ரம்
விக்ரம் – துருவ் விக்ரம்

அப்பா, மகனாக பலர் நடித்திருந்தாலும் அப்பா, மகளாக சிலரே நடித்திருக்கிறார்கள். தெறி படத்தில் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா க்ளைமேக்ஸில் மட்டும் நடித்திருப்பார். மகிழ் படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடித்திருப்பார். அன்பிற்கினியாள் படத்தில் அருண்பாண்டியனும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் அப்பா, மகளாக நடித்திருப்பார்கள்.

அருண் பாண்டியன் - கீர்த்தி
அருண் பாண்டியன் – கீர்த்தி

நிஜ வாழ்க்கையில் அப்பா – மகன்; அப்பா – மகளாக இருப்பவர்கள் திரையிலும் அதேபோல் நடித்திருந்தப் படங்களைப் பற்றி பார்த்தோம். அதே அபோல் நிஜ அப்பா – மகன்களாக ஒரே படத்தில் நடித்து அது அப்பா – மகன் கதாபாத்திரமாக இல்லாமலும் இருந்திருக்கிறது. அப்படிப்பார்த்தால் கைவந்த கலை படத்தில் பாண்டியராஜன் தனது மகன் ப்ரித்விராஜனுக்கு சித்தப்பாவாக நடித்திருப்பார். விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் விக்ரமின் அப்பா வினோத் ராஜும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யும் விஜய்யின் மகன் சஜ்ய்யும் இணைந்து ஆடியிருப்பார்கள். சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் இணைந்து நடித்திருப்பார்கள்.

இந்த அப்பா – மகன்; அப்பா – மகள் காம்போவில் உங்களுடைய ஃபேவரைட் யார் என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. இதே மாதிரி அப்பா – மகனாக, அப்பா – மகளாக இணைந்து நடித்த நடிகர், நடிகைகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் அதையும் கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – ரஜினி vs காமெடியன்ஸ்.. யார் பெஸ்ட் காம்போ!?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top